Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிளைமோரில் 6 இராணுவத்தினர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். வடமராட்சியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

வடமராட்சி புறாப்பொறுக்கியில் பருத்தித்துறை - யாழ். வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

படுகாயமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர் பலாலி சிறிலங்கா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நெல்லியடி சந்தியிலிருந்து வடக்கில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புறாப்பொறுக்கி கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது.

கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வடமராட்சிக்கு செல்லக்கூடிய நுழைவுப் பகுதியான வல்லை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனப் போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டன. மேலும் பயணிகளையும் இராணுவத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

thanks : www.puthinam.com

யாழில் கிளேமோர்த் தாக்குதல் எட்டுப்பேர் பலி

பண்டார வன்னியன் ஆழனெயலஇ 20 ழேஎநஅடிநச 2006 18:41

யாழ் வடமராட்சி புறாப்பொறுக்கி எனுமிடத்தில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் அவ் வாகனத்தில் சென்ற படையினர் 8பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று 12.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சில படையினர் படுகாயமடைந்த நிலையில் பலாலியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நெல்லியடி சந்தியிலிருந்து வடக்கில் 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புறாப்பொறுக்கி கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது.

கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதே சமயம் வீதியால் சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை படையினர் கடுமையாக தாக்கியுமுள்ளனர்.

வடமராட்சிக்கு செல்லக்கூடிய நுழைவுப் பகுதியான வல்லை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனப் போக்குவரத்துக்களும் இடைநிறுத்தப்பட்டன.

http://sankathi.org/news/index.php?option=...71&Itemid=1

சங்கதியில் மட்டும் புதிய சங்கதி போடப்பட்டுள்ளதே?

இதோ இன்னுமொன்று...

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

திங்கள் 20-11-2006 13:41 மணி தமிழீழம் [மயூரன்]

வன்னி பூநகரியில் இன்று சிறீலங்கா அரசு விமானத்தாக்குதல்.

கிளிநொச்சியை இன்று காலைவட்டமிட்ட கிபீர் விமானங்கள் பூநகரி பகுதியில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளது.இது தொடர்பான சேத விபரங்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை.

கிளிநொச்சியை இவ்விமானம் நீண்ட நேரம் வட்டமிட்டதால் பொது மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியதுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

--

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20336

SLAF bombers observed over Vanni

[TamilNet, Monday, 20 November 2006, 09:37 GMT]

Sri Lanka Air Force (SLAF) Kfir bombers were observed over the suburbs of Kilinochchi around 12:45 p.m. Monday.

At least 2 Kfir bombers were observed over Kilinochchi for 15 minutes, but there has been no reports of aerial bombardment.

தமிழ்நெற் செய்திகளின் படி கிபிர்கள் பறந்தது, எந்தவித தாக்குதல் நடந்ததாக தகவல்கள் இல்லை என்றும்.

சங்கதியில் இப்போது செய்தி மாற்றப்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் சம்பவ இடத்தில் படையினர் 8 பேர் பலி என்றும் மேலும் சிலர் படுகாயம் என்றும் போடப்பட்டு இப்போது ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் சில படையினர் படுகாயமடைந்ததாக மாற்றப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய தவறு. அதனை மாற்றியவுடன் "செய்தி திருத்தம்" என்றாவது தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சங்கதியின் நம்பகத்தன்மையை இழக்கவைக்கும் செயற்பாடு.

ஏற்கனவே குறுக்ஸ் கூறியது போல சுடச்சுட செய்தி தரும் ஆர்வக் கோளாறு.

செய்தியை விரைவாகத் தருவதில் போட்டி போடுவதை விட ஊர்ஜிதப்படுத்தி விளக்கமான செய்திகளை போடுவது நல்லது.

அல்லது கிடைத்த செய்தியை பிரசுரிக்கும் போது "ஊர்ஜிதப்படுத்தப்படத செய்தி" என்றோ அல்லது "மேலதிக விபரம் விரைவில்" என தெரிவிப்பது நாகரிகமாக இருக்கும்.

திருத்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதியில் இப்போது செய்தி மாற்றப்பட்டுவிட்டது.

... கிடைத்த செய்தியை பிரசுரிக்கும் போது "ஊர்ஜிதப்படுத்தப்படத செய்தி" என்றோ அல்லது "மேலதிக விபரம் விரைவில்" என தெரிவிப்பது நாகரிகமாக இருக்கும்.

திருத்துவார்களா?

திருந்தவே மாட்டார்கள்..! :blink:

இததெல்லாம் தமிழ் ஊடகங்களில் சகஜமாகி விட்டது.

தமிழ்நெட்டில் அறுவர் காயம் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் சங்கதி ஆறை எட்டாக்கி, காயத்தை பலியாக்கி செய்தி போட்டு தனது ஊகிப்பு(கற்பனை) திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது.

என்னைதான் நாங்கள் முயன்றாலும் எதையோ நிமிர்த்த முடியாதாம். அதேநிலைதான் இந்த தமிழ்ஊடகங்களை திருத்திறதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.