Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரின் கருத்தையும் மீறி மக்கள் வாக்களித்துள்ளனர்: வவுனியாவில் மாவை முழக்கம்

Featured Replies

Mavai_Senathirajah

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனம் மீது வட மாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி தமிழ் மக்கள் மிகப்பெருவாரியாக வெற்றியை தந்துள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

“சென்ற ஆண்டு மனித உரிமை பேரவை கூட்டம் ஒன்றில் பெண்களை பற்றி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். போர் நடந்த காலத்திலும் போருக்கு பின்னரான காலத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையால் எமது பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் பாதுகாப்பு விடங்கள் பற்றி சாட்சியங்களுடன் ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது போல் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற பிரேரணையை ஒரு வல்லாண்மை மிக்க நாட்டின் உதவியோடு அந்த சபையில் கொண்டு வர முடியும். நவநீதம்பிள்ளை இந்த பிரேரணையை நிறைவேற்றும் பொருட்டு இலங்கைக்கு வந்ததை நீங்கள் அறிவீர்கள். ராஜபக்ஷ காலடி எடுத்து வைக்க விடமாட்டேன் என்றார். ஆனால் அவர் வந்தார். அரை மணி நேரமே தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

வெறுமனே பத்திரிகை அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இன்று போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆரம்பத்தை தெரிந்துகொள்ளாத பலர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றர்hகள்.

இந்த போர்க்குற்ற விசாரணை சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும் என்று 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைக்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சால் அழைத்ததன் அடிப்படையில் அங்குள்ள 24 அங்கங்களுடன் பேசி இறுதியாக 27 ஆம் திகதி நண்பகலுக்கு பிறகு உதவி இராஜாங்க செயலாளரின் தலைமையில் கூடிய கூட்டத்தில் சம்பந்தர் உரையாற்றியிருந்தார். அதன் பின்னர் இப்படிப்பட்ட தலைவரை நீங்கள் பெற்றது பாக்கியம் என்று கூறினார் உதவி இராஜாங்க அமைச்சர். நாங்கள் சர்வதேச விசாரணையே தேவை என்று தீர்மானத்திற்கு வந்துவிட்டோம் எனவும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச விசாரணைதான் அங்கு நடைபெற்றுள்ளது. அந்த தீர்மானத்தில் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றது. ஏன் இந்த போர் ஏற்பட்டது. அந்த போரில் ஏன் குற்றங்கள் இழைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் எவ்வளவு தூரம் மீறப்பட்டுள்ளன. போர் விதிமுறைகளை ராஜபக்ச அரசாங்கம் எவ்வளவு தூரம் மீறியுள்ளது என்று சாட்சியங்களில் அடிப்படையில் ஆராயப்பட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது சிலர் தெரிந்தும் தெரியாமலும் தெரிந்தும் படிக்காமலும் இனித்தான் விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி அந்த பிரேரணை செப்டெம்பர் மாதம் அதற்கான நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்ற பதில்தான் நிறுவப்படவேண்டியதாகவுள்ளது.

மற்றும் உள்ளக விசாரணையைப்பற்றி பேசகின்றார்கள். அது நாம் விரும்பி கேட்ட ஒன்று அல்ல. தற்போது அமைச்சராக இருக்கின்ற மகிந்த சமரசிங்க நவநீதம்பிள்ளை பிரேரணை சமர்ப்பித்தபோது அந்த சபையில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசினார். முழுவதும் உண்மைக்கு மாறான விடயங்களை பேசினார். உடனடியாக அங்கிருந்த இராஜதந்திரிகள் ஊடாகவும் அங்கிருந்த எமது வழங்கறிஞர்கள் ஊடாகவும் எங்களுக்கு ஒரு செய்தி தரப்பட்டது.

