Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாவரைக் கிணறு சில கருத்துக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

புத்தூர் ஆழ்கிணறுகள் நலத்தடைக் குகை அமைப்பு என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட உண்மையாகும். ஆனால் புத்தூர்க் கிணறு வரலாறு முழுவதுமே யாழ்மக்களை ஆச்சரியப்படுதியே வந்துள்ளது. புத்தூர்க் கிணறுகள் சார்ந்த நம்பிக்கைகள் தேடல்களை யாராவது பதிவு செய்யவேண்டும். 

புத்தூர் குகைக் கிணற்றுக்கும் கீரிமலை கேணிக்கும் தொடர்புள்ளது என்பது மிகப்  பழைய நம்பிக்கையாகும். புத்தூர்க் கிணற்ரில் போடப்படும் எலுமிச்சம்பழம் கீரிமலையில் மிதக்கும் என்பார்கள். இது கிணற்றின் நிலத்தடிக் குகை அமைப்புப்பற்றிய தொன்மை விஞ்ஞான பூர்வமானது எனவே கருதுகிறேன். நமது அறிஞர்கள் புத்தகங்களில் இருந்தல்ல நமது தொன்மங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் தமது தேடலை ஆரம்பிக்க வேணும்.

யாழ்பாண வளற்ச்சிக்கு தனது கைப் பணத்தயும் செலவுசெய்து யாழ்பாண ராசாவென மக்களால் கொண்டாடப்பட்ட டைக் அவர்கள் 1824ல் யாழ் உதவிக் கலக்டராக  நியமிக்கப் படுகிறார், அந்த வருடமே புத்தூர்க் கிணறை மையபடுத்திய நீர்பானத் திட்டம்பற்றி டைக் சிந்திதிருக்கிறார், 1824ல் யாழ் நில உடமையாளர்களின் கனவாக அது இருந்திருக்க வேணும். 1824ல் டஇராசத நீர் இறைக்கும் பொறிகள் மூலம் புத்தூர் கிணர்றை நீர்பாசனத்துக்காக இறைக்கும் முயற்சிகள் இடம் பெற்றிருக்கு, (Notes on Jaffna 1920 and colonial records) ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னர் நீர்வள வடிகால் அமைப்பு சபையினர் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.

1983ல்  புத்தூர் சென்றபோது டைக் அவர்களின் கனவான புத்தூர்க் குகைக் கிணற்று நிர்பாசன திட்டம் செயல்படுவதைக் கண்டேன். இன்று அதன் இன்றைய நிலை தெரியாது.

பேராசிரியர் சிவச்சந்திரனின் நிலாவரைக் கிணறு ஜீவநதியா என்கிற பயனுள்ள கட்டுரையில் முக்கிய விடயங்களைப்  பதிவு செய்கிண்றார்,

"இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும், மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்காக உட்செலுத்துவதற்காகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக் கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்ட காலமாகப் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30 000 - 40 000 கலன் நீர் தோட்டப்பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து இறைக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்பின் உப்பு நீர் மேலோங்கி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மழை நீரை அறுவடை செய்யும் திட்டம்  யாழ்குடாநாட்டின் மிக அவசரமான பிரச்சினையாகும். வீட்டுக்கூரை நீரில் இருந்து கடலுக்கு செல்லும் அனைத்து நீரையும் இயன்ற அளவுக்கு அறுவடை செய்து அவசியம். தமிழகத்தில் சென்னை போன்ற நகரங்களில் இந்த திட்டம் ஆச்சரியப் படக்கூடிய வகையில் பயந்தரத் தொடங்கியுள்ளது,

யாழில் மழை நீரை அறுவடை செய்தும் யாழ்பாண குகைக் கிணற்று அமைப்புகளைப் பயன்படுத்தி தரைக்கீழ் நீர்சேமிப்புகளை உயர்த்தும் முயற்சிகளுக்கும் வடமாகணசபை  முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நிலதடி நிலமேல் நீர்சேமிப்ப்புக்களையும்  அதிகரிக்கும்  மார்க்கங்களை கண்டறிது செயல் படுத்த வடமாகணசபை முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். சர்வதேச நிதி நிறுவனக்களதும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் இதற்காக திரட்ட வேண்டும்.  

