Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் சமூகம்!

 
 
masala_2685173f.jpg
 

உலகம் முழுவதும் ஒரு சிலர் ’ஜீரோ வேஸ்ட்’ என்ற கொள்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜப்பானில் உள்ள கமிகட்சு பகுதி மக்கள் ’உலகின் முதல் ஜீரோ வேஸ்ட் சமூகம்’ என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். கமிகட்சுவில் வசிக்கும் மக்கள் குப்பைகளை மிக நேர்த்தியாகக் கையாள்கிறார்கள். குப்பைகளைத் தண்ணீரால் சுத்தம் செய்கிறார்கள். பிறகு 34 பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள். காகிதம், அலுமினியம், பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரிக்கிறார்கள். மட்கும் குப்பைகளை மட்க வைத்து, வீட்டுத் தோட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்ற குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

‘’இந்தத் திட்டத்தை ஆரம்பித்தபோது மக்கள் எதிர்த்தனர். கொஞ்சம் கஷ்டப்பட்டனர். விரைவிலேயே ஜீரோ வேஸ்ட் திட்டத்துக்குப் பழகிவிட்டனர். பாட்டில் மூடி தனியாகவும் பாட்டில் தனியாகவும் போடும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். பழைய துணிகள், பிளாஸ்டிக் போன்றவற்றை வைத்து பொம்மைகள், அலங்காரப் பொருட்களைச் செய்துவிடுகிறார்கள். காய்கறி, பழக் கழிவுகளை மட்கும் குப்பைகளாக மாற்றி, செடிகளுக்கு உரமாக்கி விடுகிறார்கள். பயன்படுத்திய சில பொருட்களைக் கடைகளில் கொடுத்துவிட்டு, புதிய பொருட்களை கூடுதல் கட்டணம் இன்றி இங்கே வாங்கிக்கொள்கிறார்கள். வீட்டு உபயோகத்திலிருந்து தொழிற்சாலை வரை கழிவு மேலாண்மை திறம்படச் செய்யப்படுகிறது.

பழைய வீடுகளை இடித்தால், அதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே புதிய வீட்டைக் கட்டி விடுகிறார்கள். கமிகட்சு நகரில் 1,700 மக்கள் வசிக்கின்றனர். 80 சதவீத கழிவுகள் மறுசுழற்சிக்குச் சென்றுவிடுகின்றன. 20 சதவீத கழிவுகள் உரமாக மண்ணுக்குச் சென்றுவிடுகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக கழிவுகளைக் கையாள்வதில் நாங்கள் சிறந்தவர்களாக மாறிவிட்டோம். ஜீரோ வேஸ்ட் அகடமியையும் நாங்கள் நடத்தி வருகிறோம். பள்ளி மாணவர்கள், வெளிநாட்டினர் ஆண்டு முழுவதும் இங்கே வந்து, கழிவு மேலாண்மையைக் கற்றுக்கொண்டு செல்கிறார்கள்’’ என்கிறார் கமிகட்சு அகடமியின் பொறுப்பாளர்.

அடடா! உதாரண நகரம்!

வால்டர் கேவனா உலகிலேயே அதிக கிரடிட் கார்டுகள் வைத்திருக்கும் மனிதர் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 1,497 கடன் அட்டைகள் இவரிடம் இருக்கின்றன. இவற்றில் 800 அட்டைகள் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கின்றன. ‘மிஸ்டர் பிளாஸ்டிக் ஃபென்டாஸ்டிக்’ என்று வால்டருக்கு கின்னஸ் பெயர் சூட்டியிருக்கிறது.

“யாரிடம் அதிகக் கடன் அட்டைகள் என்று நண்பருக்கும் எனக்கும் ஒரு பந்தயம். அந்த ஆண்டு முடிவில் நான் 143 கார்டுகளைச் சேகரித்திருந்தேன். என் நண்பர் 138 கார்டுகளைச் சேகரித்திருந்தார். வெற்றி பெற்ற எனக்கு இரவு உணவு வாங்கிக் கொடுத்தார். அதிலிருந்து கடன் அட்டைகளைச் சேகரிக்க முடிவு செய்தேன். 800 கார்டுகள்தான் செல்லுபடியாகின்றன. இவற்றின் மூலம் 10 கோடி ரூபாய் நான் பயன்படுத்திக்கொள்ள முடியும்’’ என்கிறார் வால்டர்.

இத்தனை கார்டுக்கும் பணம் செலுத்த வேண்டாமா?

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: இனி வாஷிங் மெஷினுக்கு வேலையில்லை!

 
 
masala_2686381f.jpg
 

வாஷிங்மெஷினுக்கு இனி வேலை இருக்கப் போவதில்லை. வாஷிங்மெஷின் வேலையை இனி டோல்ஃபி என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும். டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

வாஷிங்மெஷினை விட துணிகளை மிக மென்மையாகக் கையாளும் டோல்ஃபி. பருத்தி, பட்டு, பாலியெஸ்டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும். வாஷிங்மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டோல்ஃபி இயங்குவதால், சத்தமே வெளியே வராது. ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கியிருக்கிறார். ’’வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணிகளைத் துவைப்பது கடினமான விஷயமாக இருந்தது.

இதற்கு ஏதாவது ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அல்ட்ராசவுண்ட் பற்றித் தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். அல்ட்ராசோனிக் அலைகளை வைத்து துணி துவைக்கும் முயற்சியை உருவாக்கிவிட்டேன். டோல்ஃபியை எடுத்துச் சென்றால் சலவைக்குச் செலவு செய்யும் பணம், நேரம் மிச்சமாகும். துணி துவைப்பதே சந்தோஷமான விஷயமாக மாறிவிடும். கடந்த ஜனவரியில் திட்டத்தை ஆரம்பித்தோம். விரைவில் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு டோல்ஃபி 7,300 ரூபாய்’’ என்கிறார் லெனா சோலிஸ்.

அட! பிரமாதமான கண்டுபிடிப்பு!

சீனாவின் தந்தை மாவோவுக்கு ஹெனான் மாகாணத்தில் தங்க முலாம் பூசப்பட்ட மிகப் பிரம்மாண்டமான சிலை உருவாகி வருகிறது. மாவோ மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் தொழில்முனைவோர்களும் கிராம மக்களும் சேர்ந்து 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டி இந்தச் சிலையை உருவாக்கி வருகிறார்கள். தலைப் பகுதி மட்டும் இரண்டு மாடி உயரங்களுக்குப் பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 121 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை 9 மாதங்களாக உருவாக்கி வருகிறார்கள். சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சிக்குப் பிறகு மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சீன மக்களிடத்தில் அதிக மதிப்பும் செல்வாக்கும் மிக்கத் தலைவராக இருக்கிறார் மாவோ.

சிலை வைப்பதைவிட அவரது கொள்கையைப் பின்பற்றுவதுதான் மாவோவுக்குச் செய்யும் பெரிய மரியாதை…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article8076557.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நல்ல மனம் வாழ்க!

 
masala_2688338f.jpg
 

டெக்சாஸில் வசிக்கிறார் தொழிலதிபர் ரோன் ஸ்டர்ஜென். விடுமுறைக்காக ஜமைகாவுக்கு அவர் சென்றிருந்தபோது, டெக்சாஸில் புயல் வீசியது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். திரும்பி வந்த ஸ்டர்ஜென் இந்தக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போனார். 23 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய 2 வீடுகளை தங்குவதற்கு இடம் இல்லாதவர்களுக்குத் திறந்துவிடுவதாக ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார். பல்வேறு குடும்பங்கள் அவரது வீடு தேடி வந்தன. மாதத்துக்கு 1 டாலர் வாடகைக்கு 3 மாதங்கள் அந்த குடும்பங்களைத் தங்கச் சொல்லிவிட்டார்.

கார்கள் நிறுத்தக்கூடிய 10 அறைகளில் அவர்களது உடைமைகளை வைக்கச் சொல்லிவிட்டார். அவர்கள் வேறு வீடு தேடுவதற்கு வசதியாகத் தன்னுடைய கார்களையும் கொடுத்துவிட்டார். ஸ்டர்ஜெனின் இந்தச் செயலைப் பாராட்டி, இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ‘‘புயல் வீசியபோது நான் இங்கே இல்லை. செய்திகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இங்கே வந்தபோது நான் நினைத்ததை விட நிலைமை மோசமாக இருந்தது. தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால்தான், அவர்களால் மீண்டு வருவதற்கு யோசிக்கவே முடியும். என் வீட்டை விற்பதற்காக முடிவு செய்திருந்தேன். அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு, வீடற்றவர்கள் தங்கிக் கொள்ள இடம் அளித்தேன்.

தங்குபவர்களுக்கு இலவசமாக இருக்கிறோம் என்ற சங்கடம் வரக்கூடாது என்பதற்காக 1 டாலர் வாடகை. இந்த விஷயத்தை வெளியே தெரியப்படுத்தினால் என்னைப் போல பலரும் உதவக்கூடும் என்பதாலேயே ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். சிலர் என்னைப் பாராட்டுகிறார்கள். பலரும் இத்தனை அழகான வீட்டை இப்படிக் கொடுத்திருப்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள். எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. என்னால் முடிந்த சிறிய உதவியை செய்ய முடிந்ததில் மகிழ்ச்சிதான்!

3 மாதங்களுக்குப் பிறகு வீட்டை விற்கப் போகிறேன். வீடு இழந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை. விலையையும் கணிசமாகக் குறைத்துவிடுவேன்’’ என்கிறார் ஸ்டர்ஜென். சின்ன வயதில் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் ஸ்டர்ஜென். பிறகு படித்து, தொழிலதிபராக மாறியிருக்கிறார். வீடற்றவர்களின் கஷ்டம் அவரை விட வேறு யாருக்குப் புரியும் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

நல்ல மனம் வாழ்க!

பெரு நாட்டின் டிங்கா மரியா நகரில் வசிக்கும் எஸ்ட்ரெல்லா நாய்க்குப் பிறக்கும்போதே முன்னங்கால்கள் இல்லை. ஒன்றரை வயது எஸ்ட்ரெல்லா இன்று அந்த நகரின் பிரபலமான நாயாக வலம் வருகிறது. ‘‘பிறந்த சில மாதங்கள் 2 கால்களால் நடப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டது. பிறகு கங்காருவைப் போல பின்னங்கால்களால் தாவித் தாவிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. இன்று இரண்டு கால்கள் இல்லை என்ற கவலை இன்றி இயல்பாக வாழ்ந்து வருகிறது. தன்னம்பிக்கைக்கு உதாரணமாக குழந்தைகளுக்கு எஸ்ட்ரெல்லாவைச் சொல்லித்தான் வளர்க்கிறோம். தினமும் யாரவது இவளைப் பார்க்க வந்துகொண்டே இருக்கிறார்கள்’’ என்கிறார் உரிமையாளர் கார்குவாஸ்.

மிஸ் தன்னம்பிக்கை!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/article8081365.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வித்தியாசமான மனிதர்

 
masala_2689668f.jpg
 

உறைய வைக்கும் குளிர் நிலவும் உக்ரைனில் வெற்றுக் கால்களில் நடந்து வருகிறார் அண்ட்ரெஸ்ஜ் நோவோசியோ லோவ். கோடை காலத்தில் ஒரு நாள் வெற்றுக் கால்களில் பனி மீது நடந்து பார்த்தார். கால்களுக்கு இதமாக இருந்தது. அன்று முதல் தினமும் சிறிது நேரம் ஷூக்கள் இன்றி, வெற்றுக் கால்களுடன் நடந்து பழக ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் நடக்கும் நேரத்தை அதிகரித்தார். ஏப்ரல் மாதம் ஒருநாள் முழுவதும் ஷூக்கள் இன்றி வெளியே நடந்து திரிந்தார். ஷூக்களுடன் நடப்பதை விட வெற்றுக் கால்களில் நடப்பது பிடித்துவிட்டது. ‘’கடந்த 10 ஆண்டுகளாக நான் ஷூக்களோ, செருப்புகளோ வாங்கவே இல்லை. என் மனைவியும் குழந்தைகளும் முதலில் அதிர்ச்சியடைந்தனர்.

என்னுடன் நடந்து வரவே சங்கடப்பட்டனர். ஆரம்பத்தில் என்னைப் பலரும் வேடிக்கை பார்ப்பார்கள். இன்று எல்லோருக்கும் பழகிவிட்டது. என்னிடம் பணம் இல்லாததால்தான் ஷூ வாங்கவில்லை என்று நினைத்து, சிலர் ஷூக்களைக் கொடுத்திருக்கிறார்கள். நான் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். எனக்குப் பணப் பிரச்சினை இல்லை. என் விருப்பத்துக்காகவே ஷூ அணிவதில்லை என்று புரிய வைப்பேன். சமீப காலங்களாக பாதாளச் சுரங்கங்களில் செருப்பு இல்லாமல் நடப்பதற்கு காவலர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் ஒரு ஜோடி செருப்பு வாங்கி பையில் வைத்திருக்கிறேன். அனுமதிக்காத இடங்களில் மட்டும் பயன்படுத்திக்கொள்கிறேன்’’ என்கிறார் நோவோசியோலோவ்.

ரொம்பவே வித்தியாசமான மனிதர்!

