Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! - எமது சந்ததியினரின் எதிர்காலத்திற்கான தேர்தல் இது!: இரா.சம்பந்தன்

Featured Replies

கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! - எமது சந்ததியினரின் எதிர்காலத்திற்கான தேர்தல் இது!: இரா.சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 08:22.44 PM GMT ]
sambanthan_trinco_001.jpg
எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலில் நாங்கள் ஒவ்வொரும் எங்களது பங்களிப்பை செய்து அதிகபடியான விகிதாசாரத்தை பெற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று திகோணமலை மூதூர் பட்டித்திடலில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அறுபத்தி எண்ணாயிரம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்தோம்.

இந்தத் தேர்தலில் நாங்கள் எழுபதினாயிரம் வாக்குகளை பெறவேண்டும். அதனை நாங்கள் பெறலாம். என்று குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! இரா.சம்பந்தன்

தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தமது அரசியல் பயணத்தை இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளோமென்று கூறுகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. எமது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறோம். தொடர்ந்தம் நீட்டிக்கொண்டுபோக நாம் விரும்பவில்லை.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் உயர்ந்த வெற்றியொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தருவார்களானால் 2016ம் ஆண்டுக்குள் எமது மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும்.

நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாணசபை தேர்தலும் வட மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளோம். அதில் எமது அரசியல் இலக்கு உடனடித் தேவைகள் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் அபிலாஷைகள் தொடர்பில் தெளிவாக கூறுவோம்.

எங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு திறமான வெற்றியைப் பெறவேண்டும். எமது இலக்கு 20 ஆசனங்களாகும்.

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமைக்கு என்ன காரணம்?

எங்கள் கவனம் முழுவதும் வடகிழக்கை நோக்கியதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதிகாரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதிகாரத்தை உண்டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்குக்கு வெளியே நாம் அதிக மக்களைக் கொண்டவர்களாக காட்டினால் வடகிழக்கில் நாம் எடுக்க வேண்டிய உறுதியான நிலை பலவீனம் அடைந்து விடும். அக்காரணத்தின் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் போட்டியிடவில்லை.

போட்டியிட்டிருந்தால் இன்னுமொரு தேசியப்பட்டியலை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வடக்கு கிழக்கு மக்கள் அடைய வேண்டிய உரிமை பலவீனம் அடைந்துவிடக்கூடாது என்பதனாலேயே நாம் போட்டியிடவில்லை.

வடக்குக்கும் கிழக்குக்கும் திருகோணமலை ஒரு பாலமாக அமைய வேண்டும். வடக்கில் எதுவித பாதிப்பும் ஏற்பட முடியாது. இது தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும். அது போன்றதே மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பில் 75 வீதமான மக்கள் தமிழ் மக்கள் என்பதை யாமறிவோம்.

இந்த இரண்டு தமிழ்ப் பிரதேசத்துக்கு இடையில் பாலமாக அமைவது திருகோணமலை. இப்பாலம் பலமாக இருக்க வேண்டும். இது பலமாக அமைய தெற்கும் வடக்கும் உதவியாக இருக்க வேண்டும். இப்பாலத்தை பலமாக வைத்திருப்பதில் தமிழ் மக்களுடைய பங்களிப்பு அதிகமாகும்.

திருகோணமலை மக்கள் 80 வீதம் வாக்களிப்பார்களாக இருந்தால், நாம் இரண்டு ஆசனங்களை இம்மாவட்டத்தில் பெறமுடியும். தமிழ் மக்களே இதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

திருகோணமலையில் பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஈ.பி.டி.பி கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கொள்கையும் அவர்களின் செயற்பாடுகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகும், அதில் அமைச்சர் பதவி ஏற்பது, ஒற்றையாட்சி முறையொன்றை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளன. இதுதான் அவர்களின் கொள்கை செயற்பாடு. அந்த அடிப்படையில் தான் ஜி.ஜி பொன்னம்பலம் செயற்பட்டார்.

