Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.."

Featured Replies

speech001mk0.jpg

"எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.."

"போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.."

"இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்."

"நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"

தமிழீழத் தனியரசுதான் தீர்வு- சர்வதேசம் ஆதரிக்க வேண்டும்- தமிழ்நாட்டு ஆதரவு தொடர வேண்டும்: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம் என்றும தமிழிழீத் தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (27.11.06) தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரை:

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது.

ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.

மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே மனிதகுலம் விடுதலை வேண்டி வீறுடன் போராடி வருகிறது. வீறுகொண்டெரியும் இந்தப் போராட்டங்களை அடக்கியொடுக்க ஆக்கிரமிப்பாளர்களும் அடக்குமுறையாளர்களும் காலங்காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டுவருகிறார்கள்.

முதலிற் போர் அரக்கனை ஏவுவதும் அது முடியாதுபோக, போராடும் இனங்களின் விடுதலைப் பாதையைத் திசைதிருப்பி, அவர்கள் போகும் வழிகளெல்லாம் பொறிகள் வைத்து, சமாதானச் சதிவலைக்குள் சிக்கவைத்து, காலத்தால் மோசம் செய்து, சமாதான மாயைக்குள் தள்ளிவிட்டு, அமைதியாக அழித்தொழிப்பதுவும் வரலாற்றிலே நீண்ட நெடுங்காலமாக நடந்துவருகிறன.

இந்த உத்தியை எமது சுதந்திர இயக்கத்திற்கெதிராகவும் செயற்படுத்திவிடலாம் எனச் சிங்கள அரசு கனவுகாண்கிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுக்கால அமைதி முயற்சியில் இந்த அக்கினிப் பரீட்சையில் நாம் எரிந்துபோய்விடவில்லை அழிந்துபோய்விடவுமில்லை. மாறாக, நாம் இந்த வேள்வித்தீயிற் புடம்போடப்பட்டு, புதிய புலிகளாகப் புதுப்பொலிவுடன் எழுந்துநிற்கிறோம். தமிழரின் பலமும் வளமும் ஒன்றுகுவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கிறோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள் என்பதை இந்நாளில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனது அன்பார்ந்த மக்களே!

எமது வீரவிடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டுநிற்கிறோம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு போரையும் பேச்சையும் சமகாலத்திலே சந்தித்துநிற்கிறோம்.

போருக்கு ஓய்வுகொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடிவிட்டன. நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டதா?

தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம்மக்களை நாளாந்தம் அழுத்திவரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள்தானும் தீர்த்துவைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை.

மாறாக, எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கிறன. சோதனைமேற் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்கமுடியாத துயரச்சுமை தமிழர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த அமைதிக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத்தம் தோய்ந்த இருண்டகாலமாக மாறியிருக்கிறது. அமைதி போதித்த உலகநாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவலம் இன்று அரங்கேறி வருகிறது. பிரதான வழங்கற் பாதைக்கு மூடுவிழா நடாத்திய சிங்கள அரசு, தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயே சிறைவைத்திருக்கிறது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களது சமூக வாழ்வைத் துண்டித்து, நான்கு சுவர்களுக்கு மத்தியில் அவர்களைத் தடுத்துவைத்து, அவர்களது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொடுமைப்படுத்துகிறது. தமிழரின் தாயகத்தைப் பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, ஒரு பிரமாண்டமான மனித வதைமுகாமாக மாற்றியிருக்கிறது.

இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல் என இருமுனைகளில் எமது மக்கள் மீது சிங்கள அரசு யுத்தத்தை ஏவிவிட்டிருக்கிறது. வகைதொகையற்ற கைதுகள், சிறைவைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், காணாமற்போதல்கள், எறிகணை வீச்சுக்கள், விமானக்குண்டு வீச்சுக்கள், தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் என எம்மக்கள் மீது இராணுவ அழுத்தம் என்றுமில்லாதவாறு இறுக்கமாக்கப்பட்டிருக்கிறத

தமிழிழம் அறிவிக்கப்பட்டுவிட்டதா?

பேச்சுக்கள் கைவிடப்பட்டு விட்டனவா?

அடுத்தது என்ன?

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்

தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.

கடைசி ஒரே நிமிடத்தில் எம் எதிர்பார்ப்பை தலைவர் தெளிவாகவே சொல்லிவிட்டார். இனி பந்து உலகத்தின் கைகளில். மகிந்தவின் பொய் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நன்றி தேசியத்தலைவரே எம் அனைவரின் எதிர்பார்ப்பும் இதுவே. புகைந்து கொண்டிருப்பதிலும் பார்க்க எரிந்து விடுவதே மேல்.

ஈழத்தலிருந்து

ஜானா

தலைவரின் உரை தமிழருக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தொடக்குவதற்கான அறிவிப்பாகவே வந்துள்ளது.

இனிவரும் காலங்கள் தலைவரின் அவர்களின் திட்டங்கள் செயல்வடிவம் பெறப்போகும் காலங்கள்.

மக்கள் கொல்லப்பட்டபோதும், போராளிகள் கொல்லப்பட்டபோதும் நாங்கள் கோபம் கொண்டு ஏன் இன்னும் பொறுமையென கருத்துக்களை அள்ளி வீசிய எமக்கு, இனிப்பொறுக்க முடியாது தனியரசே ஒரு வழியெனத் தேசியத் தலைவர் பதில் தந்து விட்டார்.

