Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். (விவாத அரங்கு)

தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் 14 members have voted

  1. 1. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

    • தமிழ் தேசியக் கூட்டமைப்பு
      2
    • தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
      7
    • ஐக்கிய தேசியக் கட்சி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      0
    • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
      0
    • ஜனநாயகப் போராளிகள் அமைப்பை உள்ளடக்கிய சுயேட்சைக் குழு
      1
    • ஒருவரையும் நம்ப முடியாது.
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இன்றைய தினம் ஒரு சிங்களத் தொலைக்காட்சியை பார்க்க நேரிட்டது. இதில் கட்சிகளுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத இளைஞர்கள் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர். இவர்கள்  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஏன் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என மிகவும் காத்திரமான விவாதமொன்றை முன்வைத்தனர்.

இதனைப் பார்த்ததன் விளைவாய் ஏன் தமிழ் மக்கள் தொடர்பில் யாழிலுள்ள அங்கத்தவர்களின் மூலம் இது போன்ற ஒரு விவாத அரங்கை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தத் தலைப்பை ஆரம்பிக்கிறேன். நீங்கள் ஆதரிக்கும் அணி எதுவாக இருந்தாலும் அந்த அணியை மக்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.

இந்தத் தலைப்பு திசை திரும்பாமல் செல்வதற்காக சில நிபந்தனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

 

உங்கள் கருத்துக்கள் கடந்த கால நிகழ்கால கொள்கை ரீதியான விடயங்களை உள்ளடக்கியதாய் இருப்பது வரவேற்கத்தக்கது.

முதலில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். பின்னர் ஏனையவர்கள் முன்வைக்கும் கருத்துக்களில் ஏதாவது ஒரு பகுதியுடன் நீங்கள் உடன்படாவிட்டால் அதனை மேற்கோளிட்டு அதற்கான உங்கள் பதில் கருத்துக்களை அல்லது எதிர்க்கருத்துக்களை முன்வைக்கலாம்.

இந்த விவாதத்தின் நோக்கம் சரியானதாக அமைவதற்காக கள உறவுகள் தொடர்பில் தனீநபர் தாக்குதலை நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

கருத்து எழுதுபவரைக் கருத்தில் கொள்ளாது அவரது கருத்தின் ஆழத்தை கருத்திலெடுத்து அந்தக் கருத்திற்கான வாழ்த்துக்களை அல்லது உங்கள் வீருப்பு வாக்கை (பச்சை)  வழங்குங்கள்

இந்தத் தலைப்பை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு பலரும் தமது கருத்துக்களுடடன் இணைந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

 

நீண்ட நாட்களுக்குப் பின்னர் யாழில் ஆரம்பிக்கப்படும் இந்த விவாத அரங்கு வெற்றிபெறட்டும்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது குறுகிய அனுபவங்களை வைத்து  பார்த்தால் பட்டியலிலுள்ள ஒரு கட்சியையுமே நம்ப முடியாதுள்ளது. ஏனென்றால் ஈழத்தமிழர் விடயமாக எந்தகட்சியுமே சிங்கள இனவாத அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி காணவில்லை. சிங்களவர்களுக்கு அனுசரணையாளர்களாக இருந்தார்களே தவிர தமிழர்களின் அடிப்படை உரிமைகள் விடயத்தில் எவ்வித பயனுமின்றி தங்கள் ஆடம்பர வாழ்க்கையை தொடர்கின்றார்கள்.

இருப்பினும்....

இன்றைய காலகட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ.. தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டிய கட்டாய நிலைமையில் ஈழத்தமிழர் இருக்கின்றனர்.
எனது வாக்கு "ஒருவரையும் நம்ப முடியாது" என்பதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரையும் நம்ப முடியாது என்பதுக்குத் தான் நானும் குத்தியுள்ளேன்.

ஆனால் என் கையில் வாக்கு இருந்தால் கூட்டமைபுக்கே போடுவேன்.

விருப்பு வாக்கு சும், சிறிதரன், புதிய வேட்பாளர் என்பதாய் இருக்கும்.

ததேமமு - முன்னாள் போராளிகள் இருவரும் வெண்டால் சும்மா அறிக்கை அரசியல் மட்டுமே செய்வார்கள். சிங்களவர் திரும்பியும் பாரார். சர்வதேசம், இந்தியாவுடன் இப்போ இருக்கும் உறவும் விரைவாக கெட்டுவிடும்.

