Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் சேறுபூசும் அரசியல்வாதியல்ல! - என்கிறார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் சேறுபூசும் அரசியல்வாதியல்ல! - என்கிறார் மகிந்த

[Wednesday 2015-06-17 07:00]
mahinda-sad-400-seithy.jpg

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சேறுபூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க சேறுபூசும் அரசியலில் ஈடுபடக்கூடியவரல்ல. என்னிடம் பல்வேறு வழிகளில் உதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட இன்று எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர்.

எனினும் ரணில் அவ்வாறு செய்யவில்லை.

 

சேறு பூசுவதிலும் ஒர் எல்லையிருக்க வேண்டும். ஒட்டு மொத்த குடும்பத்திற்கு எதிராகவும் சேறு பூசப்படுகின்றது. நான் இன்று மாத்தறைக்கு செல்ல வேண்டுமென்றாலும் ஒரு சிலரிடம் கேட்க வேண்டியுள்ளது. மாத்தறைக்கு செல்ல எவரின் அனுமதியும் தேவையில்லை. இதற்கு முன்னரும் நான் மாத்தறை சென்றிருக்கின்றேன்.

 

இன்று ஊடகங்கள் கேலிச்சித்திரங்களுக்கு என்னைப் பயன்படுத்துகின்றன. அவற்றை பார்த்து நான் சந்தோஷமடைகின்றேன். ஊடகங்கள் என்னுடன் இப்போது சுமுகமான உறவினைப் பேணி வருகின்றன. சமநிலையாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனக்கு ஆச்சரியம், என்னிடம் அதிகளவு உதவி பெற்றுக்கொண்டவர்களே இன்று எனக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்களின் கோவைகள் இன்னமும் என்னிடம் இருக்கின்றன. எனது வீட்டில் இளநீர் பறித்தவர்களும் எனக்கு துரோகம் செய்கின்றார்கள்.

 

அவற்றுக்கு நான் கோபப்படப் போவதில்லை. அண்மையில் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றில் கெட்ட வார்த்தை பிரயோகித்தமை திடீர் ஆத்திரம் காரணமாகவாகும்.ரணில் அவரை எழும்பச் சொல்லியும் அமரச் சொல்லியும் உத்தரவு பிறப்பித்தார். அதனால் வாசுதேவ கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134231&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ரணில் சேறுபூசும் அரசியல்வாதியல்ல! - என்கிறார் மகிந்த

 

 

நன்றிக்கடன் என்பது இதுதான்.
 
ரணில் போட்ட வீதியில் வாகனம் ஓடி வெற்றி பெற்றவர் நீங்கள் தானே...
 
இது எங்கடை விளாங்காயளுக்கு விளங்காது. நம்மடை இன ஒற்றுமையை பற்றி சொல்ல வந்தனான்.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒருவர் முதுகை மற்றவர் மாறி மாறிச் சொறிந்து கொள்ள வேண்டியது தான்!

 

உலக அரசியல் வாதிகள் அனைவரிடமும் இந்த ஒற்றுமை உள்ளது!

 

monkey-back-scratching.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிடம் இருந்து பிரித்த மைத்திரியை போல மகிந்தவும் ரனில்/மைத்திரி கூட்டில் இருந்து யாரையும் பிரிக்க கூடும்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.