Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

09.05.2016: கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் சகோதரி முத்துமாரி அவர்களை ஆதரிக்க வாக்கு சேகரிப்பு..

1936119_237798976583188_6264968371900773

13082581_237799009916518_886598261501258

13179318_237799039916515_553945620709853

13164237_237799076583178_900945536634484

13133083_237799089916510_179127392631486

 

 

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13178996_172047426529047_873129035515270

 

 

13173640_647102468790066_416325927339476

 

13179314_1132105226840319_75286340429821

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில்..

 

 

பேராசிரியர் கல்யாணசுந்தரம் (சிங்காநல்லூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்) விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்..!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Quote

 

நாம் தமிழர் சீமானின் பேச்சு - நடுநிலையாளனின் பார்வையில்
-------------------------------------------------------------
எத்தனை நாள்தான் சீமானை வீடியோவில் , டிவியில் மட்டுமே பார்ப்பது?,
அவரது உரையை நேரில் கேட்க வேண்டுமே எனக் காத்திருந்த நான்,

சென்னை கொளத்தூரிலும், ஆ.கே நகரிலும் சீமான் உரை என்றதும் கிளம்பி விட்டேன்.

ஞாயிறு கொளத்துரில் ( வீனஸ் அருகே) இரவு 8.15 முதல் 9.00 மணி வரையும், 
ஆர்.கே. நகரில் ( மேம்பாலம் அருகே) இரவு 9.15 முதல் 10.00 மணி வரையும் உரையாற்றினார்.

நடுநிலையாளனாக எனது பார்வை
--------------------------------------------------------

பிளஸ் பாயிண்டஸ் :

* ஒரு போஸ்டரில்லை, பப்ளிசிட்டியில்லை, ஊடகங்க்களில் செய்தி இல்லை. ஆனால், எப்படி 1500, 2000 பேர் சீமான் கூட்டத்திற்கு திரள்கிறார்கள் என்பது மர்மமாக இருக்கிறது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உண்டாக்குகிற மாயஜாலத்திற்கு சான்று இது என்று தான் எண்ண் வேண்டி இருக்கிறது.

* அடுத்து எங்கு போகிறார், எங்கு பேசுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, பின்னாலேயே ஏதோ மந்திரித்து விட்டாற்போல் பைக்கில் பின்தொடர்கிறது ஒரு இளைஞர் கூட்டம்.
* கொளத்தூரில் பேசிய சீமானின் அதே உற்சாகம், ஆவேசம் எந்த வித சோர்வுமில்லாமல் ஆர்.கே நகரிலும் தொடர்ந்தது ஆச்சர்யம்தான்.
* இரண்டு இடத்திலும் பேசிய சீமானின் பேச்சு வெவ்வேறாக இருந்தது. (அதாவது, ஒரே மாதிரியான பேச்சையே 2 இடங்களிலும் பேசி அவர் மாவரைக்கவில்லை)
* கொளத்தூரில் திராவிட கட்சிகளின் கடந்த கால ஆட்சியின் மோசமான செயல்பாடுகள் என்றால், ஆர்.கே நகரில் நாம் தமிழர் கொண்டு வரப்போகும் ஆட்சி முறை பற்றிய சொற்பொழிவு
*கொளத்தூரிலும் சரி, ஆர்.கே நகரிலும் சரி, ம.ந.கூ, விஜயகாந்த், பாமக, காங்கிரஸ், பிஜேபி எவரைப் பற்றியும் விமர்சிக்கவில்லை
* ஆர்.கே நகரில் ஜெ பற்றி கூட பேசவில்லை. 
* சொற்களை தேடாமல், வார்த்தைகளை உருவாக்காமால் இயல்பாக பேசும் சீமானின் பேச்சு வசீகரம் மட்டுமே நாம் தமிழர் கட்சியின் சொத்து என்பதில் எவ்வித ஐயமில்லை.

