Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மரணம்

Featured Replies

கிரெம்ளினால் நஞ்சூட்டியதாக கருதப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மரணம்

[25 - November - 2006] [Font Size - A - A - A]

கிரெம்ளினால் நஞ்சூட்டப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ மூன்று வாரகால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் லண்டன் மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கண்காணிப்புப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த 43 வயது லிட்வினென்கோ வியாழக்கிழமை காலமானதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த தவறியுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு அவரை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

பொலிஸார் மரணத்திற்கான காரணத்தை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

மொஸ்கோ மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டால் இதனால் மிக மோசமான இராஜதந்திர விளைவுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் நிகழ்ந்த முதலாவது சம்பவமாக இது அமையும்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கடும் விமர்சகரான லிட்வினென்கோவை கொல்வதற்கு மொஸ்கோ நஞ்சூட்டியது என தெரிவிக்கப்படுவதை கிரெம்ளின் மறுத்துள்ளது.

லிட்வினென்கோ இவ்வாரம் நினைவிழப்பதற்கு முன்னர் தனது சகாவிடம் புட்டின் அனைவரையும் கொல்ல விரும்புகின்றார், என்னை கொன்றுவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு தப்பியோடிய அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டது.

புட்டினால் கடுமையாக விமர்சித்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் தொடர்பாக தகவல்களை திரட்டிவந்த லிட்வினென்கோ, இரு ரஷ்யர்களை ஹோட்டலொன்றில் சந்தித்த பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் கொலைகள் அதிகமாக நடக்குமிடம் இலண்டன். அதை முன்னின்று செய்பவர்களில் அதிகமானோர் MI-16. சொந்த நாட்டு இளவரசியையும் போட்டவர்கள் ஆச்சே..

அரசியலில்இதெல்லாம் சாதாரணமப்பா...

Edited by snegi

5 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் கதிர்வீச்சு தாக்கம்

33 ஆயிரம் பயணிகளுக்கு பாதிப்பு?

லண்டன், டிச.1:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 5 விமானங்களில் கதிர்வீச்சு தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானங்களில் பயணம் செய்த 33 ஆயிரம் பயணிகளுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கதிரியக்க விஷம் மூலம் ரஷ்ய முன்னாள் உளவாளி லிட்வினன்கோ கொல்லப்பட்ட சம்பவம் தற்போது விமானப் பயணிகளிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய உளவுப் பிரிவில் இருந்தவர் அலெக்சாண்டர் லிட்வினன்கோ. இவர் கடந்த 23ம் தேதி இங்கிலாந்தில் இறந்தார். பொலோனியம்-210 என்ற கதிரியக்க விஷம் கொடுத்து இவர் கொல்லப்பட்டு உள்ளார் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதை நுகர்ந்தாலோ அல்லது உட்கொண்டாலோ கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி விரைவில் உயிரிழக்க நேரிடும். மரணப் படுக்கையில் இருந்த சமயத்திலேயே, "தான் இறக்க நேரிட்டால், அதற்கு நிச்சயம் ரஷ்ய அதிபர் புடின்தான் காரணம்" என லிட்வினன்கோ குற்றம் சாட்டியிருந்தார். இதை புடின் வன்மையாக மறுத்தார்.

ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கைகளை லிட்வினன்கோ தொடர்ந்து விமர்சித்ததால், அவரை ரஷ்ய உளவாளிகள் லண்டனில் கடந்த மாத இறுதியில் சந்தித்து விஷம் கொடுத்துள்ளனர். மாஸ்கோவிலிருந்து லண்டன் வந்து தன்னை சிலர் சந்தித்ததாக இறப்பதற்கு முன் லிட்வினன்கோ கூறியிருந்தார். கடந்த நவம்பர் 1ம் தேதி உடல்நிலை பாதிப்படைந்த லிட்வினன்கோவின் தலைமுடி முழுவதும் கொட்ட ஆரம்பித்தது. கடந்த 23ம் தேதி அவர் இறந்தார். அவர் வசித்த இடங்களில் கதிர்வீச்சு தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் லிட்வினன்கோ பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் இரண்டு போயிங் விமானங்களிலும் கதிர்வீச்சு தாக்கம் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, பொலோனியம் கதிர்வீச்சா? என்பது பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து லண்டன்-மாஸ்கோ வழித்தடத்தில் சென்ற மூன்று விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 25ம் தேதியிலிருந்து நவம்பர் 29ம் தேதி வரையில் 33 ஆயிரம் பேர் அந்த விமானங்களில் பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளனர். பார்சிலோனா, பிராங்க்பர்ட், ஸ்டாக்ஹோம், வியன்னா, இஸ்தான்புல், மாட்ரிட் மற்றும் ஏதென்ஸ் உட்பட பல இடங்களுக்கு அந்த விமானங்கள் சென்றுள்ளன. அந்த விமானங்களில் பயணம் செய்தவர்களை எல்லாம் உடனடியாக பரிசோதனை செய்யும் முயற்சியில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இறங்கியுள்ளது.

விமானப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த விமானத்தில் ஏறி, இறங்கியிருப்பார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 2 விமானங் களிலும் கதிரியக்க பாதிப்பு இருக்கிறதா என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதில் ஒரு விமானம், தற்போது மாஸ்கோவில் உள்ளது. இந்த விமானத்தில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறிந்த பிறகே விமானத்தை லண்டனுக்கு கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். லிட்வினன்கோவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

நன்றி தினகரன்

தகவலுக்கு நன்றி வசம்பு,

உலகம் எங்கே போகிறது?

மனிதனுக்கு எங்கே பாதுகாப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி வசம்பு,

உலகம் எங்கே போகிறது?

மனிதனுக்கு எங்கே பாதுகாப்பு?

இது இன்றைய பிரச்சனையில்லை நண்பரே! பௌத்தமதம் இந்தியாவை ஆண்டகாலத்தில் அவர்கள் உடலில் பாம்பு, மற்றும் அரலி விசங்களை ஏத்தி வைத்திருப்பார்களாம். யாரோடும் உணவு உண்டும்போது உணவில் அந்த நஞ்சினைக் கலந்து விடுவார்கள். சாப்பிடுபவர்களில் இவர்கள் சாகமாட்டார்கள். கூட இருப்பவர்கள் இறந்து விடுவார்கள்.

அவ்வாறே பெண்களுக்கும் இவ்வாறு நஞ்சை மெதுவாக ஏற்றி பழக்கப்படுத்தி வைப்பார்கள். எதரி நாட்டு மன்னனோடு உறவுகொள்ள வைத்து அவனைச் சாகடிப்பார்கள்.

இன்று மட்டுமல்ல, அன்றும் சூழ்ச்சியால் கொல்வது புதிய விடயமல்ல.

கொல்லப்பட்டவர் ஒண்றும் சாதாரணமானவர் கிடையாது.. KGP யின் கேணல் தர அதிகாரி... புலநாய்வுப்பிரிவில் அதுவும் உலக அளவில் வல்லரசான நாட்டின் கேணல் என்பவருக்கு ஒரு இராணுவ, ஜெனரலையே ஆட்டிப்படைக்கும் அதிகாரம் இருக்கிறது...

அப்படியான ஒருவர் இங்கிலாந்தில் ரஸ்யாவில் இருந்து வெளியேறி எதிரிகூடாரங்களில் ஒண்றான இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்... அப்படி எண்றால் அர்த்தம் என்ன...??? கட்டாயம் அவர் பிரித்தானியாவுக்காகவோ, அமெரிக்காவுக்காகவோ இரண்டாம்படை வேலை செய்து இருக்கிறார் எண்றுதானே அர்த்தம்...! எந்த ஒரு நாடும் எதிரியின் புலநாய்வாளர்கள் தன் நாட்டில் ஊடுருவுவதையோ, குடியேறுவதையோ விரும்பாது. அப்படியும் அந்த உளவாளி அதிகாரியால் இங்கிலாந்தில் இருக்க முடிந்தது எண்றால், ரஸ்ய இரகசிங்கள் இங்கிலாந்துக்குள் கசியாமலா இருந்து இருக்கும்...??

