Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் ஆயுத எழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11351169_10202985933329057_1462123347551

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் . டென்மார்க் . சுவீடன் நாட்டு வெளியீடு விபரங்கள் வெகு விரைவில் அறியத் தருகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அவர்கட்கு, மீண்டும் கனநாட்களுக்குப்பின்பு தங்கள் மீழ்வருகைக்கு நன்றி,

 

தங்களது "ஆயுதஎழுத்து" நூல் வெளியீட்டுவிழா தமிழர்வாழும் தேசங்கள் எங்கும் வெளியிடப்பட்டு அந்நூலில் பொதிந்துள்ள விடையங்கள் பகிரப்படுதலால் ஒரு வரலாற்றுக்காலத்தின் ஒருசில விடையங்களையாவது பொக்கிசப்படுத்தி அடுத்த சந்ததிக்குச் சேர்க்கும் உங்கள் கைங்கரியத்துக்கு நன்றி.

 

தங்களது நீலினது பேசுபொருளை விமர்சிப்பது எனது நோக்கம் இல்லை. தவிர இந்நூல் என்னால் இதுவரை வாசிக்கப்படவும் இல்லை. காலம் செழிப்பாகவிருந்தால் வாசிக்கிறேன்.

 

ஆனால் ஒரு சந்தேகம்,

 

தங்களது கையெழுத்தில்,

 

"மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனுக்கும் ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களுக்கும் வீரவணக்கங்கள்"

 

என எழுதியுள்ளீர்களே, தாங்கள் பிறிதொரு பேட்டியில் விடுதலைப்புலிகள் அமைப்பு உலகெங்கும் போதைவஸ்துக்கடத்தலில் ஈடுபட்டு தங்களது அமைப்புக்குக்காக நிதிசேகரிப்பில் ஈடுபட்டது எனக் கூறியிருந்தீர்கள், அவ்விடையம் உண்மையோ பொய்யோ உங்களது பேட்டியில் இப்படிக்கூறிவிட்டு  விடுதலைப்புலிகளது தலைவருக்கும்,  போராளிகளுக்கும் வீரவணக்கம் செய்யும்போது உங்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலை ஜேர்மனியில் வெளியிட்டுப் பாருங்கோ, ஆ......ஊ...... என்றார்களே சிலர். என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் ஜூன் 6ஆம் நாள் தான் வெளியீடு. இன்னும் டைம் இருக்கு!

இந்த நூலை ஜேர்மனியில் வெளியிட்டுப் பாருங்கோ, ஆ......ஊ...... என்றார்களே சிலர். என்னாச்சு?

ஜெர்மனியில் ஜூன் 6ஆம் நாள் தான் வெளியீடு. இன்னும் டைம் இருக்கு!

அது வெள்ளிக்கிழமை இரவு எழுதியது, விடிந்தால் நினைவிருந்திருக்காது அண்ணாமாரே
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி நிகழ்வை நடத்திய சபேசனின் முக நூல் பதிவு

 

நேற்று இரவியின் '1958' மற்றும் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூல்கள் பற்றிய மதிப்பீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இரவி அவர்கள் நேரடியாக கலந்து சிறப்பித்திருந்தார். திடீரென்று வேலையிடத்தில் உருவான ஒரு சிக்கலினால் சாத்திரியால் வர முடியவில்லை.

'1958' பற்றிய மதிப்பீட்டினை ஊடகவியலாளர் தவா, ஊடகவியலாளரும் எழுத்தாளருமான தமிழருவி நயினை விஜயன், கவிஞரும் எழுத்தாளருமான கௌசி ஆகியோர் செய்தனர்.

'ஆயுத எழுத்து' பற்றிய மதிப்பீட்டினை எழுத்தாளர் ஏலையா முருகதாசன், ஜேர்மன் கல்விச் சேவையின் பொறுப்பாளர் சிறிஜீவகன் ஆகியோர் செய்தனர்.

பொதுவாக புத்தகம் சார்ந்த விழாக்களுக்கு 20 பேர் வரைதான் வருவார்கள். அதுவும் சில பேரை கெஞ்சிக் கூத்தாடி புத்தகத்தை வாங்குவதற்கு ஒழுங்கு செய்து வைக்க வேண்டும்.

