Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோன் கெரி வந்தடைந்தார்

Featured Replies

article_1430539983-a.jpg

 

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று 2ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரியுடன் வந்த 35 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்றார்.

 

 

http://www.tamilmirror.lk/145173#sthash.univ2zhz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

too late!

 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்தார் ஜோன் கெரி! - நாளை காலை சம்பந்தனுடன் பேச்சு.

[saturday 2015-05-02 08:00]
john-kerry-400-seithy.jpg

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பளித்துள்ளார். இவர் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பியேர்ஸ் ரோஜர் மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரும் முதலாவது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆவார்.

 

ஜோன் கெரி, இன்று முழுநாளும் பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். அத்துடன், சில முக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். இவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசவுள்ளார். அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் 12.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 1.45 மணியளவில் களனி ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்யவுள்ள ஜோன் கெரி, அங்கு வெசாக் பந்தலைத் திறந்துவைக்கவுள்ளார்.

 

மாலை 5 மணியளவில் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வில் அமெரிக்காவின் கொள்கை தொடர்பிலும் இவர் விசேட உரையாற்றவுள்ளார். இதனையடுத்து தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாலை 6.20 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசியதுமே ஜோன் கெரி நாடு திரும்புவார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=131339&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜோன் கெரி

 

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

johan.jpg

 

http://www.virakesari.lk/articles/2015/05/02/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன் கெரி - கூட்டமைப்பிடம் என்ன சொல்ல..

 

மைத்திரி - அவர்கள் தரும்போது  வாங்குங்கள் என்று சொல்லுங்கள்

 

ஜோன் கெரி  - அவர்களை அதை கேட்பார்களா?

 

மைத்திரி - திரும்பிப்போகும்  போது இந்தியாவுக்குப்போய்விட்டுத்தான் நாடு திரும்புவேன் என்று சொல்லுங்கள். 

 

ஜோன் கெரி  - புரியது.  புரியுது.............. :(  :(  :(

  • தொடங்கியவர்

ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கும்

 

Heri1_CI.jpg

 

நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்க மக்கள் இலங்கையுடன் இணைந்திருப்பார்கள் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். 

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜோன் கொர்ரி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையுடனான உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு திறைசேரி மற்றும் வர்த்தகத் துறைகளிலுள்ள அமெரிக்க அதிகாரிகளால் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஜோன் கெர்ரி இதன்போது தெரிவித்துள்ளார். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119301/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.