வினையை விதைத்தவர் அறுக்கத்தானே வேணும்... இங்கிலாந்தின் இப்போதைய கவலை என்ன எண்றால் தங்களை நம்பி வந்த ஒரு உளவாளியை காப்பாற்ற முடியாது போய்விட்டதே என்பதுதான்.... இரட்டை முகவர்களாக இனி ரஸ்யர்கள் முன்வருவார்களா எனும் கவலைதான் அது..

கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது, காரணம் இது இப்போது நடைமுறையில் சாத்தியமா? மருத்துவவியலாளர்கள் தான் விளக்க வேண்டும்!

ஆனால் ஒருவரை கொல்லுவதற்காக 33 ஆயிரம் பேர் பாதிப்படையும் வகையிலான கொலைநுட்பம் ஆனது மேற்கத்தைய நாடுகளே புவியில் ஒட்டு மொத்த மனித வாழ்விற்கு ஆபத்தானவை என்ற கருத்தை வலுப்படுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய உளவு நிறுவனமான MI5 இற்குக் கிடைத்த மரண அடி. :P :unsure:

Edited by nedukkalapoovan

இதே போலவே பாலஸ்தீன தலைவரும்(யாசீர் அரபாத்)கொல்லப்பட்டார்.அதைப்ப

பனிப்போர் முடிந்தபின்னும்

உளவாளிகள் வேட்டையா?

அது சரி ...

ரஸ்யாவிலிருந்து வந்தவர்கள்

அடைக்கலம் தேடியவரை

சுதந்திரமா சந்திக்க யூ.கே எப்பிடி விட்டுதாம்?

தனிபட்ட - பாதுகாப்பு - இல்லையா?

விசயமறிந்தவர்கள் - சொல்லுங்க -கேள்விதான் -இது!

என்னவாயிருக்கும்?

கூட்டு சதி?

கோல்மால்?! :huh::huh:

Edited by வர்ணன்

அவர் இறக்கும் பொழுது தனியார் புலநாய்வுச் சேவை (private investigation service) வழங்கியவர். அதன் படி அவர் தனது வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய ஒரு சாதாரணமானவராகத்தான் இருந்திருக்கிறார். அதாவது ரஸ்யாவின் FSB (KGB) இடம் இருந்து ஓடி வந்ததால் ஒளித்து தலைமறைவா வாழ வேண்டிய நிலையில் இருக்கவில்லை.

அவர் தனது தனியார் புலநாய்வு வேலையில் ரஸ்யாவின் ஊடகவியலாளர் கொலை போன்றவற்றையும் செய்திருக்கிறார். அதில் இறுகி இருக்கு.

துரோகம் செய்த உளவாளியை FSB தேடி அழிக்கவில்லை. அவர் தற்பொழுது செய்த வேலையின் நிமித்தம் பிரச்சனைக்குள் மாட்டுப்பட்டிருக்கிறார்.

இது போன்ற பல கொலைகள் மேற்கத்தேய உளவு நிறுவனங்களாலும் அரங்கேற்றப்படுகின்றன வாகன விபத்துகளாக, இருதய நோய், கொள்ளையரோடு நடந்த சச்சரவில் நடந்த கொலை, drive by shooting, road rage என்று அடுக்கி கொண்டு போகலாம். நாம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் மேற்கத்தேய ஊடகங்களிற்கு அவற்றை கிளறுவது தமது தேசிய நலன்களிற்கு விரோதமானது என்று செய்வது இல்லை. அதனால் அவை ஒரு சாதாரண நிகழ்வாகவே சொல்லியும் சொல்லாமாலும் மறைந்து போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.