சீமான் பேச்சில் ரசித்தது
-------------------------
" கொஞ்சம் ரத்தம் தாருங்கள் - நான் சுதந்திரம் வாங்கி தருகிறேன் என்றார்,சுபாஷ் சந்திர போஸ்.
என் மக்களே நான் உங்களிடம் உங்கள் ஒரு ஓட்டைத் தான் கேட்கிறேன்" கொளத்தூர்

" ஆதார வளங்களே இல்லாத அயல் நாடுகள் உச்சத்தில் உள்ளன. 
எல்லா வளங்களும் இருந்தும் நாம் பிச்சைஎடுக்கிறோம்." ஆர்.கே நகர்

" இவர்கள் செய்வது அரசியல் அல்ல, அரிசியியல்" கொளத்தூர்

" ஹெலிகப்டர் இறங்க 10 ஏக்கர் விளை நிலத்தை அழித்தி விட்டு ஹெலிபேட் அமைக்கிறார்கள், அதில் வந்து இறங்கி ஜெயலலிதா விவசாயிகளைக் கேட்கிறார் ' உனக்கு என்ன பிரச்சனை?" 
"விவசாயிகள் சொல்கிறார்கள் " நீதாம்மா பிரச்சனை" - கொளத்துர்

"கடந்த கால தவறுகளை மன்னித்து விடுங்கள் - ஸ்டாலின் சொல்கிறார்.
மக்களும் சொல்கிறார்கள் - நாங்களும் உங்களுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டோம்- மன்னித்து விடுங்கள்" ஆர்.கே நகர்.

" 68 பேருக்கு அரை பவுன் தங்கம் அளித்து திருமணம் செய்து வைத்தது அதிமுக வின் பெருமை என்றால், அரை பவுன் தங்கம் கூட வாங்க வக்கில்லாமல் என் மக்களை வைத்திருப்பதும் பெருமையா ?" - கொளத்துர்

" மறுபடியும் ரெட்டை எலைக்கு தான் போடுவேன், ஒதயசூரியனுக்குதான் போடுவேன்,னு போதையில் இருக்கிறவன் மாதிரி பேசக்கூடாது. அப்படி மீறி ஓட்டு போட்டா, உன் கைக்கு விரால இருக்குமே' னு நொந்துபோய் , கஷ்டப்பட்டு, விரலுக்கு குஷ்டம் தான் வரும். கஷ்டம் தீராது."

மைனஸ் பாயிண்ட்ஸ்
-----------------------------------------

* பொதுவான தமிழக ஆட்சியின் மோசமான செயல்பாடுகள் பற்றி மட்டுமே சீமான் பேசுகிறாரே தவிர, குறிப்பிட்ட தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் பற்றி இரு கூட்டத்திலுமே சீமான் பேசவில்லை 
( நேரமின்மை காரணமாக இருக்கலாம்)

* மீட்டிங் பற்றிய தகவல்கள் முறையாக எல்லா வட்டத்திலும் உள்ள தலைவர்கள், செயலாளார்கள், பொறுப்பாளர்களுக்கே வருவதில்லை. சரியான கட்டமைப்பு இருந்தால், ஊடகங்கள் ஒத்துழைத்தால் சீமானின் கூட்டத்திற்கு 5000 பேர் நிச்சயம் வருகை தரக்கூடும்.

* அதிமுக அரசு செய்த மோசமான தீமைகள் ( மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் போட்டது, புதிய சட்டசபை கட்டத்தை நிராகரித்தது, அண்ணா நூலகத்தை புறக்கணித்தது, சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்து நஷ்டம் ஏற்படுத்தியது, சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது, 5 ஆண்டுகளில் எந்தவொரு வளர்ச்சி திட்டத்தையும் கொண்டுவரமால் ஓ.பி அடித்தது, புதிதாக படித்து விட்டு வரும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியது, இன்னமும் கூட திருந்தாமல் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை சேர்த்தது) பற்றியெல்லாம் பேசி கிழித்து தொங்க்க விடுவார் என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே. ( அவர் என்ன பண்ணுவார் ? ஒரு மணி நேரத்தில் பேசக்கூடிய விஷயமா அதிமுக செய்த தீமைகள்?)