அமெரிக்காவில் இயங்கி வருகிறது வின்ஸ்டன் க்ளப். பயணம் செய்பவர்களுக்கு இந்த க்ளப் மூலம் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இவர்களின் பிரதான வேலை. தன்னுடைய உறுப்பினர்களுக்குச் செலவு குறைக்கும் விதத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது இந்த களப். முன்பின் தெரியாதவர்களுடன் தங்கும் அறையைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது. ’’அந்நியருடன் அறையைப் பகிர்ந்துகொள்வது சிரமமான காரியம்தான். ஆனால் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

எங்கள் உறுப் பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியிருக்கிறோம். அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்திருக்கிறோம். முகவரி, தொலைபேசி எண்களும் எங்களிடம் இருக்கும். ஆண்களுக்கு ஆண்கள் அறைகளும் பெண்களுக்குப் பெண்கள் அறைகளும் அளிக்கிறோம். தயக்கத்துடன் வருபவர்கள், திரும்பிச் செல்லும்போது மிகப் பாதுகாப்பாகவும் செலவு குறைவாகவும் இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள். சியாட்டில், லாஸ் வேகாஸ், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செல்ஸ், போர்ட்லாண்ட் போன்ற இடங்களில் எங்கள் சேவையை விரிவாக்கியிருக்கிறோம்.

யாருக்காவது அறையில் தங்குபவர்களுடன் அசெளகரியம் இருந்தால், அவர்களுக்கு வேறு அறையை மாற்றிக் கொடுத்து விடுவோம்.’’ என்கிறார் வின்ஸ்டன் க்ளப் நிர்வாகி பைரோன். ’’அமெரிக்காவில் தங்கும் விடுதிகளின் கட்டணம் மிக மிக அதிகம். எங்களைப் போன்று அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்தக் கட்டணத்தைத் தாங்கும் சக்தி இல்லை. இப்பொழுது வசதியான தங்கும் விடுதிகளில் பாதிக் கட்டணத்துடன் அறை கிடைக்கிறது என்றால் அதற்கு வின்ஸ்டன் க்ளப்தான் காரணம். நல்ல திட்டம். எல்லா இடங்களுக்கும் தொடர வேண்டும்’’ என்கிறார் ஜான். வின்ஸ்டன் க்ளப் உறுப்பினர்களாக இருப்பதற்கு இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செலவு குறைந்தால் நல்ல விஷயம்தான்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article8085228.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: எலக்ட்ரானிக் பட்டாம்பூச்சி!

 
 
masala1_2457754f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜுலி ஆலிஸ் சாப்பெல். வேலை செய்யாத மின்னணுப் பொருட் களைக் கொண்டு அழகான உருவங்களை உருவாக்குகிறார். சர்க்யூட் போர்ட் போன்ற பொருட் களில் இறகுகளையும் உணர் கொம்புகளையும் பொருத்தி, அழகான பூச்சிகளாக மாற்றிவிடு கிறார்.

அவரது இல்லம் பூச்சிகள், வண்டுகளுக்கான அருங்காட்சி யகம் போலக் காணப்படுகிறது. சமீபத்தில் விற்பனையையும் ஆரம்பித்திருக்கிறார். எந்தப் பூச்சியை இணையத்தில் விற்பனைக்கு வைத்தாலும் உடனே விற்றுவிடுவதில் ஜுலிக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பூச்சியின் விலை சுமார் 7,500 ரூபாயிலிருந்து 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

என்னதான் அழகாக இருந்தாலும் ஒரு சின்னப் பூச்சிக்கு இவ்வளவு விலையா?

பிரிட்டனில் வசிக்கும் ரோன் மற்றும் ஜெஃப் நெருங்கிய நண்பர்கள். கடந்த 40 ஆண்டுகளாக ஒரே பிறந்தநாள் வாழ்த்து அட்டையைப் பயன்படுத்தி வருகிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் ஜெஃப் பிறந்தநாளுக்கு ரோன் ஒரு வாழ்த்து அட்டையை அனுப்பினார். ரோன் பிறந்தநாளுக்கு ஜெஃப் அதே வாழ்த்து அட்டையில் கையெழுத்திட்டு அனுப்பினார்.

இப்படி நாற்பது ஆண்டுகளாக ஒரே வாழ்த்து அட்டையை இருவரும் பயன்படுத்தி வருகிறார்கள். கையெழுத்துடன் வருடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வாழ்த்து அட்டை முழுவதும் கையெழுத்துகள் நிரம்பி இருக்கின்றன. காகிதப் பயன்பாட்டையும் செலவையும் குறைக்கும் விதத்தில் சின்ன வயதில் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள் நண்பர்கள்.

அடடா! நல்ல யோசனை!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article7373796.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: இரையாக வந்த ஆடு, புலியின் நண்பனான கதை!

 
tiger-goat_2690919f.jpg
 

இரையாக வந்த ஆடு, புலியின் நண்பனான கதை!

ரஷ்யாவில் உள்ள பிரைமோர்ஸ்கி சஃபாரி பார்க்கில் வசிக்கிறது அமுர் என்ற 3 வயது சைபீரியப் புலி. பார்க் ஊழியர்கள் புலிக்கு வாரம் இருமுறை முயல்களையும் ஆடுகளையும் வெட்டி, இறைச்சியை புலியின் கூண்டில் வைத்துவிடுவார்கள். ஆனால் கடந்த மாதம் புலியின் உணவுக்காக டிமுர் என்ற ஆட்டை உயிருடன் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர். “மறுநாள் ஆடு உயிருடன் இருக்கப் போவதில்லை என்று நினைத்தோம். என்ன ஆச்சரியம், இரண்டும் நண்பர்களாகிவிட்டன.

புலியும் ஆடும் ஒன்றாக நடை பயில்கின்றன. ஒன்றாக விளையாடுகின்றன. ஒன்றாக ஓய்வெடுக்கின்றன. புலியையும் ஆட்டையும் வேறு வேறு கூண்டுக்குள் அனுப்பிவைக்க முயன்றோம். புலி இடத்தைவிட்டு நகர மறுத்தது. ஆடு தூங்காமல், சாப்பிடாமல் அடம்பிடித்தது. மறுநாள் ஒரே கூண்டில்விட்ட பிறகுதான் ஆடும் புலியும் இயல்பு நிலைக்கு வந்தன. மீண்டும் நட்பைத் தொடர்ந்தன. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகும் நட்பு நீடிக்கிகிறது” என்கிறார் பார்க் அதிகாரி. “ஆடு, புலியின் கூடாநட்பு நீண்ட நாட்கள் நிலைக்காது. எப்போது புலிக்குப் பசி எடுக்கிறதோ, அன்று ஆடு பலியாகிவிடும். விரைவில் இது நடக்கும்” என்கிறார் பயோடைவர்சிடி ஒருங்கிணைப்பாளர் விளாடிமிர் க்ரெவெர். புலியும் ஆடும் தலையை இடித்துக்கொண்டு, தண்ணீர் பருகும் காட்சியை உலகில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியுமா!

தாவரங்களையும் கைக்குள் கொண்டுவந்து விட்டானே மனிதன்…

செடிகளை வளர்ப்பதற்காக ‘பேரட் பாட்’ என்ற ஹைடெக் பூந்தொட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூந்தொட்டியில் எல்லாவிதமான செடிகளையும் வளர்க்க முடியும். சென்சார்கள் மூலம் தொட்டியில் வெளிச்சம், ஈரப்பதம், வெப்பநிலை, உரத்தின் அளவு போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. செடிக்கு இன்னும் அதிக வெளிச்சமோ, உரமோ தேவை என்றால் ஸ்மார்ட் போனில் தகவல் வந்துவிடும். இதற்காக ஃப்ளவர் பவர் என்ற அப்ளிகேஷனை ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.

அதிகப்படியான தண்ணீர் ஊற்றினால், அது தொட்டியின் இன்னொரு பகுதியில் சேமிக்கப்பட்டுவிடும். 2 நாட்கள் ஊரில் இல்லாவிட்டால், சேமிக்கப்பட்ட நீர் செடிக்குச் சென்றுவிடும். செடி வாடாது. ஒரு வாரம் வரை வெளியூர் செல்வதென்றால் 2 லிட்டர் தண்ணீரைத் தொட்டியில் சேமித்துவிட்டு, கிளம்பிவிடலாம். தண்ணீர் சேமிக்கும் முறையில் வைத்துவிட்டுச் சென்றால் 3 முதல் 4 வாரங்கள் வரை செடிகள் தாக்குப்பிடித்துவிடும். ஒரு செடிக்கு என்னவெல்லாம் தேவை என்பதை மனிதர்களைவிட மிகத் துல்லியமாக இந்தத் தொட்டி சொல்லிவிடும். பாரிஸைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தப் பூந்தொட்டிகளைத் தயாரித்து வருகிறது. 6,600 ரூபாய் விலையுள்ள இந்தப் பூந்தொட்டி பேட்டரிகளால் இயங்குகிறது. மூலிகை, தேயிலை, பூச்செடிகள் என்று 7 ஆயிரம் விதமான செடிகளை இந்தத் தொட்டியில் வளர்க்கலாம் என்கிறார்கள்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article8088948.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா - ஏழைகளின் தேவதை!

 
 
house_2456679h.jpg
 

வாஷிங்டனில் வசிக்கிறார் 9 வயது ஹெய்லி. ஏழைகளுக்கு அம்மா உணவு வழங்குவது பற்றி, 5 வயதில் கேள்வி கேட்டார் ஹெய்லி. “பசிப்பவர்களுக்கு உணவு கொடுப்பது நம் கடமை. சக மனிதர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்’’ என்று கூறினார் அம்மா. அன்றுமுதல் தன் தோட்டத்தில் காய்கறிகளையும் பழங்களையும் தானே விளைவிக்க ஆரம்பித்தார் ஹெய்லி. வாரத்துக்கு ஒருமுறை ஏழைகளுக்குக் காய்கறிகளையும் பழங்களையும் வழங்கி வந்தார். வீடற்ற ஏழைகள் குளிரிலும் மழையிலும் தங்க இடமின்றி கஷ்டப்படுவதைக் கண்டார். உடனே அவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டார்.

அம்மா, தாத்தாவின் உதவியுடன் தானே மிகச் சிறிய மர வீட்டைக் கட்ட ஆரம்பித்தார். வெயிலும் குளிரும் தாக்கா வண்ணம் வீட்டின் கூரையை அமைத்தார். ஜன்னல் கண்ணாடிகளைப் பொருத்தினார். தேவையான இடத்துக்கு நகர்த்திச் செல்லும் விதத்தில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒரு மனிதர் தங்கிக்கொள்ளலாம். சூரிய சக்தி மூலம் இந்த வீட்டுக்கு மின் இணைப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. “வீட்டுக்கான பொருட்களைப் பாதி விலையில் அளித்திருக்கிறார்கள் சில நல்ல உள்ளங்கள்.

ஏழைகளின் தேவதை!

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ரோசா வெர்லூப். நைலான் காலுறைகளையும் குண்டூசிகளையும் வைத்து விதவிதமான மனித உருவங்களை உருவாக்கி வருகிறார். ஆயிரக்கணக்கான பழைய காலுறைகளைச் சேகரித்து, மனித உருவங்களைச் செய்கிறார். இவரின் படைப்புகளைக் கண்டு பெரும்பாலான மக்கள் முகம் சுளிக்கவே செய்கிறார்கள். காரணம், இவை அழகாக இருப்பதில்லை. மனிதர்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. ஆனால் கலை ஆர்வம் மிக்கவர்கள், இவரது படைப்புகளில் சக்தி, மனவலி, அமைதி போன்றவை வெளிப்படுவதாகப் பாராட்டுகிறார்கள்.

தூக்கி எறியும் பொருட்களை வைத்து, உங்க கற்பனையில் அசத்தியிருக்கீங்க ரோசா!

ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் மெக்ஸிகோவின் நஹுவா கிராமத்தில் வித்தியாசமான விழா நடைபெறுகிறது. ஆண்கள் விவசாய வேலைகளுக்குச் சென்றுவிடுவதால், இந்த விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். விழா அன்று அதிகாலையில் எழுந்து வான்கோழி, கோழி, அரிசியில் செய்யப்பட்ட உணவு, வேக வைத்த முட்டைகள், ரொட்டி, குழம்பு என்று விதவிதமாகச் செய்துகொண்டு ஓரிடத்தில் கூடுகிறார்கள். உணவுகளை அழகாக காட்சிக்கு வைக்கிறார்கள். மலர்களால் அந்த இடத்தை அலங்கரிக்கிறார்கள்.

கன்னிமேரியை வணங்கி, மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். பிறகு இருவர் இருவராகக் களத்தில் இறங்குகிறார்கள். ஒருவர் முகத்தில் ஒருவர் தாக்குதல் தொடுக்கிறார்கள். மூக்கு, வாய் போன்ற இடங்களில் இருந்து ரத்தம் கொட்டும்போது, அவற்றை ஒரு வாளியில் சேகரிக்கிறார்கள். காயம் அடைந்தவர்கள் களத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அடுத்து வேறு இருவர் சண்டை இடுகிறார்கள். இப்படி ஏராளமானவர்கள் சண்டையிட்டு, ரத்தத்தைச் சேமிக்கிறார்கள். சேமிக்கப்பட்ட ரத்தத்தில் தண்ணீரைக் கலந்து விவசாய நிலங்களில் தெளிக்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கடவுள் மகிழ்ந்து, தேவையான மழையைக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள்.