புனர்வாழ்வு தொடர்பான இந்திய உதவிகளுகளுக்கூடாக தமிழ் நாட்டின் அனுபவங்களை நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்ள நிச்சயமாக நாம் முயற்ச்சி எடுக்க வேண்டும். 

சென்னையில் வீடுகள் தோறும் மழைநீர் அறுவடை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மழை நீர் அறுவடை இல்லாமல் கட்டிசடங்கள் கட்ட  அனுமதி இல்லை. 2001 l  2003 முதல் கட்டாயபத்டுத்தி செயல்பட்டு வரும் இந்த திட்டம் பயன்தரத் தொடங்கியுள்ளது.  நிலத்தடி நீர்கிடைப்பனவு அதிகரித்துள்ளதாகவும் உவர்தன்மை குறைந்துள்ளதாகவும் அரசு அறிக்கைகள் மட்டுமல்ல பொதுமக்களே மக்களே சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

நாற்அது வருடங்களின் முன்னம் ஒரு ஆய்வு பயணத்தில் ஒரு பெரிய ஊர்காவல்துறையிலோ கரம்பனிலோ  பெரிய கலோனியல் கால வீட்டின்கீழ் (ராஜசூரியர்??) கீழ் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இருந்ததை பார்த்து அதிசயித்திருக்கிறேன். 

ஈழத்தில் மழைநீர் அறுவடை வசதி எல்லா வீடுகளிலும் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் அறுவடை வசதி இல்லாமல் புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதிக்கப்படக்கூடாது. 

n the state of Tamil Nadu, rainwater harvesting was made compulsory for every building to avoid ground water depletion. It proved excellent results within five years, and every state took it as role model. Since its implementation, Chennai saw a 50 percent rise in water level in five years and the water quality significantly improved. - .wikipedia

மழைநீர் அறுவடை ஈழத்தின் உயிர்க்கொடை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலதடி நிலமேல் நீர்சேமிப்ப்புக்களையும்  அதிகரிக்கும்  மார்க்கங்களை கண்டறிது செயல் படுத்த வடமாகணசபை முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். சர்வதேச நிதி நிறுவனக்களதும் புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் இதற்காக திரட்ட வேண்டும்.  

நன்றி poet இவை எமது நீண்டகால நன்மை பயக்கும் விடயங்கள் ஆனால் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் மண்டியிட்டு தீருவம் என நம் அரசியல் வாதிகள் ஒன்றைக்காலில் நிட்கிறார்கள் காரணம் எமக்கு தெரியாமலா ?................. :D  :icon_idea:

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி பெருமாள். 

மழை நீரை அறுவடை செய்வது நிலத்தின் மேலும் கீழும் சேகரிப்பது முக்கியமாக யாழ்பாணத்திற்க்கும் பொதுவாக ஈழத்துக்கும் அவசியமான அவசரப் பணியல்லவா?

பெருமாள் இத்தகைய சூழலில் நாம் மூலதனத்தின் பின்னணி பின்விழைவுகள் பற்றிய கவலைகளை இலங்கை சிங்கள அரசின் தலையில் கட்டிவிட்டு  ஈழத்தின் அவசர திட்டங்களை செயல்படுத்த முடியாதா?

அரசில்லாத நமக்கு அரசின் பொறுப்புணர்வு மட்டும் அவசியமா?

எரித்திரியா தென்சூடான் கிழக்கு தீமோர் கொசோவோ போன்ற நாடுகளின் அனுபவங்களை நேரில் சென்று கண்டுணர  பொருளாதார வசதியின்மை எனக்கு இடம் தரவில்லை.

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

தயவு செய்து உங்கள் பதிலை எழுதுங்கள்.   

ஐயா

தண்ணீர் பிரச்சினையை முதல் பிரச்சினையாகக்கொண்ட தீவில் பிறந்தவன் என்பதால் அதன் தாக்கத்தையும் வழிமுறைகளையும் அறிவேன்.

