Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மயூரனின் மரணத்திற்குப் பின்னாலுள்ள இந்தோனேசியாவின் லஞ்ச ஊழலும், பிண அரசியலும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை எழுதுவதன் நோக்கம் மயூரனை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதோ அல்லது அவரது குற்றத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. 

 

மாறாக , அவருக்கும், அவருடைய நண்பரான மைக்கேல் சானுக்கும் இந்தோனேசிய அரசும், நீதித்துறையும் நிறவேற்றத் துடிக்கும் மரண தண்டனை பற்றிய பின்புலத்தை வாசிப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 

 

முதலில், எனது சொந்த அனுபவத்திலிருந்து இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். 

 

2006 மார்கழி, வேலை நிமித்தம் நானும் எனது 8 தோழர்களும் சிட்னியிலிருந்து இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்ட்டாவிற்குப் பயணமானோம். இந்தோனேசிய நேரப்படி இரவு 7 மணிக்கு கொட்டும் மழையில் ஜகார்ட்டாவில் வந்திறங்கியபோது எம்மை வரவேற்றது, "போதைவஸ்த்துக் கடத்துபவர்களுக்கான தண்டனை மரண தண்டனை " என்கிற ஆங்காங்கே கட்டித் தொஙகவிடப்பட்ட வாசகம் என்கிற பெயரிலான அச்சுருத்தல்தான். நாம் அனைவரும் ஆளை ஆள் பார்த்துக்கொண்டே சுங்கத்துறை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். 

 

சுங்கத்துறை மேசையில் எங்கள் கடவுச் சீட்டு, மற்றும் பொதிகளைப் பரிசோதித்தார்கள். எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த உள்ளூர்வாசியான எமது நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் கூடவிருந்ததினால், அவரே அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். நிறுவனம் ஒன்றினூடாக தொழில் நிமித்தம் அங்கே சென்றிருந்த எமக்கு, அதிகப்படியான விசாரணையும், அலைக்கழிச்சலும் விசனத்தைக் கொடுத்தது. ஒருவாறு எல்லாம் முடிந்தபின்னர் எங்களைப் போக விட்டார்கள். பேச்சுவாக்கில் அந்த உள்ளூர் அதிகாரியிடம், அப்படி என்னதான் பேசினீர்கள் என்று நாங்கள் கேட்டதற்கு, மழுப்பலான பதிலைத் தந்த அவர் ஒன்றை சொல்ல மறுக்கவில்லை. அதாவது கடந்த ஓரிரு வருடங்களாக அவுஸ்த்திரேலியர்கள் என்றால் கடுமையாக சோதிக்கிறார்கள் என்பதுதான் அது. அதற்கான காரணம் பாலியில் 2005 இல் கைதுசெய்யப்பட்ட 9 அவுஸ்த்திரேலியர்கள் மற்றும் தனியாகக் கைதுசெய்யப்பட்ட மிஷ்ஷெல் கோபி என்கிற பெண்பமணி ஆகியோரது கடத்தல் முயற்சிகள்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். 

 

வாரத்தில் 5 நாட்கள் வேலை. வார இறுதி நாட்களில் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கார்கள், சாரதிகள் என்று எமது பொழுது கழிந்துவந்தது. ஊரைச் சுற்றிப் பார்ப்பதென்று நாங்கள் முடிவெடுத்து கிளம்பும்போது வீதி அருகில் இந்தொனேசியக் காவல்த்துறை மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில்  ஆங்காங்கே வாகனச் சாரதிகளை நிறுத்திவைத்துக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். முதல் முறையாக எமது காரும் மறிக்கப்பட்டது. 

 

எமது சாரதியுடன் முதலில் பகாசா (உள்ளூர் மொழி) மொழியில் பேசிய பொலீஸ் அதிகாரி, உள்ளே எம்மைக் கண்டவுடன், தட்டுத் தடுமாரி ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். நாம் யார், எங்கிருந்து வருகிறோம் என்கிற விடயமெல்லாம் அறிந்துவிட்டு, சாரதியை இறக்கித் தனியே கூட்டிக் கொண்டு போனார். சிறிதுநேர சம்பாஷணையின் பின்னர் சாரதி திரும்பிக் காருக்கு வந்தார். முகத்தில் வெட்கத்துடன் அவர் பேசத் தொடங்கினார், "பணம் கேட்கிறார்கள். என்னிடமில்லை, நீங்கள் கொடுங்கள் பிறகு தருகிறேன்" என்று சொன்னார். எதற்குப் பணம் என்று நாங்கள் கேட்டதற்கு, "காரணம் எதுவும் தேவையில்லை, ஆனால் பணம் கொடுக்கவில்லை என்றால் தமது விருப்பத்திற்கேற்ப புத்தகத்தில் எழுதிவிட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டுபோவார்கள், ஏன் தேவையில்லாத பிரச்சினை ?" என்று அவர் சொன்னதும்,  கேட்ட தொகையை மறுபேச்சின்றிக் கொடுத்தோம். பொலீஸ்காரரும் கைய்யசைத்து எங்களை அனுப்பி வைத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தனது செல்வாக்கை உலகுக்கு காட்ட இந்த மரணதண்டனை..... என நான் நினைக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேடு கெட்ட உலகமையா இது ? ஒரு புலம்பெயர் தமிழனுக்கு போதை வஸ்து கடத்தும் அடிப்படை உரிமை கூட மறுக்கப் படுகிறதே !

உலகில் எல்லா வளர்முக நாடுகளிலும் நீங்கள் சொல்லுமாப் போல பொலீஸ்தான் உண்டு.

அதுக்காக மயூரன் தொத்த பபா என்றாகி விடாது.

மரண தண்டனைக்கு நான் எதிரானவன்.

ஆனால் மயூரன் இந்தோனேசியாவுக்கு போகும் போது இத யோச்சிருக்கோணும்.

லண்டனில் இப்படி பலர் உளர். மாட்டுப் படுறாங்கள் இல்லையே என்ற கவலைதான் எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மயூரனுக்குத்தண்டனை முக்கியம் ஆனால் மரணதண்டனை என்பது சரியானதல்ல, மரணதண்டனைதானென்றிருந்தால் அதனை கைதுசெய்தவுடனேயே செய்திருந்தால் குடும்பத்தவர்களும், மயூரனும் Andrew chanஉம் நம்பி இருந்திருக்கமாட்டாரகள். 10 வருடங்கள் காத்திருக்க வைத்து கழுவேற்றுவது என்பது justify பண்ணக்கூடியதெல்ல. Hope for the best

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.