Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு, உள்ளக விசாரணை பற்றி எதுவுமில்லை

Featured Replies

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு, உள்ளக விசாரணை பற்றி எதுவுமில்லை

September 1, 2015
செய்திகள்0
22
ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு, உள்ளக விசாரணை பற்றி எதுவுமில்லை
 

ஸ்ரீலங்காவின் தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியே ஜனாதிபதி கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப முப்படை மற்றும் குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்ற வளாகத்தில் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் சபா மண்டப வாசலில் வைத்து வரவேற்றனர்.

அங்கிருந்து படைகலசேவிதரின் அணிவகுப்புடன், சபைக்குள் சென்ற ஜனாதிபதி சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வு அரச இலத்திரனியல் ஊடகங்களில் நேரடி ஒளி,ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அங்கு தொடர்ந்து கொள்கை விளக்கவுரை நிகழ்த்திய ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதுகாப்புப் படையினருக்கு, தேவையான அனைத்து விடயங்களையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிடக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

சர்வதேச உறவு நாட்டிற்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேசத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அவசியத்தையும் அவர் இதன்போது கூறினார்.

நாட்டு மக்களின் போசனை மட்டத்தை உயர்த்துவது தமது அரசாங்கத்தின் முதல் பணி எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

சிறுவர்களே நாட்டின் எதிர்காலமே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்குத் தேவையான விடயங்களும் செய்து கொடுக்கப்படும் எனக் கூறினார்.

உலகில் மதுபானத்தை அதிகளவில் பாவிக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கின்றதெனவும், அதுதொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மதுபானப் பாவனை ஒரு சுகாதாரப் பிரச்சினை அல்ல எனவும் அது தேசிய பிரச்சினை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மதுவை ஒழிப்பதற்கு தன்னுடைய தலைமையில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதாக கூறிய ஜனாதிபதி, அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய் நாட்டின் மீது அக்கறை கொண்ட மக்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர், 35 வருடங்களாக நாட்டை ஆண்ட கட்சியும் 32 ஆண்டுகளாக ஆண்ட மற்றுமொரு கட்சியும் இணைந்திருப்பது முக்கிய விடயம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பாக பாராளுமன்றம்தான் எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நடைபெறும் எனவும் ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் உறுதியளித்தார்.

http://www.velichaveedu.com/ஜனா43/

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இருக்கனும்.. அது தான் சம்முக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கொடுக்கப் போறமில்ல. அதை விட வேற என்னத்தை எதிர்பார்க்கிறீங்க. அதுக்கு மேல ஒன்னும் கிடைக்காது. கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆல் ரைட். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இனி கம்முன்னு இருக்க வேண்டியதுதான்...

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  மாறி மாறி ஆட்சியமைத்து இன அழிப்பை செய்த இரண்டு இனவாதக் கட்சிகளும் இணைந்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் இருப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகுவே அமையுமென்பதை  தமிழ்பேசும் மக்களனைவரும் கவனத்திற் கொள்வேண்டியது அவசியமாகும். தற்போதைய  நாடாளுமன்றச் சட்ட  முறைமைகளின் கீழ் தமிழரின்பால் அக்கறைகொண்ட  செயற்பாடுகளை முன்னெடுக்க  சிங்கள இனவாதிகள் விடுவார்களா? அல்லது இணைந்துள்ள இரண்டு இனவாதக்கட்சிகளும் முன்வருமா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் இன சமத்துவத்தை உண்மையில் உருவாக்கும் தற்துணிவு சிங்களத் தலைவர்களுக்கோ அல்லது தலைமைகளுக்கோ  இருக்குமாயின்…. 

இலங்கைச் சமதர்மக் கூட்டாட்சி ஒன்றியம் என மாற்றுதல். (யேர்மனியில் உள்ளது போன்றதொரு ஆட்சிமுறைமைக்கு மாறுதல்)


தேசியக்கொடியில் இருக்கும் சமத்துவமின்மையை நீக்குதல்.


இருமொழிகளையும் சமத்துவமாகக் கொண்டு அரசபணிக் கொள்கையைத் திறந்த மனதுடன் செயற்படுத்துதல். 