விழாவின் இறுதியில் காட்சிக்கு வைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குச் செல்கிறார்கள். “ ஒருவர் முகத்தில் இருந்து ரத்தம் வரவழைக்கவே தாக்குகிறோம். புதிதாகப் பார்ப்பவர்களுக்குக் கோரமாகத் தெரியலாம். இது எங்கள் பாரம்பரியம்’’ என்கிறார் விழாவில் கலந்துகொண்ட ஒரு பெண்.

ம்... இன்னும் எளிமையாக விழாவை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடாதா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/article7367803.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: கால்வாய்களில் பிடிபடும் வாகனங்கள்!

 
 
masala_2693236f.jpg
 

ஆம்ஸ்டர்டாமில் பெரும்பாலான மக்கள் சைக்கிள்களை விரும்புகின்றனர். 40% முதல் 60% வரை சைக்கிள் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆண்டுக்கு 8,80,000 சைக்கிள்கள் முதல் 10 லட்சம் சைக்கிள்கள் வரை நகரில் வலம் வருகின்றன. ஆம்ஸ்டர்டாமில் 100 கி.மீ. தூரத்துக்கு 165 கால்வாய்கள் ஓடுகின்றன. இந்தக் கால்வாய்களில் பழைய சைக்கிள்களைப் போடுவதை மக்கள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். கால்வாய்களில் போடப்பட்டுள்ள சைக்கிள்களை பெரிய ஹைட்ராலிக் இயந்திரம் வைத்து தினமும் அள்ளுவதே முக்கியமான வேலையாக நடைபெற்று வருகிறது.

எதற்காக கால்வாய்களில் பழைய சைக்கிள்களைப் போடுகிறார்கள் என்பதற்குச் சரியான காரணம் இல்லை. 1960-ம் ஆண்டு முதல் கால்வாய்களில் இருந்து சைக்கிள்கள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. சைக்கிள்கள் தவிர, குளிர்சாதனப் பெட்டிகள், ஒரு சில கார்கள் கூட கால்வாயிலிருந்து எடுக்கப்படுகின்றன. இவை எல்லாம் பழைய உலோகம் வாங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சைக்கிள்கள் அள்ளும் இடங்கள் ஆம்ஸ்டர்டாமில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களாக இருக்கின்றன.

கால்வாய்களில் பிடிபடும் வாகனங்கள்!

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் ரத்தாகிவிட்டது. தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு ஓர் உத்தரவு போட்டுவிட்டன. இரண்டாவது குழந்தை பெற விரும்புபவர்கள் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். ஒரே காலகட்டத்தில் இருவர் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால், இருவரில் ஒருவருக்கே பேறுகால விடுமுறை அளிக்கப்படும். இன்னொருவர் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். அதாவது அலுவலக வசதிப்படி குழந்தையை குறிப்பிட்ட காலத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பல பெண்கள் பேறுகால விடுப்பில் சென்றால் வேலை பாதிக்கப்படுகிறது. குறைந்த காலத்துக்கு இன்னொருவரை வேலைக்கு அமர்த்துவதும் கடினமாக இருக்கிறது. அவர்களின் வேலைகளை மற்றவர்கள் மீது சுமத்துவதும் நியாயமில்லை என்று நிர்வாகம் நினைப்பதால் இந்தப் பேறுகால விண்ணப்பப்படிவம் வைக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குழந்தைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சில நிறுவனங்கள் அபராதம் விதிக்கின்றன. பதவி உயர்வை ரத்து செய்கின்றன. போனஸ் தர மறுக்கின்றன. சீனப் பெண்களில் ஒரு பகுதியினர் தனியார் நிறுவனங்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றனர். இன்னொரு பகுதி பெண்களோ, இது பெரும்பாலான நிறுவனங்களில் நடப்பதுதான். திட்டமிட்டு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள், அலுவலகத்துக்குப் பிரச்சினை இல்லாமல் பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்கிறார்கள்.

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்க வைத்துவிடுவது நோக்கமாக இருக்குமோ….

50 வயது அலெக்சாண்டர் பைரிவட்ரிக் செர்பியாவைச் சேர்ந்த ஒரு பல் மருத்துவர். 15 ஆண்டுகள் அடர்ந்த வனத்தில் வாழ்ந்துவிட்டு, கடந்த வாரம் பெல்கிரேடு நகருக்கு வந்து சேர்ந்தார். 9 வயதில் அலெக்சாண்டரை அழைத்துக்கொண்டு செர்பியாவில் இருந்து செக் குடியரசுக்கு வந்தார் அவரது அம்மா. பல் மருத்துவம் படித்து, டெப்லிஸ் நகர் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அம்மா இறந்து போனார். அவர் செக் நாட்டுப் பிரஜை இல்லை என்பதால் வேலையை இழந்தார். வீட்டை இழந்தார். வேறு வழியின்றி காட்டு வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

காட்டுக்குள் வரும் மனிதர்கள் விட்டுச் சென்ற உணவுகளைச் சாப்பிட்டார். துணிகளைப் போட்டுக்கொண்டார். பீட்டர் சில்வா என்ற செக் குடியரசைச் சேர்ந்த பேராசிரியர் அடிக்கடி காட்டுக்கு வருவார். அலெக்சாண்டரின் கதையைக் கேட்டறிந்தார். செர்பியாவில் உறவினர்களைத் தேடினார். அலெக்சாண்டர் இறந்துவிட்டதால், அப்பாவின் சொத்துகள் அனைத்தும் தனக்குத் தருமாறு நீதிமன்றத்தில் அவரது சகோதரி வழக்கு தொடர்ந்ததையும் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்கவில்லை என்பதையும் அறிந்தார். அலெக்சாண்டரை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் நிறுத்தினார். அப்பாவின் சொத்துகளில் பாதி அவருக்கு வந்து சேர்ந்தது.

நாட்டுக்கு அழைத்து வந்த பீட்டருக்குதான் நன்றி சொல்லணும்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8096754.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மரக் கிளைகள் சிற்பம்!

 
 
masala_2694388f.jpg
 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் டோனி ஃப்ரெட்ரிக்சன். காய்ந்து விழும் மரக் கிளைகள், குச்சிகளை வைத்து அற்புதமாக உருவங்களைக் கொண்டு வந்துவிடுகிறார்! உலோகத்தையோ, கற்களையோ செதுக்கி உருவங்களைக் கொண்டு வராமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த சிற்பங்களை உருவாக்க நினைத்தார். காடுகளில் காய்ந்து விழும் குச்சிகள், மரக் கட்டைகளை வைத்து 2007-ம் ஆண்டு முதல் சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.

‘‘எந்த மாதிரி உருவத்தை உருவாக்கப் போகிறேன் என்பதை முடிவு செய்துகொள்வேன். அதற்குச் சில குறிப்புகளை எடுத்துக்கொள்வேன். பிறகு காட்டுக்குள் காய்ந்த குச்சிகளைத் தேடி அலைவேன். ஒவ்வொரு குச்சியை எடுக்கும்போதும் அது எந்தப் பகுதிக்குப் பயன்படுத்த முடியும் என்று யோசித்து வைத்துக்கொள்வேன். அளவு, வடிவம் என்று பிரித்து தனித் தனிக் குச்சிகளாகச் சேர்த்துக்கொள்வேன். பிறகு உருவங்களை உருவாக்கிவிடுவேன்.

நாய், காண்டாமிருகம், நெருப்புக்கோழி என்று ஏராளமான உருவங்களைச் செய்து என் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறேன். என் உருவாக்கத்தைத்தான் பாராட்டுகிறார்களே தவிர, இயற்கையைப் புரிந்துகொள்ள யாரும் முயற்சி கூட செய்வதில்லை. 2010-ம் ஆண்டு ஒரு கண்காட்சி நடத்தினேன். அதில் மீன்களையும் மாசாய் வீரர்களையும் காட்சிப்படுத்தினேன். அதற்கடுத்த ஆண்டு பறவைகளை மட்டும் காட்சிக்கு வைத்தேன். கற்பனைத் திறன் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்’’ என்கிறார் டோனி.

அசத்துறீங்க டோனி!

முதலைகள் என்றாலே முரட்டுத்தனமானவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். கானாவில் உள்ள பாகா நகரில் 2 முதலை குளங்கள் இருக்கின்றன. குளத்தில் குழந்தைகள் குளிக்கிறார்கள். பெண்கள் துவைக்கிறார்கள். அவர்களுக்கு அருகிலேயே முதலைகள் ஒரு பொம்மை போல சாதுவாக அமர்ந்திருக்கின்றன. இதுவரை இந்த ஊரில் ஒருவரும் முதலை தாக்கி உயிர் இழந்ததில்லை என்கிறார்கள். நகரில் முக்கியமான மனிதர்கள் இறந்து போனால், ஒரு முதலையும் இறந்துவிடும் என்கிறார்கள். ஒரு காலத்தில் மனிதர்கள் முதலைக் கறியைச் சுவைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சிங்கம் பாகா நகர் மனிதரைத் துரத்த, அவர் முதலையின் உதவியை நாடியிருக்கிறார். தன்னை சிங்கத்திடமிருந்து பத்திரமாகக் காப்பாற்றி, அக்கரை சேர்த்தால் இனி முதலைகளை ஒருவரும் சாப்பிட மாட்டார்கள் என்று சத்தியம் செய்திருக்கிறார். முதலையும் அதை ஏற்றுக்கொண்டு, அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்திருக்கிறது. அதிலிருந்து இங்கே யாரும் முதலைகளுக்குத் தீங்கு இழைப்பதில்லை. முதலைகளும் மனிதர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற கதையும் சொல்கிறார்கள். பாகா நகர் முதலைகளைப் பார்ப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். முதலைகளுக்கு இறைச்சியை உணவாக அளிக்கிறார்கள். பிறகு பெரியவர்களும் குழந்தைகளும் முதலைகளின் முதுகில் அமர்ந்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். மனிதர்களுக்கும் முதலைகளுக்கும் நல்ல புரிந்துணர்வு இங்கே இருக்கிறது.

அடடா! ஆச்சரியமா இருக்கே!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article8100403.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாய்க்குட்டி போல பின்தொடரும் ஸ்மார்ட் சூட்கேஸ்!

 
 
masala_2696078f.jpg
 

சூட்கேஸ்களைக் கை வலிக்க தூக்கிக்கொண்டோ, இழுத்துக்கொண்டோ செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. நீங்கள் நடக்கும்போது சூட்கேஸும் உங்களைப் பின்தொடர்ந்து வரும்! இஸ்ரேலைச் சேர்ந்த என்யுஏ ரோபோடிக்ஸ் நிறுவனம் ‘ஸ்மார்ட்’ சூட்கேஸை உருவாக்கியிருக்கிறது. சூட்கேஸில் நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது. சமதளமான தரைகளில் கேமரா சென்சார்கள் மூலம் சூட்கேஸ் உங்களைப் பின்தொடர்ந்து வரும். யாராவது சூட்கேஸை எடுத்தார்கள் என்றால், அலாரம் அடித்து திருடனைக் காட்டிக் கொடுத்துவிடும்.’’சென்சார் நெட்வொர்க், கம்ப்யூட்டர் விஷன், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூன்றையும் இணைத்து இந்த சூட்கேஸை உருவாக்கியிருக்கிறோம்.

ஸ்மார்ட்போனில் எங்கள் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, ‘ஃபாலோ மீ’ என்ற பட்டனை அழுத்தினால், சூட்கேஸ் இயங்க ஆரம்பித்துவிடும். தினசரி வாழ்க்கையில் ரோபோக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்’’ என்கிறார் நிறுவனர் அலெக்ஸ் லிப்மேன். இன்னும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது. சில விஷயங்களை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால் நகரும் சூட்கேஸ் சந்தைக்கு வர சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.!

நாய்க்குட்டி போல பின்தொடரும் ஸ்மார்ட் சூட்கேஸ்!

ஜப்பானில் உள்ள தொலைதூரக் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரே ஒரு மாணவிக்காக, தினமும் 2 ரயில்கள் இயங்குவதாகச் சொல்கிறார்கள். கியு ஷிரடாகி ரயில் நிலையம் ஹொக்கைடோ தீவில் இருக்கிறது. போதுமான பயன்பாடு இல்லாததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய ரயில்வே துறை இந்த ஸ்டேஷனை மூடிவிட முடிவெடுத்தது. அந்தக் கிராமத்தில் இருந்து ஒரு பெண் மேல்நிலைப் பள்ளிக்குத் தினமும் படிக்கச் செல்லும் விஷயம் தெரிந்தது. அதனால் அந்தப் பெண் படித்து முடிக்கும் வரை ரயிலை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தது. இந்த வழியே 2 ரயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மாணவி காலை பள்ளிக்குச் செல்வதற்கும், மாலை வீட்டுக்குத் திரும்புவதற்கும் இந்த ரயில் சேவை.

மார்ச் மாதத்துடன் மாணவியின் படிப்பு முடிகிறது. அதனால் அதற்குப் பிறகு இந்தக் கிராமத்துக்கு ரயில் சேவை இல்லை. இப்படி ஒரு விஷயம் உலகம் முழுவதும் பரவி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் கல்விக்கு உதவும் ஜப்பானிய ரயில்வே துறைக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இன்னொரு பக்கம் ஒருவருக்காக இத்தனை செலவு செய்ய வேண்டுமா என்று கேட்கிறார்கள். தைவானில் வெளிவந்த ஒரு செய்தித்தாளில், அந்த மாணவி மேலும் சில மாணவிகளுடன் வேறு ஸ்டேஷனில் பள்ளிக்குச் செல்வதாகவும் மாலை 3 ரயில்கள் இயங்குவதால் பிரச்சினை இல்லாமல் வீடு வந்து சேர்வதாகவும் தகவல் வெளிவந்தி ருக்கிறது.