இப்படிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில முதலாளிகளைக் கொண்டு புத்தகத்தை வாங்கச் செய்வதும், அதன் பிறகு அந்தப் புத்தகம் மூலையில் தூங்குவதும், நூலாசிரியருக்கு செய்கின்ற அவமானம் என்பது என்னுடைய கருத்து.

இந்த விழாவிற்கு 30 பேர் வந்திருந்தார்கள். மதிப்பீட்டுரைகள் முடிந்ததும் பலர் தாமாகவே வந்து புத்தகத்தை கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

'இப்படித் தெரிந்திருந்தால் மேலும் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பேன்' என்று இரவி அவர்கள் கவலைப்பட்டார்.

உண்மையில் 45 பேர் வரை வந்திருப்பார்கள். 'ஆயுத எழுத்தும்' மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்ட அதிருப்தியில் ஏறக்குறைய 15 பேர் பேசி வைத்து நிகழ்வை புறக்கணித்தார்கள்.

பொதுவாக ஜேர்மனியில் தமக்கு ஒவ்வாத நிகழ்வு நடந்தால், அங்கே வந்து கூச்சலிட்டு நிகழ்வை குழப்புவதுதான் வழக்கம். அப்படி இல்லாமல் ஜனநாயக வழியில் அவர்கள் இந்த புறக்கணிப்பை நடத்தியதை நான் வரவேற்கிறேன்.

புறக்கணிப்பு செய்த தோழர்கள் நேரில் வந்து '1958' நிகழ்வு முடிந்த பின்பு 'ஆயுத எழுத்து' நிகழ்வை நாம் புறக்கணிக்கின்றோம் என்று எழுந்து சென்றிருந்தால், அது இன்னும் காத்திரமாக இருந்திருக்கும்.

இந்த 'மதிப்பீட்டு நிகழ்வு' பல மட்டங்களில் விவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. அரங்கின் உள்ளே நடந்த விவாதத்தை விட, வெளியே நடந்த விவாதங்களும், புறக்கணிப்புச் செயற்பாடுமே இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்கள் என்று நான் கருதுகின்றேன்.

இன்னும் புகைப்படங்கள் கைக்கு வந்து சேரவில்லை. வந்ததும் இணைக்கின்றேன். நிகழ்வு சார்ந்து எழுத நிறைய விடயங்கள் இருக்கின்றன. கட்டாயம் அவைகளையும் எழுதுவேன்.

 


ஆயுத எழுத்து மதிப்பீட்டுரை செய்த கந்தையா முருகதாசனின் முக புத்தக பதிவு

„1958'
„ஆயுத எழுத்து „
ஆகிய இரு நூல்களின் „மதிப்பீட்டுரை' நிகழ்வு

நேற்றைய தினம் 06.06. 2015 அன்று ஜேர்மனி டோட்முண்ட் நகரில் திரு.இரவி அருணாசலத்தின் „1958' என்ற நூலினதும், திரு. சாத்திரியின் „ஆயுத எழுத்து' என்ற நூலினதும் மதிப்பீட்டுரை நிகழ்வு
திரு.வி.சபேசன், திரு.சு.பாக்கியநாதன் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்து.

„1958' என்ற நூலின் மதிப்பீட்டுரையை எழுத்தாளர் தமிழருவி திரு.நயினை விஜயன், ஊகவியலாளர் தவா, எழுத்தாளரும் கவிஞருமான திருமதி. கௌரியும்,'ஆயுத எழுத்து' என்ற நூலின் மதிப்பீட்டுரையை நானும், ஜேர்மன் கல்விச் சேவையின் பொறுப்பாளர் திரு.சிறீஜீவகளும் வழங்கினோம்.

இலங்கையில் இடம்பெற்ற 1958 இனக்கலவரம் இடம்பெறுவதற்கான அகபுற காரணிகள்,சிங்கள மக்கள் மத்தியில் காலம் காலமாக ஆழப்பதிந்து இறுகிப் போயிருந்த தமிழர் மீதான இனக்குரொதப் பரிணாமம் பெற்று முகிழ்ப்பாகிய அனைத்து விடயங்களையும் மதிப்பீட்டுரையை நிகழ்த்தியவர்கள் அவரவர் இந்ந}வலினை வாசித்தறிந்து புரிந்து கொண்ட அறிதலுக் கேற்ப அவரவர் இரசித்து உள்வாங்கிய விடயங்களை தெளிவாக தமது உரையில் விளக்கியிருந்தார்கள்.