அது பற்றிய பல தகவல்களைப்பெற்றுக்கொண்டதுண்டு

அதன்படி எமது மண்ணில் விழும் மழையை சேமித்தால் பெருமளவு தண்ணீர்ப்பிரச்சினை குறைந்துவிடும்

ஆனால் தனிப்பட்டவர்களாலோ

அமைப்புக்களாலோ இவற்றைச்செய்துவிடமுடியாது

இது  ஒரு அரசின் வேலை மட்டுமல்ல 

பெரும் பொருட்செலவாகும்...

ஆனாலும் சில அரச சார்பற்ற வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்

அவர்களும் முன்னர் போல் தண்ணீர்ப்பிரச்சினைக்கு முக்கியத்துவத்தை தற்பொழுது குறைத்துவிட்டார்கள்

நோய்கள் அழிவுகள் போர்கள் உள்ள இடங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்

ஆனாலும் தண்ணீர்ப்பிரச்சினை என்பது நீண்டநாளில் பெரும் சிக்கலாக வரும் என்ற கணிப்பு வலுப்பெற்றுவரும் இன்றையநிலையை நாம் சரியாக பயன்படுத்தினால் நல்ல தீர்வுகளையும் உதவிகளையும் அவர்களிடமிருந்து பெறமுடியும்

பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி பெருமாள். 

மழை நீரை அறுவடை செய்வது நிலத்தின் மேலும் கீழும் சேகரிப்பது முக்கியமாக யாழ்பாணத்திற்க்கும் பொதுவாக ஈழத்துக்கும் அவசியமான அவசரப் பணியல்லவா?

பெருமாள் இத்தகைய சூழலில் நாம் மூலதனத்தின் பின்னணி பின்விழைவுகள் பற்றிய கவலைகளை இலங்கை சிங்கள அரசின் தலையில் கட்டிவிட்டு  ஈழத்தின் அவசர திட்டங்களை செயல்படுத்த முடியாதா?

அரசில்லாத நமக்கு அரசின் பொறுப்புணர்வு மட்டும் அவசியமா?

எரித்திரியா தென்சூடான் கிழக்கு தீமோர் கொசோவோ போன்ற நாடுகளின் அனுபவங்களை நேரில் சென்று கண்டுணர  பொருளாதார வசதியின்மை எனக்கு இடம் தரவில்லை.

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

தயவு செய்து உங்கள் பதிலை எழுதுங்கள்.   

நாங்கள் மற்றய நாடுகளை பார்க்க தேவையில்லை புலிகளின் காலத்து பொருண்மிய நடைமுறைகளை கொஞ்சம் எட்டிப்பார்த்தாலே காணும் அவர்களின் காலத்தில் வடமராட்சி உப்புகிணறுகள் கூட நன்னீர் கிணறுகளாகின .பின்னர் விரிவாக எழுதுகின்றன் .

Link to comment
Share on other sites

விசுக்கு பெருமாள் இருவருக்கும் நன்றிகள்.

இலட்சிய ஈடுபாடு அவசியம் வெளிவாரி முதலீடுகளும் அவசியம், நாம் ஒரு நாடாக செயல்படும்போது வெளிவாரி முதலீடுகள் பற்றிய கொள்கை சார் கரிசனை அவசியம்தான். இன்றைய நிலையில் அந்த கவலை எமக்கு அவசியமா?

அன்புக்குரிய பெருமாள், விடுதலைப் புலிகள் வெளிநாட்டு நிதி உதவிகளை நிராகரிக்கவில்லை. இது  தொடர்பாக எனக்கும் அவர்களுக்கும் 2000 - 2006 காலக் கட்டத்தில் சில கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது, நான் வெளிநாட்டு நிதி பெறுவதை எதிர்க்கவில்லை. ஆனால் திட்டத்தைக் காலகெடுவுக்குள் முடித்து வைக்க சிங்கள கொன்றாக்டர்களையும் வேலையாட்களையும் உள்ளே அனுமதிப்பதை எதிர்த்தேன். மலையகம் கிழக்குமாகாணத்தில் இருந்து மனித வளத்தை பெறும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆராய வலியுறுத்தினேன்.

வெளிவாரி நிதி மற்றும் தொழில்நுட்ப்ப உதவிகளைப் பெறுவது தவிர்க்க முடியாதது தோழரே.

புனர்வாழ்வு தொடர்பான இந்திய உதவிகளுகளுக்கூடாக தமிழ் நாட்டின் அனுபவங்களை நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்ள நிச்சயமாக நாம் முயற்ச்சி எடுக்க வேண்டும். 

