Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையை உடை சிறகை விரி ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையை உடை சிறகை விரி

இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
காற்றோட்டமான அறை
பெரிய மண்டபம்
செயற்கைப் பூந்தோட்டம்
பார்த்துப் பார்த்துக் கவனிக்க பலர்
வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களையும்
பார்த்துப் பார்த்து  
சுமைகளை எமதாக்கி
சுகங்களை உமதாக்கி
தோளிலும் மாப்பிலும் தூக்கிச் சுமந்தோம்
எந்த உணவு பிடிக்கும்
எந்த உடை பொருத்தமாக இருக்கும்
எந்தப் பாடசாலை உங்களை உயர்த்தும்
எந்தப் படிப்பு உங்களுக்கு இலகுவாக அமையும்
ஆம், பார்த்துப் பார்த்து படியேற்றி விட்டோம்
அதற்கு பிரதியுபகாரமாக நீங்கள்
எம்மை இங்கு படியேற்றி விட்டுள்ளீர்கள்
நேரத்திற்கு உணவு
நாளுக்கோர் உடை
வசதியான படுக்கை
வளமான இருக்கை
பிரயாணிக்க சொகுசு வண்டி
கூப்பிட்ட குரலுக்கு செவிலி
குறிப்பறிந்து கவனிக்க தாதி
எல்லாமே எல்லாமே இருக்கும் இந்த இடம்
எமக்கு ரொம்பப் பிடிக்கும்
உங்களைக் குறைகூற முடியாது காரணம்
உங்களை இந்த இயந்திர வாழ்க்கையில் இணைத்து
இயங்க வைத்தவர்கள் நாங்கள்தானே
நாம் தொட்டணைத்து வளர்த்த நீங்கள்
இன்று பெற்றவர்களான பின்பு
உங்கள் பிள்ளைகளுக்கு நாம்
தொடக்கூடாத வஸ்துவாகி
தூரத்தில் தள்ளப்படுகிறோம்
கிட்ட வந்தால் மூக்கைத் தேய்த்து
முகச் சுழிப்புகள்
கேள்வி கேட்டால் பதிலுக்கு
முகத் திருப்பல்கள்
எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்த பேச்சுக்கள்
அவர்களுக்குப் பிடித்த பீற்சாவும் பாற்சாவும்
சுட்ட இறைச்சியும் சுடாத இலைகளும்
எம்மால் ஜீரணிக்க முடியாத பண்டங்கள்
எமக்குப் பிடித்தவை எப்போதாவது கிடைக்கும்
தருணங்களுக்காக காத்திருப்புகள்
அன்னையர் தினம் தந்தையர் தினம்
எமக்காக அல்ல உங்களுக்காக
உங்களது மனத்திருப்திக்காக
பூங்கொத்துக்களும் புதுப் புது வாழ்த்தட்டைகளும்
விசேட உணவுகளும் விதவிதமாய் உடைகளும்
எம் அறைகளை அலங்கரிக்கும்
அந்த நாளில் மட்டும் அன்பு பொங்கும்
அரவணைப்பு தாராளமாய் கொஞ்சும்
தஞ்சமென்று வந்த இடத்தில்
தாராளமாய் எம் முகத்தின்
ஒப்பனைப் புன்னகைகளை
ஒளிப்படங்கள் பதிவு செய்யும்
நவீன தொழில் நுட்பம்
உடனுக்குடன் முகநூலில் இட்டாவது
பாசத்தைப் பகிர்ந்து கொள்ள
கைத் தொலைபேசிகள் கண்சிமிட்டும்
கணனிகளும் ஸ்கைப்புகளும்
செல்பிகளும் வாட்ஸப்புகளும்
வடிவு வடிவாய் போஸ் கொடுக்கும்
நிஜங்களைத் தொலைத்துவிட்டு
நிழல்களின் பின் அலையும்
நீங்கள்தான் என்ன செய்வீர்கள்
அந்த ஒருநாள் முடிவில்
தொப்புள் கொடியுறவு
தூரத்து உறவாகி விடும்
இது இன்று எமக்கு சிறுகதை
இதுவே நாளை உமக்கு தொடர்கதை
அதுவரை உம்மிடம் பேசுவதற்கு
எம்மிடம் உள்ளவை சில
வாழ்க்கை நான்கெழுத்து
இது வரமும் சாபமும் கலந்தது
இதற்குள் இருக்கும்
வனப்புக்களும் வலிகளும்
சந்திக்கும் கணங்களும்
சிந்திக்கும் ரணங்களும்
சின்னச் சின்ன சல்லாபங்களும்
சிரித்து பேசும் சந்தோசங்களும்
பட்டாம் பூச்சிகளாய்
இறக்கை விரிக்கும்
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
வருடும் பொழுதுகளில்
வரமான இளமையை
சாபமாக்கிக் கொள்ளும்
உன் மூடத்தனத்தை ஓட விரட்டு
நாற்காலிக்கு சொந்தமாகும்
உன் நாட்கள் வருமுன்
நாட்காட்டியில் உன் நாட்களை
தொலைத்து விடாதே
நடை தளர்ந்து உடல் மெலிந்து
தள்ளாடும் நாட்கள் வருமுன்
நீ வாழ்க்கையை வாழ்ந்து முடி
சந்தோசங்களை சந்திக்கப் பழகு
புன்னகையை பகிர்ந்து கொள்
உனக்கான பொழுதுகளை உருவாக்கு
ஓடிஓடி உன்னைத் தொலைத்தது போதும்
உனக்காக நீ வாழ்வதை தள்ளிப் போடாதே
வாழ்ந்து பார் வாழ்க்கையை வசமாக்கு
வயதும் இளமையும் வாசலில் நின்று
கையசைத்து விடைபெறுமுன்
வாழ்க்கையை வாழ்ந்து பார்
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை!