கதையோ, உண்மையோ… சுவாரசியமாக இருக்கிறது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/article8105926.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: காப்புரிமை ராஜா

2njagzl.jpg

 

ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் யோஷிரோ நகமாட்சு ஒரு கண்டுபிடிப்பாளர். இதுவரை 4000 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறார்.

இதனால் ‘காப்புரிமை ராஜா’ என்று இவரைச் செல்லமாக அழைக்கிறார்கள். 87 வயது நகமாட்சு இன்றும் சுறுசுறுப்பாகத் தன் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருக்கிறார். ஓய்வெடுத்துக்கொள்ளும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்கிறார். தான் 144 வயது வரை வாழப் போவதாகவும் அதற்குள் 6000 காப்புரிமைகளையாவது பெற்றுவிடுவேன் என்று நம்பிக்கையோடு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு 2013-ம் ஆண்டு விந்துப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் மட்டுமே நகமாட்சு உயிரோடு இருப்பார் என்றார்கள் மருத்துவர்கள். இன்று வரை நகமாட்சு துடிப்புடன் இருக்கிறார். ரேடியேஷன் தெரபியும் அறுவை சிகிச்சையும் இந்த வயதில் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

தானே தனக்கான மருத்துவத்தில் இறங்கினார் நகமாட்சு. மாற்று மருத்துவத்தில் ஈடுபட்டார். புற்றுநோயை அழிக்க வல்ல உணவுகளை எடுத்துக்கொண்டார். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் தேநீர்களைப் பருகினார். வழக்கமான முறையில் இல்லாமல் விநோதமான முறையில் பாடல்களைப் பாடி, மூளைக்குப் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை வழங்கினார். ‘’14 வயதில் என் அம்மா சோயா சாஸை பெரிய கேனிலிருந்து சிறிய கேனுக்கு மாற்றுவதற்கு சிரமப்பட்டார். ஒரு பம்ப் உருவாக்கினேன். அதுதான் என் முதல் கண்டுபிடிப்பு. இன்று உலகம் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றுவதற்குப் பயன்படும் பம்ப் என்னுடைய கண்டுபிடிப்புதான். என் மருத்துவத்தில் புற்றுநோய் முற்றிலும் குணமாகி விட்டால், அது மருத்துவத்துறைக்கு மிகப் பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும். நான் மரணிக்கும் நேரத்திலும் உற்சாகமாக ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்துக்கொண்டுதான் இருப்பேன்’’ என்கிறார் டாக்டர் நகமாட்சு.

எடிசனையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரே இந்த நகமாட்சு!

ப்ரூக்ளினில் உள்ள கிங்ஸ்டன் அவென்யுவில் இருக்கிறது இந்த வித்தியாசமான உணவு விடுதி. சுவரில் கதவு கிடையாது. ஜன்னல் போன்று பகுதி இருக்கிறது. இது வழியாக சுவை மிகுந்த கரீபியன் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜமைக்காவிலிருந்து வந்த பப்பா என்பவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவு விடுதியை ஆரம்பித்தார்.

இந்த விடுதியின் பெயரே ‘ஹோல் இன் தி வால்’! தினமும் குறிப்பிட்ட நேரம் மட்டும் சுவரில் உள்ள இந்த ஜன்னல் திறக்கப்படும். உணவு தீர்ந்து போகும் வரை விற்பனை நடக்கும். பிறகு ஜன்னலும் மூடப்பட்டுவிடும். ஒவ்வோர் உணவும் 2 விதமான அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகாக பார்சல் செய்யப்பட்ட உணவுகளை வாங்கிக்கொண்டு, வீட்டில் வைத்துச் சாப்பிட வேண்டும். அங்கே உட்கார்ந்து சாப்பிடும் வசதி இல்லை. “இந்த விடுதியைத் தெரிந்தவர்கள் மட்டுமே உணவு வாங்கிச் செல்வார்கள்.

உணவின் சுவை அலாதி. அதனால் தினமும் விடுதி திறந்திருக்கும் நேரத்தில் கூட்டம் அதிகமிருக்கும்’’ என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

மயிலாப்பூர் ஜன்னல் கடையைப் பார்த்து ஆரம்பித்திருப்பாரோ!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/article8111244.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மீன் தொட்டிகளாக மாறும் ஐமேக் கம்ப்யூட்டர்கள்

i3tdty.jpg

ஆப்பிள் ஐமேக் கம்ப்யூட்டர்களை அழகான மீன் தொட்டிகளாக மாற்றியிருக்கிறார் ஜாக் ஹார்ம்ஸ். 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்பிள் ஐமேக் ஜி3 கம்ப்யூட்டர்கள் அழகான வடிவங்களோடும், கண்கவர் வண்ணங்களோடும் வெளிவந்தன. படிப்பை முடித்த உடன் ஜாக், ஒரு பழைய கம்ப்யூட்டர் விற்கும் இடத்தில் வேலை செய்து வந்தார். தேவையற்ற அழகான கம்ப்யூட்டர்களை உடைத்துப் போடுவதற்குப் பதில், வேறு விதத்தில் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். அதன் விளைவாக மீன்தொட்டி உருவானது. ஐமேக் ஜி3 கண்ணாடிகள் வித்தியாசமானவை.

உள்ளே இருக்கும் பொருட்களை இன்னும் அழகாகவும் பெரிதாகவும் காட்டின. ஒரு கம்ப்யூட்டரை மீன் தொட்டியாக மாற்றினார். பகலில் ஒருவிதத்தில் காட்சியளித்த மீன் தொட்டி, இரவில் விளக்கு வெளிச்சத்தில் வேறொரு விதத்தில் அழகாகத் தெரிந்தது. தன்னுடைய ஐமேக் மீன் தொட்டியை விளம்பரம் செய்தார். இதுவரை 1000 ஐமேக் மீன் தொட்டிகளை உலகம் முழுவதும் விற்பனை செய்திருக்கிறார் ஜாக். ஒரு மீன் தொட்டியின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய்.

புது கம்ப்யூட்டர்களை தேடிக்கொண்டிருக்கும் உலகில், ஜாக் பழைய கம்ப்யூட்டர்களைத் தேடி அலைகிறார்…

அமெரிக்காவில் வசித்து வருகிறார் 48 வயது டான் ஷா. அவர் பிறக்கும்போதே மூச்சுக் குழாயில் கட்டி இருந்தது. அந்தக் கட்டியை அகற்றும்போது, அவருடைய தாடையின் ஒரு பகுதியையும் நீக்கவேண்டியதாகிவிட்டது. பலமுறை தாடையைச் சரி செய்வதற்காகச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. 20 வயதுக்கு மேல் இனி அறுவை சிகிச்சை செய்துகொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் டான் ஷா. ‘’பள்ளியில் யாரும் என்னுடன் பேச மாட்டார்கள். மாணவர்கள் கிண்டல் செய்வார்கள். அந்த வயதில் நான் அளவுக்கு அதிகமாகத் துன்பப்பட்டேன்.

api71e.jpg

ஆனால் என் குடும்பம் என்னைத் தேற்றிவிட்டது. என் முகம் என்னைப் பிரதிபலிக்கவில்லை. ஒருவருடைய முகத்தை வைத்து அவருடைய குணத்தை, சிந்தனையை, அன்பை, திறமையை எடை போடாதீர்கள். எவ்வளவு காயம் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை’’ என்கிறார் டான் ஷா. 22 வயதில் மோசமான காதல் தோல்வியைச் சந்தித்தவருக்கு, 28 வயதில் இயான் ஷாவின் அறிமுகம் கிடைத்தது. தற்போது 20-வது திருமண ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாட இருக்கிறார்கள். ’’இந்த 20 ஆண்டுகளில் ஒரு நொடி கூட நான் தோற்றப் பொலிவு குறைந்தவளாக உணரவில்லை. அதற்குக் காரணம் இயான் ஷா!’’ என்கிறார் டான் ஷா. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் மனித மாண்புகளைப் பற்றிய கருத்துகளைப் பரப்பி வருகிறார் டான் ஷா.

ஒருவரின் முகத்தை வைத்து எடை போடக்கூடாது…

பிரிட்டனைச் சேர்ந்தவர் 55 வயது கெவின். பிரிட்டன் ராணுவத்தில் பணிபுரிந்த கெவினின் தந்தை வீட்க்ராஃப்ட், யுத்தம் முடிந்து ஜெர்மன் மனைவியுடன் திரும்பி வந்தார். கெவினின் ஐந்தாவது பிறந்த நாளுக்கு ஹிட்லரின் ஹெல்மெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அதற்குப் பிறகு ஹிட்லர் பயன்படுத்திய கார் ஏலத்துக்கு வந்தது. அதை வாங்க வேண்டும் என்று அடம் பிடித்தார் கெவின். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாஜிகளின் பொருட்களைச் சேகரிக்கும் ஆர்வம் வீட்க்ராஃப்ட்டுக்கு வந்தது.

நாஜிகளின் துப்பாக்கிகள், ராணுவ ஆடைகள், பல்வேறு விதமான ஹிட்லரின் தலைகள், ஹிட்லர் கையெழுத்திட்ட மெயின் காம்ப் சுயசரிதை நூல், நாஜிகளின் சின்னங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் என்று ஏராளமான பொருட்களைச் சேகரித்துவிட்டார். ‘’நான் நாஜிகளின் ஆதரவாளன் அல்ல. வரலாற்றில் தவிர்க்க முடியாத, மோசமான நாஜிகளின் செயல்களை, எதிர்காலச் சந்ததியினர் உணர்ந்துகொள்வதற்காகவே சேகரித்தேன்’’ என்றார் வீட்க்ராஃப்ட். இன்று இந்த அருங்காட்சியகத்தின் மதிப்பு சுமார் 100 கோடி என்கிறார்கள். உண்மையான மதிப்பு இன்னும் தெரியவில்லை.

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இஸ்ரேல், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஹிட்லர் மற்றும் நாஜிகள் தொடர்பான வியாபாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரஷ்யா, அமெரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகளில் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறார் கெவின்.

ஜெர்மனியில் கூட இவ்வளவு பொருட்கள் இருக்குமான்னு தெரியலையே கெவின்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7361854.ece?ref=relatedNews

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: தேனீக்கள் வரைந்த ஓவியங்கள்!

 
 
masala1_2453465f.jpg
 

சீனாவில் வசிக்கிறார் ரென் ரி. இவர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். தேன் அடைகளிலிருந்து உலக வரைபடங்களை உருவாக்கியிருக்கிறார். 2007ம் ஆண்டு தேனீ வளர்க்க ஆரம்பித்தவர், விரைவிலேயே அதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டார். தேனீக்களின் ஒவ்வோர் அசைவையும் அவற்றுக்கான காரணங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். ராணித் தேனீயின் கட்டுப்பாட்டில்தான் மற்ற தேனீக்கள் இயங்குகின்றன.

தேன் கூட்டைத் தனக்குத் தேவையான அளவுக்கு மாற்றி வைத்துவிடுவார். ராணித் தேனீ அந்தக் கோணத்தில் வேலை செய்துகொண்டிருக்கும். போதிய அளவு கூட்டில் மெழுகு நிரப்பப்பட்ட உடன் வேறொரு கோணத்தில் கூட்டை மாற்றி வைத்து விடுவார். மறுநாள் அந்தக் கோணத்தில் ராணித் தேனீ நகரும். இப்படி உலக வரைபடத்தைத் தேன் கூட்டில் உருவாக்கிவிடுகிறார் ரென். மனிதனுக்கும் தேனீக்களுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் அருமையான உறவு பாலத்தை அமைத்திருக்கிறார் என்று ரென்னைப் பாராட்டுகிறார்கள்.

உலகிலேயே தேன் கூட்டில் உலக வரைபடங்களை வரையும் கலைஞர் ரென் மட்டுமே! மனிதர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து, மேல் நோக்கி கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் தேனீக்கள், புவி ஈர்ப்பு விசையுடன் போட்டி போடாமல் கீழ்நோக்கி கூட்டை உருவாக்குகின்றன என்கிறார் ரென். ஷாங்காய், மிலன், பெய்ஜிங், வெனிஸ் போன்ற நகரங்களில் ரென்னின் உலக வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

ரென்னின் வழிகாட்டலில் தேனீக்கள் வரைந்த ஓவியங்கள்!

இங்கிலாந்தில் வசிக்கும் விவசாயி டேவிட் சிம்மோன்ஸ், காலிஃப்ளவர்கள் பாடுவதாகச் சொல்கிறார். மலைப்பாங்கான குளுமையான இடங்களில் காலிஃப்ளவர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 3 செ.மீ. அளவுக்கு வளர்கின்றன. அப்படி வளரும்போது தினமும் மெல்லிய ஒலியை எழுப்புகின்றன. இப்படிச் சத்தம் வந்தால் காலிஃப்ளவர் வேகமாக வளர்கிறது என்று அர்த்தம் என்கிறார் டேவிட்.

முட்டைக்கோசு போன்ற தாவரங்கள் ஆபத்தைச் சந்திக்கும்போது ஒருவித வாயுவை வெளியேற்றுகின்றன. பூச்சிகள் அமரும்போது மெல்லிய ஒலியை எழுப்புகின்றன என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பான் தெரிவித்திருக்கிறார். அந்த விஷயத்தை டேவிட் உறுதி செய்திருக்கிறார்.

