Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு இளைஞர்களை கடித்துக் குதறிய கரடிகள்

Featured Replies

article_1437535210-images.jpg

வயல் காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது கரடிகளினால் கடித்துக் குதறப்பட்ட இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை, கும்புறுப்பிட்டியிலுள்ள நெல்வயலில் காவல் கடமை புரிவதற்கு காட்டோரமாக திங்கட்கிழமை (20) இரவு சென்றுகொண்டிருந்த சிநேகிதர்களான நான்கு பேரை 06 கரடிகள் சூழ்ந்துகொண்டன. இந்நிலையில், கரடிகளிடமிருந்து  தப்பிக்கொள்வதற்காக இந்த இளைஞர்கள் படாதபாடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களில் இருவர் ஓடிச்சென்று மரத்தில் ஏறி தப்பியுள்ள அதேவேளை, ஏனைய இருவரும்  கரடிகளிடம் வசமாக மாட்டுப்படவே  அவர்களை கடித்துக் குதறியுள்ளன.

கரடிகளிடம் கடிபட்ட இருவரும் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   இந்த இளைஞர்களின் முகம், கைகள் உள்ளிட்டவற்றை கரடிகள்; கடித்துக் குதறியுள்ளன. கும்புறுப்பிட்டியை சேர்ந்த தியாகராசா செந்தீபன் (வயது 26) என்பவரே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/150631#sthash.8MRV0Kkd.dpuf

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாதிக்கபட்டவர் விரைவில் குணமடைய வேண்டுகிரேன். 


அதுசரி கரடி கடித்தால் போலீசார் என்ன விசாரணை செய்வினம் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

பாதிக்கபட்டவர் விரைவில் குணமடைய வேண்டுகிரேன். 


அதுசரி கரடி கடித்தால் போலீசார் என்ன விசாரணை செய்வினம் ?

கரடிகளுக்குப் புலிகளோட ஏதும் பழக்கமிருந்ததா எண்டு அறியத் தான்!:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

கரடிகளுக்குப் புலிகளோட ஏதும் பழக்கமிருந்ததா எண்டு அறியத் தான்!:innocent:

கரடிகளுக்குப் (காட்டிலை வாழ்கின்ற நாலுகால்) புலிகளோடை பழக்கமிருந்தால் மற்ற 2  பேரும் எங்கையெண்டு கேட்டு இந்த 2 பேரையும் மண்டையில போட்டுவிட்டுப் போயிருக்கும். அதாலை இந்தக் கரடிகள் கரப்ஷன் ஆகாத ஒரிஜினல் கரடிகள் என நினைக்கிறேன்! :innocent:

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.