நான் இன்னும் இந்நூலை வாசித்து முடிக்கவில்லை, வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இந்நூல் பற்றி மதிப்பீட்டுரை நிகழ்த்தியவர்களிடமிருந்தும் இந்நூலை வாசிக்கத் தொடங்கிய அறிதலிலிருந்தும், நான் இந்நூலின் நுழைவாயிலில் சொல்லப்படுகின்ற மினுவாங்கொடை „கல்லுலவ' கிராமத்திலிருந்து ஆரம்பித்து, இந்நூலாசிரியரின் தாயிடமிருந்து அவ்வப்போது இனக்கலவரம் பற்றி கதைகதையாக கேள்விப்பட்ட விடயங்களை ஒரு நாவலுக்குரிய சம்பவக் கோர்வைகளுடன் ஆசிரியர் கொண்டு செல்வதைக் காண முடிகின்றது.

சம்பவங்களை விளக்குகின்ற போதும், சம்பவ மாந்தர்களின் உரையாடல்களை மக்களுக்கு கொண்டு செல்வதிலும் படர்க்கை நிலையில் கதை சொல்வதிலும் பார்க்க தன்மை நிலையில் சொல்வது சுலபமானது மட்டுமல்ல வாசிக்கும் வாசகன் கதை மாந்தர்களை தானகவே உருமாறி பார்க்கக்கூடிய நிலையுண்டு.

அடுத்த நூலான „ஆயுத எழுத்து' நூலுக்கு முதலில் மதிப்பீட்டுரையை வழங்கிய நான், இந்நூலை வாசித்த போது உள்வாங்கிய என அறிதலை அங்கு உரையாக பின்வருமாறு வழங்கியிருந்தேன்.
„நான் இந்நூலை வாசித்த போது உண்மையில் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்திருந்தேன். அதிர்ச்சி விடுதலைப்புலிகளின் தனது மக்களுடனான தொடர்பு சிலவற்றை நடைமுறைப்படுத்துவதில் அராஜகம் மிகுந்ததாகவும் இருந்ததையும், வியப்பு அவன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி சம்பவங்களை முன்னிலைப்படுத்தி விபரித்திருந்த திரு. சாத்திரியின் துணிச்சலையும் கண்டே.

இக்கதையை வாசித்து உரை நிகழ்த்திய போது என்னால் தெரிவிக்கப்பட்டதும் அச்சமயத்தை கடந்து பின்பு என்னுள் ஏற்பட்ட இக்கதை சம்பந்தமான சிந்தனையை ஒழுங்கமைத்துச் சொல்லவே விரும்புகிறேன்.

ஒரு பாடசாலை மாணவன் விடுதலை அமைப்பில் சேர விரும்புவதும் அதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பைத தேர்ந்தெடுத்து பெற்றோருக்கு பொய் சொல்லுதல் காதலிக்கு பொய் சொல்லுதல் என்பன தொடங்கி பல சம்பவங்களை „அவன்'என்ற பாத்திரத்திற்கூடாக இக்கதை தொட்டுச் செல்லுகின்றது.
மாற்று இயக்கங்களில் ஒன்றான ரெலோ முகாம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலால் அரைகுறை உயிரோடு துடித்த உயிர்களை ரயர் போட்டு எரித்த விடயங்கள் தொட்டு,வன்முறையைக் கையிலெடுத்து மானிப்பாயிலிருந்த புலிகளின் முகாம் ஒன்றில் சிங்கராசா என்ற குடும்பஸ்தனின் மகன் சீலன் என்பவனை இரும்புக்குழாயால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்கிக் கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் என பல சம்பவங்கள் நிறைய உண்டு.