* ஆர்.கே நகரில் நட்ட நடுவில் இரு கேமராமேன்கள் நாற்காலியில் நின்று கொண்டு, சீமான் பேசுவதை மறைத்து கொண்டு எரிச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தனர். ( கேமாரவை ஆன் செய்து , கோணம் வைத்து விட்டு நகர வேண்டியது தானே)

நான் கவனிச்சது
----------------------------

* கொளத்தூரில், "என்னப்பா இங்க டிராஃபிக்?" 
"சீமான் பேசுறாராம் ,சரியான தொல்லை , எப்ப கிளியர் ஆகுமோ? "
" அட பேசட்டும்பா, எவன் எவனுக்கோ காத்திருந்தோம், இந்த ஆளு நமக்காக பேசுற ஆளுப்பா"

* தண்டையார் பேட்டை - திமுக கரை வேட்டிகளிடம் வழி விசாரித்த போது,
" அண்ணே - பவர் ஆபிஸ் எங்க இருக்கு?"
" கொஞ்ச தொலைவுதாம்பா, சீமான் மீட்டிங்க் போறீங்களா , நேரா போயி , லெஃப்ட்லபா "

* நாம் தமிழர் தொண்டர்களிடமும் சரி, கூட்டத்திற்கு வரும் பொதுமக்களிடமும் சரி , மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள் காவல்துறையினர். ( " தம்பி வண்டியை மறக்காம சைட் லாக் போடுங்க")

* கூட்டத்தினரிடையே வரும் உண்டியலில், காசு போட ஒரு பெருங்கூட்டமே தயராக இருக்கிறது.

" தலா இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை சீமானின் பேச்சுனூடே கரவொலி, விசில் சத்தம் கட்டாயம் கேட்கிறது.

* இரு இடங்களிலும் சீமான் பேச்சு முடிந்ததும், தள்ளு முள்ளு இல்லாமல் கூட்டம் கலைந்து சென்றது அத்தனை அழகு, ஆராவாரம் ஏதும் இன்றி, நாற்காலிகளைக் கூட கலைக்காமல் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக கூட்டம் கலைந்து சென்றதில் அப்படி ஒரு ஒழுங்கு.

மீட்டிங் முடிந்து திரும்பும்போது - மைண்ட் வாய்ஸ்
---------------------------------------------------------------

* வாழ்க , ஒழிக கோஷம் இல்லாமல், பட்டாசு வெடி இல்லாமல், கட் அவுட் இல்லாமல் ஒரு கூட்டம் பார்த்து எத்தனை நாள்கள் ஆச்சி?

- பா.சுப்ரமண்யம்

 

 

 

https://www.facebook.com/photo.php?fbid=255307701524106&set=a.160514387670105.1073741828.100011346354457&type=3

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திரு வியனரசு அவர்கள் பரப்புரையில் (திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி)..

 

 

மதுரை மேற்கு தொகுதி.. வேட்பாளர் திருநாவுக்கரசு விஜயனுக்கு வரவேற்பு..

13217492_513564022163912_404975686845545

13115983_513564032163911_347885782145994

13116130_513564108830570_336103112267005

13131190_513564128830568_822028748441963

13147410_513564192163895_744537518499891

13131578_513564268830554_430317081852972

13112829_513564282163886_832208549845506

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

13125009_647097035457276_506120557275067

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இசைக்கலைஞன் said:

 

திரு வியனரசு அவர்கள் பரப்புரையில் (திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி)..

 

மிகவும் சக்திமிக்க, சீமானின் பேச்சைக் கேட்டு இளைஞர்கள் யார் தான் படுத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடசில பார்த்தால், பிரபாகரன் படத்தை போட்டு தான் வாக்கு பெறலாம் என்று முடிவே பண்ணீட்டாங்க போல கப்டன் ஆளுங்க...

13119058_243751996013010_392406884606242

13087833_242623266125883_572547207069462

13087676_241237142931162_630602492968104

ஒரு மேடையில் இருந்து அடுத்த மேடைக்கு செல்லும் வழியில், உணவு இடைவேளை

13062399_239985139723029_707400229052451

  • கருத்துக்கள உறவுகள்

13001135_237888296599380_753447185729430

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கட்சி வேட்பாளர்களை விரட்டியடிக்கும் அதே மக்கள்தான் இங்கு சீமானிடம் ஒட்டி உறவாடுகின்றனர். நான்காம் கட்ட பரப்புரை.. தற்போது கடலூரில்..