ஆஹா! மனிதனுக்குத் தெரியாத இன்னும் எவ்வளவு அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றனவோ

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7360831.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் மிகப்பெரிய மரம்

 
 
masala_2701625f.jpg
 

379.1 அடி உயரத்துடன் உலகிலேயே மிகப் பெரிய மரமாக இருக்கிறது ஹைபெரியன். இதுவரை மிக உயரமான மரமாக இருந்த கலிபோர்னியா ஸ்ட்ராடோஸ்பியர் ஜெயண்ட் செம்மரத்தின் உயரம் 369 அடிகள். கிறிஸ் அட்கின்ஸ், மைக்கேல் டெய்லர் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவில் உள்ள செம்மர தேசியப் பூங்காவில் மரங்களை ஆய்வு செய்தனர். அப்போதுதான் இதுவரை உயரமாக இருந்த ஸ்ட்ராடோஸ்பியர் ஜெயண்ட் மரத்தை விட ஹைபெரியன் உயரமாக இருந்ததைக் கண்டறிந்தனர்.

சூழலியலாளர் ஸ்டீவ் சில்லெட் ஹைபெரியனை அளந்து பார்த்தார். ஆனால் துல்லியமாக அளக்க முடியவில்லை. தற்போது மிக நவீனமான கருவிகளுடன் மரத்தின் உயரத்தை அளக்க முடிந்திருக்கிறது. அத்துடன் ஹைபெரியன் பற்றிய ஆவணப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஹைபெரியனின் உயரம் குறைவான கிளையே 25 மாடி உயரத்துக்கு இருக்கிறது! அதனால் ஹைபெரியனை அளப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது. அட்கின்ஸ், டெய்லரின் கண்டுபிடிப்பு உண்மை என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் உலகிலேயே மிக உயரமான மரம் ஹைபெரியன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஹைபெரியனின் உயரம் மிகப் பெரிய சாதனை என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான செம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. 1970-ம் ஆண்டு 15 சதவீதமாக எஞ்சியிருந்த செம்மரங்கள், இன்று 4 சதவீதமாகக் குறைந்துவிட்டன. இதில் ஹைபெரியன் பிழைத்திருப்பதே ஆச்சரியமானது என்கிறார்கள். இன்றும் இளைமையோடு வேகமாக வளர்ந்து வரும் ஹைபெரியனுக்கு வயது 600. இன்னும் 600 ஆண்டுகள் கூட வாழ முடியும். ஹைபெரியனைப் பாதுகாப்பதற்காக, அது எங்கே இருக்கிறது என்பதை இதுவரை துல்லியமாகச் சொல்லவில்லை.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து, மரத்தில் ஏறினால் மரம் பாதிப்படையும் என்பதால் இந்த ரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள்.

ஹைபெரியன் உயரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை…

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கிறார் ஸியாவோ என்ற இளம் பெண். இவர் செய்த விஷயம் ஒன்று சீன மீடியாக்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஸியாவோ ஒருவரைக் காதலித்தார். திருமணம் பற்றிய பேச்சு வந்தபோது, காதலரின் அம்மா எதிர்ப்புத் தெரிவித்தார். ஸியாவோ குண்டாக இருக்கிறார் என்று காரணத்தையும் கூறினார். இறுதியில் திருமணம் நின்று போனது. மனம் உடைந்து போனார் ஸியாவோ. மருத்துவமனைக்குச் சென்று, லிபோசக்சன் முறையில் உடலில் உள்ள கொழுப்பு அனைத்தையும் வெளியேற்றினார்.

அந்தக் கொழுப்பை வாங்கி, ஒரு சோப் கட்டியாக மாற்றினார். சோப் கட்டியுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இணையத்தில் படத்தை வெளியிட்டார். ‘நமக்குத் திருமணம் ஆகியிருந்தால் இருவரும் ஒன்றாக வசித்திருப்போம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. என் கையில் இருப்பது மிக அரிய சோப். என் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த சோப்பை, நம் திருமணத்தை நிறுத்திய உன் அம்மாவுக்குப் பரிசாக அனுப்பி வைக்கிறேன். ஒருவரின் உருவத்தைக் கண்டு மனிதர்களை மதிப்பிடும் உன் அம்மாவுக்கு இதை விட வேறு என்ன பரிசு கொடுத்துவிட முடியும்?’ என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

இதைக் கண்ட முன்னாள் காதலர், ‘இணையத்தில் இப்படிச் செய்தது மோசமான காரியம். மருத்துவமனைக்குச் சென்று கொழுப்பை வெளியேற்றியதையும், அதை ஒரு சோப்பாக மாற்றியதையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உலகமே புற அழகைத்தான் பார்க்கிறது’ என்று பதில் அளித்தார். ஸியாவோ சிறிதும் கலங்கவில்லை. ’இப்போதும் கூட தங்கள் செயலுக்கு வருந்தாத உன் குடும்பத்தினர் அனைவருக்கும் வரிசையாக கொழுப்பு சோப்புகளை அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறினார். பிறகு இணையத்தில் வெளியிட்ட படங்கள், தகவல்களை எல்லாம் அழித்துவிட்டார். ஸியாவோவின் செயலைப் பெரும்பாலானவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

எவ்வளவு வலி இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்திருப்பார் ஸியாவோ…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8123336.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலோகப் பறவைகள்

 
 
masala_2702854f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் ஜான் கென்னடி ப்ரெளன் ஓர் உலோகச் சிற்பி. தேவையற்ற உலோக பாகங்களை வைத்து விதவிதமான பறவைகள், விலங்குகள், பூச்சிகளைச் செய்து அசத்திவிடுகிறார். ஆணி, சைக்கிள் சங்கிலி, போல்ட், நட், ஹேர்பின், தூக்கி எறியும் உதிரி பாகங்கள் போன்றவற்றை சேகரித்து சிற்பங்களாக மாற்றி விடுகிறார். பிறகு தேவைக்கு ஏற்ப குறைந்த அளவு வண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் வெட்டுக்கிளிகளும் பிரமிப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

‘‘இயற்கையின் படைப்புகள் என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கின்றன. காட்டு உயிரினங்கள் மீது அளவற்ற அன்பு இருக்கிறது. ஆனால் மனிதனின் செயல்களால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அந்த வருத்தத்தையும் ஆதங்கத்தையும் என்னுடைய சிற்பங்களில் உருவாக்குகிறேன்’’ என்கிறார் ஜான் கென்னடி. உலோகச் சிற்பங்களுக்காகவே ஒரு ஆர்ட் கேலரியையும் நடத்தி வருகிறார்.

அசத்துறீங்க கென்னடி!

கிராண்ட் பஜார், துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருக்கிறது. உலகின் மிகப் பழமையான, மிகப் பெரிய சந்தை இதுதான். கூரை மூடப்பட்ட 61 வீதிகளில் 3 ஆயிரம் கடைகள் இங்கே உள்ளன. துருக்கிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வது இந்தச் சந்தைதான். 2014-ம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து 9.1 கோடி மக்கள் இங்கே வந்து சென்றிருக்கிறார்கள். கி.பி.15-ம் நூற்றாண்டில் இரண்டாம் சுல்தான் மெஹ்மத் என்பவரால் இந்தச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது துணிகளும் விலையுயர்ந்த கற்களும் இங்கே விற்பனை செய்யப்பட்டன. காலப்போக்கில் அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யும் இடமாக மாறிவிட்டது. இன்று 26 ஆயிரம் ஊழியர்கள் இங்கே வேலை செய்கிறார்கள். தினமும் 2.5 லட்சம் முதல் 4 லட்சம் மக்கள் வருகை தருகிறார்கள். துணிகள், நகைகள், கார்பெட், புத்தகங்கள், மசாலா பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள், ஷூக்களை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். கிராண்ட் பஜார் கடைகளுக்குத் தனியாகக் கதவுகள் இல்லை. இரவு நேரம் காவலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். கடைகளில் உள்ள பொருட்கள் திருடு போவதில்லை.

16-ம் நூற்றாண்டில் 30 ஆயிரம் தங்க நாணயங்கள் திருடு போய்விட்டன. 2 வாரங்கள் சந்தை மூடப்பட்டது. தீவிரமாகத் திருடனைத் தேடினார்கள். பெர்ஷியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியிருந்தார். அவரைத் தூக்கில் போட்டுவிட்டனர். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்படுபவர்கள் யாரும் பொருட்களை எடுக்க நினைப்பதில்லை. நிலநடுக்கம், தீப்பிடித்தல் போன்ற ஒரு சில விஷயங்களைத் தவிர, கிராண்ட் பஜார் அமைதியாகவே இயங்கி வருகிறது.

பெயருக்கு ஏற்றார்போல கிராண்ட் பஜார்தான்!

அரிசோனாவில் வசிக்கும் 12 வயது மகென்னா குட்ரிச், கடந்த 3 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். கடுமையான குளிர் நிலவும் காலத்தில் ஏழைகள் தகுந்த கோட் இல்லாமல் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுக்காக கோட்களைச் சேகரித்து வழங்கி வருகிறார் மகென்னா. 9 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஏழைகள் படும் துயரத்தைக் கண்டார். உடனே கோட் சேகரித்துக் கொடுக்கும் திட்டத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.

‘‘நல்ல விஷயத்துக்காக கோட் நன்கொடையாகக் கேட்பதால், எல்லோரும் பழைய கோட்களையும் புதிய கோட்களையும் தாராளமாகத் தருகிறார்கள். அவற்றைச் சேகரித்து உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதுதான் எங்களின் பணி. என்னுடன் என் தோழிகளும் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். முதல் ஆண்டு 200 கோட்களைச் சேகரித்தோம். அடுத்த ஆண்டு 500 கோட்கள். கடந்த ஆண்டு 872 கோட்கள். இவை தவிர, 300 கம்பளி ஆடைகளும் தொப்பிகளும் வழங்கினோம். இந்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார் மகென்னா.

வாழ்த்துகள் மகென்னா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8128121.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: இயந்திரமாக மாறிய மனிதக் குழந்தை!

 
 
masala_2706125f.jpg
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது ஒலிவியா ஃபார்ன்ஸ்வொர்த்க்கு வலி தெரியாது, சாப்பாடும் தூக்கமும் அவசியம் இல்லை. ஓர் இயந்திரக் குழந்தையால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் பல நாட்கள் சாப்பாடும் உறக்கமும் இன்றி, மிக சுறுசுறுப்பாக இருக்கிறாள் ஒலிவியா. சமீபத்தில் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் இடித்து விபத்துக்கு உள்ளானாள். குழந்தை பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று எழுந்து, ஒன்றுமே நடக்காதது போல வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

வாயில் ரத்தம், கை, கால்களில் சிராய்ப்பைப் பார்த்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் ஒலிவியாவின் அம்மா. ஒலிவியாவைப் பரிசோதித்தபோது, அவளது மார்பில் கார் டயர் ஏறியதற்கான அறிகுறி தெரிந்தது. மருத்துவர் ஒலிவியாவை விசாரித்தார். ‘‘டயர் ஏறியது. ஆனால் எனக்கு எந்த வலியும் தெரியவில்லை’’ என்றாள். மருத்துவப் பரிசோதனைகளில் குரோமோசோம் 6 குறைபாடு இருப்பது தெரிந்தது. இந்தப் பிரச்சினை உரியவர்களுக்கு வலி தெரியாது. பசி எடுக்காது. தூக்கம் வராது. விபத்துக்கு முன்பு வரை சாப்பிடுவதில் ஆர்வம் உள்ள குழந்தையாகவே இருந்திருக்கிறாள் ஒலிவியா.

மருத்துவர் ‘இயந்திரக் குழந்தை’ என்றும் ஒலிவியா அம்மா, ‘இரும்புக் குழந்தை’ என்றும் அழைக்கிறார்கள். ஒலிவியாவுக்குப் பசி எடுப்பதில்லை என்பதால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தாலும் பாதிப்பு நேர்வதில்லை. ஆனாலும் அவளுக்குப் பிடித்த மில்க்‌ஷேக் மட்டும் கட்டாயப்படுத்தி கொடுக்கிறார் அவரது அம்மா. 3 நாட்கள் இரவு, பகல் விழித்திருந்தாலும் சிறிதும் சோர்வடைவதில்லை ஒலிவியா. மாத்திரையின் உதவியால் தூங்க வைக்கிறார்கள். மிக அமைதியான இயல்புள்ள ஒலிவியா, குறைபாடு காரணமாக சில நேரங்களில் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறாள்.

‘‘குரோமோசோம் 6 குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேருக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. வலி தெரியாத, உணவு, தூக்கம் இல்லாமல் ஒலிவியா போல இருப்பவர்கள் 100 பேர். குரோமோசோம் குறைபாடு உடையவர்களைச் சரி செய்வதற்கான மருத்துவம் தற்போது இல்லை. ஆனால் இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளைப் புரிந்துகொண்டு, நட்பு பாராட்டி அவர்களது பிரச்சினைகளை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் மருத்துவர் பிவெர்லி சியர்லே.

இயந்திரமாக மாறிய மனிதக் குழந்தை!

