Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்! - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்! - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
[Wednesday 2015-06-24 18:00]
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வட, கிழக்கில்  இதுவரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவர் இதனை கூறினார்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வட, கிழக்கில் இதுவரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவர் இதனை கூறினார்.

  

இராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாத அட்டைகளை வழங்குவதற்கு நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

ஜீலை மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாத அட்டைகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த வரப்பிரசாத அட்டை ஊடாக இராணுவ வீரர்களுக்கு அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன், தனியார் நிறுவனங்களிலும் இராணு வீரர்களின் வரப்பிரசாத அட்டைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வரப்பிரசாத அட்டைகள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் இது தொடர்பில் யாருக்கும் தெளிவில்லாத நிலையில் அதனை பயன்படுத்தமுடியாத நிலைய ஏற்பட்டது. எனவே அந்நிலையை மாற்றிட நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களின் ஒத்துழைப்பின் ஊடாக இராணுவ வீரர்களுக்கு வரபிரசாதங்களை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இதேவேளை, நாம் எந்தவொரு நிறுவனங்களையும் பலத்தை பிரயோகித்து இந்த திட்டத்துக்கு இணங்குமாறு செய்யவில்லை இராணு வீரர்களை கௌரவப்படுத்த இந்நிறுவனங்கள் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன.

இராணுவ வீரர்கள் தமது உயிரை அர்ப்பணித்து பெற்றுக்கொடுத்த நாட்டின் பாதுகாப்பை சீர்குழைக்க விடமாட்டோம். புதிய அரசாங்கம் பதவியேற்ற பினனர் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இது முற்றிலும் தவறான செய்தி. நாம் எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றவில்லை. நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134750&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது இராஜாங்க அமைச்சருக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேல்லையா? அதுதான் கிண்டிக் கிழங்கெடுத்து விட்டீர்களே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் பரவாயில்லை. கிண்டிக் கிழங்கெடுத்தவர்களுக்க்ப் பரிசும் பட்டமும் வழங்கிக் கௌரவமாக வைத்திருக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமே இப்போதும் அண்ணாந்து பார்த்துக் கொண்டு எச்சிலைத்  துப்புகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் பரவாயில்லை. கிண்டிக் கிழங்கெடுத்தவர்களுக்க்ப் பரிசும் பட்டமும் வழங்கிக் கௌரவமாக வைத்திருக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமே இப்போதும் அண்ணாந்து பார்த்துக் கொண்டு எச்சிலைத்  துப்புகின்றோம்

எடுத்தவனுக்கே  தெரியல

எதை எடூத்தேன் என்று...

அவனுக்கத்தெரியும்

ஒரு தமிழன் இருந்தாலும் அவன் புலிதான் என்று...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிண்டி கிழங்கெடுத்தவர் அயல்நாட்டவர். இவருக்கு அந்த விடயங்கள் தெரிந்திருக்க மாட்டாது. இன்றும் சொல்கிறேன் சிங்களவன் மோட்டுச்சிங்களவன்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.