சிலர் ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த பிரேரணை சர்வதேச விசாரணை இல்லை என்று கூறினார்கள். அவர்களே தற்போது இங்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கனவில் இருந்து மீண்டவர்கள்போல் அதனுடைய பின்னணி அதனுடைய வரலாறு, என்ன நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நன்றாக தெரியாமல் இன்று தமிழரசுக்கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்னிறார்கள். அது முடியாத காரியம். இந்த தேர்தலிலும் எம்மை குற்றம் சுமத்தினார்கள் எம்மை தோற்கடிப்பதற்காக பல கோடி ரூபாக்களை செலவழித்தார்கள். தலைமையை மாற்றி அமைக்க முனைந்தார்கள். அதற்கு நாம் பதில் கொடுத்தோம். இன்று அவர்கள் 6 வாக்கு குறைந்திருந்தால் கட்டுப்பணமே இல்லாமல் போயிருப்பார்கள். அதேபோல் 6 வாக்கு எமக்கு கிடைத்திருந்தால் 6 ஆவது இடம் எமக்கு கிடைத்திருக்கும். ஆனால் அது யாருக்கு போயிருக்கின்றது. ஐக்கிய தேசியகட்சியை தேர்ந்தேடுப்பதற்கு செய்திருக்கின்றார்கள்.

இன்று போராளிகள் என்று ஒன்றை தொடக்கினார்கள். இன்று அவ்வளவு தூரம் அவமானமாக்கியிருக்கின்றார்கள். நாம் மதிப்பு வைத்துள்ள அ;ந்த போராளிகள் அவர்களை தேர்தலில் ஈடுபடுத்தி இன்று 1200 வாக்குள் மட்டில் பெற்றிருக்கின்றார்கள். அது எவ்வாளவு அவமானமாகும். வெறும் அற்ப ஆசைகளுக்காக 3 ஆசனத்தை பெறுவோம் என்று கூறினார்கள். கஜேந்திரகுமார் அணியில் 3 பேர் வெல்வோம் என்று கூறினார்கள். இருப்பதோ 7 இடம்தான். வெளிநாட்டில் இருந்து மிகப்பெரும் தொகையானவர்கள் நிதியை வழங்கினார்கள். அப் பணம் மக்களிடம் போயிருந்தால் அந்த மக்களாவது வாக்களித்திருப்பார்கள். அடி அத்திவாரமே இல்லாதவர்களை மக்கள் எவ்வாறு அகற்றியிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும்.

அப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருந்து தமிழரசுக்கட்சி ஏதோ சர்வதேச விசாரணையை கோரவில்லை உள்ளக விசாரணையை கோருவது போலவும் அத்தனை உண்மைகளையும் மூடி மறைத்து தற்போது புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய முதலமைச்சரும் சம்பந்தப்பட்டிருக்கின்றார். ஒரு நீதியரசருக்கு அது புரியாமல் இருக்க முடியாது. அப்படி புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம். அதனை நாம் எப்படி அனுகப்போகின்றோம் என்று நாம் சில நியாயங்கள் வைத்துள்ளோம்.

2010 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் அண்டு வரை இப் பிரேரணை நிறைவேற்றப்படும் வரை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சம்பந்தமுள்ளது. ஆனால் சம்பந்தப்படாத பலர் இருக்கின்றார்கள். தேர்தல் இறுதி காலகட்டத்தில் நான் கஜேந்திரகுமாரிடம் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு தெரியும். வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு பசில் ராஜபக்சவுடனும் ராஜபச்வுடனும் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்றே கேட்டேன். எனக்கு தெரியும் அது என்ன என்று. சந்திரகாந்தனும் பசில் ராஜபக்சவுடன் பேசி ராஜபக்சவுடன் செய்தியை பெற்று வெள்ளைக்கொடியுடன் வருமாறு கேட்ட செய்தியையும் அவர்கள் ஏமாற்றி வந்தவர்களை கொன்று விட்டார்கள் என்ற செய்திiயும் ஐ.நாவில் சாட்சியமாக அளித்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார். ஆனால் ஏன் கஜேந்திராகுமாரால் அவ்வாறு செய்ய  முடியவில்லை.

