Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு

Featured Replies

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு
[ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2015, 05:28.03 PM GMT ]
sampanthan_batti_makkal_001.jpg
சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

சித்தாண்டி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இப் பரப்புரை கூட்டத்தில் மாவை.சேனாதிராஜா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்கள் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டம் தோறும் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! அவர்களுக்கு நியாயம் வேண்டும்

இணைந்த வடகிழக்கில் தமிழ்பேசும் மக்களுக்கான தனியான மாநிலமே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், அதனைப்பெறும் வகையில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமது பலத்தினை வெளிப்படுத்தும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தலின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்ககளப்பு மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று காலை தொடக்கம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன்,

நடை பெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத்தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தெளிவூட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம்.

சம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளவு. இதன் ஊடாக நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு எமது தேசியப் பயணத்திற்கான தீர்வு வெளிவரவேண்டும்.

தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளிவந்துள்ளது அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூறமுடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது.

அதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தல் மூலம் நீங்கள் நிருபிக்க வேண்டும். இதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். செயற்படுவீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.

எமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வுகிடைக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடும் சர்வதேசத்தின் நிலைப்பாடும் இதுதான். விசுவாசமான நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.

இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமைய இருக்கின்ற புதிய நாடாளுமன்றத்தினூடாக இதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ் விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேணடும். அரசியல் கலைகலாசார, பொருளாதார, அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

sambanthan_varavetbu_001.JPG

sambanthan_varavetbu_002.JPG

sambanthan_varavetbu_003.JPG

sambanthan_varavetbu_004.JPG

sambanthan_varavetbu_005.JPG

sambanthan_varavetbu_006.JPG

sambanthan_varavetbu_007.JPG

sambanthan_varavetbu_008.JPG

sambanthan_tna_batti_001.JPG

sambanthan_tna_batti_002.JPG

sambanthan_tna_batti_003.JPG

sambanthan_tna_batti_004.JPG

sambanthan_tna_batti_005.JPG

sambanthan_tna_batti_006.JPG

sambanthan_tna_batti_007.JPG

sambanthan_tna_batti_008.JPG

sambanthan_tna_batti_009.JPG

sambanthan_tna_batti_010.JPG

sambanthan_tna_batti_011.JPG

sambanthan_tna_batti_012.JPG

sambanthan_tna_batti_013.JPG

 

http://www.tamilwin.com/show-RUmtyITcSVmw4H.html

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா பகிடி விடுகிறார்,

இலங்கைத்தீவில் சிகரட் மற்றும் மது ஆகியவற்றை அதிக அளவில் நுகரும் பாவனையாளர்கள் வடக்கில்தான் உள்ளனர். தெருச்சண்டித்தனம் பெண்பிள்ளைகளுடன் பொறுக்கித்தனம் செய்தலில் முதலிடம் வடக்கில்தான் குறிப்பாக யாழ்குடாநாட்டில்தான், 

இதைவிட இலங்கைத்தீவின் போதைப்பொருள் பாவனையும் சட்டத்துக்கு அஞ்சாத விற்பனையும் யாழில்தான் அதிகரித்துள்ளது, 

தவிர இப்படியான குற்றங்களைச் செய்வோர் தற்செயலாக சட்டத்தின்பிடியில் மாட்டுப்பட்டால் காசுபார்ப்பதற்காய் அறத்தினை விற்கும் அப்புக்காத்துக்கள் அதிகம் காணப்படும் பிரதேசமும் யாழ்குடாநாடுதான்.

 

சட்டம்படித்த சம்பந்தர் ஐயாவுக்கு இவையெல்லாம் வன்முறை என்பது தெரியாதோ.

 

Edited by Elugnajiru

சம்பந்தர் வன்முறை என்று கருதுவது அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத போராட்டத்தை மட்டுமே. மற்றப்படி வெட்டி கொலை செய்வோர், அடிதடியான கொலைகள் செய்வோர், போதைவஸ்து விற்போர், கற்பழிப்போர் எல்லாம் சம்பந்தன்  ஐயா,  சுமந்திரன்   மற்றும் தமிழ் தேசியம் பேசும் வக்கீல்களின் வாடிக்கையாளர்களே. வன்முறையாளர்கள் அல்ல. 

