Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

Featured Replies

சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் JUN 17, 2015 | 6:00by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

pamban-300x200.jpgஇந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

கடலுக்கு மேலாக அமைக்கப்படும் பாலம் மூலமோ அல்லது கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை மூலமோ, பாக்கு நீரிணை ஊடாக தரைவழிப்பாதை இணைப்பை ஏற்படுத்துவது சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டாலும் கூட, அதற்கு மேலாக கப்பல்கள் பயணம் செய்ய முடியும்.

தனுஸ்கோடிக்கும், சிறிலங்காவின் எல்லைக்கும் இடையிலான தூரம் 23 கி.மீ மட்டுமே.

இந்த கடல் பாலம் சார்க் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தும்.

பாக்கு நீரிணைக்கு மேலாக தரைப்பாலம் மற்றும் தொடருந்துப்பாதையை அமைப்பதற்கான திட்டம் ஒன்று, சாத்திய ஆய்வு மற்றும் நிதியிடல் தொடர்பான பரிசீலனைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த திட்டத்துக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா- சிறிலங்காவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மியான்மார் வழியாக, வடகிழக்கு இந்தியாவை தாய்லாந்துடன் இணைக்கும் தரைப்பாதையை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் நிதின் கட்ரி தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/06/17/news/7006

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலம் கட்டினால் விடுதலைப்புலிகள் குண்டு வைத்து தகர்க்கமாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம் இருக்க,  புதிதாய் ஏன்.. பாலம் கட்ட வேண்டும்? என்று...

சுப்பிரமணிய சாமி, இந்து அமைப்பு.. ராம கோபாலன் வகையறாக்கள் கூப்பாடு போடப் போகின்றார்கள்.

பாலம் கட்டினால் விடுதலைப்புலிகள் குண்டு வைத்து தகர்க்கமாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்?

 

ஒரு கட்டிடம் கட்ட முதலில் அத்திவாரம் போடணும்.

 

அதுதான் பாலம் கட்டமுதலே புலிகளை போட்டுத் தள்ளீட்டாங்களே. அப்புறம் என்ன பயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கட்டிடம் கட்ட முதலில் அத்திவாரம் போடணும்.

 

அதுதான் பாலம் கட்டமுதலே புலிகளை போட்டுத் தள்ளீட்டாங்களே. அப்புறம் என்ன பயம்.

 

அப்பிடியெண்டால் என்ன  கோதாரிக்கு புலிப்படை / அவசரகாலம் எண்டு இன்னும்  பார்லிமென்டிலை கூட்டம் கூடி தடை வடை எண்டு கத்துறாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

போட்டு தள்ளினவரே புலி வந்திட்டுது என்று சவுண்டு குடுக்கறார் மகிந்து . :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்டிடம் கட்ட முதலில் அத்திவாரம் போடணும்.

 

அதுதான் பாலம் கட்டமுதலே புலிகளை போட்டுத் தள்ளீட்டாங்களே. அப்புறம் என்ன பயம்.

 

 

தயவு செய்து....

 

புலிகள் என்பவர்கள் எமது தாயகவிடுதலைப்போராளிகள்

எமக்காக

எமது விடுதலைக்காக

எமது பாதுகாப்புக்காக

தம்மை

தமது உயிரைக்கொடுத்தவர்கள்...

 

இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்

ஆனால் மேலே நான் எழுதியுள்ள கருத்தை 

நம்புபவர்கள்

மாவீரர்களை மனதார பூசிப்பவர்கள் இருக்கிறார்கள்

அதை ஏற்றுக்கொண்ட தளம் இது...

 

 

தயவு செய்து

அவர்களது நம்பிக்கைக்குரியவர்களை

போட்டுத்தள்ளினார்கள் போன்ற சொற்களால் சுடுவதைத்தவிருங்கள்

நன்றி.

அப்பிடியெண்டால் என்ன  கோதாரிக்கு புலிப்படை / அவசரகாலம் எண்டு இன்னும்  பார்லிமென்டிலை கூட்டம் கூடி தடை வடை எண்டு கத்துறாங்கள்?

 

குமாரசாமி அண்ணை
இலங்கை அரசு எங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது விதிக்கப்படாத விதி. ஆனாலும் எனக்கும் புரியாத ஒரு விடயம் - ஏன் இதுவரை கூட்டமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தை விலக்க கேட்கவில்லை என்பதுதான்.

தயவு செய்து

அவர்களது நம்பிக்கைக்குரியவர்களை

போட்டுத்தள்ளினார்கள் போன்ற சொற்களால் சுடுவதைத்தவிருங்கள்

நன்றி.

 

தவறுதான்
 
இனிமேல் இவ்வாறு எழுத மாட்டேன்.
 
சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.