Jump to content

பார்ப்பான மணிசங்கர் ஐயர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று மகாராஸ்டிராவில் தலித்துக் களுக்கும் உயர் சாதியினருக்கும் ஏன் கலவரம் ஏற்பட்டது?கான்பூரில் ஏன் அம்பேத்காரின் சிலை உடைக்கப் பட்டது?இந்தியா முழுவதும் தானே சாதி பிரச்சினைகள் இருகின்றன.தமிழ் நாட்டில் மட்டும் இல்லையே?

மாமிசம் சாப்பிடாதவர்கள் மூளை உள்ளவர்கள் இட ஒதிக்கீட்டினால் வெளியேறுகிறார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.இங்கே உங்கள் சாதிய பார்ப்பனச் சிந்தனை வெளிப்படவில்லையா?

மகராஜஸ்டிராவில் பரவாயில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எதிர்த்துப் போராடும் அளவிற்கு தகுதியோடு உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கீரிப்பட்டி போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் இன்று வரைக்கும் அந்தப் பகுதியை நிர்வகிக்க கூட முடியாமல் இன்னமும் தவிர்க்கின்றார்கள்.

ஏன் என்றால் திராவிட நாட்டில் இன்னமும் ஜாதி வெறி உண்டு.

மாமிசம் புசித்தலை இந்து மதம் தவறு என்கின்றது. ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. சைவ போசணி என்பதை ஆதரிப்பதில் தப்பில்லை. அது பிராமணர்களுக்கு

மட்டும் பொதுவல்ல. வாஜ்பாயிற்கு மீன் உணவுகள் ரெம்பப் பிடிக்கும் என்று ஒரு பத்திரிகையில் படித்திருக்கின்றேன்.

  • Replies 88
  • Created
  • Last Reply
Posted

தமிழ்நாட்டை விட, மகராஸ்டிராவில் சாதிக் கொடுமைகள் அதிகம். இதை உங்கள் இந்திய நண்பர்களைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

சாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. அது இந்து மதம் இருக்கும் வரை இருக்கும்.

Posted

ஐஐடிக்கு செல்ல எடுக்கும் ஜேஇஇ பரீட்ச்சைக்குத் தயார் செய்ய எவ்வளவு செலவாகும் என்று கூற முடியுமா?

இந்திய மக்களின் வரிப்பணம் இங்கு எவ்வளவு செலவாகிறது என்று தெரியுமா?

இந்த பணத்தில் படித்தவர்கள் அமெரிக்கா செல்வது எதனால்?

இங்குபடிபவர்களில் பார்ப்பனரின் தொகை என்ன?

இங்கும் இட ஒதுகீட்டைக் கொண்டு வர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது, அது ஏன்? இங்கும் பெரியாரும் திராவிட தேசமும் வந்து விட்டதா?இதனை இங்குள்ள பார்ப்பன மாணவர்கள் எதிர்கிறார்களே அது ஏன்?

நேற்று மகாராஸ்டிராவில் தலித்துக் களுக்கும் உயர் சாதியினருக்கும் ஏன் கலவரம் ஏற்பட்டது?கான்பூரில் ஏன் அம்பேத்காரின் சிலை உடைக்கப் பட்டது?இந்தியா முழுவதும் தானே சாதி பிரச்சினைகள் இருகின்றன.தமிழ் நாட்டில் மட்டும் இல்லையே?

மாமிசம் சாப்பிடாதவர்கள் மூளை உள்ளவர்கள் இட ஒதிக்கீட்டினால் வெளியேறுகிறார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.இங்கே உங்கள் சாதிய பார்ப்பனச் சிந்தனை வெளிப்படவில்லையா?

அதை தான் நானும் சொல்கிறேன்.

சாதி என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பதான் எல்லா பிரச்சனக்கும் காரணம்.

ஏன் பணக்கார தாழ்த்தபட்டவர் சாதி ரீதியலான இட ஒதுக்கீடு அனுபவிக்கலாம் ஆனால் ஏழை உயர்ந்த சாதி மாணவர் இட ஒதுக்கீடு இல்லாம்ல போக வேண்டும் இது தானே உங்கள் வாதம்?

எல்லாரும் எல்லாம் கிடைக்க வேண்டும்.

ஐஐடியில் படித்தவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பது உங்கள் கற்பனை. அங்கு படிப்பவர்கள் எல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் அனைத்து சாதி மக்களும் தான்.

அவர்களுக்கு சிறு வயதில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு உண்டு,.அது கிராம புற மக்களுக்கு கிடையாது.

சமீபத்தில் தமிழக அரசு கிராம புற மக்கள் பயன் அடைய பொறியில நுழைவு தேர்வை ரத்து செய்ததை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

இங்கு பிரச்சனை பொருளாதார ரீதியில் நடப்பது.

இதில் சாதியை நுழைப்பது அதை அரசியலாக்கி பொருளாதார பயன் அடையும் ஒரு சில மக்கள்.

இங்கு தான் பிரச்சனை,

திராவிட கழகத்திற்க்கு பிராமணர்களை எதிர்ப்பதை தவிர வேறு வேலை இல்லை. அதை தவிர அவர்களுக்கு வேறு கொள்கை இல்லை.

என்றாவது அவர்கள் பாப்பாரபட்டி கீரிபட்டி சாதி கொடுமைகளை தட்டி கேட்டு துண்டா??

இல்லை தலித்துகளை மலம் திண்ண வைத்த கொடுமைகளை வாய் திறந்த்து விமர்சித்து உண்டா?

காலத்துக்கு தக்கவாறு கொள்களைகளை அதாவது நடப்பு பிரச்சனைகளை எடுத்து செல்வதே எந்த ஒரு இயக்கதுக்கும் அழகு, அதை விடுத்து சம்பந்த்தம் இல்லாமல் பேசுவது என்றோ நடந்த விழ்யங்களை பேசுவது தான் பெரியார் கொள்கையா??

பெரியார் என்ற அகங்காரம் பிடித்த ஒரு கன்னட வெறியர் மேலும் சாதி வெறியர் தன் சாதி தான் பிராமணர்களை விட உயர்ந்த்தது என்று நடத்திய போரட்டம் தான் திராவிட போராட்டம். ஏன் சாதி ஒழுப்பு போராட்டம் நடத்தி இருக்கலாமே..இன்று சாதி கட்சிகளும் சாதி வெறுப்பும் நடந்த்து இருக்காதே.

இது வர்ணாசாமிர கொள்கையை விட கேவலம் தான்

என்னை பொருத்தவரை திராவிடர் கழகம் பெரியார் திராவிடர் கழகம் எல்லாம் தாழ்வு மனப்பான்மை பிடித்து அலையும் சிலரின் கூடாரம்.

சரி எங்கு நான் சாதி புராணம் பாடினேன். நான் பிறப்பால் நீங்கள் சொல்லும் பிரிவு இல்லை. என் சாதி சான்றிதழை காட்டினால் தான் நம்புவீர்களா?

ஏன் உங்கள் மனம் என் சாதியை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?? நீங்கள் தான் சாதி ஒழிப்பாளர் தானே.. பின் ஏன் இந்த வினோதம்?

அடுத்துதது மும்பை கலவரம்

இதை தூண்டியது சோட்டா ராஜன் என்ற தாதாவின் தம்பி .

இது ஒரு அரசியல்.

இதில் எங்கு சாதி கொடுமை வந்தது??

எந்த ஒரு அயோக்கியனோஅம்பேத்கார் சிலையை சேதபடுத்தி விட்டான்

அதை எதிர்த்து இந்த ரவுடிகள்

கொன்றது 3 பேரை

2 ரயில் எரிப்பு

காயம் அடைந்தது பல் பேர்

இது தான் சாதி ஒழிப்பா ? சபேசன் மும்பையில் சாதி ஆதிக்கம் அதிகம் என்று சொன்னது நீங்கள் தானே

அங்கு தான் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தாழ்த்தபட்டவர் முதலவராக இருந்தார்.

இது சில சமூக விரோதிகள் நடத்தும் பகல் கொள்ளை

இதனால் சாதி கொடுமை ஒழிந்து விடுமா??