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து முடிக்கும்வரை யோசித்துப் பார்க்கின்றேன் மூச்சு விட்டேனா என்று....,

கடைசி சில வரிகள் என்னை ரொம்பப் பாதிக்குது சகோதரி ...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு விடாமல் படித்து முடித்து பதிலிட்டமைக்கு நன்றிகள் சுவி. 

என்னைச் சுற்றி நடப்பவற்றை பாா்த்த பாதிப்பினால் உருவான இக் கவிதை. பலரையும் பாதிப்பதில் வியப்பில்லை.

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை காவலூரின் கண்மணி!

 

உண்மைகள் முகத்தில் அறையும் போது..,

மறைவதற்கு இடம் தேடுகின்றேன்!

இரண்டாவது கன்னத்தையும் காட்டிடும்,

துணிவு என்னிடம் இல்லை!

 

எம்மைப் பெற்றவர்கள்...,

எம்மிடம் கூறியது,

எதுவுமே எங்களுக்கு வேண்டாம்..!

இறுதிக் காலத்திலாவது...,

இவ்விடத்துக்கு வந்து விடு..!

எங்களுக்குக் 'கொள்ளி' வைக்க...!

'

அது கூட முடியாத அளவுக்கு,,,,

அவர்களின் சிதைகளைக் கூட,

அண்மிக்க முடியாத அளவுக்கு....,

தொலை தூரங்களும்,

காவலரண்களும்...,

துப்பாக்கிகளின் முனைகளுமாய்,

தடை போட்டு நின்றன!

 

திராட்சைப் பழங்களின்,

தோல்களை அகற்றி....,

விதைகளைத் தேடியகற்றி....,

மழலை வாய்களில்.....,

ஊட்டி மகிழ்ந்த கரங்களை...,

தொட்டு விடை கொடுக்கக் கூட,

விட்டு விடாத விதியின் கோரம்..!

 

தொடர்ந்து எழுதக்கூட இயலவில்லை...!:cool:

 

கவிதைக்கு நன்றி.. கண்மணி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலை துாரங்களும் காவலரண்களும் துப்பாக்கி முனைகளும் எம் வாழ்வில் பாதியை தின்று விட்டன. மிகுதியையாவது நாம் வாழ முடியாமல் ஏங்கும் நிலையில்தான் இன்னமும்....

குளுகுளு  என்ற 

காற்றில் மண்டபத்தில் பாய் விாித்து படுத்த சுகம் தொலைத்த எம் பெற்றவா்கள் தனி அறையில்...

