Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் சிறிலங்கா கடற்படையினரின் ரோந்துக்கலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன.

அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலையடுத்து கடற்புலிகள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இத்தாக்குதலின் போது காலை 6.10 மணியளவில் கடற்படையின் வேகத்தாக்குதல் ரோந்துக்கலம் ஒன்றை கடற்புலிகள் மூழ்கடித்தனர்.

மோதல்கள் தொடர்ந்த நிலையில் கடற்படையினரின் மற்றொரு வேகத்தாக்குதல் ரோந்துக்கலம் கடற்புலிகளினால் காலை 7.50 மணிக்கு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் கடற்படையினருக்கு எதிரான தாக்குதலை கடற்புலிகள் தீவிரமாக நடத்தினர்.

இதன்போது கடற்படையினரின் மற்றொரு வேகத்தாக்குதல் கலம் ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. கடுமையாக சேதமடைந்த கடற்கலத்தை தலைமன்னாருக்கு கட்டி இழுத்து செல்லும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டபோது அதற்கு பாதுகாப்பு வழங்க தலைமைன்னார் "தம்மின்ன" கடற்படைத்தளத்தில் இருந்து 3 வேகத்தாக்குதல் கலங்கள் சம்பவ இடத்துக்கு சென்றன.

இவற்றுக்கு எதிராகவும் கடற்புலிகள் தீவிரமான தாக்குதலை நடத்தினர். கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத அத்தாக்குதல் கலங்கள் சிறு சேதங்களுடன் திரும்பி ஓடத்தொடங்கின.

அப்படகுகளை கடற்புலிகளின் கலங்கள் தலைமன்னார் கடற்படைத்தளம் வரை விரட்டியடித்து விட்டு தமது தளத்துக்கு திரும்பின.

கடற்புலிகள் மீது கடற்படையினர் வலிந்த தாக்குதலை நடத்திய போது கடற்படையினருக்கு உதவியாக விமானப்படையினருக்குச் சொந்தமான எம்.ஐ. 24 ரக உலங்கு வானூர்திகள், கிபீர் மற்றும் மிக் ரக தாக்குதல் விமானங்களும் தாக்குதல் நடத்தின.

கடற்படையினரின் 2 வேகத்தாக்குதல் ரோந்து கலங்களை கடற்புலிகள் மூழ்கடித்த மற்றும் இன்னொன்றை கடுமையான சேதத்துக்குள்ளாக்கிய தாக்குதல்களில் 10-க்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடற்புலிகள் வெற்றிகரமாக கடற்படையினரின் தாக்குதலை முறியடித்து தளம் திரும்பின. தலைமன்னார் கடற்படைத் தளத்தில் கடற்படையின் எஸ்.பி.எஸ் என்ற கடற்படை கொமாண்டோக்களின் தளமும் இருக்கின்றது.

http://www.eelampage.com/?cn=29801

பிந்திய செய்திகளின் படி

இரு கடற்படைக் கலங்கள் மூழ்கியுள்ளன.

ஆனால்... தங்களில் நால்வருக்கும் மட்டும்தானாம் காயம். படகுகள் எவையும் மூழ்கவில்லையாம், ரொய்ட்டரிடம் பிரசாத் சமரசிங்க சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

S.Lanka rebels may have sunk navy boat in battle

COLOMBO, Nov 18 (Reuters) - Sri Lanka's Navy fought a sea battle with Tamil Tiger rebels off the island's northwest coast early on Saturday, officials said, and military sources said a navy fast attack boat was feared sunk.

"There is a battle off the coast of Mannar. There are some damages. The battle is still going on," said military spokesman Brigadier Prasad Samarasinghe. He could not confirm if an Israeli-made Dvora navy fast attack boat had sunk.

The clash is the latest in a series of land and sea confrontations between the foes amid a new chapter in the island's two decade civil war, which has killed more than 67,000 people since 1983 -- more than 3,000 of those this year alone.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.