சேதம் அடைவது மக்கள் சொத்து

இதை ஊக்குவிப்பது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதற்கெடுத்தாலும் இந்துமத்தினைச் சாடும் வேலையைச் செய்யாதீர்கள் சபேசன். இந்து மதல்ல, இந்திய சமுதாயத்தில் வந்தவர்கள் எல்லோரிடமும் ஜாதி என்பது இப்போது இருக்கின்றது. அது கிறிஸ்தவம், பௌத்தமதச் சார்ந்தவர்களையும் விட்டு வைக்கவில்லை.

இன்று திருமாவளவன் பௌத்தமதம் மாறீனாலும், அவர் ஜாதிக் கட்சி தான் நடத்துகின்றார்.

சிங்களவர்களில் கண்டிச் சிங்களவர், கீழ்ச்சிங்களவர் என்று இரு பிரிவுகள் உண்டு. திருமணம், மற்றும் இதர விடயங்களில் அவர்களில் அது பெரும்பங்கு வகிக்கும். மகிந்த ராஜபக்சா சந்திரிக்காவுக்கு எதிராக தூண்டுதல் செய்யமுடியாமல் இருந்திருந்தால் இன்று வரைக்கும் அவரால் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. இப்போதும் கூட சந்திரிக்கா இலங்கையில் தனக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கும் நிலைக்கு கண்டிச் சிங்கள ஆதிக்கம் உண்டு.

ஏன் கிறிஸ்தவம் மதம் மாறினால் ஜாதி இல்லை என்றவர்கள், இப்போது பத்திரிகையில் கிறிஸ்தவ மதம்.... குலத்தில் பிறந்த என்று வருகின்றது.

கல்வியில் நிலையான இடத்தைம், சாதி பேசினாலே தண்டிக்கும் நிலையையும் கொண்டால் தான் நாதி ஒழிக்க முடியுமே தவிர, உங்களின் ஆரியம் மீதான குரோதத்தால் அல்ல!

Posted

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜீவா, 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது:

தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.

இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.

ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.

ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.

இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.

(சிரிப்பு)

நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.

நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.

(சிரிப்பு)

இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.

இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.

சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?

(ஒரே சிரிப்பு)

காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு)

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?

(சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?

(சிரிப்பு)

ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?

(சிரிப்பு)

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?

எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)

இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.

இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.

(நூல்: மேடையில் ஜீவா)

Posted

பார்ப்பனியம் மீது நாம் குறி வைப்பதன் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜாதியின் தத்துவ வேர் பார்ப்பனியத்தில் உள்ளது. அதை வெட்டாமல் கிளைகளை வெட்டுவதில் பயன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்ப்பனியம் மீது நாம் குறி வைப்பதன் காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜாதியின் தத்துவ வேர் பார்ப்பனியத்தில் உள்ளது. அதை வெட்டாமல் கிளைகளை வெட்டுவதில் பயன் இல்லை.

ஓ! அப்படியா? அப்புறம்!

Posted

நீங்கள் இந்த சாதிக் கட்டமைப்பை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இது கெட்டிக்காரத்தனமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றின் கீழ் ஒன்றாக.

ஒரு சாதி இன்னொரு சாதியை விட தாழ்த்தப்பட்டுள்ள அதே நேரம், மற்றொரு சாதியை விட உயர்வாகவும் இருக்கிறது.

மீன் பிடிக்கின்ற சாதியை சேர்ந்தவனிடம் போய் சொல்ல முடியாது, நீ பனை ஏறுபவனை இழிவாகப் பார்க்காதே என்று. அவன் பதிலுக்கு தன்னை விட மேலே உள்ள சாதியைக் காட்டி, அவன் தன்னை இழிவு படுத்துகிறான் என்பான்.

அத்துடன் அவனை விட மேலே சாதிகள் இருந்தும், தன்னை விட தாழ்ந்த சாதிகள் மீதான அதிகாரத்தை இழக்க விரும்பாது, சாதிக் கட்டமைப்பை பேணுவார்கள்.

ஆகவே உச்சியிலே இருந்தபடி, இந்த சாதிக் கட்டமைப்பை வழி நடத்திக் கொண்டிருப்பவர்களிடம்தான் நாம் ஆரம்பிக்க வேண்டும்.

இந்தக் கட்டமைப்பின் உச்சியிலே பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

(இதில் சில இடங்களில் உள்ள விதிவிலக்குகளை உதாரணம் காட்டக் வேண்டாம். பொதுவிதி குறித்து பேசுவோம்.)

மற்றைய சாதிகள் இல்லாமல் போவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. கல்வி, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியோடு மற்றைய சாதிகளின் பிடிமானம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.

உதாரணமாக இயந்திரத்தின் மூலம் கள் இறக்கப்படுகின்ற பொழுது, அந்தத் தொழிலை அனைத்து மக்களும் செய்வர். இப்படி தொழில்நுட்ப வளர்ச்சி சாதிகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும்.

ஆனால் இவைகளை மீறி ஒரே ஒரு சாதி மட்டும் தொடர்ந்து இயங்கும். காரணம் அது "கடவுள் பயத்தை" கையில் வைத்திருக்கிறது. இதுவும் பார்ப்பன சாதி பற்றி அதிகம் பேசுவதற்கான கட்டாய தேவையைக் கொடுக்கிறது.

ஆனால் இதை விட முக்கிய காரணம், அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்த சாதியாக இருப்பதும், தமிழுக்கு எதிரானவாகளாக இருப்பதுமே.

சரி!

எல்லாம் இருக்கட்டும். இந்த விவாதத்தின் தலைப்பிற்கு (பார்ப்பன மணிசங்கர ஐயர்) வருவோம்.

தமிழ்நாட்டிலே விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற ஒரு பார்ப்பனரை சொல்லுங்கள் பார்ப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசன் இந்தியச் சாதிக்கட்டமைப்பை வைத்துக் கதைக்கின்றாரோ, இலங்கையை வைத்துக் கதைக்கின்றாரோ என்று புரியவில்லை. அவர் இந்தியாவை வைத்துக் கதைத்தால் ஒன்று சொல்லலாம். திருமாவளவனின் ஜாதியும், ராமதாஸின் ஜாதியும் முன்பு சண்டை என்பதால் இருவரும் வௌ;வேறு கூட்டணியில் இருந்தார்கள். ஒன்று சேரவே மாட்டார்கள். பின், அது அடங்கி தமிழுணர்வு என்ற பெயரில் தான் இவர்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டது. இந்த நிலைக்குள் எங்கே பிராமணன் வருகின்றான்.

கிராமப்புறங்களை எடுத்தால் நாட்டாமை, நிலச் செந்தர் எல்லாம் பிராமணர்கள் இல்லையே! இப்போதும் அடிமையாகத் தாழ்த்தப்பட்டவர்களாக மக்கள் கூட்டத்தை விரட்டுவது பிராமணர்கள் அல்லவே!

தமிழீழத்தை எடுத்தால் பிராமணர்களுக்கு மரியாதையே இல்லை. கோவில்களில் மணியடிப்பதோடு அவர்களின் பணி சரி. பஸ்சில் கூட மதத் தலைவர் என்ற மதிப்புக் கூட கொடுக்க மாட்டீர்கள். அங்கே இருந்தது வெள்ளாளர் ஜாதி வெறி. கோவில்களிலும் தர்மகத்தா தான் எல்லாமே! அப்படியிருக்க யாழ்பாணத்து சாதி முறையை ஒழிக்க புலிகளுக்கு முற்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள். (இங்கேயும் பார்ப்பாணிக் கதை கதைக்காதீர்கள். நீங்கள் பார்ப்பாணி என்று சொல்வது பிராமணர்களை மட்டும் தான் என ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கின்றேன்)

Posted

உங்களுடைய கேள்விக்கான பதில் என்னுடைய கருத்திலேயே இருக்கிறது

நீங்கள் இந்த சாதிக் கட்டமைப்பை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இது கெட்டிக்காரத்தனமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றின் கீழ் ஒன்றாக.

ஒரு சாதி இன்னொரு சாதியை விட தாழ்த்தப்பட்டுள்ள அதே நேரம், மற்றொரு சாதியை விட உயர்வாகவும் இருக்கிறது.

