Jump to content

அம்பாறை பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற அழைப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு!!


Recommended Posts

பதியப்பட்டது

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் பிரிந்து பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு விடும் என்று கூறப்படும் நிலையில் த.தே.ம.முன்னணி தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைப்பதற்காக கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை முற்றாக கைவிட்டிருந்ததுடன் தமிழ் மக்களின் கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டுவிட்ட கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்த்தரப்பிடமும் அம்பாறையில் தேர்தலில் இருந்து ஒதுங்கி தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் ஓர் பகிரங்க வேண்டுகோளை விடுப்பதாக முன்னணி அழைப்பினை விடுத்துள்ளது.

அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களிற்கான அமைப்பாளர் சட்டத்தரணி வீ.மணிவண்ணன் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.முன்னதாக கட்சியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சகிதம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி ;-  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வேட்புமனு தாக்கல்!  http://www.pathivu.com/news/41423/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுதான் கேடு கெட்ட அரசியல்.

யாழ்பாணத்தவர்களால்

யாழ்பாணத்தவர்களுக்காக

யாழ்பாணத்தில் நடத்தப் படும் கட்சி

ததேமமு.

தேர்தல் என்றவுடன் ரெண்டு மொட்டையரை வேட்பாளராய் போட்டு

புதிதாய் ஒரு பெயர் பலகை தூக்கி அலுவலுகம் தொடங்கீற்று,

இனிய பாரதியை எதிர்து அரசியல் செய்த ததேகூ இப்போ இவர்களுக்கு விட்டுக் கொடுக்கணுமாம்.

முசுலீம்களை சேர்க்காமல் இரண்டு தேசம் என்பதே கிழக்கு தமிழரை கருவறுக்கும் பொன்னம்பலப் பரம்பரைப் புத்தி.

இதுக்குள் இவர்களுக்கு கிழக்கில் சீட் வேறு வேணுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னொரு சிங்களப் பியசேனவைக் கொண்டு வருவதைவிடக் கூட்டமைப்பு ஒதுங்குவது நல்லதே    

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கூட்டமைப்பால் 2 பேர் போனால் காணும். ஏனேனில் அந்த 2 பேர் சொல்லுவதைத்தான் ஏனையோர் தலையாட்ட வேண்டும். எனவே அவர்கள் மற்றைய இடங்களில் போட்டி போடாமல் ஒதுங்குவதே தமிழ் மக்களுக்கு செய்யும் உதவி..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.