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேரிப்பட்டு மக்கள் அவரை பாட்டு பாட சொல்லி ரசிக்கிறார்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

10.05.2016: முக்கியமான சில கேள்விகளுக்குப் பதில் தருகிறார் சீமான்

 

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!” அதிரவைக்கும் சீமான்

 

p20.jpg

‘இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘வனக் காவலன் வீரப்பன், இனக் காவலன் பிரபாகரன்’ என்ற வசீகரிக்கும் வசனங்கள் நாம் தமிழரின் மேடைகளில் எதிரொலிக்கின்றன. 

‘தமிழனின் ஓட்டு தமிழனுக்கே’ என சீமான் முன்வைக்கும் முழக்கத்தைப் பார்த்து, அதிர்ந்து கிடக்கின்றன திராவிடக் கட்சிகள். இதுவரையில் மாற்றத்தை முன்வைத்து தனித்துக் களமிறங்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் சீமானின் தமிழர் ஆட்சி முழக்கம் எடுபடுமா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. தேர்தல் பிரசாரங்களில் அவர் முன்னெடுக்கும் சில விஷயங்களை ஆராய்ந்தோம். 

சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்பு, பரவலாக இருக்கும் தமிழர் ஓட்டுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, தலித் தலைவர்களான திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தலித் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக 20 தலித் வேட்பாளர்களை பொதுத் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார். ‘தமிழனுக்கு நீ ஓட்டு போடவில்லை என்றால், என்னுடைய ஓட்டு உன் மொழி பேசுபவனுக்குக் கிடையாது’ என எச்சரிக்கிறார் சீமான். 

வட மாவட்டங்களில் பா.ம.க வாக்குகளைக் கவர்வதற்காக 36 வன்னியர்களைக் களமிறக்கி இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில், ‘வீரப்பனுக்கு மணிமண்டபம்’ என்ற சீமானின் கோரிக்கைக்கு வரவேற்பு உள்ளது. வீரப்பனைப் பற்றி ஜெயலலிதா சில வார்த்தைகளைக் கூறியபோது, ராமதாஸ் எதிர்ப்புக் காட்டவில்லை என்பதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இருக்கிறார் சீமான். அவர்களிடம், பா.ம.க குரு பாணியில், ‘மானத்தமிழன் கார் டயரைத் தொட்டு கும்பிடுறான். எங்கே போனது இனத்தின் வீரம்?’ என்றெல்லாம் உசுப்பேற்றுகிறார். நகர்ப்புற பா.ம.க ஓட்டுக்களை அன்புமணி அறுவடை செய்யக் காத்திருக்கும்போது, கிராமப்புற வன்னியர்கள் மத்தியில், ‘தமிழன்’ என்ற முழக்கத்தைக் கொண்டு சேர்க்கிறார். இதன்மூலம், வட புலத்தில் வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் அறுவடை செய்யும் என உறுதியாக நம்புகிறார்.

p20a.jpg

அதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தோடு ராமதாஸ் கூட்டுச் சேர்ந்து விட்டதால், தே.மு.தி.க-வை விமர்சிக்கும் தகுதியை பா.ம.க இழந்துவிட்டது என்ற அடிப்படையில் பிரசாரம் செய்கிறார். இதில், விஜயகாந்த்தை ரஜினி விமர்சித்ததையும் கடுமையாக எதிர்க்கிறார் சீமான். ‘நான் மராட்டி’ என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி. அவரை எதிர்க்க விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கிறது?’ எனப் பேசுவதன் மூலம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளையும் தன்பக்கம் திருப்ப முயற்சிக்கிறார் சீமான். 

