Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க...

Featured Replies

தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 52 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

0094 21 222 42 60

0094 21 222 42 61

www.puthinam.com

இன்று தாயகம் இருக்கும் அவல நிலையில் இது போன்ற ஏற்பாடுகள் ஆடம்பரமாகத்தான் தெரிகிறது.

தேசிய தலைவரின் பிறந்த நாள் என்று நடக்கும் பல நிகழ்வுகள் மாவீரர் தின நிகழ்வுகளின் புனிதத்தை கெடுக்கிறது. அத்தோடு ஒட்டு மொத்த மாவீரர் தினத்தை ஒட்டிய தேசிய எழுச்சி நிகழ்வுகளுமே ஒரு தனிமனிதரின் பிறந்ததின விழா பற்றியது என்று நக்கலடிக்க வைக்கிறது. இதை சர்வாதிகாரிகள் நடத்தும் ஆடம்பர வாழ்வோடு ஒப்பிட்டு எதிரிகள் எட்டப்பர் பிரச்சாரம் செய்வதற்கு உதவுகிறது.

இதைப்பற்றி தேசிய தலைவரின் பெயரால் வால்பிடிக்கிற கூட்டம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

குறுக்காலபோறவரோட வாழ்க்கையில நிறைய வால்பிடிகள் குறுக்க போயிருக்கினம் போல..

யார் வாழ்த்தினாலும் வாழ்த்தா விட்டாலும் தலைவர் ஆயிரம் காலம் வாழ்வார்.

தாராளமாக மனமார வாழ்த்துங்கள். உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உரிய இறைவனிடம் பிராத்தியுங்கள். ஆனால் வானொலியில் தொலைக்காட்சியில் இன்னார் இந்த நாட்டில் இருந்து வாழ்த்துகிறார் என்று போட்டிக்கு ஒவ்வொருவரும் சொல்லி என்னத்தை காண்கிறீர்கள்?

அதுவும் 2002 போர் நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னர் இருந்த போர்ச் சூழ்நிலையில் கூட பசியால் இறப்புகள் நடவாத கொடுமை அவலம் நடந்தேறுகிறது என்று எதிரியை திட்டி குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் செய்கிறீர்கள். சிங்கள இனவாதம் மாபெரும் மனித அவலத்தை தமிழர்கள் மீது திணிக்கிறது என்று ஒப்பாரி வைத்துக் கொண்டு செய்கிறீர்கள்.

கூச்சமாக இல்லை?

மக்களை கொன்று போடும் மகிந்தவிற்கோ..

மகிந்தா வீட்டு மலசலகூடத்தை சுத்தம் செய்யும் தமிழின தேசத்துரோகிகளுக்கோ

நாங்கள் வாழ்த்து சொல்லவில்லை..

வாழத்து மனதார வருவது.. தலைவன் கேட்டு வாங்குவதில்லை..

நீங்கள் சொல்வது போல்.. அவலம் மிகுந்தநேரத்தில் கொண்டாட்டம் வேண்டியதி;லை..

ஆனால் வாழ்த்து மக்களின் அன்புpன் வெளிப்பாடு..

அதற்கு இன்பம்..துன்பம் எனவேறுபாடு இல்லை..

இறந்த போராளிகள் மக்கள் என்று அனைவரின் இறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டெனில் அது இறுதி இலட்சியமான தாயகத்தை விரைந்து மீட்டெடுப்பதே.

போராளிகள் இல்லை எனில் தலைவர் இல்லை, மக்கள் இல்லை எனில் போராளிகள் இல்லை.

போராளிகள் ஆதரவாளர்கள் என்று நேற்றுமட்டும் 10 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசுக் கெதிரான தீர்மானம் மார்ச் மாதம் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அது வரை என்தனை பேர் வதைக்கப்பட்டு கொல்லப்படப் போகின்றனர்?

இலங்கையை விட அதிகமான கொலைகள் நடக்கும் இராக்கில் கூட எதுவித அக்கறையும் காட்டாத வெளிநாடுகள் எமது விடயத்தில் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

மக்கள் கொல்லப்படுவதை வெறும் புள்ளி விபரமாக சமர்பிப்பதுடன் நின்று விடாது அதனை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தாமதிக்காது செயற்படுத்த வேண்டும்.

வினயமுடன்,

தாராளமாக மனமார வாழ்த்துங்கள். உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உரிய இறைவனிடம் பிராத்தியுங்கள்.

கூச்சமாக இல்லை?