ஒரு நாட்டைப்பற்றி ஒரு விசாரணை கொண்டு வரப்படுகின்றபோது உள்ளக விசாரணை இடம்பெறவேண்டும். அந்த நாட்டின் இணக்கத்துடன் கொண்டு வரப்படவேண்டும். அதுவே அதனுடைய சாராம்சம். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணை பற்றி தெரிவிக்கப்பட்டு நாங்கள் அதனை வலுவூட்டி சிறந்த போர்க்குற்ற விசாரணை இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதற்கு மக்கள் அங்கீகாரத்தை பெருவாரியாக வழங்கியுள்ளார்கள். அதைவிட கையெழுத்து எவ்வளவு பெறுமதியாக இருக்கபோகின்றது என தெரிவித்தார்.

http://tamilleader.com/?p=50790

  • கருத்துக்கள உறவுகள்

மாவை வரவர பதவி ஆசையில்.... புத்தி பேதலிச்ச பேச்சுக்களை பேசி வருகிறாரே தவிர... தமிழ் மக்களிடையே அரசியல் வேறுப்பாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையை நிலைநாட்ட என்று உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி அரசியலுக்காக மாவையும் சம் சும் கும்பலும் பயன்படுத்தி வருவது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தார்மீக உரிமைகள் தொடர்பில் நிச்சயமற்ற ஒரு போக்கையே இது அவர்களுக்கு பரிசளிக்கும். இது தொடர்பில் மாவை கடுமையாக மக்களால் எச்சரிக்கப்படுவது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்து, வெற்றிக் கொண்டாட்ட களிப்பிலிருந்து... மாவை இன்னும் மீளவில்லைப் போலுள்ளது.
மாவை முழக்கம், மாவை கர்ஜிப்பு, மாவை அறை கூவல்.... எல்லாம் பிறகு பாத்துக்கலாம்.
அதுக்கு முதல்..... கன அலுவல் இருக்கு, அதுகளை  பாருங்கப்பு. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

//இது தொடர்பில் மாவை கடுமையாக மக்களால் எச்சரிக்கப்படுவது அவசியம்.//

உண்மையில் இது வரவேற்கத் தக்கவிடயம். கடந்த காலங்களைப் போலல்லாமல் மக்கள் தங்கள் அரசியலைத் தீர்மானித்தது போன்று அவர்களை வழிநடத்தவும் வேண்டும். கடந்த காலங்களில் ஆயுததாரிகளுக்குப் பயந்து மக்கள் வாளாவிருந்தனர். இப்போது அந்தநிலை மாறியிருப்பது வரவேற்கத் தகுந்த விடயம். ஏலவே கஜே கோஸ்டிக்கும் அவர்தம் புலத்து எசமானர்களுக்கும் மக்கள் தமது வோட்டுக்களால் சாட்டையடி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவைக்கு எதிராக ஆயுதம் தூக்க பிரபாகரனும் புலிகளும் அவசியமில்லை. ஒற்றைப் பிஸ்டல் மகாத்மா காந்தியையே சரித்தது தான் வரலாறு. 

இன்றைய தேவை ஆயுதங்களுக்கு அல்ல. அதற்கான உலக ஒழுங்கும் இன்றில்லை. ஆனால் மாவை தேவையற்ற குழப்பங்களை கட்சி அரசியலுக்காக ஏற்படுத்தி வருவதை அவருக்கு வாக்குப் போட்ட மக்கள் தான் கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

இன்றும் கஜேந்திரகுமார் தலைமையில் தான் தாயக மக்கள் சர்வதேச விசாரணை கோரி ஆர்வத்தோடு கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கட்சி அரசியலுக்கு அப்பால் நகர்ந்து சென்று மக்களின் உரிமையை முன்னிறுத்திச் செயற்படும் கஜேந்திரகுமாரை மாவைக்கு இந்த விடயத்தில் மக்கள் முன்னுதாரணமாக நிறுத்தலாம். tw_blush:

Edited by nedukkalapoovan

கெதியில் ஆரோ ஆப்படிக்கத்தான் போறான் ... அந்த புண்ணியவான் யாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

 உதுதானே கூடாதென்கிறது. வாக்கு போட்ட மக்களுக்கு நன்றி சொன்னமா, அவர்களது தேவைகளுக்கு உழைத்தமா என்றில்லாமல் கொம்பு சீவிற வேலையெல்லாம் பாக்கிறது. உங்களை விட மக்களுக்கு அதிகம் தெரியும். சும்மா அலம்புவதற்கு ஒன்றும் வோட்டுப் போடவில்லை. உப்பிடியே மகிழ்ந்து, களித்து காலத்தை ஓட்டாமல் மக்களின் தேவையை நிறைவேற்றும் காணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.