மீன் பிடிக்கின்ற சாதியை சேர்ந்தவனிடம் போய் சொல்ல முடியாது, நீ பனை ஏறுபவனை இழிவாகப் பார்க்காதே என்று. அவன் பதிலுக்கு தன்னை விட மேலே உள்ள சாதியைக் காட்டி, அவன் தன்னை இழிவு படுத்துகிறான் என்பான்.

அத்துடன் அவனை விட மேலே சாதிகள் இருந்தும், தன்னை விட தாழ்ந்த சாதிகள் மீதான அதிகாரத்தை இழக்க விரும்பாது, சாதிக் கட்டமைப்பை பேணுவார்கள்.

Posted

யாழ்ப்பாணத்திலும் பார்ப்பனர்கள்தான் உயர் சாதி!

வேளாளர்கள் ஆதிக்க சாதி!

கிழக்கின் சில பகுதிகளில் மீன்பிடிக்கின்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்கள். அங்கு வேளாள சாதியினருக்கு மதிப்பு இல்லை.

ஆனால் உயர் சாதி எங்கும் பார்ப்பனர்தான்.

அது மாற்ற முடியாதபடி சாதிக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சில இடங்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மற்றைய சாதிகள் முன்னேறுகின்ற பொழுது, அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறார்கள்.

அவர்கள் அப்படி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் பார்ப்பனியத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். பார்ப்பனர் இருந்த ஆதிக்க இடத்தில் அவர்கள்

உட்கார்ந்து கொள்கிறார்கள்.

அதிகார இடத்தில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு, மற்றைய சாதிகளை அடக்குகின்றனர். ஆனால் யாருமே பார்ப்பனர்களை அடக்க மாட்டார்கள். மற்ற சாதிகளை அடக்குவதற்கு அவர்களுக்கு பார்ப்பனர்களின் துணை அவசியம்.

மற்ற சாதிகளை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆதிக்க சாதிகள் பார்ப்பனர்களை விட்டுக் கொடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கதை என்று சொல்கின்றேன் கேளுங்கோ! சிங்களக் கதை எண்டு நினைக்கின்றன்.

ஒரு கொத்தனாரை வைத்து மதில் கட்டச் சொன்னான். அந்த நாட்டு அரசன். கொத்தனார் மதில் கட்டி முடிந்தவுடன் வந்து அரசன் பார்த்தபோது, அது நெளிஞ்சும் வளைஞ்சும் போய் இருந்ததாம். மன்னருக்கு கோபம் வந்து அவனை யானை மிதிக்க வைத்துக் கொல்ல உத்தரவிட்டான்.

அப்போது அவன் அழுது கொண்டு, "அரசே! அது என் தப்பில்லை. அந்த வழியால் சிறுமி ஒருத்தி அழுது கொண்டு போனவள் அவளைப் பார்த்துக் கட்டியதால் தான் இப்படி ஆகிவிட்டது. அவளில் தான் தப்பு அரசே!" என்றான்.

அந்த அரசனும் அவளைப் பிடித்து யானையில் மிதிக்க வைத்துக் கொல்லச் சொன்னான். உடனே அந்தச் சிறுமியும், " பானை செய்து தந்தவர், ஒழுங்காச் செய்து தரதாதால் அது உடைந்து போய் விட்டது. அதனால் தான் அழுதேன். செய்து தந்தவரில் தான் தப்பு அரசே" என்றாள்.

பானை செய்பவனைப் பிடித்து யானையால் கொல்ல உத்தரவிட்டான். அவன் ரெம்பவே மெலிவாக இருந்தான். அவன் சொன்னான். " அரசே என்னில் தான் தப்பு. ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் பலம்பொருந்திய உங்களின் யானை, என்னைப் போன்ற மெலிய ஆட்களைக் கொல்வது உங்களுக்கு அசிங்கம். பருத்த ஆளாகப் பார்த்துக் கொல்வது தான் சரி என்று"

அது சரி என நினைத்த அரசனும் ஊரில் உள்ள பருத்த ஒருவனைத் தேடிப் பிடித்து யானையை மிதிக்க வைத்துக் கொன்றானாம்.

ஜாதி வெறியை ஒழிக்க வேண்டுமானால் இந்து மதம் அழிய வேண்டும் என நினைக்கும் சிலரின் நடவடிக்கை இப்படித் தான். ஏதோ என்றில் பழியைப் போட்டு, தங்களின் கடமை இது தான் எனக் கருதிக் கொள்கின்றனர்.

Posted

சரி! எங்கள் வழி தவறு என்று சொல்கிறீர்கள்.

அப்படி என்றால் நீங்கள் சாதியை ஒழிப்பதற்கு நீங்கள் ஒரு நல்ல வழியை சொல்லுங்கள்!

Posted

தவறு உங்கள் புரிதலில். உங்கள் வீடு சரி இல்லை என்றால் வீட்டை எரித்து விடுவீர்களா?

நீங்கள் பிறந்து இந்துவாக.

வீட்டைத் திருத்த முடியாது என்று தெரிந்தால் உடைத்து விட்டுத் தான் புது வீடு கட்ட வேண்டும்.மேலும் சமயம் என்பது வீடு கிடையாது ,எனக்கு எனது வாழ்க்கையை நடாத்த ஒரு வீடு தேவை ஆனால் எனக்கு ஒரு சமயம் கட்டயம் தேவையில்லை.எனக்கு நான் பிறந்ததிலிருந்தே அது ஒரு தேவையாக இருந்ததில்லைஇனியும் இருக்கப்போவதில்லை என்னைப் போல பலருக்கும் அப்படியே.

தவறு உங்கள் புரிதலில் தான், ;)

எந்த ஒரு தனி மனிதருக்கும் பிறக்கும் போதே சாதி மதம் அடையாள்தோடு தான் பிறக்கரான்,

அப்படியா? தெரியாதே பிறக்கும் போது நிர்வணமாகத் தானே எலோரும் ஒரே மத்ரித் தானே பிறக்கிறோம்.சிலுவையோடும் விபூதியோடும் பிறப்பதில்லையே?

இது சமூகத்தின் குற்றம். இதை தவிற்க்க முடியாது, மாற்றங்கள் வேண்டுமானால் அதை அதே சமூகத்தில் இருந்து திருத்த வேண்டும்.

சரி உங்களுக்கு இந்து மதம் பிடிக்கவில்லை ..நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பிறப்பால தாழ்த்த பட்டவர்களுக்கும் இன்னபிறவர்களுக்கும் சாதி என்ற கொடுமை இல்லாமல் செய்ய பாடு பட வேண்டும்.

அதைத் தானே எம்மால் முடிந்த நேரத்தில் செய்கிறோம்,அதைத் தானே இங்கே நீங்கள் வேண்டாம் என்கிறீர்கள்,உங்கள் வழி என்ன என்று சொல்லுங்களேன்?

இதை தான் கேரளாவில் அன்றே நடை முறை படுத்து காட்டினார்கள். அங்கு தமிழ் நாட்டை விட பழங்காலத்தில் சாதி கொடுமை அதிக,.ஆனால் எந்த வித ஒரு சாதி வெறுப்புணர்வும் இல்லாமல் சக இந்துக்களும் குலாவும் அதிசயம் அங்கு தான் நடக்கிறது.அங்கு எந்த ஒரு பெரியாரும் வரவில்லை.எந்த ஒரு கன்னட வெறியனும் அடுத்த சாதியில் பிறந்த அனைவரையும் அடி என்று சொல்லவில்லை. அங்கு தான் உண்மையான் சமூக நீதி நிலவுகிறது.

நல்ல வேடிக்கை,அருத்ததி ராயின் 'கோட் ஒவ் ஸ்மோல் திங்ஸ்' படித்தீர்களே ஆயின் கேரளாவில் இருக்கும் சாதி மதச் சண்டைகள் பற்றித் தெரியும், சும்மா எந்த அடிப்படைகள் இன்றி இப்படிக் கதை அளக்காதீர்கள்.

பெரியார் கொள்கையால் இன்று என்ன ஆனது??

பல லட்சம் தமிழர்கள் பயன் அடைந்தனர்.

இதே கண்ணோட்டதில் பார்த்தால்

தமிழ் கொள்கையும் தவறு என்று தான் படு,

சிங்கள் பாசிச மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது சரி என்றால் நூறாண்டு காலமாக மக்கள் தொழும் கோவில்களை இடித்து பெண்களை கற்பழித்து நாகரிங்களை துண்டித்தவர்க்ளை தண்டிப்பது தான் சரியாகும்,

சரி அந்த காலம் போகட்டும்.