உம்மை இக்களத்தில் பார்க்க அருவருப்பாகத்தான் உள்ளது. எம் தலைவனுக்கு வாழ்த்துச் சொல்ல உமக்குப் பிரச்சனையென்றால் ஏதோ எங்கோ உமக்கு பிரச்சனையுள்ளது.

ஒருவரை வாழ்த்துவது வணங்குவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். அதில் எவருக்கும் தலையிட உரிமையில்லை. விரும்பினால் வாழ்த்துங்கள் அல்லாது போனால் தூற்றாமலாவது இருங்கள். பட்டினியால் வாடி வதங்கும் ஈழத்தமிழருக்கு தலைவரின் பிறந்தநாளும் மாவீரர் நினைவு நாளும் ஓர் புத்தெழுச்சியைத் தரும் நாளாகும்.

ஈழத்திலிருந்து

ஜானா :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவன்!

துரோகக் கும்பல்கள் எதைத் தான் கேலி செய்யவில்லை சொல்லுங்கள். எதிரியிடம் பெறும் பணத்துக்காக, தாங்கள் வந்த வழியான தமிழீழக் கொள்கையையே நக்கல் அடிக்கவில்லையா? அவர்களைப் பொறுத்தவரைக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எவ்வாறாவது மக்களின் மனங்களில் இருந்து தகர்க்க வேண்டும் என்பதான். எனவே, அவர்களுக்கு பயந்து எம் செய்கைகளை மாற்ற வேண்டிய தேவையில்லை.

மற்றும்படி, தலைவரின் பிறந்தநாள், மாவீரர் தினம், கரும்புலிகள் தினம் போன்ற தினங்கள் மக்களை உணர்வுகளோடு ஒன்றிக்க வைக்கும் நாட்கள். அவ்வாறன நாட்கள் அவசியம். ஆனால் அந்த உணர்வு தமிழீழ விடுதலைப் போரை விரைவாக்க உறுதிகொள்ளும் நாளாக அமையவேண்டும்.

வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்ல, நாங்களும் தேசத்திலில்லாவிட்டாலும் உத்வேகம் கொடுப்பவர்களாக மாறுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோமா!

குருகலபொவான் சொல்வதில் தப்பில்லை என்ரு நினைக்கிறேன். இளந்திரயனும் அதை தான் சொல்லியிருகிறார்.

COLOMBO (AFP) - Sri Lanka's elusive Tamil Tiger supremo marks his 52nd birthday on Sunday with a self-imposed deadline to decide the course of Asia's longest-running ethnic conflict.

Velupillai Prabhakaran has no official birthday celebrations but his annual speech on Monday will be keenly watched by Sri Lankan leaders as well as those in foreign capitals struggling to broker peace.

"There are no official functions or celebrations," said Tiger military spokesman Rasiah Illanthiriyan. "But many people usually have religious observances or share sweets to mark the occasion."

http://news.yahoo.com/s/afp/20061126/wl_as...restprabhakaran

குருகலபொவான் சொல்வதில் தப்பில்லை என்ரு நினைக்கிறேன். இளந்திரயனும் அதை தான் சொல்லியிருகிறார்.

என்ன எல்லாருக்கும் ரொபி கூடுக்கச் சொல்லியா??????????????

விரும்பினா வாழ்த்தை தெரிவியுங்கோ.........அதிலையும் கஞ்ச தனமா??? ஏதோ கையாலை காசு போற மாதிரி.........

  • தொடங்கியவர்

There are no official functions or celebrations," said Tiger military spokesman Rasiah Illanthiriyan. "But many people usually have religious observances or share sweets to mark the occasion."

யாழில் படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த தினம் மக்களால் அனுஷ்டிப்பு.

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வதிரிச் சந்திப் பகுதியில் இன்று காலை 8.00மணியளவில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் பொதுமக்களால் இந்தப் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதேவேளை வல்வெட்டித்துறை யாழ்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் படையினரின் கெடுபிடிகளிற்கு மத்தியிலும் தலைவரின் பிறந்த தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.

இதே வேளை மாவீரர் தினத்தையொட்டி வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. படையினர். இன்று குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் வீதியால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செல்லும் மக்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

கடற்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை பொதுமக்கள் கேக் வெட்டி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

www.sankathi.org

There are no official functions or celebrations," said Tiger military spokesman Rasiah Illanthiriyan. "But many people usually have religious observances or share sweets to mark the occasion."

யாழில் படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த தினம் மக்களால் அனுஷ்டிப்பு.