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை, ‘இன அழிப்பின் பங்காளிகள்’ என்கிறார். ‘என் இனம் போரில் அழிந்தபோது தூங்கினார் கருணாநிதி. என் இனம் நீரில் அழிந்தபோது தூங்கினார் ஜெயலலிதா’ என அவர் தாக்கிப் பேசும்போது விசில் பறக்கிறது. ‘ஈழத்தின் கொடூரக் கொலைகளுக்கு சாட்சி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இவர்களை வேரோடு வீழ்த்த வேண்டும்’ எனக் கொந்தளிக்கிறார். அதேபோல், ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி மட்டும்தான்” என்கிறார். “திருமா, வைகோவின் ஈழவிடுதலைக் கொள்கையை கம்யூனிஸ்ட்கள் ஏற்பார்களா?” என மக்கள் நலக் கூட்டணியையும் விமர்சிக்கிறார். 

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள். தேர்தலில் செலவழிக்க பணமில்லாவிட்டாலும், வீடுகள்தோறும் நடந்து சென்றே வாக்கு சேகரிக்கிறார்கள். கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசாரப் படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி ஓட்டு சேகரிக்கிறார்கள். ‘நாமே மாற்று... நாம் தமிழரே மாற்று’ என்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் முழக்கம், மெழுகுவர்த்தி வெளிச்சமாக பளீரிடுமா என்பது எல்லாம் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கிறது. 

- ஆ.விஜயானந்த்

Vikadan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வடநாட்டுக்காரனுக்கு கூட தெரியுது..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதரான மனிதன் கூறும். நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம். வெல்வது உறுதி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13139295_271269133212981_798798549437086

13177880_995854187131242_364630757594746

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 


லயோலா கல்லூரி பேராசிரியர் Andrew Sesuraj அவர்களின் பதிவு....
===================================
நான் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று அறிவித்த நாள் முதல் பல்வேறு தளங்களில் நான் செய்தது தவறு என்பது போல் பலர் என்க்கு காணொளிகள் தரவுகளை அனுப்பி வருகின்றனர்
எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியல....................

சீமானோ .......நாம் தமிழர் கட்சியோ பெரிதாக சாதிக்க போவதில்லை என்று சொல்லும் நீங்கள் ....................இவ்வளவு காணொளிகளை ஏன் உருவாக்க வேண்டும் .....................எனக்கு பதில் சொல்ல இவ்வளவு மெனக்கெட வேண்டும்

அப்போ சீமான் வென்று விடுவாரோ என்ற பயம் யாருக்கோ இருக்கு அவங்க பண்ற அலப்பறை தான் இது
என் சொந்தங்களே.........

நான் சிந்தித்து................விவாதித்து .............சீர் தூக்கி பார்த்து எடுத்த முடிவு தான் .....................நாம் தமிழர் ஆதரிப்பது என்பது.

ஆனால் 
அதே வேளையில் நான் கட்சி காரன் அல்ல எனவே இன்னமும் சீமானை விட ..............நாம் தமிழரை விட நல்ல கட்சியை நல்ல முதல்வர் வேட்பாளரை காட்டுங்கள் எனக்கு புரிய வையுங்கள்.
நான் மாற தயார்.

அதற்கு நீங்கள் எனக்கு காட்ட வேண்டியது சீமானை பற்றி அல்ல ...............நீங்கள் முன் வைக்கும் அந்த மாற்றை பற்றி தான். ஏன் அந்த மாற்றை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை தான்.
வேறு மாற்றை காண்பிக்காமல் சீமானை பற்றியே நொட்டை சொல்லுவது .....................போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்.

அப்புறம் .............. தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பது மற்றவர்கள் ஓடி போங்கள் என்று சொல்வதாக அர்த்தம் அல்ல. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் தமிழர் அல்லாதோரும் இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.

வந்தாரை வாழ வைத்த தமிழ் மண் இது. இங்கே யார் வேண்டுமாலும் வாழாலாம்..............ஆனால் தமிழனே ஆள வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடும்.

 

 

"தடா" சந்திரசேகர் (வேளச்சேரி தொகுதி)

13112832_1179287328768359_48174638400297

13151718_1135298933188185_76662278950141

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13124563_271288043211090_308769548950689

13178003_645153722303115_326694911591345

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில்..

13178937_545598345613072_134039121078450

13139034_545600378946202_187479401719407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

எனது நண்பர் ஒரு தெலுங்கர் 
வெளிநாட்டில் என்னோடு பணி செய்கிறார்!!