ஏன் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்றோம், இப்போது போராட்டம் ஆரம்பமாவதற்கான உறுதி தெரிவிக்கப்பட்டுவிட்டது.

தலைவரே நேரடியாக உலகத் தமிழர்களிடம் உதவும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். வார்த்தைகளை மாத்திரமே அள்ளி வீசிக்கொண்டிருக்கும் நாம் எமது தலைவரின் வேண்டுகோளை ஏற்று எமது தேசத்தை விடுதலை செய்வதற்கான சுதந்திரப்போரிற்கு எமது முழுமையான ஒத்துழைப்புக்களைக் நல்கவேண்டும்.

தேவையற்ற செலவுகளை, ஆடம்பரங்களைத் தவிர்த்து எம்மால் முடிந்தளவு உச்ச பங்களிப்பை இனிவரும் நாட்களில் நாம் வழங்கியே ஆகவேண்டும்.

எனது அன்பின் தலைவருக்கு எனது உயிரின் மேலான வாழ்த்துக்கள் பல உரித்தாகட்டும் காரணம் தலைவன் செயலால் தான் காட்டியது உண்டு சொல்லால் காட்டியது கிடையாது எனவே குறைத்துப் பேசும் தலைவர் செயலில் பெரிது காட்டுவது அவர் பண்பு எனவே இறைவன் அவருக்கு நீண்ட வாழ்வை கொடுத்து எமது தமிழ் மக்களுக்கு தலையாய் இருந்து தனது காலத்தில் எமது விடிவை எமது தமிழ் இனத்தின் விடிவை பெற்றுத்தந்து உலகத்தின் தமிழ் இனத்திற்கென்று ஒரு நாட்டை அமைத்திடும் வேளை எமது தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வழி காட்ட பாசத்தின் பால் கேட்டுக்கொள்கின்றேன். இன்னும் எமது தலைவன் வழி எமது மக்கள் போராட புறப்படும் வேளை இறைவன் தமிழர் சேணையை வழி நடத்தி நீதி நிலை நிறுத்த தமிழன் குரலால் கடவுளை கேட்கின்றேன்

விடியட்டும் தமிழீழம்!

துளிர் விடட்டும் தமிழீழத்தின் வித்துக்கள்!

சிறகு கட்டி பறக்கட்டும் எமது விழுதுகள்!

தமிழன் இனியும் தலைகுனிதல் ஆகாது!

தலைவன் இருக்கையில் இனியும் கவலை ஏன்!

பட்டினி கிடக்கும் எம் மக்கள் இனியும் பட்டினி கிடப்பான் ஏன்!

விடுதலை எம்மை நாடிவராது நாம் தான் விடுதலையை விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் மாவீரர்உரை..

பொறுமையின் முடிவுரை,

போரின் முகவுரை

வெல்லும் எங்கள் உரக்கரம்

வேகும் எதிரி பேய்க்குணம்

கல்லும் மண்ணும் உள்ள வரை

காலம் சொல்லும் எம்மவர் சரித்திரம்!!!!

எமது தலைவர் தெளிவாக கூறிவிட்டார் அதே நேரம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஒரு செய்தி அதில் இருக்கிறது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை புலம் பெயர் தமிழர்கள் தான் சமளிக்கவேனும் என்பதையும்( தமிழ்நாட்டு மக்களும்)...........

என்ன நடக்கபோகுது பட்டும் படாமல் கூறியுள்ளாரே

இவ்வளவு காலமும் தங்கள் இன்னுயிரை ஈந்த 18000க்கும் அதிகமான மாவீரர்கள்..

அவர்களைப் பறிகொடுத்த உறவுகள்..

விடுதலையே குறியாக தன் வாழ்வை கழித்த போராளிகள்..

தனது நோக்கில் மனம் தளராத..தளம்பாத தன்னிகரில்லாத் தலைவன்..

இவர்கள் எல்லோருடையதும் ஒவ்வொரு நல்ல தமிழனும் கனவு காண்கின்ற விடுதலை

வாங்கித்தர புலம் பெயர் உறவுகளே..

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு காரியங்கள்தான்

1. பணஉதவி

(எல்லோருக்கும் பொருளாதார சிக்கலுண்டு ஆனால் ஒயிர் போகும் தருவாயில் ஒருதவை என்றால் பணம் ஏற்பாடு செய்வதில்லையா நாம்..உடனே செய்யுங்கள்..இதுதான் உங்கள் தயக்கங்களையும்.அசண்டையீனத்த

Edited by vikadakavi

இவ்வளவு காலமும் தங்கள் இன்னுயிரை ஈந்த 18000க்கும் அதிகமான மாவீரர்கள்..

அவர்களைப் பறிகொடுத்த உறவுகள்..

விடுதலையே குறியாக தன் வாழ்வை கழித்த போராளிகள்..

தனது நோக்கில் மனம் தளராத..தளம்பாத தன்னிகரில்லாத் தலைவன்..

இவர்கள் எல்லோருடையதும் ஒவ்வொரு நல்ல தமிழனும் கனவு காண்கின்ற விடுதலை

வாங்கித்தர புலம் பெயர் உறவுகளே..

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு காரியங்கள்தான்

1. பணஉதவி

(எல்லோருக்கும் பொருளாதார சிக்கலுண்டு ஆனால் ஒயிர் போகும் தருவாயில் ஒருதவை என்றால் பணம் ஏற்பாடு செய்வதில்லையா நாம்..உடனே செய்யுங்கள்..இதுதான் உங்கள் தயக்கங்களையும்.அசண்டையீனத்த

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.