பகலில் தனிமையின் துணையுடன்...

இரவில் நிலவில்லாத வானம்...

விண்மீன்கள் கூட இல்லை..

பிள்ளைகளுக்கு உழைப்பு அவசியம்

பெற்றவருக்கு மனப்பிறழ்வு வருவதைத் தவிா்ப்பது எப்படி

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் எம் எதிா்காலம் எம் கண்முன் கண்ணாமூசு்சி காட்டியபடி...

உங்கள் மனம் நெகிழ்ந்த கருத்திற்கு நன்றிகள் புங்கையுரன்

  • கருத்துக்கள உறவுகள்

நியங்களின் தரிசனத்தை இவ்வளவு தெளிவாக எவராலும் எழுதிவிட முடியாது. வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்ந்து முடிக்கவேண்டும் நாளையை நோக்கி இருக்கும் தருணங்களைத் தொலைத்துக்கொள்வது எவ்வளவுபெரிய முட்டாள்த்தனம் ஓடி ஓடி உழைத்து ஓய்வு கிடைக்கும்பொழுது உடலும் வலிமையும் தூர விலகி நின்று ஒன்றை ஒன்று வேடிக்கை பார்க்கும்..... இப்போதே முதுமையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. வாழ்ந்து கொண்டே செத்துவிடவேண்டும் வருந்தவும் வருத்தவும் செய்யாமல் போகும் வழியை வாய்க்கப்பெறவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்களை எனது கவிதை ரொம்பவும் கலவரப்பட வைத்து விட்டதோ 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் ரம்மியமானதாக்குவது எம் கையில்தான் உண்டு, கடந்த காலங்கள் மீண்டும் வருவதில்லை. இனிவரும் நிமிடமும் எம் கையில் இல்லை இந்த நிமிடம் மட்டுமே நிச்சயமானது, இந்த நிமிடத்தை எமக்கு மட்டுமல்ல அடுத்தவா்களுக்கும் பயனுள்ளதாக வாழ நினைத்தால் மகிழ்வாக வாழலாம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சகாரா

  • கருத்துக்கள உறவுகள்

சிறையை உடை சிறகை விரி

-----
நாற்காலிக்கு சொந்தமாகும்
உன் நாட்கள் வருமுன்
நாட்காட்டியில் உன் நாட்களை
தொலைத்து விடாதே
நடை தளர்ந்து உடல் மெலிந்து
தள்ளாடும் நாட்கள் வருமுன்
நீ வாழ்க்கையை வாழ்ந்து முடி
சந்தோசங்களை சந்திக்கப் பழகு
புன்னகையை பகிர்ந்து கொள்
உனக்கான பொழுதுகளை உருவாக்கு
ஓடிஓடி உன்னைத் தொலைத்தது போதும்
உனக்காக நீ வாழ்வதை தள்ளிப் போடாதே

வாழ்ந்து பார் வாழ்க்கையை வசமாக்கு
வயதும் இளமையும் வாசலில் நின்று
கையசைத்து விடைபெறுமுன்
வாழ்க்கையை வாழ்ந்து பார்
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை!

கவிதை மிகவும் அழகு. கண்மணி அக்கா.
மிகவும் பிடித்தததும், ஒரு கணம் யோசிக்கவும்.... வைத்தன, இந்த வரிகள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கவிதையை படித்து பிடித்து கருத்துதெழுதிய தமிழ்சிறிக்கும் விருப்பு புள்ளியிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் சுவாரசியமானவை. நின்று நிதானித்து வாசிக்க எமக்கு அவகாசம் கிடைப்பதில்லை. ஓட்டத்தின் முடிவில் நின்று நிதானித்துப் பாா்த்தால் கிடைப்பது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் மட்டும்தான். எமது பிள்ளைகள்தான் எமக்கு நல்ஆசான்கள். அவா்களின் விசாலமான மனநிலையை பாா்க்க பிரமிப்பாக இருக்கிறது, அவா்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. இனியாகிலும் எமக்காக வாழ தயாரா...நன்றிகள் தமிழ்சிறி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.