விடுதலைப்போர் என்ற போர்வையில் ஆயுதத்தை கையிலடுத்த சின்னஞ்சிறுசுகளகூட மக்களைப் பயமுறுத்தயமை அடக்கி வைக்கப்பட்டமையை இந்நூலில் காணக்கூடியதாக இருக்கின்றது.
திரு.சாத்திரி „அவன் „ என்ற கதாபாத்திரத்தை சம்பவங்களைப் பார்ப்பவனாகவும் ,சம்பவத்தின் பங்காளியாகவும் உருவாக்கிய உத்தி கதையை வாசிப்பவர்களுக்கு விளங்கக்கூடியதாகவிருக்கின்றது.
புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தமது வேலைத்திட்டங்களுக்கு வேற்று நாட்டு பெண்களை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பது தொட்டு போதைப்பொருள் வரை இநநூலின் ஆசிரியர் துணிச்சலுடன் எழுதியிருக்கிறார்.

இந்நூலின் மதிப்பீட்டுரையை இரண்டாவதாக வழங்கிய திரு.சிறீஜீவகன் இந்நூலின் வேறொரு பகுதியை எடுத்து தனது உரையாக வழங்கினார்.

பணமே முககியமாக இருந்ததால் பணத்தை வாங்கிக் கொண்டு காதலைர்களை பிரித்து வைத்த புலிகள், புலிகளின் தலைவர் காதல் திருமணம் செய்து கொண்டதை எப்படி அனுமதித்தது என்பதை கேள்வியாக முன் வைத்தார். அவர் தனது உரையில் உயிர் எழுத்தின் இறுதியில் வரும் ஆயுத எழுத்துக்கு ஒப்பீடு செய்து உரையாற்றிய அவர் ஆயுதத்தை தவறாக பயன்படுத்தியமை ஊழ்வினையின் பலனைப பெற வேண்டிய நிலைக்கு தமிழினத்தை கொண்டு வந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

பலராலும் சர்ச்சைக்குரிய நூலாக காணப்பட்ட இந்நூலின் மதிப்பீட்டுரை நிகழ்வுக்கு முன்னரே மண்டபத்தின் ஓரத்தில் இந்நூலின் அதிர்வு கருத்துக்களாக வெளிப்படவே செய்தது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து ஜெர்மனியில் வெளியான பின்னர் அங்குள்ள புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என்கிற பெயரில் இயங்கும் அனைத்துலக செயலகம் பிளவு பட்டு தனியாக ஒரு அறிக்கை விட்டுள்ளார்கள் ..

 

வணக்கம்;

காலத்தின் தேவை கருதியும், போராட்டச் செயற்பாடுகளின் நேர்த்தி கண்டும் இயங்கவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் நிலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். யாரையும் தூண்டி விடுவதோ அன்றி, தேவையற்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதோ எமது நோக்கம் அல்ல. இந்தக் கடிதத்தை வாசிப்பதன் மூலம் சில புறமுரண்பாடுகளை நீங்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என நம்புகிறோம்.

நேற்றைய தினம், அதாவது 06.06.2015 அன்று யேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில், ´´ஆயுத எழுத்து´´ என்ற நூல் மீள் வெளியீடு செய்யப்பட்டது . இந்நூலானது பிரான்ஸ் நாட்டில் வசித்துவருகின்ற சாத்திரி என்பவர், தனது தனிப்பட்ட நச்சுக் கருத்துகளைத் தெளித்து, விடுதலை எனும் முலாம்பூசி வெளியிட்டு வைத்த ஒரு காகிதக் கட்டு என்பது இதை வாசித்தறிந்த அனைவருக்கும் தெரியும். ஒரு சில மாதங்களுக்கு முன்பு; இந்தியாவில் வைத்து இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி கேணல் ஹரிகரன் என்பவரால் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த ஹரிகரனே தமிழீழத்தில் இந்திய இராணுவத்தை வழிநடத்திய கட்டளை அதிகாரி என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்தியாவில் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்ட வேளையில்; ஏராளமான எதிர்ப்புகள் வெடித்த போதும், அசைந்து கொடுக்காத சாத்திரி அந்நூலை வெளியிட்டு வைப்பதில் முன்னின்று செயற்பட்டார். மிகக்குறைந்த மக்களோடு நடைபெற்ற அந்நிகழ்வு, தமிழக உறவுகளால் உதறி எறியப்பட்ட ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.

