Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்

Featured Replies

இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ததில் எந்த தவறும் இல்லை. இந்திய கலைஞர்களாக இருந்தாலும் உணர்வோடு இலாபநோக்கோடு இல்லாது பங்கு பற்றி உதவி செய்ய வேண்டும். அவர்களது பயண தங்குமிட செலவுகளை பொறுப்பேற்பது தவறில்லை.

எத்தியோப்பியாவில் பட்டினிச் சாவை தடுக்க பொப் நட்சத்திரங்கள் சமாந்தரமாக அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தியிருந்தனர் 1985 இல்.

http://news.bbc.co.uk/2/hi/uk_news/702700.stm

http://www.live8live.com/

அதே போன்றே இந்தியாவின் நட்சத்திரங்கள் பங்கு பற்றி தான் நிதியை திரட்ட முடியும் என்றால் ஏன் தவறு?

தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்க வேண்டும். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் ஆவது.

  • Replies 117
  • Views 15k
  • Created
  • Last Reply

ஆமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசன் இந்த நிகழ்விற்கு வெண்புறா தனது நிதியில் ஒரு பெனியேனும் செலவழிக்கவில்லை எல்லாமே விளம்பரத்தினூடாகவே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை 30 ஆயிரம் சேர்க்க நாட்கள் பல ஆகும் என நான் எழுதியiதை வசதியாக மறைத்து விட்டு சவால் விடுகிறியள். எனக்கும் சவால் வி;ட முடியும். இப்போதுதானே சுலபமாக நிதி சேர்க்கிற ரெக்கினிக் தெரிஞ்சுட்டுது. இனி ஒரு பவுணுக்கும் இரண்டுக்கும் உண்டியல் கிலுக்க வேண்டிய தேவை ஏற்படாது. இனி உண்டியலுடன் எங்களிடம் வரமாட்டார்கள் என்று வாக்கு தரமுடியுமா?

டுiஎந8 நிகழ்ச்சியையும் இதையும் போட்டு குழப்பாதீர்கள். அது ஆபிரிக்க மக்களுக்காக கலைஞர்கள் முன்வந்து செய்த மகத்தான நிகழ்ச்சி. இது வியாபார கலைஞர்களை கூலிக்கு பிடித்து நடாத்தும் கேளிக்கை நிகழ்ச்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வருவார்களானால் .. இங்கு பிரச்சனைக்கே இடம் இல்லை.

பாலசுப்பிரமணியம் பொப் கெல்டோப் போல மனிதாபிமானியாக ஆக மாறுவாரானால் அவரை சிரந்தாழ்த்தி வரவேற்போம்.

MI7,

தமிழனிடம் மனிதாபிமானத்தை பணத்தை காட்டித்தான் கறக்கலாம் என்ற கேவலத்தில் இருக்கிறம் என்றதை நான் மறுக்கவில்லை. Bob Geldof போன்றவர்களை நோக்கி இந்திய கலைஞர்களையும் மாற்றமடை செய்ய முயற்சிப்பது எமது பொறுப்பு. எமது புலம்பெயர்ந்த மக்களின் சந்தையை ஒரு அழுத்தமாக வைத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

அதுவரை idealistic ஆக யோசித்து ஒன்றையும் செய்யாது இருக்க முடியாது. தற்போது உள்ள நிலையில் இவ்வாறு தான் பட்டினிச்சாவிற்கு எமது மக்களிடமும் கலைஞர்களிடமும் பங்களிப்பை பெற முடியும் என்றால் செய்யத்தான் வேணும்.

தற்பொழுது செய்வதை குழப்பாதீங்கள். அடுத்த முறை இன்னும் திறமையாக செய்ய முயற்சிக்கலாம். இந்த பட்டினிச் சாவும் அவலுமும் ஒர் இரு வருடங்களில் முடிந்துவிடப் போவது இல்லை. Live8 போன்று நிதி திரட்டி பட்டினிச் சாவை தடுக்க வேண்டிய அளவிற்கு நிலமைகள் தாயகத்தில் மோசமாகும். அது போன்ற நிதி திரட்டல் யுக்த்திகளை நடை முறைப்படுத்த வேண்டி நிலைக்கு நாமும் தயாராக வேண்டும். உங்கள் சிந்தனைகளை செயற் திறனை காட்டுவதற்கு எதிர்காலத்தில் போதிய சந்தர்ப்பங்கள் வரும். நிரூபியுங்கள் அப்பொழுது.