திரைப்படம் பார்ப்பதற்காகத்தான் தியேட்டருக்குச் செல்கிறோம். ஆனால் இன்று பாப்கார்ன் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதில்தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் ஷோட்டன் தியேட்டரில் பாப்கார்னுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். ‘‘கடந்த பல வருடங்களாக தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றால், என்னால் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படத்தில் வரும் ஒலியை விட பாப்கார்ன் சாப்பிடுபவர்களின் ஒலி என்னைத் தொந்தரவு செய்கிறது. சமீபத்தில் ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தைப் பார்த்தபோது, பாப்கார்ன் ஒலி இருமடங்காகிவிட்டது. தியேட்டரில் பெரும்பாலானவர்களின் கைகளில் பாப்கார்ன் பாக்கெட்டுகள் இருந்தன. அனைவரும் அசை போட்டுக்கொண்டிருந்தனர்.

நானும் குழந்தையாக இருந்தபோது தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டிருக்கிறேன். ஒருநாள் வீட்டில் திரைப்படம் பார்க்கும்போது பாப்கார்ன் சாப்பிட்டேன். ஒலிகளைத் தனியாகப் பதிவு செய்து, போட்டுப் பார்த்தேன். ஒரு நல்ல திரைப்படத்தை பாப்கார்ன் ஒலி எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று மனு போட்டிருக்கிறேன். கையெழுத்து இயக்கம் நடத்துகிறேன். ஆனால் அதற்கு ஆதரவு அவ்வளவாக இல்லை. வேறுவிதங்களில் போராட்டத்தை நடத்திச் செல்ல முடிவு செய்திருக்கிறேன். 2 மணி நேரம் படம் பார்க்கும்போது கண்களுக்கும் காதுகளுக்கும்தான் வேலை இருக்கிறது. வாய்க்கு என்ன வேலை?’’ என்று கேட்கிறார் மைக்.

உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது மைக்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article8139026.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பாத்திரம் சுத்தம் செய்யும் டிஷ்வாஷரில் சமையல்!

 
 
masala_2707525f.jpg
 

பாத்திரம் சுத்தம் செய்யும் டிஷ்வாஷரில் இனி சமையலையும் செய்யலாம்! 1970-ம் ஆண்டிலேயே டிஷ்வாஷரில் சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அது அவ்வளவு நேர்த்தியாக வரவில்லை. 2013-ம் ஆண்டு சமையல் கலை நிபுணரும் எழுத்தாளருமான லிசா கசாலி, டிஷ்வாஷர் சமையல் குறித்துப் புத்தகமே எழுதி வெளியிட்டுவிட்டார். ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகளை ஆரோக்கியம் கருதி உலகம் முழுவதும் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதனால் இந்த டிஷ்வாஷர் சமையல் புத்தகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டது. டிஷ்வாஷரில் எப்படிச் சமைக்க வேண்டும் என்று வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் லிசா.

‘‘டிஷ்வாஷர் சமையல் மிகவும் எளிமையானது. எல்லோராலும் செய்யக்கூடியது. வீட்டில் டிஷ்வாஷர் உள்ளவர்கள் நீங்களே பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்’’ என்கிறார் லிசா. காற்றுப் புகாத பை அல்லது காற்றுப் புகாத கண்ணாடி பாட்டில்களை எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த காய்கறிகள், மீன், இறைச்சி, பருப்பு போன்றவற்றை பாட்டில்களில் நிரப்ப வேண்டும். உப்பு சேர்த்து மூட வேண்டும். காற்றுப் புகாதவாறு அழுத்தமாக மூட வேண்டும்.

டிஷ்வாஷரில் 75 டிகிரி செல்சியஸுக்கு வெப்பத்தை அதிகரிக்க வேண்டும். நீராவியில் பாத்திரங்கள் சுத்தமாகும். அதே நேரத்தில் உணவுகளும் வேகும். வெளியே எடுத்து, அப்படியே சாப்பிடலாம். ஒரு மதிய உணவு தயாரிக்க வேண்டும் என்றால் பல அளவுகளில் பாட்டில்களைத் தயார் செய்துகொண்டு, ஒரே நேரத்தில் டிஷ்வாஷரில் வைத்துவிட வேண்டும். காற்றுப் புகாத பாட்டில்கள் மூலம் வேக வைப்பதால் அழுக்குத் தண்ணீரோ, சுத்தம் செய்யும் சோப் துகள்களோ உணவில் சேராது. டிஷ்வாஷர் சமையல் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கிறீர்கள், ஒரே நேரத்தில் 2 வேலைகளைச் செய்வதால் நேரமும் மிச்சமாகும், ஆற்றலும் சேமிக்கப்படுகிறது என்கிறார் லிசா.

ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பும் இத்தாலியர்களுக்கு இது சரி வரும்… நமக்கு?

லண்டனில் இயங்கி வருகிறது சாலி போர்ன் வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை. இந்தப் புத்தாண்டுக்கு மரக் கட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்தது. பெரிய மரங்களின் நடுப்பகுதியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வெட்டப்பட்ட பகுதியில் வண்ணம் அடித்திருந்தனர். மரக்கட்டையின் வெளிப்பகுதி இயற்கையான முறையில் அப்படியே இருந்தது. இதை யார் பணம் கொடுத்து வாங்குவார்கள் என்று கடைக்காரர்களுக்கே சந்தேகமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாட்களில் 60 மரக்கட்டைகளும் விற்பனையாகிவிட்டன! ‘‘தற்போது எளிமையான, இயற்கையான பொருட்கள் மீதுதான் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். நாற்காலி, மேஜைகள் செய்வதற்காக மரக்கட்டைகள் வந்து சேர்ந்தன. இந்த மரக்கட்டைகளைத் துண்டுகளாக மாற்றி, மேல் பகுதியில் வண்ணமடித்து விற்கலாம் என்று தோன்றியது. விளக்குகள், காபி கோப்பைகள், தினசரிகள், பொம்மைகள் வைக்கும் ஸ்டாண்ட் போலப் பயன்படுத்தலாம். சிறிய மரக்கட்டைகள் 1000 ரூபாய்க்கும் பெரிய மரக்கட்டைகள் 2800 ரூபாய்க்கும் விற்பனை செய்திருக்கிறோம்’’ என்கிறார் கடையின் உரிமையாளர்.

எதையும் விற்கவும் எதையும் வாங்கவும் ஆட்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்!

கலிபோர்னியாவின் லின்வுட் பகுதி நகராட்சி மக்களின் ஆரோக்கியத்துக்காக உடல் எடை குறைக்கும் போட்டிகளை நடத்தி வருகிறது. உடல் எடை அதிகம் உடையவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். 1,700 ரூபாய் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டியாளர்கள் 12 வாரங்களில் கணிசமாக எடையைக் குறைக்க வேண்டும். அதிக அளவில் எடை குறைத்தவருக்கு 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பரிசு! லின்வுட் பகுதியில் உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். 12 வாரங்களில் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ஒரு டாலர் பரிசு வழங்கப்படுகிறது.

ம்… நல்ல விஷயம்தான்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article8143785.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கிரேட் பார்பி!

 
 
barbi_2708830f.jpg
 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பார்பி என்ற நாய் இரண்டு கால்களில் நடந்து வருகிறது. 2011-ம் ஆண்டு பார்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், முன்னங்கால்கள் இரண்டையும் இழந்தது. ’’கோர விபத்தில் பார்பி உடல் முழுவதும் ரத்தம். கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்துகொண்டிருந்தது. மருத்துவரின் உதவியால் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பார்பியின் உயிரைக் காப்பாற்றினேன். ஆனால் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்துவிட்டது. நாய்க்கு நான்கு கால்கள் இல்லாமல் எப்படி வாழ முடியும்? 6 மாதங்கள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஒருநாள் பின்னங்கால்கள் மூலம் நிற்க ஆரம்பித்தது. ஒரு இரவு இரண்டு கால்களால் நடக்க முயற்சி செய்தது. அதைப் பார்த்து, உணவைச் சற்றுத் தூரத்தில் வைக்க ஆரம்பித்தோம். கஷ்டப்பட்டு நடந்து, உணவைச் சாப்பிட்டது. நாளடைவில் 2 கால்கள் மூலமே மனிதர்களைப் போல இயல்பாகவும் வேகமாகவும் நடக்க ஆரம்பித்துவிட்டது. 9 வயது பார்பி, இன்று 1 கிலோ மீட்டர் தூரம் வரை கூட நிற்காமல் நடந்து வருகிறது. நானும் என் மனைவியும் பார்பிக்கு விதவிதமாகத் துணிகளைப் போட்டு அழகு பார்க்கிறோம். இன்று பார்பி ஒரு பிரபலமாக மாறிவிட்டது. சாலைகளில் இயல்பாக நடக்க முடியவில்லை. எல்லோரும் செல்போன்களில் படம் பிடிக்கிறார்கள்’’ என்கிறார் பார்பியின் உரிமையாளர் சென் மியான்யாங்.

கிரேட் பார்பி!

முதுமை மறதி நோய்களில் மிக ஆபத்தானது டிமென்ஷியா. இன்னும் சில ஆண்டுகளில் புற்றுநோயைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடிக்கப் போகிறது. டிமென்ஷியா வந்தவர்கள் நினைவுத்திறனை இழக்கிறார்கள், நடவடிக்கைகளை மாற்றுகிறார்கள், பகுத்தறியும் திறனை இழக்கிறார்கள். இந்த நோய்க்கு மருத்துவம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதனால் விரைவில் மரணம் நிகழ்வதை தடுக்க இயலாது. டிமென்ஷியா பற்றிய விழிப்புணர்வு பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒரு வாகனத்தில் ‘வெர்ச்சுவல் டிமென்ஷியா டூர்’ தொடங்கியிருக்கிறார்கள். வெச்சுவல் டூர் வாகனம் மக்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்கிறது. டிமென்ஷியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. டிமென்ஷியா நோய் மூலம் உணர்வுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதை இந்த டூர் மூலம் புரியவைக்கிறார்கள்.

‘‘இது கொடூரமான நோய். குடும்பத்தினர் கண் முன்னாலேயே ஒருவரின் செயல் திறன் படிப்படியாகக் குறையும். ஒருகட்டத்தில் உடல் மட்டும் இருக்கும். அந்த நபரை முற்றிலும் இழந்திருப்போம். இறுதியில் மரணமும் வந்து சேரும்’’ என்கிறார் நேஷனல் ஹெல்த் சர்வீஸைச் சேர்ந்த டேம் கில் மோர்கன். இங்கிலாந்தில் இருக்கும் 8 மோசமான நோய்களில் ஒன்று டிமென்ஷியா. இன்னும் 4 ஆண்டுகளில் 4-வது இடத்துக்கும் இன்னும் 10 ஆண்டுகளில் முதல் இடத்துக்கும் வந்துவிடும் என்கிறார்கள். டிமென்ஷியா நோயாளிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது இந்த வெர்ச்சுவல் டூர்.

ஐயோ… தினம் ஒரு புதிய நோய் வந்தால் மனிதன் என்னதான் செய்வான்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article8147736.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: அட! அசத்துகிறாரே இந்தப் பெண் ஆராய்ச்சியாளர்!

 
 
clay_2711254f.jpg
 

மாஸ்கோவில் வசிக்கும் மைக்கேல் ஸஜ்கோவ் நிஜ மனிதர்களைப் போல பொம்மைகளைச் செய்வதில் சிறந்த கலைஞர். பாலிமர் களிமண்ணைக் கொண்டு பொம்மைகளின் உடலை உருவாக்குகிறார். கண்களுக்கு ஜெர்மன் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார். தலை முடியை பிரான்சிஸ் இருந்து வாங்குகிறார். இப்படி எல்லாம் சேரும்போது நிஜ மனிதர்களைப் போலவே பொம்மைகள் தோற்றம் அளிக்கின்றன. பொம்மலாட்டக் கலைஞராக இருந்த மைக்கேல், 2010-ம் ஆண்டுதான் முதல் பொம்மையை உருவாக்கினார். உலகம் முழுவதும் இவருடைய பொம்மைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் எப்படி பொம்மையை உருவாக்குகிறார் என்பதையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் மைக்கேல். ’’இத்தாலியைச் சேர்ந்த லாரா ஸ்காடோலினி, பிரான்ஸைச் சேர்ந்த ஆன் மிட்ரானி ஆகியோரைப் பார்த்துதான் பொம்மைகள் உருவாக்கும் எண்ணம் வந்தது. என்னுடைய பொம்மைகள் பழமையை எடுத்துச் சொல்லக்கூடியவை. ஒவ்வொரு பொம்மையும் ஏதோ ஒரு சோகத்தை வெளிப்படுத்துவதாகவே உருவாக்குகிறேன். மற்ற பொம்மைகளைப் போல எல்லோருக்கும் என் பொம்மைகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பொம்மை என்றாலே மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும். பொம்மைகளைச் சேகரிப்பவர்களும் என் திறமை மீது ஆர்வம் உள்ளவர்களும்தான் என் வாடிக்கையாளர்கள்’’ என்கிறார் மைக்கேல்.

இத்தனை நேர்த்தியாக ஒரு பொம்மையை உருவாக்க முடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது!