மற்றய கட்சிகளுக்கு ஏன் போடக்கூடாது என்பது வெள்ளிடமலை.

உள்ளதில் கொஞ்சமாவது தீர்வை நோக்கி நகரக்கூடிய தெரிவு கூட்டமைப்பே.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற கட்சிகளில்...... 

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தும் ஆசை உள்ளூர  இருந்தாலும், அக் கட்சியில் இருக்கும்... 
சிங்கக் கொடி ஆட்டிய... சம்பந்தனின் கடந்த கால செயலும், சுமந்திரனின் தேவையற்ற புலி விமர்சனமும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இந்த இருவரைத் தவிர.... மற்றையவர்கள்  சுதந்திரமற்று, ஒப்புக்கு சப்பாணியாக கட்சியில் வாய் மூடி இருப்பதையும் பார்க்க... இந்தக் கட்சிக்கு எனது வாக்கு இல்லை. 

அடுத்து.... 
ஜனநாயகப் போராளிகள் அமைப்பை உள்ளடக்கிய சுயேட்சைக் குழு. இவர்கள்... போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.
எனது.... கனிவான ஆதரவு, இவர்களுக்கு இருந்தாலும்.... வாக்கு அளிக்கும் எண்ணம் இல்லை.

இந்த மூன்றில், தேறும் கட்சி என்றால்.... 
தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்). 
தமிழ் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்து, துணிந்து கருத்துக்களை தெரிவிப்பதில்... இவர்களின் கடந்த கால செயல்களும், இவர்களின் தேர்தல் அறிக்கைகளும் அமைவதால்.... எனது வாக்கு, கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின், சைக்கிள் சின்னத்துக்கே. :love:

red%252Bbike%252Bicon.png Bild in Originalgröße anzeigen :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான ஒரு மதிப்பீடு

உரிமைகள் மறுக்கப்பட்ட இனமாக அந்த உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இனமாகத் திகழ்ந்த திகழும் தமிழ் மக்களின் குரல் ஒரு குரலாக ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஊடகவியலாளர் சிவராமினால் முதன் முதல் பிரஸ்தாபிக்கப்பட்டு பின்னர் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே குரல் என்ற எண்ணப்பாடு சர்வதேச ரீதியில் ஒருகாலத்தில் இருந்தது. 2004 ம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பலமிக்க சக்தியாக தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆயுத முனையில் போராடிய விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு என்ற நிலையும் அப்போது இருந்தது. விரும்பியொ விரும்பாமலோ ஒரு குடையின் கீழ் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் தமக்குள் இருந்த வேறுபாடுகளை வெளியில் காட்டிக் கொள்வதற்கு அப்போது விரும்பவில்லை அல்லது முடியவில்லை என்று சொல்லலாம்.

ஆனாலும் 2009ம் ஆண்டிற்குப் பின்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் நடவடிக்கையிலும் பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ் மக்களின் ஏகோபித்த அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்சியும் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கும் தமது கையை ஓங்கச் செய்வதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வந்தன. குறிப்பாக தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஓரளவு தான்தோன்றித் தனமாக செயற்பட்டது என்று கூடக் கூறலாம். கட்சிகளுக்கிடையிலான வேறுபாடுகள் பெரிதாகாமல் இருப்பதற்கு ஒரு பொதுவான யாப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சீயாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் கோரிக்கையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதில் அதன் தலைமை சாதுரியமாகச் செயற்பட்டு வந்திருக்கிறது. முடியாது என்று ஒரேயடியாகச் சொல்லி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து விடாமல் ஒவ்வொரு சாக்குப் போக்குகளைச் சொல்லியும் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையுமே அந்தக் கட்சி பின்பற்றி வந்திருக்கிறது.