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வதிரிச் சந்திப் பகுதியில் இன்று காலை 8.00மணியளவில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

படையினரின் கெடுபிடிகளின் மத்தியிலும் பொதுமக்களால் இந்தப் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதேவேளை வல்வெட்டித்துறை யாழ்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் படையினரின் கெடுபிடிகளிற்கு மத்தியிலும் தலைவரின் பிறந்த தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.

இதே வேளை மாவீரர் தினத்தையொட்டி வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டி சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. படையினர். இன்று குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் வீதியால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செல்லும் மக்களை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

கடற்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை பொதுமக்கள் கேக் வெட்டி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

www.sankathi.org

இதுதான் உணர்வு..

அடக்குமுறைக்குள்ளும்..பட்டின

தலைவனை வாழ்த்துவது என்பது தலைவருக்கான வாழ்த்து இல்லை. அனைவரும் தலைவன் பக்கம் என்பதை அனைத்து சமூகம், அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே தவிர மற்றும் படி இதனை தனிநபர் துதி பாடல் என்றோ ,மக்களின் துன்பங்களை கவனத்தில் கொள்ள வில்லை என்றோ கருத்து இல்லை................

தலைவர் எங்கோ வன்னிக்காட்டில் யாரும் அறியா இடத்தில் வனவாசம். அப்படியான நிலையில் அவரைப் பற்றி புகழ்ந்து உலகெங்கும் தமிழர்கள் வாழ்த்துகிறார்கள் என்றால் அதன் சக்தியை நாம் பார்க்க வேண்டும்.....

இராமன் காட்டுக்குச் சென்று பாரததிற்கே புதிய அத்தியாயம் எழுத பட்டது போல் .வன்னிக்காட்டில் தமிழருக்கான புதிய ஈழபோர் அத்தியாயம் எழுதப்பட்டுக்கொண்டு இருகிறது..................................

தலைவனை வாழ்த்துவோம் ,

  • தொடங்கியவர்

தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் வல்வெட்டித் துறையில் சிறப்பாக இடம் பெற்றது.

ஆயிரக்கணக்கான பொது மக்கள் இளைஞர்கள் கூடி தமழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகளை வல்வெட்டித் துறையில் கேக்குகள் வெட்டி மிகவும் சிறப்பாக நடத்தியுளளார்கள் இதனைத் தொடாந்து வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரமும் இடம் பெற்றுள்ளது

படைத்தரப்பினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்பட்ட போதிலும் மக்கள் தேசியத் தலைவரின்மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை தமது உயிருக்கு படைத்தரப்பினரின் ஆபத்துக்கள் இருக்கின்றபோதிலும் மிகவும் துணிச்சலாக இந்த நிகழ்வை நடத்தி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

www.pathivu.com

தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதர்கு இவ்வளவு கதையா???? தமிழரின் வாழ்வு தற்பொழுது அனைத்தயும் அன்றாதமது வாழ்வாக்கிவிட்டது சாவுகளும் ஓலங்களும் அவலங்களும் இன்னல்களும் கொண்டாட்டங்களும் அண்றாட வாழ்வாகிவிட்டது. குற்றம் குறுபவர்கள் இதை ஒருபிரச்சாரமாக்குவார்கள் எண்டு நினைத்து நாம் தயங்குவது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு..... அவர்களுக்கு நாங்கள் என்னசெய்தாலும் குற்றம் தான். அது அவர்கள் வேலை நாம் எமது வேலையை திறம்படசெய்வோம். யாழ்பாணத்தில் இருக்கும் மக்களே கொண்டாடும் போது எங்களுக்கு என்ன கஸ்ரமா கொண்டாடுவதர்கு.

சூரியனை பார்த்து நாய் குலைத்தால் யாருக்கு நட்டம். :P

மாவீரர் தினம், கரும்புலிகள் தினம், திலீபன் அண்ணாவின் நினைவு தினம் போன்றவை எந்த அவலத்திலும் நினைவு கூரப்பட வேண்டியவை.

தேசிய தலைவரின் பிறந்த தினம் 2002 2003. 2004 போன்ற ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த காலத்தில் கொண்டாடியது பற்றி விமர்சிக்கவில்லை.

ஆனால் இன்றய (பட்டினியால் மரணம் நடக்கும்) காலகட்டத்தில் வானொலி தொலைக்காட்சியில் என்ன நடத்துகிறீர்கள்?

அதுவும் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்தனை நடத்துங்கள், ஆலயங்களில் வழிபாடுகள் ப+சைகள் நடத்துங்கள் அதில் பங்கு பற்றுங்கள். அது உங்கள் தலைவர் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை நம்பிக்கையை மரியாதையை காட்டும் அர்த்தமுள்ள வெளிப்பாடாக இருக்கும்.