மின்சாரத்தின் மூலம் உணவில் சுவையை மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த ஹிரோமி நகமுரா. டோகியோ மெய்ஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஹிரோமி, மின்சார முள்கரண்டியை உருவாக்கியிருக்கிறார். குறைவான உப்பு உள்ள உணவை மின்சார முள்கரண்டி மூலம் எடுத்து உண்ணும்போது உப்பு இருப்பது போல நாக்கு உணர்கிறது. உணவில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த மின்சார முள்கரண்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகக் குறைவான உப்பு பயன்படுத்த வேண்டும். ஆனால் உப்பு இல்லாமல் உணவு ருசிக்காது. மின்சார முள்கரண்டி மூலம் சாப்பிடும்போது தேவையான உப்புச் சேர்ந்து சுவையான உணவாக நம் நாக்கு உணருகிறது. பேட்டரி மூலம் மிகக் குறைவான வோல்டேஜ் மின்சாரம் வருவதால் எந்தவிதமான ஆபத்தும் இதில் கிடையாது. உணவில் மின்சாரத்தைச் சேர்க்கும் யோசனை 2012ம் ஆண்டு டெக்சாஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

‘‘உணவை முள்கரண்டி மூலம் எடுத்து வாயில் வைக்கும்பொழுது மின்சாரம் உணவில் பாயும். வாயில் இருந்து முள்கரண்டியை எடுத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். மின்சார முள்கரண்டி மூலம் சுவையான உணவை எப்படிச் சாப்பிடலாம் என்பதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறேன். பலரை அழைத்துப் பரிசோதனை நடத்தியிருக்கிறேன். இது என் கண்டுபிடிப்பு அல்ல. பேட்டரி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சுல்ஸர் என்பவர் இதைச் செய்து பார்த்திருக்கிறார். நவீன தொழில்நுட்பங்களை வைத்து நான் இதை வெற்றிகரமான கண்டுபிடிப்பாக மாற்றியிருக்கிறேன். கண் முன்னால் பார்க்க முடியாத உப்புச் சுவையை மின்சார முள்கரண்டி வழங்குகிறது. நான் கடந்த 4 ஆண்டுகளாக மின்சார உணவுகளைத்தான் உண்டு வருகிறேன்’’ என்கிறார் நகமுரா.

அட! அசத்துகிறாரே இந்தப் பெண் ஆராய்ச்சியாளர்!

டெலிடிஸ்கோ என்பது உலகிலேயே மிகச் சிறிய டிஸ்கோ க்ளப். ஜெர்மன் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்தவர்கள், போன் பூத்தை இப்படி மாற்றியிருக்கிறார்கள். பெர்லினில் இருக்கும் இந்தச் சிறிய நைட் க்ளப்பில் இருவர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கலாம். இடம்தான் சிறியதாக இருக்கிறதே தவிர, ஒரு நைட் க்ளப்பில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த க்ளப்பிலும் உள்ளன. கண்கவர் விளக்குகள், புகை கக்கும் இயந்திரம், டிஸ்கோ பால், திரையில் தொட்டால் விருப்பமான இசை என்று க்ளப் களைகட்டுகிறது. உங்களின் அற்புதமான அனுபவத்தை பூத்தில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவில் படம் பிடித்து, உங்களுக்குத் தந்துவிடுகிறார்கள். இதுபோல 3 டெலிபோன் பூத்களை நைட் க்ளப்களாக மாற்றியிருக்கிறார்கள்.

ம்… மொபைல் போன்களின் வருகையால் டெலிபோன் பூத்கள் மறைந்து வருகின்றன…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article8154542.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: இப்படி எல்லாம் ஒரு குறைபாடா!

 
masala_2712367f.jpg
 

ப்ளோரிடாவில் வசிக்கும் ஜாமி கீடோன் தலையில் கப், கேன், பாட்டில் போன்ற உயிரற்ற எந்தப் பொருட்களும் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. பொருட்கள் ஒட்டிக்கொள்ளக்கூடிய எதையும் ஜாமி உடலில் தடவிக்கொள்வதில்லை. இவர் தோலில் உள்ள துளைகள் பொருட்களை அப்படியே உறிஞ்சிக்கொள்கின்றன. சின்ன வயதில் பைன் மரங்களில் ஏறி விளையாடும்போது, மரத்தின் சாறு தோலில் பட்டு இப்படி ஆகிவிட்டது என்று எல்லோரும் நினைத்தனர். 20 வயதில்தான் ஜாமிக்குத் தன் தோல், பொருட்களை இழுத்துக்கொள்கிறது என்பது தெரிந்தது. ‘‘நல்ல வெயில் காலம். முதல் முறை மொட்டை அடித்திருந்தேன். குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று சோடாவை வாங்கித் தலையில் வைத்தேன். நண்பர்கள் பந்தை எறிந்து, சோடாவைத் தள்ளிவிட்டனர். சோடா பாட்டில் சாய்ந்ததே தவிர கீழே விழவில்லை. பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டது. சோடா மட்டும் கீழே கொட்டி விட்டது.

எல்லோரும் இதைக் கண்டு சிரித்தனர். பல பொருட்களை வைத்துப் பார்த்தேன். எல்லாமே ஒட்டிக்கொண்டன. ஆக்டோபஸ் உணர்கொம்புகள் போல என் தலை அனைத்தையும் இழுத்துக்கொண்டது. மருத்துவரிடம் சென்றேன். மருத்துவருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் சில மருத்துவர்கள் ஏதோ குறைபாடு என்றார்கள். அமெரிக்காவிலேயே இந்தக் குறைபாடு உள்ள ஒரே மனிதன் நான்தான். இந்தியாவிலும் தென் அமெரிக்காவிலும் இருவர் இருக்கிறார்கள்’’ என்கிறார் ஜாமி.

இன்று அமெரிக்காவில் மிகப் பிரபலமானவராக மாறிவிட்டார். வாரத்துக்கு ஒன்றரை லட்சம் முதல் ஐந்தரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். கடந்த 5 வருடங்களில் அவரது வருமானம் பல்கி பெருகிவிட்டது. சிலர் அவர்களின் பொருட்களை ஜாமியின் தலையில் வைத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிலர் அவர் அணியும் ஆடையில் விளம்பரம் செய்கிறார்கள். சமீபத்தில் கின்னஸ் சாதனையும் நிகழ்த்திவிட்டார் ஜாமி.

இப்படி எல்லாம் ஒரு குறைபாடா!

ஸ்பெயினில் இருக்கிறது தேனீக்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகம். மிகப் பிரம்மாண்டமான 8 தேன் கூடுகள் கூரையில் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தத் தேன் கூட்டைச் சுற்றிலும் கண்ணாடியால் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் பயமின்றி, தேன் கூடுகளையும் தேனீக்களையும் கண்டு ரசிக்கலாம். ‘‘இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் முதல் தேன் கூடு 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அதிலிருந்து எனக்குத் தேனீக்கள் மீது ஆர்வம் வந்துவிட்டது.

தேனீக்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டேன். பள்ளிகள், கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்தினேன். தேனீ வளர்ப்பு வகுப்புகளும் ஆரம்பித்தேன். 20 ஆண்டு அனுபவங்களுக்குப் பிறகு தேனீ அருங்காட்சியகத்தை அமைத்தேன். தேனீக்களை வளர்ப்பதும் அவற்றை அறிந்துகொள்வதும் சுவாரசியமானது’’ என்கிறார் அருங்காட்சியகத்தின் டைரக்டர்.

தேனீக்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/article8157164.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆறே முக்கால் கோடிக்கு விற்பனையான உருளைக்கிழங்கு புகைப்படம்!

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
masala_2713838f.jpg
 

ஓர் உருளைக்கிழங்கு புகைப்படம் 6 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது! இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட விலையுயர்ந்த 20 புகைப்படங்களில் உருளைக்கிழங்கு படமும் ஒன்று. இந்தப் படத்தை எடுத்தவர் உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர் கெவின் அபாஸ். உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் விருப்பத்துக்குரிய புகைப்படக்காரர் இவர். ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், ஜாக் டோர்சி, ஜானி டெப், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டென்னிஸ் ஹோப்பர், மலாலா என்று இவருடைய வாடிக்கையாளர்களின் பட்டியல் நீள்கிறது. எத்தனையோ மனிதர்களைப் படங்கள் எடுத்திருந்தாலும் உருளைக்கிழங்குகளை வைத்து விதவிதமாகப் படங்கள் எடுப்பது என்றால் கெவினுக்கு விருப்பம் அதிகம். இதுவரை உருளைக்கிழங்குகளை வைத்து ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்திருக்கிறார்.

அதில் இந்தப் படம்தான் அவருக்கு மிகவும் பிடித்தது. அவரது ஸ்டூடியோவில் 2010ம் ஆண்டு முதல் இந்த உருளைக்கிழங்கு படம் இடம்பெற்றுள்ளது. கெவினின் வாடிக்கையாளர்களில் ஒருவர், தான் அந்த உருளைக்கிழங்கு படத்தை வாங்கிக்கொள்வதாகச் சொன்னார். 2 வாரங்களில் அந்தப் படத்துக்கு 6 கோடியே 80 லட்சம் ரூபாய் என்று விலையையும் நிர்ணயித்தார். சாதாரணமாக பிரபலங்களைப் படம் எடுப்பதற்கு சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பார் கெவின். 3.5 கோடி வரை அந்தப் படங்கள் வியாபாரம் செய்யப்படும். ஓர் உருளைக் கிழங்கு படம் முதல் முறை இவ்வளவு விலைக்கு விற்பனை யானதில் கெவினுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகளின் அட்டைகளில் எல்லாம் கெவினின் படங்கள்தான் அலங்கரிக்கின்றன. பொதுவாகப் படம் எடுப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை கெவின்.

சாதாரண விஷயம், ஒரு பிரபலம் செய்யும்போது அசாதாரணமாகிவிடுகிறது!

டொரண்டோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் 43 வயது ராப் ஸ்பென்ஸ். தன்னுடைய ஒரு கண்ணில் கேமராவைப் பொருத்தியிருக்கிறார். 9 வயதாக இருக்கும்போது, மாட்டுச்சாணத்தை துப்பாக்கியால் சுடும்போது, தவறுதலாக வெடித்து ஒரு கண் பார்வை பறிபோனது. பாதிக்கப்பட்ட கண்ணில் செயற்கை கண்ணைப் பொருத்தியிருந்தார் ஸ்பென்ஸ். ஆனால் இந்தக் கண் மூலம் பார்வை தெரியாது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பார். தானே ஒரு சிறிய கேமராவைக் கண்டுபிடித்தார். அதைச் செயற்கை கண்ணில் பொருத்தினார். அவரது கேமரா கண்ணில் இருந்து காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அவரது கையில் உள்ள ஒரு கருவிக்கு வந்துவிடும். பட்டனை அழுத்தினால் கேமரா கண் மூலம் கண்ட காட்சிகளை ஸ்பென்ஸால் பார்த்துக்கொள்ள முடியும்.

‘‘இந்த கேமரா கண் மூலம் அதிகப்பட்சம் 3 நிமிடங்களுக்குத்தான் காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். அதற்குள் அதிக அளவில் சூடாகிவிடும். இது என்னுடைய சிறு முயற்சி மட்டுமே’’ என்கிறார் ஸ்பென்ஸ்.

எதிர்காலத்தில் கேமரா மூலமே பார்க்கும் தொழில்நுட்பம் கூட வளர்ந்துவிடலாம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8161646.ece?homepage=true&relartwiz=true
  • தொடங்கியவர்

உலக மசாலா: ஒரு பெங்குவின் மனிதனின் நண்பனான கதை

masala_2715501f.jpg
 

ஜோவோ பெரைரா டி சோஸா ஓய்வு பெற்ற பிறகு, தென்அமெரிக்காவின் படகோனியன் பகுதியில் வசித்து வருகிறார். இது பெங்குவின்கள் வசிக்கும் பகுதி. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் இடப்பெயர்ச்சி செய்வதற்காக பெங்குவின்கள் இங்கே வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி வந்த பெங்குவின்களில் ஒன்று, டி சோஸா வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

பெங்குவினை ஆவலோடு வரவேற்று, அன்பாக நடத்தினார். உணவைக் கொடுத்து, ஓய்வெடுக்க வைத்தார் டி சோஸா. அந்த ஆண்டு இடத்தை விட்டுக் கிளம்பும் வரை அடிக்கடி டி சோஸா வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தது பெங்குவின். ஜின்லிங் என்று பெயரும் சூட்டி, அழைத்து வந்தார் டி சோஸா. பல நாட்கள் பெங்குவின் வீட்டில் தங்கியிருக்கும்போது, கடலுக்குச் சென்று விட்டுவிட்டு வருவார். சிறிது நேரத்தில் டி சோஸா வீட்டுக்குத் திரும்பிவிடும். ஒருமுறை படகில் வைத்து, தொலை தூரத்தில் விட்டுவிட்டு வந்தார்.

அந்த முறை பெங்குவின் திரும்பி வரவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இடப்பெயர்ச்சிக் காலத்தில் படகோனியன் பகுதிக்கு வந்தபோது, மீண்டும் சரியாக டி சோஸா வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது. அந்தத் தடவை 8 மாதங்கள் வரை டி சோஸாவுடனே தங்கியிருந்தது. டி சோஸா பூனை, நாய், கோழி போன்ற உயிரினங்களுடன் பழகுவது பெங்குவினுக்குப் பிடிக்கவே பிடிக்காது. யாரையும் டி சோஸா அருகில் நெருங்கவே விடாது. ஐந்தாவது ஆண்டாக பெங்குவின் டி சோஸா வீட்டுக்கு வந்திருக்கிறது.