கீரைக் கடை உரிமையாளர் கூட ஒரு எதிர்கடை இல்லாவிட்டால் தான் வைத்ததே சட்டம் தான் நிர்ணயித்ததே விலை தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நான் தருவதத்த தான் நீங்கள் வாங்க வேண்டும் உங்களுக்கு பொருட்கள் வாங்குவதற்கு வேறு இடமில்லாததால் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எமது கடையிலே தான் பொருள் என்னிடமே தான் வாங்கி ஆக வேண்டும் எனவே நான் என் இஸ்டப்படி தான் செயல்படுவேன் என்று நினைப்பதைப் போன்ற ஒரு நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தள்ளுப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்த அரசியல் பிரச்சினைகளால் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமுமாயிற்று. இது அந்தக் கட்சிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல தம்மை முன்னீலைப் படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாயும் அமைந்து போனது. எனவே கூட்டமைப்பிற்குள் தம்மை முன்னிலைப் படுத்தும் வாய்ப்போ அல்லது தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தோ வெளிப்படையாக பெருமளவிலான எதிர்ப்புகளை வெளிக்காட்ட முடியாத நிலையில் (ஆங்காங்கே சில அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர) ஏனைய கட்சிகளுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் 2010ம் ஆண்டுத் தேர்தலுக்கண்மித்த காலப்பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து வெளியில் வந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற புதியதோர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்

வடக்கைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் பிரதான வெகுஜன ஊடகமான உதயன் பத்திரிகை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் தமிழரசுக் கட்சிக்கு மாற்றான அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் சிரமமான காரியமாய் இருந்து வருகிறது.

இவ்வாறாக 2010ம் ஆண்டுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே வெற்றி பெற்றது என்றாலும் அதன் வாக்கு வீதத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 2004ம் ஆண்டுத் தேர்தலில் 90 சதவீதமான வாக்குகளைப் பெற்று 8 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2010ம் ஆண்டுத் தேர்தலில் 43.85 சதவீத வாக்குகளைப் பெற்று 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே அதனால் பெறக்கூடியதாக இருந்தது.

தமது வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவிற்கான காரணத்தைக் கண்டறிந்து தமது தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டியது ஒரு கட்சியின் இருப்பைத் தக்க வைப்பதற்கான பிரதான வழிமுறையாகும். ஆனால் இதனைச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறியது மட்டுமன்றி கட்சியின் முடிவுகள் அனைத்தும் ஓரிருவரால் தமதிஸ்டப்படி எடுக்கப்படும் நிலையை நோக்கிச் சென்றுள்ளது.

தமிழர்களது உரிமை, போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை, சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் தேர்தலுக்கான சுலோகங்கள் மட்டுமே  என்பதான மனப்பான்மையுடன் செயல்படும் அக்கட்சியின் தலைமை மாறாக தமிழர்களின் அடிப்படை தேவைகள் குறித்துப் பேசுவதற்கும் செயற்படுவதற்கும் கூடப் பின்னடித்து வருகிறது.

அரசுடன் இணக்க அரசியல் செய்வதா அல்லது எதிர்ப்பரசியல் செய்வதா என்பதான விடயத்தில் கூட அக்கட்சி குழம்பிய நிலையில் தான் இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.

1995 ம் ஆண்டிற்குப் பின்னர் அரசியலுக்கு வந்து சுமார் 30 ஆயிரம் வாக்குகளை மட்டும் தன்னகத்தில் வைத்திருக்கும் ரிசாட் பதியுதீனால் தனது மக்களுக்கான அடிப்படைடத் தேவைகளை நிறைவேற்றும் விடயத்தில் செயற்படும் அளவிற்குக் கூட செயற்படத் திராணியற்ற ஒரு தலைமையைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கிறது என்பது தமிழர்களின் துரதிஸ்டம் தான்

தன்னுடைய சிறிய வாக்கு வங்கியை வைதத்துக் கொண்டு இந்திய வீட்டுத்திட்ட வீடுகளை அபகரிப்பதற்கும் முல்லைத்தீவு மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் அரசாங்க சேவையில் தனது ஆதரவாளர்களை நியமிப்பதிலும் ஏன் பனம் பொருள் திணைக்களத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வ்நது அதனூடாக தனது ஆதரவாளர்களுக்கு வேலை வாய்பபுக்களையும் சலுகைகளையும் வழங்குவதிலும் பதியுதீன் எடுக்கும் நடவடிக்கையைக் கூடத் தட்டிக் கேட்க அல்லது தம்மால் ஆதரிக்கப்பட்ட ‘நல்லாட்சி’ அரசாங்கத்துடன் பேசி நியாயத்தைப் பெற்றுக் கொள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முடியாத நிலையில் சிங்கள அரசுடன் பேரம் பேசி தமிழர்களின் அரசியல் உரிமையைப் பெற்றுத் தர இவர்களால் எப்படி முடியும் என்பது நியாயமான ஒரு ஆதங்கமே

