Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு

Featured Replies

ஒருசாரார் தேர்தலில் எனக்குவாக்களித்துவெற்றிகொள்ளச் செய்தனர்.எனக்கெதிராகவாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகலசட்டமாணவமாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றுஎன்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறுஎன்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமதுநலவுரித்துக்களைமட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள்,கடப்பாடுகள் ஆகியவற்றைஉத்தேசித்துசட்டமாணவனாகநான் இருந்தபோதேஅத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாகநடந்துகொள்வதேஎனதுகடமைஎன்றுமுடிவுசெய்தேன். எனதுதலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்குமத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ,எதுமுறையோஅதையேசெய்தேன்.
 
அதேவிதமானஒருசூழ்நிலைதற்போதுஎன்னைநாடிவந்துள்ளது.
 
 
இந்த பந்தியை வாசித்து விளங்காமல் சும்மா தமிழ் சீரியல் மாதிரி கதை வசனம்  எழுதிக்கொண்டு இருகின்றார்கள் .ஏற்கனவே இவர்களின் சீரியல்கள் பல பார்த்தாச்சு . 

அதே கடிதத்தில் கீழ்வரும் பந்திகளும் இருந்தன. அவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் போல இருக்கிறது.

 மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்."

 

 

அடுத்ததாக உலக ஒழுங்கு அல்லது நடைமுறை குறித்த எனது விளக்கத்துக்குப் பதில் தருவீர்கள் என எதிர்பார்த்தேன்.  

சிங்கள சீரியல்களைப் பார்ப்பதிலோ நடிப்பதிலோ தவறில்லை. ஆனால் சிங்களத்திற்குள் தமது இனத்தின் அடையாளத்தைத் தொலைக்காத வரையில் நான் தமிழன் எனது பரம்பரை தமிழனாகவே வாழப்போகிறேன் என்ற உறுதிப்பாடு உள்ள வரை சிங்கள சீரியலைப் பார்ப்பதிலும் அதிலிருந்து எதாவது நல்ல விடயங்களை எடுப்பதிலும் தவறேயில்லை. 

சிங்கள சீரியலல்ப பாரத்து விட்டு ஆஹா இதுவல்லோ சீறியல் தமிழ் சீறியல் எல்லாம் உதவாது என்று முடிவெடுப்பவன் உண்மையான தமிழனாக இருக்க மாட்டான். 

விக்கினேஸ்வரனின் ‘நடுநிலை’க்கான விளக்கம் !

வடக்கு மாகாண முதல்வரின்  தேர்தல் தொடர்பான அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிருப்தியின் உச்சமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான சராவால் நடாத்தப்படும் உதயன் பத்திரிகை முதலமைச்சரின் அறிக்கையைப் பிரசுரிக்காமல் இருட்டடிப்புச் செய்திருந்தது.

விக்கினேஸ்வரனின் அறிக்கையில்  “நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள் ”  என்று தெரிவித்ததன்மூலம் முதல்வர் நேரடியாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும்படி மக்களைக்கோருகிறார்  என யாழ். மாவட்டக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்காளிகள் ஆவது பற்றி மேடைகளில் முழக்கமிடும் வேளையில் “அரசியல் ரீதியான ஒரு நிரந்தரத் தீர்வு எமக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து” என்று முதல்வர் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதும் அமைச்சுப்பதவிக் கனவில் இருக்கும் சிலரை ரொம்பவே ‘அப்செற்’ ஆக்கியுள்ளதாம்.

ஆக மொத்தத்தில் தன் கொள்கைக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும் என்பதற்காகவே விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த ‘நடுநிலை’ நிலைப்பாட்டை எடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்கினேஸ்வரனின் ‘நடுநிலை’க்கு விளக்கமே கொள்கை தவறும் கூட்டமைப்பை புறக்கணியுங்கள்! கொள்கைப்பிடிப்புள்ள முன்னணியினரை ஆதரியுங்கள்! என்பதுதானாம்.

http://tamilleader.com/?p=50328

 

அவர் பக்கச்சார்பாக இருக்கக்கூடாது என்பது வரவேற் கப்படவேண்டிய விடயம் .ஆனால் உண்மையில் அவரை முதல் அமைச்சராக ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் சரியான முறையில் பயணித்து இருந்தால் அவர்களுக்காக கொடுக்கு கட்டி நின்றிருப்பார் .ஆனால் அவர் இராஜ தந்திரமாக பதிலளித்திருக்கிறார் என்பதே அவரது சிறப்பு .அரசியல் இக்கட்டான நிலையில் தனது மக்களை சரியான பாதையில் பயணிக்க வைக்க நினைக்கும் அவரின் நிலையை நாம் புரிந்து கொள்வதே எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பு .நன்றி வணக்கம். :)

அதே கடிதத்தில் கீழ்வரும் பந்திகளும் இருந்தன. அவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் போல இருக்கிறது.

 மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்."

 

 

அடுத்ததாக உலக ஒழுங்கு அல்லது நடைமுறை குறித்த எனது விளக்கத்துக்குப் பதில் தருவீர்கள் என எதிர்பார்த்தேன்.  

இது ஒரு பொதுவான விடயம் .அரசியல் செய்யும் எவருக்கும் தேவையான தகுதி .இப்படி பார்த்தால் ஒருவரும் எம்மிடம் இல்லை .

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்."

 

அர்யுனிடம் ஒரு கேள்வி...