நீங்கள் கோவையில் எந்த ஒரு முஸ்லீம் காலனியாவது சென்றது உண்டா?

ஏன் சென்னை திரு வேல்லி கேணி பகுதியில் இஸ்லாமீயர் வசிக்கும் பகுதியில் வாழ்ந்த்து உண்டா>

அது கூட வேண்டாம் எந்த ஒரு இஸ்லாமிய்ராவது

நான் முதலில் தமிழன் பின் என் தேசம் அதற்க்கு பின் தான் என் மதம் என்று சொல்லியது உண்டா?

அவர்களின் நம்பிக்கை தன்மை பற்றி முதலில் சொல்லுங்களேன்!

இதில் சொல்ல என்ன இருக்கிறது எந்த மத அடிப்படையிலான வெறியுமே மனிதர்களுக்குப் பயன் அற்றவை அது இசுலாமாக இருக்கட்டும் கிரிதுவ மதமாக இருக்கட்டும் இல்லை இந்து மதமாக இருக்கட்டும்.உங்களுக்கு இருக்கும் அதே வெறி இசுலாமியர்களுக்கும் உண்டு.எல்லாம் குப்பையே, இதில் உயர்ந்த குப்பை ,தாழ்ந்த குப்பை என்று கிடையாது.

வருணாஸ்சிரம் என்றால் நீங்கள் என்ன என்று சொல்லுங்களேன் ?

அந்த காலகட்டதில்

அதாவது எந்த ஒரு செயற்கை மாற்றமும் இல்லாமல் இயற்கை மட்டுமே மனிதர்கள் நம்பிய இருந்த கால கட்டதில் சில் கட்டுபாடுகள் தேவை பட்டண, இந்த தர்மத்தை எழுதியவே ஒரு சத்திரியன் அதாவது மன்னர் வம்சத்தில் வந்தவன். அப்போது தேவை பட்டது, இப்போது கால மாற்றத்தில் தேவை இல்லாதது,

அதற்க்காக பழைய விழய்ங்கள்யே பேசி கொணே இருப்போமா?

பழைய விடயங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும் வரை பேச வேண்டித்தானே இருக்கிறது?பல நூற்றாண்டு அடக்குமுறை ஒரு சில ஆண்டுகளில் எப்படி இல்லாது போகும்?

நம் வாழ்க்கை முறையே மாறி விட்டது. தேவை இல்லாதது நீக்குவோ,

இந்து என்பது வாழ்க்கை நெறி முறை தான்.

யாரும் வந்து வீட்டு வாசலில் விடுமுறை நாட்களில் இந்துவாக் மாறு உனக்கு சுப வாழ்க்கை கிட்டும் என்று சொல்லவில்லை.

நமக்கு சரி என்று அந்த காலத்தில் பட்ட எண்ணங்கள் கோட்பாடுகள் இன்று தவறாக படுகிறது.

அதை நாம் மாற்றுவோம்.

ம்\இந்து மதம் மற்ற மதங்கள் போல் அல்லாது காலத்துக்கு தக்கவாறு மாறி வந்த்துள்ளாது.

நம் முன்னோர் நம்பிக்கை , அனுபங்கள் பொய் என்று நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானுல் தூற்றலாம். ஆனால் நீங்கள் மாற்றம் செய்யும் போக்கில் இருந்த்து பின் வாங்குகீரிர்கள் என்று தான் நான் சொல்வேன்.

மாறத் தானே வேண்டும்,இல்லா விட்டால் மக்கள் மதம் மாறி விடுவார்களே,அது தானே தலித்துக்கள் மதம் மாறிக் கொண்டிருகின்றனர்.முன்னர் போல் இப்போது கழுவில் ஏற்ற முடியாது.கிந்து ராச்சியம் அமைப்பதுவும் கடினம்.

ஏன் இஸ்லாமிய தேசம் இருக்கும் போது இந்துக்களின் தேசம் என்ன தவறா?

கிருஸ்துவ தேசம் இருக்கும் போது இந்துக்கள் என்ன அனாதையா>

ஏன் சிவனும் கிருஸ்ணனும் யேசுவும் அல்லாவும் தமக்கு ஒரு தேசம் வேண்டும் என்று கேட்டனரா?தேசமில்லாமல் அவர்கள் வல்லமை அற்றவர்களா? அவர்களுக்காக நீங்கள் ஏன் ஓட்டு கேட்டு ஒரு அரசை நிர்மாணிக்க வேண்டும்.ஏன் நீங்கள் கஸ்ட்டப்படுகிறீர்கள்.ஒரு தேங்காயை உடைத்து பிள்ளாயாரிடம் வேண்டுங்கள் அப்பனே இந்தியாவை ஒரு இந்து தேசமாக்கு என்று?அவரின் வல்லமையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஏன் மதங்களுக்கு வேண்டும் தேசம்? மதம் என்பது ஒரு வனின் தனிப்பட்ட நம்பிக்கை என்றால் ஏன் அதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும்.மற்றவனின் ஜன நாயக உரிமைகளில் தலையிடவா? ஆப்கானிலும் நேபாலிலும் மத ரீதியான அரசுகளுக்கு என்ன நடந்தது?உலகம் நீங்கள் எதிர்பார்க்கும் திசையில் அன்றி, மதச் சார்பர்ற திசையில் தான் செல்கிறது.மனிதன் இப்போது காட்டுமிராண்டி கிடையாது அவன் சிந்திக்கத் தொடங்கி விட்டான்.தமிழனும் இதற்கு விதி விலக்கல்ல.

அடுத்துவர்களுக்கு இருக்கும் அபிலாழை எமக்கு இருக்க கூடாதா?

அடுத்தவன் மோசடி செய்தால் நீங்களும் செய்வீர்கள் .அது தானே சொல்கிறோம் மக்களுக்குத் தான் அரசு,மதங்களுக்கு அல்ல, உங்களைப் போன்ற மத வெறியர்களால் கனவு காணத் தான் முடியும்.ஆனால் மதங்கள் மேலும் கடவுள்கள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை அற்று வருவதே உங்கள் புலம்பலில் இருந்து தெரியும் உண்மை.

Posted

சரி! எங்கள் வழி தவறு என்று சொல்கிறீர்கள்.

அப்படி என்றால் நீங்கள் சாதியை ஒழிப்பதற்கு நீங்கள் ஒரு நல்ல வழியை சொல்லுங்கள்!

அதி விடுதலைப்புலிகளிடம் கேளுங்கள்... எப்படி சிறப்பாக கையாள்கிறார்கள் எண்று... அமைப்புக்குளேயையும் அப்படித்தான் வெளியிலும் அப்படித்தான்...

வெளிநாட்டு வாழ்க்கைகூட மக்களை நன்கு மாற்றி வைத்து இருக்கிறது கோயில்களுக்குள் எல்லாரும்தான் போகின்றார்கள்...!

Posted

அதை தான் நானும் சொல்கிறேன்.

சாதி என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பதான் எல்லா பிரச்சனக்கும் காரணம்.

ஏன் பணக்கார தாழ்த்தபட்டவர் சாதி ரீதியலான இட ஒதுக்கீடு அனுபவிக்கலாம் ஆனால் ஏழை உயர்ந்த சாதி மாணவர் இட ஒதுக்கீடு இல்லாம்ல போக வேண்டும் இது தானே உங்கள் வாதம்?