சம்பந்தர் ஐயா பகிடி விடுகிறார்,

இலங்கைத்தீவில் சிகரட் மற்றும் மது ஆகியவற்றை அதிக அளவில் நுகரும் பாவனையாளர்கள் வடக்கில்தான் உள்ளனர். தெருச்சண்டித்தனம் பெண்பிள்ளைகளுடன் பொறுக்கித்தனம் செய்தலில் முதலிடம் வடக்கில்தான் குறிப்பாக யாழ்குடாநாட்டில்தான், 

இதைவிட இலங்கைத்தீவின் போதைப்பொருள் பாவனையும் சட்டத்துக்கு அஞ்சாத விற்பனையும் யாழில்தான் அதிகரித்துள்ளது, 

தவிர இப்படியான குற்றங்களைச் செய்வோர் தற்செயலாக சட்டத்தின்பிடியில் மாட்டுப்பட்டால் காசுபார்ப்பதற்காய் அறத்தினை விற்கும் அப்புக்காத்துக்கள் அதிகம் காணப்படும் பிரதேசமும் யாழ்குடாநாடுதான்.

 

சட்டம்படித்த சம்பந்தர் ஐயாவுக்கு இவையெல்லாம் வன்முறை என்பது தெரியாதோ.

 

சம்பந்தன் ஐயாவின் பார்வையில் தெரியாத "கேட்பாரற்று ஆகா ஓகோ என்று நடக்கும் போதைப்பொருள் விற்பனை/பாவனை, கற்பளிப்புகள், கடத்தல்கள், ஆயுதங்களுடன் கோஷ்டி மோதல்கள், கப்பம், வீதிக்கு வீதி பாடசாலைகளுக்கு அருகே மதுச்சாலைகளும் விற்பனை நிலையாங்களும், .." போன்றவைகள் ... அத்தியடி குத்தியுடன் சேர்ந்து உண்மையில் இந்த சம்/சும்/மாவை/ போன்றோரின் அனுசரணையுடன் வட கிழக்கில் மகிந்த/கோத்த கொண்டு வந்தவையே! 

 

இற்றைவரை இவை தொடர்பாக ஏதாவது ஆக்கபூர்வமான முறையில் எதிர்ப்போ? நிறுத்துவதற்கு ஏதாவது முயற்சியோ எடுத்திருக்கிறார்களா?

 

இன்று விக்கி ஐயா சில முயற்சிகள் எடுக்க முயல .. அதற்குள் விக்கியருக்கும் ஆப்பு வைக்க முயலும் இக்கும்பல்!

 

இக்கும்பல்களுக்கு தேர்தல் அற்ற காலத்தில் இந்த ஜனநாயக செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் நடைபெற வேண்டும்! அப்போதான் அவர்களும் காலாகாலமாக அரசியல் செய்யலாம்!

11846673_1620020824936310_14912231893924

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன்

 

என்றும் விரும்பியதில்லை என்று வரணும்

ஆனால் சம்பந்தர் ஐயா மிகக்கவனமாக உள்ளார்

1977 மேடைப்பேச்சுக்களை எதிர்க்கட்சியினர் கையிலெடுத்தால்

அவற்றில் வன்முறையைத்தவிர வேறொன்றும் இராது.....

ஆண்டபரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளத்துடிப்பதில் என்ன குறை?

உயிர் தமிழுக்கு

உடல் மண்ணுக்கு.......:(:(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் சிங்களவர்களின் வன்முறையை விரும்பவில்லையாம்......அதை இப்படி நாசுக்காக சொல்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது மக்கள் வன்முறையை விரும்பவில்லை! சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கெடுப்பு

அடங்கொக்கா மக்கா!!!!!!  

ஈழத்தமிழ் இளைஞர்களிடம் வன்முறையை கிளறி கிளப்பி விட்டதே நீங்களும் உங்கடை கோஷ்டியும்தானே....:cool:
நீங்களெல்லாம் வெள்ளைவேட்டி கட்டின கள்ளர்கள். :grin:

இருந்தாலும் காலத்தின் சதியினால் வெற்றிவாகை சுட வேண்டுகின்றேன். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.