அண்ணே சீமானின் அரசியல் அனைத்து மக்களுக்குமானது, 
அவரின் வரைவை படிச்சேன் இந்தமுறை எனது குடும்ப வாக்கு 7ம் நாம் தமிழர் கட்சிக்குதான் என்றார்..

சீமான் இனவாதி, மொழி வெறியன் என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள் நான் தெலுங்கனாகவே இருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழனாக இனமாற்றம் செய்து பிளைப்பதை விட தன் சுயத்தோடு வாழுங்கள் என்பதில் பெருமைதானே அது எனக்கு பிடித்து இருக்கிறது..

எனக்கு தெலுங்கு மொழி முழுவதும் தெரியாவிட்டாலும் நாங்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசிகொண்டிருக்கிறோம் சீமானின் பேச்சை கேட்டபிறகு தான் தாய்மொழி தெலுங்குதான் நமது அடையாளம் அதை கற்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகிறது..

நாம் தமிழர் வரைவை தமிழகத்தில் இருக்கும் பிறமொழி மக்களுக்கு கொண்டுபோய் சேருங்கள் வெற்றி பெறுங்கள் வாழ்த்துகள்.

என்னைபோல் அனைத்து குடும்பமும் நினைக்கவேண்டும் அண்ணா அப்போதுதான் மாற்றம் என்றார்

வியப்புடன் அவரை வாழ்த்திவிட்டு சென்றேன்.. உங்களின் மொழிபற்று இனம் பற்று பாராட்டுக்கூறியது..தம்பி..

 

https://www.facebook.com/simon.tamilar/posts/256207378100805

  • கருத்துக்கள உறவுகள்

'இருக்கு மாப்ளைகளா உங்களுக்கு...!' -தி.மு.க, அ.தி.மு.கவுக்கு சீமானின் ஸ்கெட்ச்

seemanlong1.jpg

சட்டமன்றத் தேர்தலில்,  234 தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியை களமிறக்கி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 'ஆடு, மாடு மேய்த்தல் அரசுத் தொழில், கள் தேசிய பானம், வீரப்பனுக்கு மணிமண்டபம்' என அரசியல் களத்தை அதிர வைக்கிறார். 

அக்னி வெயிலின் உக்கிரத்தைவிடவும், சீமானின் அதிரடிப் பேச்சுக்கள் கலங்கடிக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் சீமானிடம், ஒரு பிரசார இடைவேளையில் பேசினோம்.

" இந்த தி.மு.கவும் அ.தி.மு.கவும் நம்மை முடிந்தளவு ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். எங்கள் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. இந்தத் தேர்தலோடு மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விடும். நாடாளுமன்றத் தேர்தலில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறது பா.ம.க. வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுவேன். எங்கள் கட்சி சார்பில் இருபது ஆண் வேட்பாளர்கள், இருபது பெண் வேட்பாளர்கள் களமிறங்கப் போகிறார்கள்" எனப் படபடத்தார் சீமான்.  

தேர்தல் கருத்துக்கணிப்புகளை கவனித்தீர்களா? 

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் வர்த்தகம் இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பத்திரிகையாளன் நேர்மையாக எழுதி, புரட்சி பண்ணுவான் என்பதை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இப்போதெல்லாம், ' லஞ்சத்தை ஒழிக்கணும், மதுவை ஒழிக்கணும், நாடு சரியில்லை' என்று கருத்துக்களை எழுதுகிறார்களே தவிர, அதற்காகப் போராட வருகிறவர்களை வரவேற்கும் நோக்கம் ஊடகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தி.மு.க வரும் இல்லாவிட்டால் அ.தி.மு.க வரும் என்கிறார்கள். இவர்கள் வர வேண்டுமா? என்பதுதான் பிரதான கேள்வி. இவர்கள் மாறி மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை. புதிய சிந்தனையோடு வரக்கூடிய புதியவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்கிறீர்கள். களநிலவரம் எப்படி இருக்கிறது? 

மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். அரசியலை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு தலைமுறை வலுவாக தயாராகி வருகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தை மட்டுமே களமிறங்கியிருக்கிறார்கள். இவர்களின் பணபலத்தையும் மீறித்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைக்கிறோம். இது ஒரு போர். பணத்தை முதலீடு செய்து பெரும் பணத்தை ஈட்டுகிற நிலையில்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தாலும் இவர்களால் நேர்மையாக இருக்கவே முடியாது. பிரசாரத்தில்கூட, 'இந்த ஐந்து ஆண்டுகளில்தான் அனைத்தும் நடந்ததுபோல' தி.மு.க பேசுகிறது. 

இதுவே மக்களை ஏமாற்றும் செயல்தான். நாங்கள் 2000 என்று வைத்திருந்ததை, அவர்கள் ஆறாயிரமாக மாற்றிவிட்டார்கள் என தி.மு.க சொல்கிறது. இதுவா வளர்ச்சி? இதுவா மக்களைக் காக்கும் லட்சணம்? வளர்ச்சியைத் தடுக்கும் வேர் எங்கே இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது திராவிடத்தின் மிச்ச சொச்சமாக தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் பெரியார் பிறந்தநாளையோ, அண்ணா பிறந்தநாளையோ எழுச்சி நாளாக அறிவித்தார்களா? விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். அந்த விவசாயியைக் கடனாளி ஆக்கியது யார்?யார் வேண்டுமானாலும் கடனாளியாக இருக்கலாம். விவசாயி மட்டும் இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் இவர்கள் செய்துவிட்டு, அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என நாடகமாடுகிறார்கள். 

அ.தி.மு.கவின் இலவச செல்போன் அறிவிப்பு எடுபடுமா? 

இங்கு எந்த மக்கள் செல்போன் வேண்டும் என்று கேட்டார்கள்? கல்விக்கான போராட்டம் அதிகரித்து வருகிறது. கல்வியை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உருவாக்கி, அதில் போட்டியை உருவாக்கிவிட்டார்கள். அறிவை வியாபாரமாக்கிவிட்டார்கள். பல லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டோம். கல்வியைக் கடன் வாங்கிப் படிக்க வைத்ததே இவர்கள்தான். இப்போது கல்விக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆட்சிமுறையையே தூக்கி எறிய வேண்டும். 

jaya-karuna1.jpgதிராவிடக் கட்சிகளை முற்றாக ஒதுக்கிவிட்டு, புதிய கட்சிகளை மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறீர்களா? 

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். சாதி,மத போதை போல திராவிடக் கட்சிகளும் மக்கள் மனதில் மிகப் பெரிய போதையை ஏற்படுத்திவிட்டன. ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதியில் பெண் எடுத்துவிட முடியும். ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்தில் பெண்ணெடுத்து வாழ்ந்துவிட முடியும். ஆனால், தி.மு.க, அ.தி.மு.கவுக்குள் பெண் எடுப்பவர்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? ஐம்பது ஆண்டுகளில் மிகப் பெரிய அரசியல் தீண்டாமையை இந்த திராவிடக் கட்சிகள் உருவாக்கிவிட்டன. அதில் இருந்து என் மக்களை மீட்டெடுப்பது மிகப் பெரிய பணி. இந்த தீண்டாமையை உருவாக்கியதில் மிகப் பெரிய பங்கு கருணாநிதிக்கு உண்டு. அண்ணாவை சந்திக்க மறுத்த அமெரிக்க அதிபர் நிக்சனை, பெருந்தலைவர் சென்னையில் சந்திக்க மறுத்தது மிகப் பெரிய அரசியல் பண்பாடு. அதைக் கெடுத்தது கருணாநிதிதான். 

நீங்கள் போட்டியிடும் கடலூரில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? 

உறுதியாக வெல்வேன். மக்களுக்காக நிற்கிறேன். மக்களை மட்டுமே நம்பி நிற்கிறேன். 

மதுவுக்கு எதிராக கள்ளை பானமாக அறிவிக்கும் உங்கள் முடிவுக்கு வரவேற்பு கிடைக்கிறதா? 