நேற்றைய தினம் இந்நூல் யேர்மனியில் மீள்வெளியீடு செய்யப்பட இருப்பதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் பலருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இது, யேர்மனியின் விடுதலைத் தளபதிகள் என்று தம்மைத் தாமே வருணித்துக்கொள்ளும் சிரிப்பு ரவி மற்றும் துணைத்தளபதி சங்கர் ஆகியோருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால்; இது சம்பந்தமாக இவர்கள் யாருக்கும் அறிவுறுத்தல் வழங்க முன்வரவில்லை . இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்பது சம்பந்தமாக நீங்கள் ஏன் மக்களுக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கேட்கப்பட்ட போது, அது மக்களாகவே முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய விடயம் என திரு.சிரிப்பு ரவி அவர்கள் தெரிவித்திருந்தார். மக்களை வழிநடத்துவோர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் இவர்கள், நேற்று மட்டும் மக்களை வழிநடத்தாது விலகி இருந்தது ஏன் என்ற கேள்விக்கு, பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக்கூட எம்மால் விடை பெற முடியவில்லை.

மேற்கூறிய இருவரையும் தவிர்த்து விடுவோம். இவர்கள் இருவருக்குமான புல -நாய் - வாளர்களாக இயங்கும் இவர்களது வால்பிடிகளுக்கும் இந்த விடயம் தெரியாது என்று எவரும் மறுக்க முடியாது. ஒன்றைப் பத்தாக மாற்றி, அப்படியே கண், காது , மூக்கு வைத்து , திரித்துக் கூறும் சிறப்புக் கொண்ட பல மந்திரிகள் கொண்ட இந்த யேர்மனியில் , தடுக்கப்பட வேண்டிய இந்நூல் வெளிவர அனுமதிக்கப்பட்டமை புலப்படுத்தும் செய்தி என்ன என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . சுருங்கக்கூறின், எதிரியானவனின் செயல்களைப் புலத்தில் நின்று தடுப்பதற்குக் கூட வழியற்றவர்களாக , தகுதி அற்றவர்களாக இருக்கும் இவர்களின் செயற்பாட்டுத் திறன் என்ன என்பதை இவர்கள் தெளிவுபடுத்துவார்களா... இல்லை இந்த விடயம் எமக்கு முதல் நாளில் தான் தெரியவந்தது என்ற தெளிந்த பொய்யை மீண்டும் அள்ளி விடப்போகிறார்களா..?

இந்நூல் சாத்திரி என்ற மனிதன் விடுதலைப்புலிகள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியிட்டு வைத்த நூல்.. என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. இந்நூலில் தானும் ஒரு போராளியாக இருந்ததாகவே சாத்திரி தனது கட்டுக்கதையை ஆரம்பிக்கிறார். தளபதியாக இருந்து, காட்டிகொடுப்பவனாக மாறிய கருணாவின் முன் இவர் வெறும் துகள் என்பது தமிழீழ மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும்; சில அற்பர்களின் செயற்பாட்டு முடங்கல் காரணமாக இந்நூலின் நச்சுக்கருத்துகள் பரவவிடப்படக்கூடாது என்பதில் தமிழீழ மக்களாகிய நாம் அனைவரும் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக; யேர்மனியில் வெளியிட்டு வைக்கப்பட்ட காலத்திற்கேற்ற அவசியப் பதிப்பான ´´ஈழ இன அழிப்பில் பிரிட்டனின் துரோக வரலாறு´´ என்ற நூலை வெளியிட்டு வைக்கவிருந்த தருணத்தில்; தளபதி சிரிப்பு ரவியும், துணைத் தளபதி சங்கரும் இணைந்து நின்று அந்நூலை வெளியீடு செய்யவிடாது தடுக்கும் வகையில் செயற்பட்டமையும், நேற்று வெளியீடு செய்யப்பட்ட சாத்திரியின் நூலைப் பாராமுகமாக வெளியீடு செய்ய அனுமதித்தமைக்குமான செயற்பாடும் , நடைமுறை வகையிலே நமக்கு எதைப் புலப்படுத்துகிறது என்பதை மக்களாகிய நீங்களும், சிரிப்பு இரவியின் வால்பிடிகளும் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இத்தருணத்தில் எமது வேண்டுகோளாக உங்கள் முன்வைத்து விடைபெறுகிறோம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.