Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியின் லண்டன் பேச்சு: குழப்பத்தில் கூட்டமைப்பு

Featured Replies

cv.w-cartoon

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே முதலமைச்சரின் லண்டன் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. நீண்ட அவரது உரையை அரச தரப்பினரல்ல, கூட்டமைப்பின் தலைவர்கள்தான் வரிக்கு வரி நுணுக்கமாகப் படிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பல விடயங்ளுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக அவர்கள்தான் உள்ளார்கள்.
‘ஒரு நாடு இரு தேசம்’ என்று முன்னர் சொன்னதை சற்று மாற்றியமைத்து, இலங்கையில் இரு தேசிய இனங்கள் இருக்கின்றன என முதல்வர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் நிலையில் ஒரு தரப்புக்கு அது சாதகமாகிவிடும் என்பதால் நிதானமாக அந்த மாற்றத்தை முதல்வர் செய்துள்ளார் போலும்.
லண்டன் பயணம் முடிகின்றது. சில தினங்களில் முதல்வர் நாடு திரும்பவுள்ள நிலையில் எழும் முக்கிய கேள்வி: கூட்டமைப்புக்கு ஆதரவாக தேர்தல் மேடைகளில் முதல்வர் ஏறுவாரா? என்பதுதான். கேள்விக்கென்ன பதில்? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனநெருக்கடிக்குத் தீர்வு என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து வந்த கூட்டமைப்பின் தலைவர்கள், முதலமைச்சரின் திம்புக் கோட்பாடு பற்றிய அறிவிப்பால் குழம்பிப்போயுள்ளர். விஞ்ஞாபனத்தில் ‘திம்பு’வுக்கும் இடம் கிடைக்கலாம்.!

http://tamilleader.com/?p=50121

 

திம்பு கோட்பாடு ஜே ஆர் உட்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று.பின்னர் றோ மூக்கை நுளைக்க ஜேஆர் பல்டி அடித்தார்.அதை சர்வதேச சமூகத்தினரின் மத்தியஸ்த்துடன் பெற்றுக்கொள்ள எத்தனிப்பது தவறா? ஒரு நீதியரசராயிருந்தவருக்கு எப்படிப்பேச வேண்டும் என்று தெரியாதா? இந்தச் செய்தியைப்போலத்தான் முள்ளிவாய்க்காலில் உறவுகள் இறக்க புலிகள் முன்னேறுகிறார்கள் என்று செய்தி வெளியிட்ட இணையத்தளங்கள் இப்போதும் விபச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றன என்று தான் தோணுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தின் முக்கியமான பிரச்சனை...அனைவரையும் ஒன்றிணைத்து..அணைத்துச் செல்லக்கூடிய ஒரு தலைமை!

இந்த வெற்றிடம் நீண்ட காலமாக வெறுமையாகவே உள்ளது என்று கருதப்பட வேண்டியுள்ளது!

தன்னைத் தனியே விட்டுவிட வேண்டாம் என்று மலேசியாவின் காலில் விழுந்து 'சிங்கப்பூர்' ஒரு காலத்தில் கெஞ்சியது என்பது இப்போது சரித்திரமாக விட்டது! அதே போலக் கொழும்பைப் போல...சிங்கப்பூரைக் கட்டியமைப்பேன் என்று லீ குவான் யூ ..உறுதி எடுத்ததும் இன்று சரித்திரமாகி விட்டது!

ஒரு தலைமையின் தேவையும், திறமையும் எவ்வளவு அவசியம் என்பதற்குச் சிங்கப்பூர் நல்ல உதாரணமாக அமைகின்றதால் இங்கே குறிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது!

எமது போராட்ட வரலாறும் இப்போது சரித்திரமாகி விட்டது!

எமது இப்போதையே தேவை... இதய சுத்தியுடன்...எம்மினத்தை வழி நடத்தக்கூடிய ஒரு தலைமை!

அது உருவாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை... புங்கையூரான். ஒரு இனத்தில்.... 
ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தான், மாவீரன் பிறப்பான். அது.... தேசியத் தலைவர் பிரபாகரன்.
நூறு  வருடங்களுக்கு ஒரு முறை, நல்ல தலைவன் பிறப்பான், அது.... இப்போ உள்ள விக்னேஸ்வரன் ஐயா.

இந்தச் சந்தர்ப்பத்தை, சரியாக பயன் படுத்தாத இனம்.... உலகில்  தனது அடையாளத்தை தக்க வைக்க முடியாமல் அழிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா புதிசா ஒன்றையும் சொல்லேல்ல. நம்ம சம் சும் கும்பல் மறந்ததை எடுத்துச் சொன்னார். அவ்வளவும் தான். மக்கள் அதற்கு அமோக கரகோசம் எழுப்பி வரவேற்றார்கள். இதில் இருந்து சம் சும் கும்பல் மக்களிடம் இருந்து எங்க நிற்குது என்பது புரிந்தால் சரி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.