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?:

சாதிகளை இன்றே தூக்கியெறியுங்கள்; இட ஒதுக்கீடும் ஒரு மண்ணும் யாருக்கும் தேவையில்லை. ஆனல் முதலில் சொன்னது நடக்குமா? நடப்பதற்குறிய எந்த அறிகுறியும் இல்லை. சனாதன தர்மமும் நிலைக்க வேண்டும்; சமூக நீதியும் கிடையாது என்பது என்னவிதமான மனப்பாங்கு?ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தைப் பீடித்துள்ள சாதி என்னும் வியாதி ஒழிந்து, பிறப்பினால் எந்த மனிதனும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை என்ற சமத்துவ சமுதாயம் ஏற்படும் என்ற நம்பிக்கைக் கீற்றைக் கூடக் காண முடியாத இன்றைய சூழ்நிலையின் நிதர்சனங்களை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். சாதிகள் இல்லை என்றோ, ‘நம்மைப் போன்றவர்களுங்கூட’ சாதிப் பிரிவினைகளைப் பற்றிப் பேசுவது தவறு என்றோ நினைத்தால் நாம் கண்களை மூடிக்கொண்ட பூனைகளாகத்தான் இருப்போம். நம்மிடையே சாதிகளும், சாதீய உணர்வுகளும் ஆழமாகவே பதிந்துள்ளன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூக ஏற்றத் தாழ்வுகள் எங்கும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. கீழ்நிலை படுத்தப்பட்டவரைப் பார்த்து, அவருக்குச் சாதீயத் தரவரிசையில் சற்றே மேலேயுள்ளவர்கள் ‘அவன்’ மேலே வந்துவிடக்கூடாதே என்ற நச்சு நினைவோடு ‘கீழ்சாதிக்காரன்’ எப்போதுமே தன் அடிமையாகவும் தான் எப்போதுமே ‘ஆண்டை’யாகவும்’ இருக்கவேண்டும் என்ற மன வெறியை எல்லா சாதி நிலைகளிலும் பார்க்க முடிகிறது. நம் சமூக உயர்வில் பங்களிக்காதவர் யார்? ஏதோ ஒரு வழியில் அரசுக்கு வரும் வருமானத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்கவில்லையா? அப்படியானால் அரசு தரும் service-களில் எல்லோருக்கும் பங்குபெற உரிமை உண்டா இல்லையா? அந்த உரிமை மத நம்பிக்கைகளால் சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினருக்கு - 75% விழுக்காட்டுக்கு மேல் - மறுக்கப்பட்டு வந்துள்ளது உண்மையில்லையா? மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்களுக்குச் ‘சலுகைகள்’ என்ற பெயரிலாவது இனியாவது புதிய கதவுகளைத் திறப்பது அரசின் முதல் கடமை இல்லையா?

இடஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்கு ஒரே வரியிலும் பதில் தரமுடியும்: To provide level playing field என்பதே அது. மண்டல் தன் அறிக்கையில் கூறுவது: ” சமமானவர்களிடம்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமாக இல்லாதவர்களை சம்மானவர்களாகக் கருதுவதே சமத்துவமின்மை ஆகும்.” ஒரே அமைப்பில் ஒரு பகுதியினர் கல்வியோடு தொடர்பு கொண்டவர்களாகவும், மற்றொரு பகுதியினர் பொது சமூகநலனுக்காக ‘உழைக்கும் வர்க்கமாகவும்’ பிரிக்கப்பட்டு வெகுகாலமாய் பிரித்து வைக்கப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே தங்களை ‘அறிவாளிகளாகப்’ புனைந்து கொண்டு கல்வி தங்களுக்கே உரிய ஒரு விஷயமாகக் கற்பித்துக்கொண்டு இருப்பதுவும், மற்றவருக்குத் ‘தகுதி’ இல்லையென்ற கூற்றை கோயபல்ஸ் தனமாக திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும்? (தகுதி, திறமை பற்றியப் பிரச்சனைகளைத் தனியாக, அடுத்ததாகப் பேசுவோம்).

நாம் எப்போதுமே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க நாட்டில் 1964-லேயே Proactive Employment Law என்ற சம வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தொகை, race - இவைகளின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது அரசு வேலைகளுக்கு மட்டுமின்றி தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்ற சட்டம் இயற்றப் பட்டுள்ளதே. சரியான இன்னுமொரு சான்று வேண்டுமெனின், டெட்ராய்ட் மாநிலத்தில் பாதிக்கு மேல் ஆஃப்ரோ-அமெரிக்கர்கள் இருந்தும் பல அரசு வேலைகளில் அதுவும் காவல் துறையில் மேல்பதவியிலிருப்பவர்கள் பலரும் வெள்ளையர்கள் என்பதை எதிர்ப்பு செய்தமையால், 50:50 என்ற அளவில் இரு சாராருக்கும் பதவிகள் கொடுக்கப் பட அதை எதிர்த்து வெள்ளையர் நீதி மன்றம் சென்ற போது நீதி மன்றம் விகிதாசார அடிப்படையில் பதவிகள் கொடுக்கப்படுவதே சரியென்று தீர்ப்பும் அளித்தது.

ஆனால் நம் நாட்டில் இப்படி ஒரு தீர்ப்பை இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கே ஒரு பக்க நியாயம் - அதுவும் முற்படுத்திக்கொண்டோரின் நியாயம் - மட்டுமே படியேறும். ஏனெனில் இதுவரை உச்ச நீதி மன்றத்தில் நீதியரசர்களாக இருந்தவர்கள் மொத்தம் 270; அதில் பிற்படுத்தப்பட்டோர் நான்கு பேர் மட்டுமே; தாழ்த்தப்பட்டோர் யாருமே இல்லை.*** (*** பின் குறிப்பில் விளக்கம் காண்க.) 266 பேர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ? இது ஒன்றும் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்லும் குற்றச்சாட்டல்ல. இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகள் நம் நீதியரசர்கள் முன் தோல்வியடைவதே வாடிக்கை. அதிலும் நம் நீதியரசர்கள் எப்போதும் இந்த விஷயத்தில் மிகவும் proactive -ஆக இருப்பது கண்கூடு. 1950- ஆம் ஆண்டில் சண்பகம் துரைராஜ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராமணப் பெண் சென்னை உயர் நீதி மன்றத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது. பொதுவாக, கல்லூரியில் - பெயரளவிலாவது - பயிலப் போகும் மாணவர்களின் பெயரில் இம்மாதிரி வழக்குகள் தொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு யாரோ ஒருவர் - மருத்துவப் படிப்போடு தொடர்பேதுமில்லாதவர் - வழக்கு ஒன்று போடுகிறார். ஸ்ரீனிவாசன் என்ற பொறியிய்யல் மாணவரும் இது போன்ற ஒரு வழக்கைத் தொடுக்கிறார், நீதியரசர் S.R.Das - அவர் சாதி என்ன என்பதை இங்கே குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியுமா, என்ன..? - உடனே அந்த வழக்கை எடுத்து, எடுத்த வேகத்தில் இட ஒதுக்கீட்டிர்கு எதிர்ப்பான தீர்ப்பை அ(ழி)ளிக்கிறார். வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு செல்கிறது. அங்கே உள்ள ‘பென்ச்’சில் ஒரு நீதியரசர் மட்டும் இஸ்லாமியர்; மற்றவர் வழக்கம்போல். ஆகவே அங்கும் அதே தீர்ப்பு. இதிலும் ஒரு நல்லது நடந்தது. இத்தீர்ப்புகளுக்கு எதிராக பெரியாரால் தமிழ்நாட்டில் எழுந்த போராட்டமும், தில்லியில் அம்பேத்காரின் முயற்சியாலும் இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டமாக மாறிற்று. நன்றி அந்தப் பெண்மணிக்கு; வழக்கில் தொடர்புள்ள அத்தனை நீதிபதிகளுக்கும்தான்!

அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது. 2005-ல் நடந்த இனாம்தார் வழக்கில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்றும் நம் நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். சொந்தக் காசில் கல்லூரி நடத்துகிறார்கள் என்ற கோஷம் அவ்வப்போது வரும். ஆனால் வசதியாக, கல்விக்கூடங்களை நடத்துவதால் - அதுவும் இப்போதெல்லாம் அதுவும் ஒரு வியாபாரம்தான் என்பது யாருக்குத்தான் தெரியாது - கல்லூரி நிர்வாகிககளுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் பல உதவிகள், சலுகைகள் ( tax exemption on land, buildings, vehicles; exemption from land ceiling etc..etc..) மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்துதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள் நம் நீதியரசர்களும், ஏனைய தனியார் கல்லூரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும்.

