Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை! - யாழில் மைத்திரி

Featured Replies

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று  திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

maithiri_jaffna_visit.jpg

அத்துடன், விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/40389/57//d,article_full.aspx

கட்டாயம் இவர்களை துக்கில் போட வேண்டும் 

வித்தியாவின் தாய், சகோதரனை ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி சந்தித்தார்
 
my3%20rfdysdryh%20jaffna%20989899.jpg
 
ஆளுநர் அலுவலகத்தில் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். மதிய போசனத்துடனான இந்த சந்திப்பில் வித்தியாவின் குடும்பத்தாரின் துயரத்தைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களுக்கு தன்னாலான முழு உதவிகளையும் வழங்க உறுதியளித்தார்.
 
மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாக வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஆளுநர் அலுவலகத்தில் வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனை ஜனாதிபதி சந்தித்தார்.
 
ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் விஜயம் குறித்து மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை 'மலரும்' இணையம் சார்பாகத் தொடர்புகொண்டு கேட்டபோது -
 
வித்தியாவின் படுகொலைக்குப் பின்னரான நிலைமையை நேரடியாகப் பார்வையிட வேண்டுமெனக் கேட்டதற்கு இணங்க அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இதன்போது வித்தியாவின் தாயார், சகோதரனை அவர் சந்தித்து தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு, அவர்களது பாதுகாப்பு குறித்தும் தான் கவனம் செலுத்துவார் என்றும் உறுதியளித்தார்.
 
புங்குடுதீவுக்கு ஜனாதிபதி செல்ல வேண்டும் என்றே நாம் எதிர்பார்த்தோம். அவரும் அதில் விருப்பமாக இருந்தார். ஆனால் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அவ்வாறு ஜனாதிபதி புங்குடுதீவுக்குச் சென்று நிலைமைகளை ஆராயந்திருந்தால் தீவகத்தின் நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கமுடியும். அதற்குச் சிலர் அனுமதிக்காமை வருத்தமளிக்கிறது.
 
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்குப் பின்னர் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களில் பலர் அப்பாவிகள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் 30 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர், மரணவீட்டுக்கு பாண்ட் இசைத்துவிட்டு வந்தவர்கள் 07 பேர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து உண்மையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாம் கேட்டுக் கொண்டோம். அதற்கு ஜனாதிபதி இது குறித்து தான் கவனம் செலுத்துவார் என்று உறுதியளித்தார். - என்று பிரதியமைச்சர் விஜயகலா தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்களின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 
 
my3%20rfdysdryh%20jaffna%20989898.jpg
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது.....என்பது என் கருத்து மட்டுமே

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது.....என்பது என் கருத்து மட்டுமே

 

புத்தன் 
 
இது எனது கருத்தாகவும் இருக்கிறதே!!
 
மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் இவ்வாறான செயல்கள் வரவேற்கப்படவேண்டியதே. எமது துயரத்தில் பங்கெடுத்த ஜனாதிபதிக்கு நன்றிகள். இவ்வாறுதான் உறவுகள் கட்டப்பட வேண்டும்.
 
மைத்திரி போடும் அஸ்திவாரம் வலிமையாகத்தான் தெரிகின்றது. இதற்கு மேல் நிறைய கட்ட வேண்டியுள்ளது. பார்க்கலாம்.
 
நன்றி

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா விடயத்தில் தேர்தலை நோக்கி எடுக்கப்பட்ட கடைசி நேர கருசணைக்கு நன்றி.அதேவேளை சின்ன நெருடல் உங்கள் ஆட்சியில் வன்னியில் கொல்லப்பட மாணவி சரணியா தங்கள் பிள்ளை இல்லாமல் போனது எப்படி??

 

 
my3%20rfdysdryh%20jaffna%20989899.jpg
 
 

 

படத்தில இருப்பது தம்பியா? 

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டுகளில் யாழ் பழைய மார்க்கட் எரியூட்டபட்ட பொழுது,மற்றும் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட பொழுது எல்லாம் அந்த கால கட்டத்து தலைவர்கள் வந்து மக்களுக்கு ஆறுதல் அளிக்க தவறிவிட்டார்கள்....

என்ன இருந்தாலும் இவருடைய இந்த மனிதாபிமான செயல் நல்லதொரு முன்னுதாரணம்.

 

சனாதிபதி தேர்தல் வாறதுக்கு இன்னும் நாலு வருஷம் இருக்கு அப்பிடி இருந்தும் வெறும் வாக்கை எண்ணாமல் வந்தது நல்ல செயல்.

 

 

சொந்த சகோதரி என்றுகூட பாக்காமல் கேவலபடுத்தி கொன்ற காமுகர்களுக்கு இந்த சிங்கள சனாதிபதி மேல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.