இருவரின் நட்பைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே கிடையாது. ‘‘இதுவரை ஜின்லிங் மாதிரி ஒரு பெங்குவினை நாங்கள் பார்த்ததே இல்லை. அன்பு, பொறாமை என்று மனிதர்களைப் போலவே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் மிகச் சரியாக டி சோஸா வீட்டுக்கு வருவது அதை விட ஆச்சரியம். ஜின்லிங் மூலம் இந்தக் கிராமத்துக்கு நிறையப் பெருமையும் கிடைத்திருக்கிறது’’ என்கிறார் ஒரு மீனவர்.

ஒரு பெங்குவின் மனிதனின் நண்பனான கதை!

உக்ரைனில் இருக்கும் வெலிகயா கோபான்யா கிராமம், ‘இரட்டையர்களின் நிலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில் 122 பேர் இரட்டையர்களாக இருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் இங்கே வசித்து வருகிறார்கள். ஏற்கெனவே 61 ஜோடி இரட்டையர்கள் கொண்ட கிராமம் என்று, கின்னஸில் இடம் பிடித்துவிட்டது. இப்போது 122 ஜோடி இரட்டையர்கள் இங்கே வசித்து வருகிறார்கள். புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் நாட்டிலேயே அதிக அளவில் இரட்டையர்கள் பிறப்பது இங்கேதான்.

‘‘2004-ம் ஆண்டில்தான் எங்கள் கிராமத்தில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கவனித்தோம். ஒவ்வொரு வருஷமும் 2 முதல் 3 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர்’’ என்கிறார் கவுன்சிலர் மரியானா சவகா. ‘‘எங்கள் கிராமத்தில் எங்களைப் போல நிறைய இரட்டையர்கள் இருக்கிறார்கள். எங்கள் இருவரையும் பள்ளியில் யாருக்கும் அடையாளம் தெரியாது. குறும்பு செய்துவிட்டு, ஒருவரை ஒருவர் மாட்டி விட்டுக்கொள்வோம்’’ என்கிறார்கள் டேனிலா, டிமிட்ரோ என்ற இரட்டைச் சகோதரர்கள்.

அதிசய கிராமம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article8167240.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பூனையாக மாறிய பெண்!

 
masala_2716937f.jpg
 

நார்வேயில் வசிக்கிறார் 20 வயது நானோ. தன்னுடைய 16 வயதில், தான் ஒரு பூனை என்று உணர்ந்துகொண்டார். நானோவால் வாசனையை மிகத் துல்லியமாக நுகர முடியும். இருட்டில் கூட மிக நன்றாகப் பார்க்க முடியும். ’’நான் பூனையாக உணர ஆரம்பித்ததில் இருந்து பூனைகளிடம் இருக்கும் பல விஷயங்கள் என்னிடமும் இருப்பதை அறிந்துகொண்டேன். எனக்குத் தண்ணீரைக் கண்டால் பிடிக்காது. பால், பால் சார்ந்த பொருட்கள் என்றால் விரும்பிச் சாப்பிடுவேன். பூனைகளின் மியாவ் மொழி எனக்கு நன்றாகப் புரியும். அவற்றோடு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பேன்.

நாளடைவில் என்னைப் பூனை போல அலங்காரம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன். தலையில் 2 காதுகள் நீட்டிக்கொண்டிருக்கும். பின் பக்கம் ஒரு வாலைப் பொருத்திக்கொண்டேன். மருத்துவரிடம் சென்றேன். பல பரிசோதனைகளுக்குப் பிறகு எனக்கு மரபணு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் நான் ஒரு பூனையாக உணர்கிறேன். தெருவில் நடந்து செல்லும்போது நாய்களைக் கண்டால் எனக்குப் பயம் வந்துவிடுகிறது. சின்ன வயதில் எனக்கு நாய்களைக் கண்டால் பயமிருந்ததில்லை. ஒரு பூனையான பிறகு எனக்கு இந்தப் பயம் வந்திருக்கிறது.

வீட்டில் கைகளால் தவழ்ந்து செல்வது எனக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. கைகளுக்குப் பாதிப்பு வராமலிருக்க கையுறை அணிந்துகொள்கிறேன். ஒரு பூனையாக எலியைப் பிடிக்க நான் எடுத்த முயற்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை’’ என்கிறார் நானோ. மருத்துவ உலகில் நானோவைத் தவறான உயிரினம் என்று அழைக்கின்றனர்.

மனிதன் பாதி; பூனை பாதி!

சிரியாவில் போர் காரணமாக ஏராளமான மக்கள் வெளியேறி வருகிறார்கள். சிரியாவில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போரால் அழிக்கப்பட்டு வருகின்றன. ஜோர்டான் அகதிகள் முகாமில் வசித்து வரும் சிரியாவைச் சேர்ந்த கலைஞர் முகமது ஹரிரி, அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் மினியேச்சர் வடிவில் மீண்டும் உருவாக்கி வருகிறார். மண், மரம், பாறை என்று கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

“சிரியாவில் மட்டுமில்லை. உலகில் எங்கு போர் நடந்தாலும் அங்கே உள்ள வரலாற்றுச் சின்னங்கள்தான் முதலில் பலியாகின்றன. சிரியாவில் உள்ள வரலாற்றுப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது மட்டும் என் நோக்கமில்லை, போரின் விளைவால் எப்படியெல்லாம் உலகம் மோசமடைகிறது என்பதை உணர்ந்து, போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான் நான் இந்த வேலையில் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் முகமது ஹரிரி.“பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் விஷயத்தை, ஒரு போர் இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. போரை நிறுத்துங்கள் என்பதைத்தான் எங்கள் செயல் மூலம் உலகத்துக்குச் சொல்கிறோம்’’ என்கிறார் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகமது அல் ஹரிரி.

நாகரிக உலகில் போர், அநாகரிகம் என்பதை எப்போது உணர்வார்கள்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article8171405.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: இரும்புக்கை மனிதர்

 
 

இந்தோனேஷியாவில் வசிக்கிறார் வேயன் சுடாவன். 6 மாதங்களுக்கு முன்பு பக்கவாதம் வந்து, சுடாவனின் இடது கை செயல் இழந்துவிட்டது. மெகானிகல் நிறுவனத்தில் வெல்டராகப் பணிபுரிந்து வந்த சுடாவனுக்கு இப்போது வேலை செய்ய இயலாத சூழல். மனைவி, 3 குழந்தைகளை இனி எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்தார். பள்ளியில் மெகானிகல் இன்ஜினீயரிங் படித்தது நினைவுக்கு வந்தது. அடுத்த இரண்டு மாதங்கள் ரோபோ செயல்பாடுகளைப் படித்து, தெரிந்துகொண்டார். தன்னிடமிருந்த உதிரி பாகங்களைக் கொண்டு ஒரு ரோபோ கையை உருவாக்கினார். அந்தக் கைக்குக் கட்டளைப் பிறப்பித்து, வேலை செய்ய வைப்பதற்கு ஒரு ஹெட்பேண்டையும் உருவாக்கினார். இரண்டையும் இணைத்தார். இப்பொழுது கையை அசைக்க வேண்டும் என்று சுடாவன் நினைத்தால், ரோபோ கை அசைக்கிறது. அவர் செய்ய நினைக்கும் வேலைகளைச் செய்கிறது.

10 கிலோ எடையைத் தூக்குகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வேலையில் சேர்ந்துவிட்டார் சுடாவன். ரோபோ கையின் உதவியோடு வழக்கம் போல வேலைகளைக் கவனிக்கிறார். சுடாவனைப் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டனர். உடனே நாடு முழுவதும் சுடாவனின் பேச்சாக மாறிவிட்டது. ‘‘எப்படி இது வேலை செய்கிறது என்றெல்லாம் என்னால் டெக்னிகலாக விளக்கம் கொடுக்கத் தெரியவில்லை. ஏதோ ஆர்வத்தில் செய்து பார்த்தேன். அது நூறு சதவீதம் சரி இல்லை என்றாலும் வேலை செய்கிறது. என் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு வழி செய்திருக்கிறது.

இந்தக் கருவி இல்லை என்றால் என்னால் வேலை செய்யவே முடியாது’’ என்கிறார் சுடாவன். ரோபோ கை குறித்து ஒருபக்கம் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் ரோபோ கை மனிதனைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருக்கிறார் சுடாவன்.

இரும்பு கை மனிதர்!

 

கிறிஸ்டினா லீயும் மைக்கேல் சபாவும் அட்லாண்டாவில் வசிக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு பிரச்சினையைச் சந்தித்து வருகிறார்கள். யாரோ முன்பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு வந்து, தங்களுடைய மொபைல் போன் எங்கே என்று கேட்கிறார்கள். தங்களுக்கு போன் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினால், கோபப்படுகிறார்கள், சண்டைக்கு வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கூட்டமே சபாவின் வீட்டுக்கு வந்தது. திருடிய போனை மரியாதையாகக் கொடுத்து விடுங்கள் என்று மிரட்டியது. அதற்குப் பிறகு வீட்டுக்குப் பல தொலைபேசி அழைப்புகள்.

அத்தனையும் தங்களின் போன்களைத் திருப்பித் தந்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டன. ‘‘எங்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. தொலைந்த போன்களைத் தேடும் அப்ளிகேஷன் எங்கள் வீட்டைத் தவறுதலாகக் காட்டுகிறதோ என்று சந்தேகப்பட்டோம். எங்களால் முடிந்த அளவுக்குப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றோம். ஆனால் முடியவில்லை. ஜூன் மாதம் ஒரு பெண், போலீஸுடன் வந்தார். எங்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து விட்டு, மணிக்கணக்கில் தேடினார். நாங்கள் பாத்ரூம் போவதற்குக் கூட வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு பத்திரிகையில் எங்கள் பிரச்சினையைச் சொன்னோம்.

அவர்கள் போன் கம்பெனிகளைத் தொடர்புகொண்டனர். எங்கள் வீட்டுக்கு அருகே 3 டெலிபோன் டவர்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து தவறுதலாக சிக்னல் வரலாம் என்று ஆராய்ந்தார்கள். அதிலும் தோல்வியே கிடைத்தது. ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிலும் புகார் அளித்துவிட்டோம். இன்னும் பிரச்சினை முடியவில்லை. இந்த ஒரு வருடத்தில் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டோம். எங்களைப் போல வேறு யாருக்கும் இந்தப் பிரச்சினை வரக்கூடாது’’ என்கிறார்கள் சபாவும் கிறிஸ்டினாவும்.

பாவப்பட்ட தம்பதியர்…

 

இங்கிலாந்தில் வசிக்கிறார் 5 வயது கோகோ ப்ராட்ஃபோர்ட். 2 வயது வரை பேசிக்கொண்டிருந்தார். பிறகு பேசுவதை நிறுத்திவிட்டார். மருத்துவரிடம் சென்றபோதுதான், கோகோவுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஒரு வார்த்தை கூட கோகோ பேசியது இல்லை. படங்கள் மூலமே தகவல்களைப் பரிமாறுவார்.

கடந்த வாரம் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் கோகோவின் அம்மா. ‘‘எனக்கு இன்னும் கொஞ்சம் பிரெட் தருவீர்களா?’’ என்று ஒரு குரல் கேட்டது. ஆச்சரியத்தில் திரும்பிப் பார்த்தார் கோகோவின் அம்மா. மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னாள் கோகோ. பெற்றோர் மகிழ்ந்து போனார்கள். ‘‘இரண்டு வயது வரை ஒரு வாக்கியமாக அவள் பேசியதில்லை. ரொம்ப ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. தொடர்ந்து கோகோவுக்கு தெரபி கொடுக்க இருக்கிறோம்’’ என்கிறார்கள்.

இனி ஓயாமல் பேசட்டும் கோகோ

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article8174801.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: எலி ஹீரோக்கள்!

 
 
masala_2453464f.jpg
 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொஸாம்பிக்கில் எலிகள் ஹீரோக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ராட்சச பை எலிகள் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. மற்ற எலிகளை விட உருவத்தில் பெரியவை. மொஸாம்பிக் முழுவதும் ஏராளமான இடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் அற்புதமான பணியைச் செய்து வருகின்றன. இந்த எலிகள். கடந்த 9 ஆண்டுகளில் 13 ஆயிரம் கண்ணிவெடிகள் எலிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேபோல இரண்டரை லட்சம் ரத்த மாதிரிகளில் இருந்து காச நோயைக் கண்டுபிடித்தும் சொல்லியிருக்கின்றன. பார்ட் வீட்ஜென்ஸ் என்பவர் இருபதாண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு, எலிகள் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவை. பயிற்சியளித்தால் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவை என்று கண்டுபிடித்தார்.

அவரே எலிகளுக்குப் பயிற்சியளித்து, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கச் செய்தார். 200 சதுர மீட்டர் நிலத்தில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மனிதர்களும் நாய்களும் 5 நாட்களை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் எலி, 20 நிமிடங்களில் நுகர்ந்து கண்டுபிடித்துவிடுகிறது. இதுவரை கண்ணிவெடி கண்டுபிடிப்பின் மூலம் எந்த ஓர் எலியும் உயிரை இழக்கவோ, காயமடையவோ இல்லை.

வயதாகிவிட்ட எலிகளை காட்டில் விட்டுவிடுகிறார்கள். கண்ணிவெடி கண்டுபிடிப்பு ஹீரோக்களுக்கு ஆரோக்கியமான உணவு, பயிற்சி, அரவணைப்பு போன்றவை அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீரரும் எலிகளைத் தங்கள் தோழர்களாகவே மதிக்கிறார்கள்.

அடடா! மனிதர்களைக் காக்கும் ஹீரோக்களுக்கு ராயல் சல்யூட்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7360835.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.