¼br /> இட ஒதுக்கீட்டை அனுமதித்தால் சமத்துவம் (equality) இல்லாமல் போய்விடும் என்று முற்படுத்திக்கொண்டோர் சொல்லுகிறார்கள். அதுவும் அவர்களது ‘விளக்குமாறு போராட்டத்தில்’ இந்த ‘வசனம்’ அடிக்கடி பலர் வாயிலிருந்தும் வந்தது. சமூகத்தில் சமத்துவம் உள்ளதா? இல்லாமலிருப்பின் அதற்குரிய காரணிகள் என்ன? யார்? சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பவர்கள், சமத்துவம் பிறப்பிலேயே இல்லை என்பவர்கள் கல்வி வாய்ப்பில் சமத்துவம் பேசுகிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காகத்தானே கல்வியில் முடக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதுள்ளது. இந்திய சமூகத்தில் 5% மட்டுமே ப்ராமணர்கள்; ஏனைய முன்னேறிய பிரிவினர்களையும் சேர்த்தால் இவர்கள் மொத்தம் 15% மட்டுமே. சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அவரவர் மக்கள் தொகைப்படி ‘விகிதாச்சார இட ஒதுக்கீடு’ (proportional reservation) செய்திருந்தால் இன்று இவர்கள் 75முதல் 85% விழுக்காடு வரை ஆக்கிரமித்து இருக்க முடியுமா? ( எங்களிடம் ‘திறமை’ இருந்ததால் மேலே வந்தோம் என்று யாரும் இந்த இடத்தில் சொல்ல நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்.)

¼br /> வேறொன்றுமில்லை. ஓரளவேனும் இருக்கும் இப்போதைய இட ஒதுக்கீட்டினால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இதனால்,இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயலுகிறார்கள். முற்படுத்திக்கொண்டவர்களுக்

Posted

III. மூன்றாம் பகுதி

திறமையும், இட ஒதுக்கீடும்:

இட ஒதுக்கீட்டின் மூலம் வரும் மாணவர்கள் திறமை இல்லாதவர்களாக இருப்பார்கள்; ஆகவே இட ஒதுக்கீடு கூடவே கூடாது.

தரத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் நாடு உண்மையான முன்னேற்றம் காண முடியும். ஆகவே இட ஒதுக்கீடு கூடாது. அதுவும் உயர் கல்வியில் கூடவே கூடாது.¼br /> ¼br /> ஏகலைவனும், சம்புகனும்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். ராமாயணமும், மகாபாரதமும் இன்னும் முடியவேயில்லை.

**தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் வெறும் பாஸ் மார்க் வாங்கினாலே போதும்; அவர்களை எங்கள் கோட்டாவில் சேர்த்துக்கொள்ள உரிமை தர வேண்டும் என்று கல்லூரிகள் கேட்ட போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?

**NRI மாணவர்களுக்கும் இதே போல் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி மருத்துவக் கல்லூரி இடங்கள் ‘ஏலம்’ விடப்படும்போது - இப்போது தரம் பற்றிப் பேசுவர்கள் எங்கே போனார்கள்?

தமிழ்நாட்டைப் பொருத்த மட்டிலுமாவது எல்லோருக்குமே தெரியுமே - உயர் கல்விக்குரிய நுழைவுத்தேர்வுகளில் cut-off மதிப்பெண்கள் எப்படி உள்ளன என்று. இதற்குப் பிறகும் இன்னும் அதே பல்லவியை எத்தனை நாட்களுக்கு ‘ப்ரஸ்தாபித்து’க் கொண்டே இருப்பது?

cut-off மதிப்பெண்களில்தான் அதிக ஏற்றத்தாழ்வு இல்லையே; பின் எதற்காக இன்னும் இட ஒதுக்கீடு என்றொரு கேள்வி பலரிடமிருந்து. - இட ஒதுக்கீடு ஏன் என்ற கேள்விக்குரிய பதில் அவர்களுக்குப் புரியவில்லை அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பதே பொருள்.

1950கள் வரை முற்படுத்திக்கொண்ட சாதியினர் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், நன்றாகப் படிப்பவர்கள் என்றொரு ‘மாயை’ இருந்து வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த மாயை, 60-களிலேயே சரியத் தொடங்கி, இன்றைக்கு அது முற்றிலுமாகத் துடைக்கப்பட்டு விட்டது. ஆராய்ச்சி, மருத்துவம், நீதித்துறை, ஆடிட்டிங், எழுத்து, ஊடகங்கள், படைப்பாளர்கள் - என்று அவர்கள் மட்டுமே கோலோச்சிய நிலையா இன்று? எல்லோரும், எங்கும் எதிலும் என நீக்கமற நிறைந்திருப்பது மட்டுமின்றி, இன்றைய டாப் - 2 என கருதப்படும் கம்ப்யூட்டர், biotechnology என்ற இரு துறைகளிலுமே முற்படுத்திக்கொண்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் அனைவருமே சமமான அளவு தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருக்கிறார்களே.

‘அவனுக்குத்தன் படிப்பு வரும்; இவனுக்கெல்லாம் படிப்பா?’ என்ற மமதையான நேற்றைய பேச்சு இன்று செல்லுபடியாகுமா? திறமைகள் எல்லோரிடமும் உண்டு; எல்லோரிடமும் அதற்குரிய ஜீன்கள் உண்டு. அவைகளைக் வெளிக்கொணரத் தேவையானது சாதி அடையாளம் - caste label - இல்லை; வாய்ப்புகள் மட்டுமே. இருட்டுக்குள்ளேயே வைத்திருந்த செடியை வெயிலுக்குக் கொண்டு வந்ததும் வீறுகொண்டு வளருமே, அது போல தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் புதிய வாய்ப்புகள் தரும் உத்வேகங்கள் அவர்களை வேகமாகவே முன்னெடுத்துச் செல்ல வைக்கும். இதுவரை மறுக்கப்பட்ட வாய்ப்புகளைத் தங்கள் உரிமைகளாக அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் ‘விளக்குமாறு போராட்டக்காரர்களோ’ அவர்களையெல்லாம் இப்போது இருக்கும் இடத்திலேயே வைக்கவேண்டும் என்ற தங்கள் மன நிலையை, மன வக்கிரத்தைத் தான் காண்பிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்? “….இன்னும்கூட அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் படைப்பாக்கத்திற்கான பரிசு - Innovation Awards - பெறுவோரில் 60-70% பேர் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியவர்கள்” என்கிறார் IIM -A முனைவர் அனில் குப்தா. அப்படியென்றால் IIM-ல் படித்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், நம் வரிப்பணத்தில் பெரிய படிப்பு படித்துவிட்டு பெரிய சம்பளத்திற்காக அயல் நாடுகளுக்குப் பயணம் போய்விடுகிறார்கள்.

வரலாற்றிலிருந்து இன்னொரு பக்கம்:

இட ஒதுக்கீட்டை மறுக்கும் முற்படுத்திக் கொண்டோரின் தகுதி, திறமை குறித்து சந்திரபான் பிரசாத் என்பவர் Pioneer நாளிதழில் சில வரலாற்று உண்மைகளைப் பற்றிச் சொல்கிறார்:

” 1858-ம் ஆண்டில் சென்னையில் பட்டப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து பேராசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் கல்லூரியைத் தொடந்து நடத்த முடியவில்லை. ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ‘இண்டர்மீடியட்’ வகுப்பில் முதலாம், இரண்டாம் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்திருந்தது. மேலும் ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அன்று மேல்சாதி மாணவர்களால் முதலாம், இரண்டாம் தரங்களில் தேர்ச்சி அடைய முடியவில்லை. தேர்ச்சிக்கான 40 மதிப்பெண்ணையும் பெற முடியவில்லை. மேல்சாதியினரின் வற்புறுத்துதலின் காரணமாக ஆங்கிலேய அரசு பட்டப் படிப்பில் சேருவதற்கான தகுதியைக் குறைத்தது. மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும் பட்டப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள் என அரசு அறிவித்தது. தேர்ச்சிக்கான மதிப்பெண் 40%-லிருந்து 33% ஆகக் குறைக்கப் பட்டது.”

1901-ம் ஆண்டு கல்கத்தாவில் மெட்ரிகுலேசன் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 40%-லிருந்து 33% ஆகக் குறைத்திருக்காவிட்டால் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்க முடியாது.