பௌத்தமதத்துக்கான சிறப்புரிமையை நீக்குதல் அல்லது அனைத்து மதங்களையும் ஒரே சீரான நடைமுறையில் பார்க்கும் வகையில் அரசியல் யாப்பைத் திருத்துதல்.


அனைத்துத் தேசிய சர்வதேச நிகழ்வுகளிலும்  தேசியகீதத்தை இருமொழிகளிலும் பாடுதல்.


இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்களை தடைசெய்யும் வகையில் சட்டப்பாதுகாப்பேற்பாடொன்றை ஏற்படுத்தும் வகையில் நிலஉரிமை யாப்பொன்றை உருவாக்குதல். 


பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிமுறையை இல்லாதொழித்தல்.


தேசிய நீர்ப்பங்கீடு மற்றும் பெருநதிகளின் நீராதாரப்பங்கீடு என்பவற்றை இனத்துவ ரீதியாக அணுகுவதைக் கைவிடல். 


பிரதேசங்களின் தொழிற்றுறை அபிவிருத்திகளை அதற்குரிய மக்களிடமும் ஆட்சிக் கட்டமைப்புகளிடம் கையளித்தல்.


வாகன மற்றும் பொது வரியிறுப்பினை அந்தந்தப் பிரதேசத்திற்குரியஆட்சிக் கட்டமைப்புகளிடம் கையளித்தல்.

…………………………!

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது எதிர் பார்த்தீர்களா??

 

இவரின் உரையை முழுமையாக புரிந்து கொண்டால்...

இது சிங்களநாடு

எமது கையே ஓய்கிருக்கும்

பலமானதாக இருக்கும்

வடக்கு கிழக்கு கொஞ்சம் சாப்பாடு தரலாம்....

அவ்வளவு தான்...

Edited by விசுகு

எதையாவது எதிர் பார்த்தீர்களா??

 

இவரின் உரையை முழுமையாக புரிந்து கொண்டால்...

இது சிங்களநாடு

எமது கையே ஓய்கிருக்கும்

பலமானதாக இருக்கும்

வடக்கு கிழக்கு கொஞ்சம் சாப்பாடு தரலாம்....

அவ்வளவு தான்...

அதுவும் குழப்படி செய்யாமல் இருந்தா மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது எதிர் பார்த்தீர்களா??

 

இவரின் உரையை முழுமையாக புரிந்து கொண்டால்...

இது சிங்களநாடு

எமது கையே ஓய்கிருக்கும்

பலமானதாக இருக்கும்

வடக்கு கிழக்கு கொஞ்சம் சாப்பாடு தரலாம்....

அவ்வளவு தான்...

விசுகு அவர்களே, புணர்வாழ்வுப் புணரமைப்புத் திட்டத்தையே ஏற்கமறுத்த சிங்களம்  இதில் எதையாவது சிங்களம் செய்யாது என்பது தெரிந்தவிடயமே.

இங்கு தீவிரவாதம், அதிதீவிரவாதம் பயங்கரவாதம் என்று தமிழரது உரிமைகள் பறிக்கபடுவதோடு  நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு இனத்துவ அடையாளம் இல்லாமலாக்கப்படும் சூழலில் இன்றும் தமிழருக்குள் இருக்கும்  ஆதரவு - எதிர் - மென்போக்கு – மிதவாதத் தலைமைகள் என இருப்போர் ஒன்றிணைந்த இலங்கையென்போரென எந்தத் தரப்புமே ஏன் ஒரு அரசியல் திட்டத்ததையோ  அல்லது அரசியலமைப்பு முறையையோ நிலைமைகளை ஆய்வுசெய்து முன்வைக்காது இருக்கின்றனர். எமது நிலைப்பாடு இதுதான் இதற்காகக் தொடர்ந்தும் உழைப்போம் என்று உறுதியாகச் சொல்கிறார்களில்லை. 

தமிழரது உரிமைதொடர்பாகக் கருத்திடும்போது சிலாகிப்போர் சனாதிபதியின் இந்த உரைகுறித்து எதுவுமே கூறாது மௌனமாக இருப்பதும் ஒருவகை …..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.