அதை விட்டு வியாபார முன்னெடுப்புகளிற்காக எழுச்சி விழா எடுக்கிறம் என்று வால்பிடிப்பவர்கள், வீட்டில் இருந்த படி வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வாழ்த்து கவிதை படிக்கிறம் 53 ஆவது பிறந்த தினத்திற்கு முன்னர் ஈழத்தை பிடித்து தாருங்கள் என்று சொல்வதை என்ன வென்று சொல்லலாம்?

ஒரு இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்க்கை அர்பணித்து போராடும் தலைவனிற்காக யாழில் கோவில்களில் தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் ஆக்கிரமிப்பு படையினரின் கெடுபிடிகளிற்கு மத்தியில் நடந்தது. என்று சொல்லுங்கள் அதை பொருத்தமாக நியாயமாக அர்த்தமுள்ளதாக பார்க்கலாம்.

ஆனால் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்?

http://www.eelampage.com/?cn=29942

http://www.eelampage.com/?cn=29941

http://www.eelampage.com/?cn=29943

இந்த நிலையில்?

தயவு செய்து தேசிய விடுதலைப் போராட்டத்தை கோமாளிகளின் அரசியல் ஆக்கி தலைவரையும் சாக்கடை சினிமா நட்சத்திரம் அரசியல் வாதி ஆக்கிவிடாதீர்கள்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வீரனின் எழுச்சி நாள். கொண்டாடுவதில் தவறில்லை.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுயவிளம்பரம் மற்றும் சாத்தியமற்ற விடயங்களை சொல்வது என்பவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இத்தனை அவலம் பட்டினிச் சாவு கொலைவெறி மத்தியிலும் நாம் துணிந்து நின்று இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது எதிரிக்கொரு மன உழைச்சலை ஏற்படுத்தாதா? நீ என்ன செய்தாலும் நாம் அடங்கப் போவதில்லையாடா மடையா சாவிற்குள்ளும் நாம் எம் கடமைகளைச் செய்தே வாழ்வோம்.,என்பதனை முகத்திலறைந்து சொல்லாமல் சொல்லிவிட்டோம். சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ஈழத்தமிழரின் வாழ்வினில் பின்னிப்பினைந்து விட்ட செற்பாடுகள். எம் மாவீரரின் நினைவுதினங்கள் எம் தானைத் தலைவனின் பிறந்த தினம்.

யாராடா அங்கே! எங்கே வந்து தடுத்துப்பார்!!.

விழ விழ எழுவோம். சாவிலும் வாழ்வோம்.

அடிமையாய் அல்ல பிரபாகரனின் பிள்ளைகளாய்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பாணத்தில கேக் வெட்டி கேளிக்கையாக கொண்டம் செய்யிறது நல்லதில்லிங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் சாவிலும் வாழ்வோம்.

என்ன கஸ்டம் வந்தாலும் எங்கள் தலைவனின் பிறந்ததினத்தை சிறப்பித்தாக வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எங்கள் எல்லோருடைய ஆத்மார்ததமான வாழ்த்தும் போய்ச்சேரட்டும்.

தலித் அண்ணா கு.போற அண்ணா..என்ன பேசுறீஙகள்..

உங்கட பேச்சப் போல கோடி பேர் கதைச்சாலும் தடக்கேலாது..

இது மக்களோட சுயவெளிப்பாடு..

ஆமிக்கயும்.. சாவுக்கையும்..தலைவர் கேட்டாரோ கேக் வெட்டுங்க எண்டு..

இப்ப விளங்குதோ மக்கள் எண்டைக்கும் எப்பயும் தலைவர் மெல உயிர வச்சிருக்கினம் எண்டு..

சும்மடா ஏன் கிடந்து புகையிறியள்..உங்கட சொந்தபட பிரச்சினைகளுக்கு இது நேரமில்லை..

கனக்க நியாயம் கதைக்கிற நீங்கள் யதார்த்தம் அறியவில்லை..

உங்கட எதிர்வாதங்கள் தினமும் முள்ளள வாழ்க்கையோட்டற என்ர மனகையே புண்படுத்துது..

தயவ செய்து இப்படி எழுதாதீங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்த மனம் இல்லாதவர்கள் கொஞ்சம் பொத்திக்கொண்டு போங்கோ எமக்கு உணவு இல்லையென்றால் என்ன தண்ணி இல்லையென்றால் என்ன எம் தலைவனை நாம் வாழ்த்துவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.