செல்வா–பண்டா, செல்வா –டட்லி ஒப்பந்தங்களை எதிர்த்தார். எமது இனத்தை மண்ணை பாதுகாப்பதற்காக இந்த ஒப்பந்தங்கள் தந்தை செல்வாவால் மேற்கொள்ளப்பட்டன. தந்தை செல்வாவின் முக்கியமான நோக்கம் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடையாளங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதாகும். அதற்காகவே அந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்தது. சமஷ்டி கேட்ட போது ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். இன்று அவருடைய சின்னத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போட்டியிடுகிறார். சைக்கிள் சின்னத்தில் இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி இப்பொழுது போட்டியிடுகிறார்கள்.

தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தான் இப்பொழுது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம்.

எனது கணிப்பின்படி 2016ம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, வேட்பாளர் க.துரைரட்ணசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://www.tamilwin.com/show-RUmtyHSbSVnr3I.html#

போவதாயின் இப்போதே போகலாமே.இந்தத்தேர்தலில் வென்றால் இன்னுமொரு ஆறு ஏழு வருடங்களை இழுக்கலாம் தானே. நீங்கள் மேய்ப்பனாகவிருக்கலாம் ஆனால் நாங்கள் மந்தைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கலோ.... சம்பந்து...... 
விடுதலைப்  புலிகளால்,  பிச்சை ... போடப்  பட்ட, கூட்டமைப்பு என்னும்.... 
தலைவர் பதவியில் இருந்து கொண்டு, விடும் அறிக்கையா... இது?
உம்மால்..... முடியா விட்டால், ஒதுங்கி இருங்க, சம்பந்து.
மற்றவர்கள்... மிச்சத்தசத்தை, பார்த்துக் கொள்வார்கள்.

அரசியல் பயணம் இல்லை. அவரின்ரை பயணமும் முடியிற காலம் வந்திட்டுது.  அதுக்காக இரண்டாந் தலைமுறைக்கு வழிவீடாமல் திருகோணமலையிலை முதியோர் சங்கத்தின்ரை அங்கத்தவர் பட்டியலொண்டை நியமனப் பத்திரம் எண்டு குடுத்திட்டு கதை விடுறார். 

  • கருத்துக்கள உறவுகள்

Image-Bildergebnis für sampanthan with sri lanka flag Bildergebnis für sampanthan with sri lanka flag 

 

Bildergebnis für sampanthan with sri lanka flag 

சுத்து மாத்து, திலகம்...... சம்பந்தன்.
எத்தினை... நாடகம், ஆடுறான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையப்பா சகுனி சுமந்தியின்ரை கதையை காணேல்லை? பாவி மனிசன் அறிவிருந்தும் அநியாயத்துக்கு அள்ளுப்பட்டு போட்டுது. :mellow:

  • தொடங்கியவர்

கலோ.... சம்பந்து...... 
விடுதலைப்  புலிகளால்,  பிச்சை ... போடப்  பட்ட, கூட்டமைப்பு என்னும்.... 
தலைவர் பதவியில் இருந்து கொண்டு, விடும் அறிக்கையா... இது?
உம்மால்..... முடியா விட்டால், ஒதுங்கி இருங்க, சம்பந்து.
மற்றவர்கள்... மிச்சத்தசத்தை, பார்த்துக் கொள்வார்கள்.

 

சம்பந்தர் அய்யாவின் சந்தர்ப்பவாதம்!

செய்தி- ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும்- சம்பந்தர் அய்யா வாக்குறுதி.

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும் என சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.

தேர்தல் காலங்களில் மட்டுமே தொகுதிக்கு விஜயம் செய்யும் சம்பந்தர் அய்யா இம் முறையும் தமிழ் மக்களை ஒருமித்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.

வழக்கம்போல் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறுவோம் என இம்முறையும் கூறியிருக்கும் சம்பந்தர் அய்யா, ஆனால் இந்தமுறை ஒரு வருடத்திற்குள் பெறப்படும் என கால எல்லையுடன் உறுதியளித்துள்ளார்.

இங்கு நமது கேள்வி என்னவெனில்,

• கடந்த தேர்தல்களிலும் இதையே கூறி வென்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் தீர்வு பெறப்படவில்லை?

• இதுவரை எந்த தீர்வையும் பெற முடியாத உங்களால் இம் முறை எப்படி பெறுவீர்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக கூறமுடியுமா?

• குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்குள் தீர்வை பெற முடியாது போனால் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்வீர்களா?

சம்பந்தர் அய்யா அவர்களே!

புலிகள் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்படுத்திய தமிழ்தேசிய கூட்டமைப்பை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?

மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. மக்கள் உங்களை நன்கு இனம் கண்டு கொண்டுள்ளார்கள்.

உங்களுக்கு வாக்களிபதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதுபோல் உங்களுக்கு வாக்களிக்காது போவதால் எந்த நட்டமும் தமிழ் மக்களுக்கு மேலதிகமாக எற்படப்போவதில்லை.

இந்த உண்மையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிவரும்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா சொல்லுறது ஒண்டும் உண்மைக்குப்புறம்பான விடையம் இல்லை, தங்களது அரசியல் பயணத்தை இத்தேர்தலுடன் முடிக்கவிரும்புகிறது எனத்தானே சொல்லுகிறார்.

இன்னுமொரு வகையிலும் இதை நாம் எடுத்துக்கொள்ளலாம் இப்படியே கூட்டமைப்புப்போறபோக்கில் போனால் எங்களுக்கு அரசியல் செய்யவேண்டிய தேவையே இல்லாமல் சிங்களவர்களுடனே ஒன்றித்திருந்துவிடுவோம் எனக்கூறுகிறார்.

பாராளுமன்றக்கதிரைகளில் இவ்வளவுகாலம் இருந்துகொண்டு அரசியல் செய்வதாகக்கூறி சம்பந்தன் ஐயா போன்றோன்றோர் என்னசெய்தார்கள்.

அடிப்படை அரசியல் தத்துவத்தையே தெரியாதிருக்கிறார், மார்க்கியவல்லி, சாணாக்கியன், கிட்லர், காலத்திலிருந்து அரசியல் மனிதனுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது, அவை இல்லாதுவிடின் மனிதமேம்பாடு என்பதே இல்லை, என்பதான அடிப்படை அறிவுகூட ஐயாவுக்கு இல்லை என்று நான் கூறவில்லை, அதை யாராலோ மறக்கடிக்கப்பட்டிருக்கின்றது.

தி மு க தலைவர் கருனாநிதியின் கடந்தகாலங்களில் எம் ஜி ஆர் ஆட்சியிலிருந்த பதின்மூன்று வருடகாலம் என்பது மிகவும் வேண்டாதகாலம் அவ்வேளையில் வேறெவராவது அவரது இடத்திலிருந்திருப்பாராகவிருந்தால் தி மு க எனும் கட்சியே இருந்ததாக எவருக்கும் நினைவிலேயே இருந்திருக்காது. ஆனால் அவர் செய்த அரசியல்தான் தி மு கவை நிலைத்துநிற்க வைத்தது.

தந்தை செல்வா தனது இறப்பிற்குப்பின்பு தமிழர்களுக்கான தலைவனை கடவுள்தான் கொடுக்கவேண்டும் எனப் பொருள்பட தமிழனைக் கடவுள்தான் காப்பற்றவேண்டும் எனக் கூறினார், அவரில் பின்னரான தமிழர் அரசியல் எனும் தேரின் வடத்தினை தேசியத்தலைவர் இழுத்தார், குறுகிய காலத்துக்குச் சம்பந்தன் ஐயாவினது கைகளிலும் தேரின் வடம் வந்தது ஆனால் அரசியல்த்தேர்வடத்தின் பிடியை இளக்கிவிட்டார் இப்போது அவருக்கே புரிந்துவிட்டது தங்களால் எதுவுமே செய்யமுடியாது என தமிழர் தலைநகராம் திருமலையில் கலங்கி நிற்கிறார்.