ஏன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதனை அவமதித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் எந்தவொரு கோரிக்கையையும் செவிமடுக்கத் தயாராக இல்லாத வவுனியா மாவட்ட செயலாளரைக் கூட இடமாற்றம் செய்ய வைக்க முடியாத இவர்களது பேரம் பேசும் தன்மை வெட்கித் தலை குனிய வேண்டியது.

2010ம் ஆண்டுத் தேர்தல் வரை தாயகம் சுயாட்சி சுயநிர்ணய உரிமை  விடுமதலைப் புலிகளை விடுதலைக்காக உயிர் தந்த போராளிகள் என்றெல்லாம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பின்னான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை தாம் எந்தக் காலத்திலும் ஆதரித்ததில்லை என்று பகிரங்கமாகப் பேசுமளவிற்கு தன்னிலையை மாற்றிக் கொண்டுள்ளது. அத்துடன் ஒற்றையாட்சி அமைப்பிற்குள் தீர்வு பெறத் தயார் என்று பேசுமளவிற்கு தனது அரசியல் தீர்வு குறித்த விடயத்திலும் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது.

 

வேட்பாளர் தெரிவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை எடுத்துக் கொண்டால் கூட அது இளையவர்களை சமூகத்தில் மக்களோடு இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களை விடுதலைப் போராட்டத்தில் இணைந்திருந்தவர்களை பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர்களை பெண்களை உள்வாங்கிக் கொள்வதில் பின்னின்றது என்பது அதன் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் ஒரு முதியோர் இல்லப் பட்டியல் போல இருக்கிறது என திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஊடகவியலாளர் ஒருவரே விமர்சிக்கும் அளவிற்கு அந்தப் பட்டியல் வயோதிபர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பட்டியலாகவே இருக்கிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் என்று கை சுட்டும் அளவிற்கு எவரையும் காணவில்லை.

அத்துடன் வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் விதமாக பிரதிநிதிகளும் அந்தப் பட்டியலில் தெரிவு செய்யப்படவில்லை. உதாரணமாக யுத்த காலத்தில் ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டும் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்த யாழ்ப்பாணம் தீவுப் பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. அந்தக்கட்சியின் சார்பில் ஈபிடிபியின் அராஜகங்களிற்குள்ளும் தொடர்ந்து போராடி வந்த விந்தன் போன்றவர்கள் பமுழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சுமார் 65000 வாக்குகளை மட்டுமே கொண்டுள்ள வடமராட்சிப் பகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பது முதன் முறையாக தேர்தலீல் போட்டியிடும் சுமந்திரனின் விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகவா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

 

இதுவரையான பிரச்சாரம்

வழமை போலவே தேர்தல் காலங்களில் கையிலெடுக்கும் சுலோகங்களான சர்வதேச விசாரணை. சுயநிர்ணய உரிமை விடுதலைப் போராளிகள் போன்ற கோசங்களை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக சில வேட்பாளர்கள் ஏற்கனவே கையில் எடுத்து விட்டார்கள். அதே போல 2016 இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என ஏதோ கடையில் வாங்குவதைப் போல சம்பந்தன் பிரச்சாரங்களில் கூறி வருகிறார். கடந்த மாகாண சபைத் தேர்தல் காலங்களில் 2014இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சம்பந்தன் பேசிய விடயங்கள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தமை ஞாபகத்தில் வந்து தொலைக்கின்றது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தத் தேர்தலில் ஆதரிப்பதற்கான எந்தக் காரணத்தையும் காண முடியாத நிலையில் தொடர்ந்தும் தமிழர்களின் ஒற்றுமை என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் இவர்களுக்கு வாக்களிப்பது பிரயோசனமற்றது என்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிக்கிறேன்.