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் அதுவா.....? இப்பத்தானே உங்களை பற்றி தெரியுது.... நீங்கள் இப்படிப்பட்ட மனத்துடன் கொடுக்கும் ஒரு பெனியால் நாட்டின் தேவையை நிறைவு செய்யலாம் என்ற கனவுடன் இருப்பவரா?

பெனி பெனியாக இல்லை இல்லை ஒரு பவுண் இரண்டு பவுண் ஆக உண்டியலுக்கு போடும் நிலை உங்களுக்கு இனியும் வேண்டாம்.

ஒரேயொரு உதவி இறுதியாக 250 பவுண் பெறுமதியான நுழைவுச்சீட்டை வாங்கி நிகழ்வையும் கண்டுகழியுங்கள்.

நான் M17 என்பவரை ஒரு மக்கள் துறோகியாக கருதுகிறேன். ஒரு நல்ல நோக்குடன் அனைவரும் ஒன்ரினையும் இந்த நேரத்தில் இப்படி கதைப்பவர்களை துறோகியாகவே கருத முடியும்.

இது எமது இறுதி சந்தர்ப்பம் என்பதை மறக்க வேண்டாம்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வரவில்லை என்று யார் உங்களிடம் சொன்னது?

டுiஎந8 நிகழ்ச்சியையும் இதையும் போட்டு குழப்பாதீர்கள். அது ஆபிரிக்க மக்களுக்காக கலைஞர்கள் முன்வந்து செய்த மகத்தான நிகழ்ச்சி. இது வியாபார கலைஞர்களை கூலிக்கு பிடித்து நடாத்தும் கேளிக்கை நிகழ்ச்சி. அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த கலைஞர்கள் வருவார்களானால் .. இங்கு பிரச்சனைக்கே இடம் இல்லை.

Edited by E.Thuyawan

குடிப்பதற்கு கூத்தடிப்பதற்கு சந்தர்ப்பமாக கலைநிகழ்ச்சியை ஏற்படுத்திவிட்டு, போதையின் உச்சத்தில் உள்ளவனிடம் சேலை ஏலம் விட்டு மட்டக்கள்ப்புக்கு காசு சேர்கிறாங்கள்.

வெண்புறா எவ்வளவு புனிதமான பணியை செய்கிறது. வரவேற்றுக்கொள்ளுங்கள். கரம் கொடுத்து உதவி செய்யுங்கள்.....

லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான்.

நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்டக்களப்புக்கு பெரிய தொகை கிடைத்து விட்டது என்று. நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

பாருங்கள் ஒரு தமிழ் பாடசாலை குடிவகைகளை விற்று கூத்தாடுவது எவ்வளவு கேவலம். போதாததிற்கு ஒரு பெருமை மிக்க நகரத்தின் பெயரைச்சொல்லி தாங்கள் அங்கு ஏதோ சேவை செய்கிறார்கள் என்று சொல்லி சேலை ஏலம் விட்டு அந்த மக்களையே அவமானப்படுத்துகிறார்கள்.

தமிழ் உறவுகளே பாருங்கள்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் பலரது வீடுகளில் காசு கொடுத்து சூரியத் தொலைக்காட்சி பாக்கினாம். ஆனால் மாவீரர் தினம் காலத்தில் ரி.ரி.என்னில் இலவசமாக மாவீரர் தினம் ஒளிபரப்ப வேணும் என்று கேக்கினம். தாயக நிகழ்வினை எமக்குத் தரும் தொலைக்காட்சிக்கு காசு கொடுக்காமல் சூரியத்தொலைக்காட்சிக்கு எவ்வளவு பணம் போகிறது?. புலம் பெயர்ந்த மக்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு எத்தனை பேர் ஆதரவு தருகிறீர்கள்?. ஆனால் தமிழகத்திரைப்படங்களுக்கு எம்மக்களால் எவ்வளவு கோடி பணம் போகுது?. எத்தனை சனம் ஈழத்து இசை நிகழ்ச்சிக்கு போகுதுகள்?. இப்படிப்பட்ட மக்கள் இருப்பதினால் தான் இந்தப்பாடகர்களினை வெண்புறா அமைப்பு அழைக்கிறது. நீங்களும் உதவி செய்யமாட்டீர்கள், ஆனால் குறை சொல்ல மட்டும் வந்துவிடுவீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பார்த்தவுடன் உங்களில் சிலருக்கு எரியுமே....