1922-1927-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வி அறிக்கையின்படி மேல்சாதி மாணவர்களில் 45% மருத்துவப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை; 35% மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்ச்சி அடையவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த தங்களது ‘தகுதியற்ற நிலையை’ மறந்து உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்ப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து இன்று ‘விளக்குமாறு போராட்டம்’ நடத்தப்படுகிறது!

all said and done, மேல்குடி மக்களோடு ஒப்பிடும்போது கீழ்மட்டத்தாருக்குத் ‘தகுதி’களில் சில குறைபாடுகள் உண்டுதான். இந்த வேறுபாடு நம் ஜீன்களில் இல்லை; நம் வாழ்வியல் முறைகளால் இருக்கிறது. இந்த வேறுபாடு பிறப்பினால் இல்லை; வளர்ப்பினால் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலுமும், தாழ்த்தப்பட்டோர் கிட்டத்தட்ட முற்றிலுமே வறுமைச் சூழலிலிருந்தே வருகிறார்கள். மேற்படுத்திக்கொண்ட சாதியினரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வீட்டுச் சூழல், ஆயிரக்கணக்கில் பணம் கொட்டிக் கொடுத்து நுழைவுத் தேர்வுகளுக்காய் அவர்களைத் தயார் படுத்தும் பண வசதி - இவைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. அந்த வசதிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் - உனக்கு இதுதான் தொழில் என்று பிறப்பிலேயே தண்ணீர் தெளித்துவிட்டு விட்ட சாதீயக் கட்டுப்பாடுகள் தானே காரணம்? இந்தச் சாதீயக் கட்டுப்பாடுகள் எங்கிருந்து வந்தன? வேதங்களிலிருந்துதானே? வேதங்களை அன்றும் இன்றும் கட்டிக் காத்துக் காபந்து செய்து கொண்டிருப்பவர்கள் யார்? பஞ்சாபில் (மற்ற மாநிலங்கள் பற்றித் தெரியாது) 1947 வரையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நில உடமை தடை செய்யப்பட்டிருந்திருக்கிறத

Posted

இதை தான் கேரளாவில் அன்றே நடை முறை படுத்து காட்டினார்கள். அங்கு தமிழ் நாட்டை விட பழங்காலத்தில் சாதி கொடுமை அதிக,.ஆனால் எந்த வித ஒரு சாதி வெறுப்புணர்வும் இல்லாமல் சக இந்துக்களும் குலாவும் அதிசயம் அங்கு தான் நடக்கிறது.அங்கு எந்த ஒரு பெரியாரும் வரவில்லை.எந்த ஒரு கன்னட வெறியனும் அடுத்த சாதியில் பிறந்த அனைவரையும் அடி என்று சொல்லவில்லை. அங்கு தான் உண்மையான் சமூக நீதி நிலவுகிறது

கேரள சமூக நீதிப் போராட்டங்கள் நாராயணகுருவும் அய்யங்காளியும் பிறகும்

- ஜே.ஜி. ஜோணி ஜெபமலர்

‘சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு’ என்ற பொதுத் தலைப்பின் கீழ், முனைவர் கி.நாச்சிமுத்து நிகழ்த்திய சொற் பொழிவின் எழுத்து வடிவம் என்பதனால், கேரளாவில் நடந்த/நடந்து கொண்டிருக்கிற சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி ஆழமான அறிதலுக்கு வேறு நூல்களைத்தான் தேட வேண்டும். ஆனால் தமிழ்ச் சமூகத்துக்கு தெரிய வராத பல செய்திகளும், தலைவர்களின் பெயர்களும் பக்கங்களில் மிதக்கும் போது, இந்தியாவின் ‘முன்மாதிரி’ மாநிலமெனப் பெயர் பெற்ற கேரளத்தின் வரலாறு எவ்வளவு மேலோட்டமாகப் புனையப் பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

கேரளாவின் மனசாட்சி யாகவும், ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்த எழுச்சியை தன் வாழ்நாளிலேயே உருவாக்கியவர் என்பதாகவும் அறியப்படுகின்ற நாராயணகுரு, அய்யாவழி மரபின் தோற்றுவாயாக அமைந்த வைகுண்ட சாமி, மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் படை நாயகனாக விளங்கிய அய்யங்காளி ஆகியோரைப் பற்றித்தான் இதுவரை அதிக செய்திகள் தமிழில் பதிவாகி இருக்கின்றன. சுயமரியாதைக் கருத்துக்களின் முன்னோடி சட்டம்பி சுவாமிகள், தாழ்த்தப்பட்டோர் எழுச்சியின் தளபதி குமார குருதேவன், மீனவர் எழுச்சி பேசிய பண்டிட் கறுப்பன் போன்றோர் பற்றிய குறிப்புகளைத் தந்து, இவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தந்திருக்கிறார் நூலாசிரியர்.

‘சாதி ஒழிப்பு’ என்பது வேறு; ‘சமூக நீதி’ என்பது வேறு என்று தெளிவாகக் கூறுகிறார் நூலாசிரியர். சாதி ஒழிப்புக்கான வழிமுறை களையும், சமூக நீதிக்கான வழிமுறைகளையும் கூட்டிக் குழப்பிப் பேசுவதில்தான் இன்றைய அரசியல் கட்சிகள் பல பிழைப்பு நடத்துகின்றன. கேரளாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கேரளாவில் தலித்துகளைத் தவிர மீதி எல்லோருக்கும் தங்களை அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்தவும், பிரதானமானதாகக் காட்டவும் சக்தி வாய்ந்த அமைப்புகள் இருக்கின்றன. ஈழவர்களைப் பிடியில் கொண்டுள்ள எஸ்.என்.டி.பி. அமைப்பும், நாயர்களால் அமைந்த என்.எஸ்.எஸ். அமைப்பும் தேர்தல் நேரங்களில் செயல்படும் விதம் அரசியல் கட்சிகளை தோற்பாவைக் கூத்து ஆடும் படி செய்து விடும். இதில் பிற்படுத்தப்பட்ட சமூகமான ஈழவர் களின் எழுச்சிக்கும், எஸ்.என்.டி.பி.யின் (ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்) தோற்றத்துக்கும் வித்திட்டவர் மகான் நாராயணகுரு. அதே வேளையில் முற்படுத்தப் பட்ட சமூகம் என்றறியப்படுகிற நாயர் சமூகத்தின் தோற்றம் எழுச்சி, வளர்ச்சி பற்றிய புரிதல்களின் தேவை சாதியமைப்பின் இரகசியம் பற்றி அறிய விரும்புவோருக்கு அவசியம். 1901ல் திருவிதாங்கூர் சென்சஸ் படி 160 உபஜாதிப் பிரிவுகளாக இருந்த நாயர் சமுதாயம் மிகக் குறுகிய காலத்தின் தன் ‘உபஜாதிகளைத்’ துறந்து விட்டு, ‘நாயர்’ என்ற பொதுப் பெயரோடு இயங்குகிற விசையை ‘நாயர் சமாஜம்’ ஏற்படுத்தியது. ஈழவ சமுதாயத்தில் 21 உட்பிரிவுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நூலுக்கு வெளியே உள்ள தகவல் என்றாலும் ‘சமூக நீதிப் போராட்டம்’ என்று சொல்ல வரும்போது, இந்த சாதி உட்பிரிவுகளை தனக்குள்ளே கிரகித்துக் கொண்டதனால் பலமான சமுதாய அமைப்பை உருவாக்க முடிந்திருப்பது பற்றியும், இது ‘சாதி ஒழிப்பு’ பற்றிய சிந்தனைக்குச் சுடரேற்றுமா என்பது பற்றியும் யோசிக்கலாம். தலித்துகளுக்கு இடையில் காணப்படும் உட்பிரிவுகள் ஓர் ஒன்றுபட்ட இயக்கம் உருவாவதற்கு உருவாக்கும் தடைகள் பற்றியும் நினைத்துக் கொள்ளலாம்.