 

அடுத்ததாக ஜனநாயகப் போரளிகள் அமைப்பு குறித்த பார்வையை விரைவில் எழுதுகிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவை பிரித்தானிய பாராளுமன்ற பதிவேடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை :-
http://www.yarl.com/forum3/topic/160776-இவை-பிரித்தானிய-பாராளுமன்ற-பதிவேடுகளில்-இருந்து-எடுக்கப்பட்டவை/

இந்த செய்தியைப் பார்த்த பின்பு கூட்டணியும் ஏதோ ஒரு சதிவலைக்கு பின்னால் இயங்குகின்றது என்றே முடிவெடுத்துவிட்டேன்.இதை விட தற்போது வெளிவரும் காணொளிகள் மக்களின் கேள்விகள் நேற்றைய சக்தி செய்தியில் ஆ ஒன்பது வீதியின் அருகில் உள்ள பாடசாலைக்கு கிடுகு வாங்கி கூரை போட வக்கில்லாதவர்களுக்கு ஏன் அரசியல் இப்போ கஜேந்திரகுமாரை ஓரளவுக்கு நம்பி ஏதாவது செய்யலாம் என்று என் மனைதில் படுகின்றது

இப்பொது புரிகிறதா?
தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று!

இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ,

salary -54,485 Rs 
fuel -30,000 Rs 
transport-10,000 Rs 
Entertainment- 10,000 Rs 
mobile phone -2000 Rs 
meeting each -500Rs 
Current bill - free 
Land line phone - free 
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)

மற்றும்

Secretary 
Vehicle 
Quarters 
Computers
Bodyguards

ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.

ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே.

எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா

இது என்ன நியாயம்?

ஜந்து வருடத்திற்கு ஒரு எம.பி க்கு மொத்த சம்பளம் - 7200000 ரூபா

225 எம்.பி களுக்கான மொத்த செலவு -1620000000 ரூபா

அதாவது அனைத்து எம்.பி களுக்கும் மொத்தமாக 162 கோடி ருபா சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?

வெளிநாட்டில் உள்ளவர்களும் ஏன் இலங்கை தேர்தலில் போட்டியிட துடிக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா?

 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  மணிவாசகர்  நேரத்துக்கும் காலத்தின் தேவையறிந்த பதிவுக்கும்.....

 

கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் ஆதரவாளன் நான்

பிரான்சிலும் பலமுறை அவர்களைச்சந்தித்துள்ளேன்..

யாழ் களத்தில்  தொடர்ந்து அவர்களுக்காக எழுதிவந்துள்ளேன். அவர்களுக்கு ஆதரவாக எழுதி பலருடனும்முரண்பட்டுள்ளேன்.

ஆனால் அவர்களது நடவடிக்கைகள் சில தட்டிவிட்டன

1 - தமிழரசுக்கட்சியை தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசங்களிலும் புதிப்பிக்க முயன்றமை

2- கூட்டைமைப்பை பதிய பின்னின்றமை அத்துடன் தடுத்தமை

3- ஒரு சிலரின் தான் தோன்றித்தனமான முடிவுகள்

4- கட்சிக்குள் கேள்வி கேட்பவர்களை ஒதுக்கியமை. கேள்வி கேட்பார்கள் எனத்தெரிந்தவர்களை கட்சிக்குள் வரவிடாமல் பார்த்துக்கொண்டமை..

5- தாயகத்திலும் புலத்திலும் (தமிழர் மத்தியில்) தமிழகத்திலும் ஒரு வேசம். கொழும்பிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்(தமிழரல்லாத பகுதிகளில்)  வேறு வேசம்...

 

மேலுள்ள காரணங்களில் 4 காரணங்களிலிருந்த போதும் அவர்களுக்கே எனது ஆதரவு இருந்தது

ஆனால் 5வது காரணம் ஆபத்தானது

இவர்களை நம்பி முன்னகர்வது தற்கொலைக்கு ஒப்பானது....

எனவே கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் இற்ங்குவதிலும் பார்க்க

வேறு ஏதாவதைத்தேடுவதே எமக்கான ஒரே வழி..

அந்தவகையில் தேடிக்கொண்டிருக்கின்றேன்..

தமிழ்தேசிய மக்கள் முன்ணணியும் ஐனநாயகப்போராளிகள் கட்சியும் களத்தில் நிற்கின்றன...

தற்போதைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்ணணியே என் மன்னே உள்ளது.

அவர்களுக்கே எனது வாக்கு.

பார்க்கலாம்......

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.