இன்னமும் இருக்கின்றது. பொறுத்திருங்கள்...... காலம் பதில் சொல்லும்......

trofranceme3.jpg

யாராவது விளம்பரம் கொடுக்க முன்வரலாமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லலுறும் மக்களுக்காக பலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் சேர்க்கப்படுவதில் எதுவித தவறும் கிடையாது. தமிழ் மக்கள் ஒழுங்கு படுத்தும் நிகழ்வுகள் சிறிய அளவிலிருப்பதால் அதில் வரும் இலாபம் குறைவாக இருப்பதுதான் ஒரு குறை. அதை விடுத்து மற்றய நாடுகளை எடுத்துப்பார்த்தீர்களானால் பல மில்லியன் பவுண்களைச் செலவிட்டு நிகழ்வுகளை நடாத்தி, அதன்மூலம் பெரிய அளவிலான பணத்தைச் சேகரிக்கிறார்கள். இந் நிகழ்வில் பங்குபற்றும் பிரபலங்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியமாகக் கொடுக்கிறார்கள். உதாரணமாக பிரித்தானிய தொலைக்காட்சியில் வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படும் “சிறுவர் நலனுக்கான நிகழ்வில் பல மில்லியன்கள் 3-4 நாட்களுக்குள் சேகரிக்கப்படுகின்றது.

இப்படியான நிகழ்வுகள் இந்தியாவிலும் நடத்தப்படுகின்றது. இலங்கையிலும் நடத்தப்படுகின்றது. புலம்பெயர் மக்கள் தினமும் தமக்காகவும், தமது உறவுகளுக்காகவும் கஸ’டப்பட்டு உழைத்து, உடலையும் மனதையும் வருத்தி வாழ்கிறார்கள். இவர்களுக்கு இப்படியான ஒரு நல்ல நிறுவனத்தால் ஒழுங்செய்யப்படும் நிகழ்விற்கு குடும்பத்தினருடன் சென்று எவ்வித குழப்பங்களும் (குழுச்சண்டைகள், வெட்டுக்கொத்து) இல்லாமல் மன நிறைவுடன் பார்த்து மகிழ்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகவே அமையும்.

சும்மா மசாலா திரைப்படங்களை அதிகவிலை கொடுத்து எடுத்து இங்கு திரையிடுகிறார்கள், அதை நாமும் திரையிலும், திருட்டுக்கொப்பியிலும் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் அதைப்பற்றி யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதில் செலவிடும் பணமும், திரையரங்களில் காங்குளின் கூச்சலுக்கும், குரங்குச்சேட்டைகளுக்கும் மத்தியில் பொறுமையாகப் படம் பார்க்கும் எம்மவருக்கு, இப்படியான ஒரு நிகழ்ச்சி தொல்லையாகவும், மக்களின் பணத்தைச் சுருட்டுவதுபோலும் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கின்றது.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How to type in thamil

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொழும்பு மகசீன் சிறைக் கைதிகள் தங்கள் உணவைத்துறந்து அஞ்சலி செலுத்துகிறார்களாம். நாங்கள் சிறினிவாசினது குத்தாட்டப்பாடலால் அஞ்சலி செய்வோம்.

வாருங்கள் வாருங்கள் வந்து உங்கள் தமிழுணர்வைக் காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

How to type in thamil

இங்கு போய் பாருங்க

http://www.yarl.com/forum3/index.php?autom...p;blogid=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடவே குத்தாட்டம் போடுவதற்கு நம்ம நமீதாவையும் கூப்பிடுங்கோ. இதெல்லாம் உங்களுக்குச் சொல்லியா தரோணும்.

10 ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் சுசீலாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று சுசீலா உருக்கமாக பாடி முடிப்பார். அடுத்து பொன் மேனி உருகுதெ என்று சில்க் ஸ்மிதா ஒரு குத்தாட்டம் போடுவா. அடுத்து அமுதைப் பொழியும் நிலவே என்று சுசீலா அம்மையார் பாடுவார் அதன் பின் வெள்ளரிக் காய் பிஞ்சு போடுதே என்று சிலுக்கு அக்கா ஆடுவா.

வெண்புறாவும் அந்த மாதிரி நடத்தினால் நல்லயிருக்கும். புலம் பெயர் வாழ் தமிழ் முதியவர்களுக்கும் தேவி தரிசனத்தைப் பார்த்த மாதிரியும் இருக்கும்.

அப்படிச் சொல்லாதீர்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாலா அண்ணாவை மறக்கவில்லை.

அவருக்காக கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடல் பாடப்படும். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவின் மறைவினால் உங்களில் எத்தனை பேர் உணவை துறந்தீர்கள்? அல்லது உங்கள் நடைதுமுறை வாழ்க்கையை மாற்றி அமைத்தீர்களா? ஏன் இப்படி வேடம் போடுகிறீர்கள்?