எமக்கான அரசியல்வாதிகள் இந்தியாவைப் பார்த்துப் பயப்படாதவர்களாக இருக்கவேண்டும் அதாவது எமக்கான ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்தியாவின் கண்களுக்குப் பாகிஸ்தானாகவும் சீனாவாகவும் தோன்றவேண்டும் அப்போதுதான் இந்தியா சவடால் கதைகளுடன் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக்கொள்ளும்,

ஆனால் கூட்டமைப்பு அநியாயத்துக்கும் இந்தியாவின் தெற்குமாடத்தினரது சொல்பேச்சுக்கேட்டு இப்போது ஒட்டுமொத்தத் தமிழினத்தும் போராடும் மூர்க்கம் எனும் திமிர்த்தனத்தை இழக்கப்பண்ணிவிட்டது.

அதனடிப்படையில் இப்போது எமக்குள் நாம் என்ன பேசிக்கொள்கிறோம்? அவன் தந்ததை வாங்கியிருந்தால் இவ்வளவும் வந்திருக்காது என.

அவன் எதைதந்தான் நாம் வாங்க்கிக்கொள்ள? ஜே ஆருடனான ஒப்பந்தத்தையா?

இப்போது தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒருவடிவமாகப் பாராளுமன்ற அரசியலைப் பயன்படுத்துவதற்குப்பதிலாக, காணிவிடுவிக்கப்படுமாகவிருந்தால் எங்களுக்கு வாக்களியுங்கள் எனும் கோசமாகிவிட்டது கூட்டமைப்பின் தேர்தல்பாதை.

அட நீங்கள் ஒண்ணு, டக்ளசும் இதைத்தானே கடந்த தேர்தல் காலங்களில் கூறினார் சொந்த இடங்களுக்கு மீழ்குடியேறவேண்டுமாகில் வீணைக்குப்போடுங்கோ என.

ஆக சம்பந்தர் ஐயாவுக்கு இப்போதே தெரிந்துவிட்டது தமிழர்க்கான அரசியல்தேரின் வடத்தினை இன்னுமொருவர் கைகளில் ஒப்படைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது,  அக்கை சுமந்திரன் கை  இல்லை என்பதிலும் தீர்மானமாக இருக்கிறார்.

சம்பந்தன் ஐயா நல்லதை நினைத்துவிட்டார்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்து, நன்றாக உள்ளது..... எழு ஞாயிறு.
அதிலும்.... அந்தக் கடைசி வரி,  அருமை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாள் தலீவர் சம் என்ன சொல்கிறார் என்றால் தமிழ் தேசியம் என்ற அடையாளத்தோடு எனியும் நாங்க இருக்க விரும்பல்ல.. அந்த வகையில்.. சிங்கள சிறீலங்கா தேசியத்துள்... தமிழரசுக் கட்சி என்றே மிதக்க விரும்புகிறோம். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனி எங்களுக்கு அவசியமில்லை.

நல்லது தலீவர்.. எனி வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் வந்து தேர்தலை சந்திச்சு வெற்றி பெற்றுப் பார்க்கிறது. இப்பவும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கினம் என்றால்.. அதற்கு ஒற்றைக்காரணம் தான் உண்டு. அது தமிழ் மக்களின் ஒற்றுமையை பறைசாற்ற.. வாக்குபலத்தை இனங்காட்ட புலிகள் உருவாக்கிய அமைப்பு என்ற வகையில் தான். பலவீனமான சிங்கள சிறீலங்காவின் அரசியல் சூழலில் பலமாக தமிழ் மக்களை இனங்காட்ட உருவாக்கியதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

சம் சும் கும்பல் நினைக்கிறது போல.. எதுவும் அவ்வளவு இலகுவாக முடிந்துவிடாது. :grin:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தமிழ்மக்கள் மீது கொண்ட பற்றுப்போல் தெரியவில்லை

 ஐயா  சுயநலமுடிவுக்கு வந்திட்டார்

தானிருக்கமாட்டார் 

அப்படியிருந்தாலும் 

கூட்டமைப்பில்  தமிழரசுக்கட்சி இருக்காது 

தமிழரசுக்கட்சியை இல்லாமல் ஆக்க தமிழ்த்தேசிய முன்னணணி பலமாக முன்னேறிவருகிறது.

எல்லாம் உண்மை.

 

ஆனால் இதெல்லாம் அவரது பிரச்சினை

ஆனால் கூட்டமைப்பு முடிவுக்கு வருகிறது என்று சொல்ல அவருக்கு உரிமையில்லை..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.