சென்னையில் வீடுகள் தோறும் மழைநீர் அறுவடை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மழை நீர் அறுவடை இல்லாமல் கட்டிசடங்கள் கட்ட  அனுமதி இல்லை. 2001 l  2003 முதல் கட்டாயபத்டுத்தி செயல்பட்டு வரும் இந்த திட்டம் பயன்தரத் தொடங்கியுள்ளது.  நிலத்தடி நீர்கிடைப்பனவு அதிகரித்துள்ளதாகவும் உவர்தன்மை குறைந்துள்ளதாகவும் அரசு அறிக்கைகள் மட்டுமல்ல பொதுமக்களே மக்களே சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

நாற்அது வருடங்களின் முன்னம் ஒரு ஆய்வு பயணத்தில் ஒரு பெரிய ஊர்காவல்துறையிலோ கரம்பனிலோ  பெரிய கலோனியல் கால வீட்டின்கீழ் (ராஜசூரியர்??) கீழ் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் இருந்ததை பார்த்து அதிசயித்திருக்கிறேன். 

ஈழத்தில் மழைநீர் அறுவடை வசதி எல்லா வீடுகளிலும் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் அறுவடை வசதி இல்லாமல் புதிய கட்டிடங்கள் அமைக்க அனுமதிக்கப்படக்கூடாது. 

n the state of Tamil Nadu, rainwater harvesting was made compulsory for every building to avoid ground water depletion. It proved excellent results within five years, and every state took it as role model. Since its implementation, Chennai saw a 50 percent rise in water level in five years and the water quality significantly improved. - .wikipedia

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளுவது அவசியம், அவர்களது செயல் திட்டத்தின் அம்சங்கள் பின்வருமாறு.

  • மழைநீர் அறுவடை மற்றும் வழிந்தோடும் நீர் மேலாண்மை திட்டம்
  • மாபெரும் திட்டம்-நிலத்தடி நீருக்கு செயற்கை மறு ஊட்டம் அளித்தல்
  • ஒருங்கிணைந்த பழங்குடி இன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் மண் பாதுகாப்பு
  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதிகளில் ஒருங்கிணைந்த பயறுவகை கிராமங்கள் வளர்ச்சி
  • 5
  • மலைப் பகுதியில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  • அணைகள் புனரமைப்பு மற்றும் NADP கீழ் மேம்பாட்டுத் திட்டம்
  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நதி பள்ளத்தாக்கு திட்டம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் பாதுகாப்பு
  • மேற்கு தொடர்ச்சி மலையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  • தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்  கீழ் வேளாண் இயந்திரமயமாக்கல்
  • விவசாயிகளின் குழுவுக்கு எந்திரங்களின் இலவசத் தொகுப்பு மற்றும் பண்ணை இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் குறித்த பயிற்சி
  • விவசாய இயந்திரங்களைக் கருவிகளைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, செயல்படுத்துதல் குறித்த கிராமப்புற இளைஞர்களுக்கான  பயிற்சித் திட்டம்
  • நெருக்கடியான உயிர் காக்கும் பாசனத்திற்கு மழை துப்பாக்கி / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு, டீசல் எஞ்சின் பம்பு செட் வழங்குதல்
  • சூரிய சக்தியில் நீர் இறைக்கும் கருவியைத் தகுந்த  பொருத்தமான நுண்ணீர்ப்பாசன அமைப்பு (சொட்டு நீர்ப்பாசனம் / நுண்ணீர்ப் பாசனம்/  தெளிப்பு நீர்ப்பாசனம்) மூலம் இணைக்கும் அமைப்பை NADP திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின்  பல்வேறு இடங்களில் வழங்குதல்
  • சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 5 முக்கிய மிளகாய் உற்பத்தி மாவட்டங்களுக்கு சூரிய மிளகாய் உலர்த்தி அமைக்க ஏற்பாடு செய்தல்
  • சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 12 முக்கிய வெங்காய உற்பத்தி
  • உலக வங்கி உதவி பெறும் தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை மற்றும் நீரோடை மறு சேமிப்பு நிர்வாகம்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.