இங்கிலாந்திலிருக்கும் 150 000 தமிழர்களில் எத்தனை வீதமானவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு வந்திருந்தார்கள்?

எனவே வேலைவெட்டியில்லாமல் திரைமறைவிலிருந்து எழுதுவதை விடுத்து யதார்த்த நிலமைக்கு ஏற்ப வாழுங்கள்.

அம்மணி,

உணர்வில்லாத சுயநாலமாகச் சிந்திக்கின்ற தாய்நாட்டைப் பறிறி நினைக்காத மக்களை விட்டுவிடுங்கள்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள தாய்நிலத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற நிறுவனத்தைச் சேர்ந்த நிங்களே ஈழத்தமிழர்களைப் பணம்பண்ணுவதற்காக மட்டும் பாவிக்கின்ற ஒரு கூட்டத்தை அழைத்து களியாட்டம் போடத் துடிக்கும் பொழுது மற்றவர்களைப் பற்றி எப்படிக் கதைப்பது?

எங்கே பாலசுப்பிரமணியம் அல்லது சிறினிவாஸ் தமிழ்நாட்டிலே நடந்த ஏதாவதொரு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் இது போன்ற இன்னும் பல தமிழக சினிமாக் கலைஞர்கள் காட்டிய அனுதாப உணர்வைக் கூட இவர்கள் காட்டினார்களா?

தமிழுணர்வே இல்லாத இந்தக் களைக் கூத்தாடிகளுக்கு தமிழரின் பணத்தைச் சுருட்டிக் கொடுப்பது தான் உங்கள் மன்றத்தின் பணியா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தாருங்கள். அதை விடுத்து நாங்கள் உங்கள் கலைநிகழ்வை பார்த்து எரிச்சல் படுகிறோம் என்று கூப்பாடு போடாதீர்கள்.

பதில் தாருங்கள் சகோதரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி போரட்டத்தில் கலந்து தான் தமிழ்த்தேசிய ஆதரவை காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே தங்கள் துறை சார்ந்து தங்களின் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் இனியும் செய்வார்கள். இவர்கள் பாடிய பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா..?

ஈழத்தமிழர்களை பணம் பண்ணுவதற்காக பாவிக்கின்ற கூட்டம் என்று சொல்லிக்கொண்டு ஏன் அவர்கள் உங்களை பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
wptz2.jpg

நாங்க - எல்லா பக்கதாலயும் இறுக்கப்பட்டிருக்கோம் - .....

சுற்றிவளைபினூடும்- அதை மீறியும் - ஏதும் செய்யணும் - என்னு

நினைக்கிறாங்களே... விட்டுடலாமே- காவியா!

அரசாங்கத்தால் அல்ல- சுற்றி எம்மை இருப்பவர்களால் .........

கரணம் தப்பினா - மரணம் என்பது - இப்போலாம் - தாயகத்தில் மட்டுமில்ல...

எங்கயும் அப்பிடி ஆச்சாம்-ஆகவே- கோவபடாதீங்க - நிறைய!

பதிலா- அதன்மூலம் - நிகழ்ச்சி ஏற்பாடாளர்கள் -முயற்சி செய்கிறார்கள் என்று

என்று - புரிஞ்சு கொண்டால் -எல்லாம் சரி ஆகும்! :huh:

இவளவும்- வெண்புறா அமைப்பின் - நோக்கங்கள் - தெரிந்தவர்களுக்கு மட்டும்!

தெரிந்தும் - கோவபடுபவர்களுக்காக - அல்ல ! :lol:

  • 2 weeks later...

ஜனவரி 14ம் திகதி கடலில் வீரகாவியமாகிய கிட்டண்ணாவிற்கும் ஏனைய போராளிகளுக்குமான அஞ்சலி நிகழ்வு 'மிச்சம்' என்னும் இடத்தில்; மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

எது மிகவும் முக்கயமான நிகழ்வு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சகோதரி போரட்டத்தில் கலந்து தான் தமிழ்த்தேசிய ஆதரவை காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே தங்கள் துறை சார்ந்து தங்களின் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் இனியும் செய்வார்கள். இவர்கள் பாடிய பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா..?

ஈழத்தமிழர்களை பணம் பண்ணுவதற்காக பாவிக்கின்ற கூட்டம் என்று சொல்லிக்கொண்டு ஏன் அவர்கள் உங்களை பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.