கட்சிக் கண்ணாடிகளைக் கழற்றி வைத்து விட்டு தமிழர்களின் தனித்துவம் சுயநிர்ணய உரிமை என்பற்றை வலியுறுத்தும் எத்தனை கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன என்று சொல்ல முடியுமா?

திம்பு கோட்பாடு என்றாலே அதில் தமிழர்களின் தனித்துவம் ,சுயநிர்ணய உரிமை எல்லாம் அதில் அடங்கிவிடும் .

பி பி சி யில் டக்ளசும் பல தடவைகள் உச்சரித்திருகின்றார் .

மிக முக்கிய விடயம் .

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பேசுவதை எல்லாம் சீரியஸாக எடுக்க கூடாது .சாத்தியமில்லாத பல விடயங்களை அள்ளி விடுவார்கள் (இது மேலை நாடுகளிலும் இருக்கு )

அதுவும் வெற்றி கிடைக்காது என்று தெரிந்தவர்கள் எதையும் பேசுவார்கள் (பவுன்ஸ் செக் ).பிறகு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுகள் இல்லை என்ற படியால் .

அப்ப யாருக்கு வாக்கு போடவேண்டும் .

இப்போ எமக்கு இருக்கும் தெரிவு ஒன்றே ஒன்றுதான் .

யுத்தம் முடிந்தபின் எதிர்பாராமல் நடந்த பல அரசியல் திருப்பங்கள் ஒரு முற்றுக்கு வரும் ஒரு புள்ளி இது .இனி வரும் அரசுடன் பேசப்போவது கூட்டைமைப்புத்தான் .அதைவிட சர்வதேசத்துடனும் ஓரளவு  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையிலும் உள்ளார்கள் .

எங்களுக்கு என்ன தீர்வு என்பதையும் தாண்டி எது சாத்தியம் என்ற ஒன்றும் இருக்கு .

இன்று பி பி சி யில் சம்பந்தர் விக்கியின் பேச்சுக்கு நான் சொன்ன அதே காரணத்தையே சொல்லியிருக்கின்றார் அதுதான் உண்மையும் கூட .கூட்டமைப்பில் இருக்கும் சிலரில் மனஸ்தாபமும் இருக்கலாம் .எங்களுக்கும் இருக்கு அதற்காக கூட்டமைப்பை தோற்கவைக்க முடியாது .

 

 

 

 

தற்போதைய நிலையில் வெளிநாட்டுத் தலையீடு இன்றி சிங்கள அரசுடன் இதயங்களால் இணைந்து பெறக் கூடிய ஒரே தீர்வு ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைக்கு இன்னும் சில அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது தான். இத தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்கநிலையிலும் இருந்தது. பொதுத் தேர்தலின் பின் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த ரணிலும் ஒத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் தேர்தலில் தாம் எதிர்பார்த்ததை விட அதிக எதிர்ப்பைக் கண்ட கூட்டமைப்பு திழடீரென ஞானம் பெற்று சமஸ்டி எது இது என்று பேசி ரணில் அன்ட் கோவையும் கோபப்படுத்தியிருக்கிறது.

நேற்றைய தினம் சுவர்ணவாஹினியில் நடக்கும் வாதபிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதவி அமைச்சர் அஜித் பெரேரா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் இம்முறை சில ஆசனங்களைக் கைப்பற்றும் என கணிப்பிடப்பட்டடதனாலேயே தமிழ் மக்களை இன ரீதியாகத் தூண்டி விடுவதற்கு கூட்டமைப்பு சமஸ்டி என்ற கோசத்தை முன்னெடுத்திருப்பதாகவும் இது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் புதிய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை எனவும் தெரிவித்ததுடன் இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான இனவாதக் கோசங்களை மன்வைத்தால் நல்லாட்சியில் அதனை;ப பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இன்னொரு விடயம் 

FEDERAL ,PROVINCIAL அரசுக்கிடையிலான வித்தியாசதற்காக.

ஜோன் சரஸ்ற்.இவர் கொன்செர்வேர்ட்வ் அரசியல்வாதி .கனேடிய அரசியலில் எம்பி ,மந்திரி ,துணைபிரதமர் ,எதிர்கட்சி தலைவர் என்று இருந்தவர் .1997 ஆண்டு தேர்தலில் கொன்சவேர்டிவ் படுதோல்வி .பெடரல் அரசியலை விட்டு விலகினார் .

பின்னர் மாகாண அரசியலில் இறங்கினார் ஆனால் கொன்சவர்டிவ் ஆக இல்லை லிபரலாக .கியூபெக்கில் முதல்வராக லிபரல் சார்பில் 2003-2012 வரை இருந்தார் .

கனேடிய அரசியலில் நாம் கற்க பல விடயங்கள் இருக்கு . 

 

இம்முறை தமிழரசு சேர்தவர்கள் வென்றால் 2035 லும் நிலப்பறிப்பு ,வடகிழக்கில் சிங்கள ராணுவம் இனக்கலப்பு ,பதின்மூன்று கிடைக்குமா சமஸ்ட்டி பற்றி என்பன போன்றவையல் தொடரும் ஏனெனில் சம்பந்தன் சுமந்திரன் தரவளிகள் எங்கள் பிரச்சினை முடிக்க இயலாதவர்கள் அவர்களுக்கு அரசியல் மூலம் கிடைக்கும் கோடிகணக்கான பணம்தான் முக்கியம் .அத்துடன் காலம் முழுவதும் அதிகார ஆசை .ஒரு நேர்மையான நீதவானுக்கு இதெல்லாம் தெரிந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.