‘கூவாத கோழி கூவியே தீர வேண்டும்’ என்ற கவிதை முழக்கத்தோடு போராட்டக் களத்துக்கு வந்து, ‘பிரத்தியட்ச தெய்வீக இரட்சா சபை’ என்ற மத அமைப்பைத் தானாகவே துவங்கி, நிலவில் இருந்த இந்து/கிறிஸ்தவ மத ஆதிக்கத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய குமார குருதேவன் என்கிற பொய்கையில் அப்பச்சன் பற்றிய தகவல் மறைந்து கிடக்கும் வரலாற்றின் ஒரு தும்பைக் காட்டி இருக்கிறது. ‘காற்றும் வெயிலுமேற்ற/கறுத்த சந்ததியே’ என்று அவர் தொள்ளாயிரங்களின் துவக்கத்தில் ஒலித்த குரல், காலம் போகப்போக அடர்த்தி கூடவில்லை. இப்போதும் ஈனஸ்வரத்தில் சி.கே.ஜானு போன்றவரிடமிருந்து கேட்கிறது.

கேரளாவில் பொதுச் சமூகத்தில் ‘சாதி பேசுவது’ காந்திக்கும், காரல் மார்க்சுக்கும் எதிரானது என்பது போல ‘நாகரிகம்’ கருதி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால வேட்பாளர் தேர்வின் போது தனித் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் தலித்துகளை வேட்பாளராக நிறுத்தாமலிருக்க முடிவு செய்வதிலிருந்து, வீட்டின் உள்வட்டங்களில் மனிதர்களின் நடத்தையை சாதிக்கு குறிப்பிட்டு இட்டுள்ள சொறிப் பெயர்களால் அடையாளப் படுத்துவது வரை ‘மானசீக தளத்தில்’ சாதியுணர்வு கம்பீரமாகவே இருக்கிறது.

நூலை வெளியிட்டுள்ள ‘அம்பேத்கர் ஆய்வு மையத்தின்’ இயக்குர், முனைவர் டி.தருமராஜன் தம்முடைய கச்சிதமான முன்னுரையில் கூறிஉள்ளபடி, “சாதிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலைப் படுத்தும் ஆய்வுகளின் வருகை தலித்திய சிந்தனைகள் வலிமை பெறுவதை காட்டுகின்றன” என்பதற்கு இந்தச் சிறிய நூலும் ஒரு வலிமையான ஆதாரம்.

நூல் : கேரள சமூக நீதிப் போராட்டங்கள்

நாராயணகுருவும் அய்யங்காளியும் பிறகும்

ஆசிரியர் : கி. நாச்சிமுத்து

வெளியீடு : அம்பேத்கர் ஆய்வு மையம்,

தூய சவேரியர் தன்னாட்சி கல்லூரி,

பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம்.

பக்கம் : 64 விலை : ரூ.10/-

http://www.keetru.com/puthiyakaatru/jan06/jebamalar.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவனே ஒரு பார்ப்பர்ணன்..என்பதை அறியாது போல் நாடகமாடி பார்ப்பர்ண எதிர்ப்பென்று மனித சமூகத்துக்குள்ளேயே வெறுப்புணர்வு வெறித்தனத்தை விதைப்பதை அங்கீகரிப்பது என்பது மனித இனத்துக்கே ஆபத்தானது. சாதி எப்படி ஆபத்தானதோ அந்த வகையில் சாதிய அடிப்படையில் ஒரு மனிதக் குழுமத்தை நோக்கிய எதிர்ப்புணர்வை வெறியாக்குதலும் அமையும்.

மதம் ஒரு இனத்தின் அடையாளம். அதை விரும்பியவர்கள் பின்பற்றலாம். விரும்பாதவர்கள் அதை விட்டு விலகியே இருக்கலாம். எவரையும் கட்டாயப்படுத்தி எதையும் பின்பற்றாதே என்று சொல்லவோ கட்டுக்கதைகளைப் புனைந்து அவற்றை உண்மை என்று நம்ப வைத்து கருத்துத் திணிப்பின் மூலம் மத நம்பிக்கைகளை தகர்க்க நினைப்பதோ அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றில்லை. சொல்லப்படும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க உலகில் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. எனவே மத நம்பிக்கைகள் இல்லாதவர்கள் தங்களை எவ்வளவுக்கு முற்போக்கானவர்களாக காட்ட முனைகின்றனரோ அதேபோல் உரிமை மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் உண்டு. அதை இரு சாராரும் உணர்ந்து கொள்வது அவசியம். :huh:

Posted

பாரதி பார்ப்பனியத்தை கைவிட்டு ஒரு நல்ல மனிதராக இருந்தார்.

சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி அவரது சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டார்.

கடைசியில் அவர் பட்டினி கிடந்து வாடி இறந்து போனார்.

அவர் இறந்த போது 12 பேர் மட்டும்தான் வந்தார்கள்.

Posted

நான்கு தலைப்பில் ஏறக்குறைய ஒன்றையே விவாதிக்கிறோம்.

"பார்ப்பன மணிசங்கர ஐயர்" விவாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் பற்றியும், அவர்களின் ஈழ அரசியல் பற்றிய கருத்துக்கள் பற்றியும் தொடர்ந்து விவாதிப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரதி பார்ப்பனியத்தை கைவிட்டு ஒரு நல்ல மனிதராக இருந்தார்.

சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி அவரது சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டார்.

கடைசியில் அவர் பட்டினி கிடந்து வாடி இறந்து போனார்.

அவர் இறந்த போது 12 பேர் மட்டும்தான் வந்தார்கள்.

ஆக மொத்தத்தில் சாதியை உருவாக்கியதாக நீங்கள் சொல்பவர்களே அதை எதிர்த்தாகவும் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆக பார்ப்பர்னிய சாதி எதிர்ப்புத்தான் இன்று உங்களைப் போன்ற பார்ப்பர்ணிய தூசிகள் எல்லாம் பகுத்தறிவாதிகளாக தங்களைக் காட்ட உதவி இருக்கிறது. அது கூட பார்ப்பர்னிய சிந்தனையின் வெளிப்பாடுதான் என்றால் மிகையல்ல. :huh::huh:

Posted

பாரதிக்கு பார்ப்பனீயச் சிந்தனை இருந்தால் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருக்க மாட்டார்.பார்பனீயச் சிந்தனை அற்ற எவரும் பார்ப்பனர் கிடையாது. இங்கே பாரதி என்ன மனித நேயம் உள்ள எவரும் அப்படித் தான் சொல்லி இருப்பார்கள்.பாரதியைப் பார்ப்பனர் என்று இங்கே கூறுபவர்களுக்குத் தான் பார்ப்பனீயம் என்றால் என்ன என்கிற விளக்கம் இன்றி திரும்பத் திரும்ப பாரதி ஒரு பார்ப்பனர் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரதிக்கு பார்ப்பனீயச் சிந்தனை இருந்தால் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருக்க மாட்டார்.பார்பனீயச் சிந்தனை அற்ற எவரும் பார்ப்பனர் கிடையாது. இங்கே பாரதி என்ன மனித நேயம் உள்ள எவரும் அப்படித் தான் சொல்லி இருப்பார்கள்.பாரதியைப் பார்ப்பனர் என்று இங்கே கூறுபவர்களுக்குத் தான் பார்ப்பனீயம் என்றால் என்ன என்கிற விளக்கம் இன்றி திரும்பத் திரும்ப பாரதி ஒரு பார்ப்பனர் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இதே கைகள் தான் சாதி பிறப்பால் உருவாகுவது என்று இங்கு எழுதித் தள்ளினது மறந்துவிட்டதோ தெரியவில்லை. அந்த வகையில் பிறப்பால் பார்ப்பர்ணியனான பாரதி..திடீர் என்று பார்ப்பணியன் இல்லாமல் போயிட்டாரே..ஆச்சரியம் தான். ஆக உங்களுக்கு ஏற்ற தேவையைப் பொறுத்து பார்ப்பர்ணியன் பார்ப்பர்ணியம் என்பது மாறுபடும். அதன் தாக்கம் மாறுபடும். :P :huh:

Posted

என்ன நயினா உங்களோடு படு பேஜாருக்கு...

பார்ப்பனியம்...என்றது உணர்வுங்க...பிறப்பால் பிறந்த பார்ப்பானும்... அந்த உணர்வை கஸ்மலாம் என்று கூவிக்கலாமுங்க.. என்ன சார் படிச்சவன்ங்க நீங்க..பெயர் சொல்லுக்கும்...வினை சொல்லுக்கும் புறும்பு தரிஞ்சுக்காமால்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.