பனை, தென்னை தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கள் என்பது மதுவே கிடையாது. அது ஒரு மூலிகைச் சாறு. அருகம்புல் சாறு உடம்புக்கு நல்லது என்கிறார்கள். அதைவிட பெரிய புல் பனை, தென்னை. உடல்நலத்திற்கு ரொம்ப நல்லது. மக்கள் குடித்துவிட்டுப் போகட்டும். விவசாயி வாழ்வான். கள் பானத்தை மிகப் பெரிய போதையாக எடுத்துக் கொள்ள முடியாது.

உங்கள் வேட்பாளர்களை வளைக்கும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகிறதே? 

உண்மைதான். எங்கள் கட்சி வேட்பாளர்களிடம் தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் பேசும்போது, ' நீங்கள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்கிறார்கள். எங்கள் வேட்பாளர்களும், 'உங்களை வச்சு செய்றதுக்காகத்தான் களத்தில் நிற்கிறோம். நீங்க தள்ளி நில்லுங்க' எனச் சிரித்தபடியே சொல்கிறார்கள். பொருளாதார பின்னடைவு மட்டும்தான் எங்களை நெருக்குகிறது. நாம் தமிழர் வேட்பாளர்களிடம் ஒன்றை மட்டும்தான் சொல்வேன். ' ஒருத்தரையாவது பார்த்துக் கும்பிடு. உனக்காகத்தான் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்' என்று சொல்கிறேன். இது வழக்கமான தேர்தல் அல்ல. பன்னெடுங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் உணர்வுதான் வெடித்துக் கிளம்புகிறது. 

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? 

பெரும்பாலான மக்களுக்கு சரியான உணவு, உடை, இருப்பிடம் என எதுவும் இல்லை. குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் இல்லை. நல்ல கல்வி கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஐந்தாண்டும் மிகப் பெரிய பருவம். அத்தனையும் வீணடித்துவிட்டார்கள். வேட்டி, சட்டையைக் கழட்டிவிட்டு பேண்ட், சட்டை போட்டால் ஸ்டாலின் புதிய நபராக மாறிவிடுவாரா? புதிய கட்சியாக தி.மு.கவைக் காட்டலாம் என முயற்சி செய்கிறார். காங்கிரஸ் கட்சியை, 'கூடா நட்பு' என்றார் கருணாநிதி. 'அழுக்கு மூட்டை' என்றார் ஈ.வி.கே.எஸ். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சோனியாவோடு ஒரே மேடையில் உட்கார்ந்திருந்தார் கருணாநிதி. எங்கே போனது கூடா நட்பு? அழுக்கு மூட்டை விமர்சனங்கள்?

எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் விதைத்துக் கொண்டே இருப்பேன். நான் விதைத்த விதையை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. தன்னலமற்ற அரசியலுக்கான அழைப்பு இது. பேரலையாக எழுந்து வருவான் என் இளைஞன். மே 19 வாக்கு எண்ணிக்கையின்போது மிகப் பெரிய புரட்சி நடக்கும். அதற்கான தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காட்டையே அழிக்கப் போகும் பெருந்தீ பரவிக் கொண்டிருக்கிறது. புரட்சிகரமான அரசியலுக்கு தொடக்கமாக இந்தத் தேர்தல் அமையும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்" என ஆவேசமாகப் பேசி முடித்தார் சீமான். 

ஆ.விஜயானந்த் 

vikadan.com

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!” - அதிரவைக்கும் சீமான்
======================================================

‘இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘வனக் காவலன் வீரப்பன், இனக் காவலன் பிரபாகரன்’ என்ற வசீகரிக்கும் வசனங்கள் நாம் தமிழரின் மேடைகளில் எதிரொலிக்கின்றன.

‘தமிழனின் ஓட்டு தமிழனுக்கே’ என சீமான் முன்வைக்கும் முழக்கத்தைப் பார்த்து, அதிர்ந்து கிடக்கின்றன திராவிடக் கட்சிகள். இதுவரையில் மாற்றத்தை முன்வைத்து தனித்துக் களமிறங்கும் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் சீமானின் தமிழர் ஆட்சி முழக்கம் எடுபடுமா என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. தேர்தல் பிரசாரங்களில் அவர் முன்னெடுக்கும் சில விஷயங்களை ஆராய்ந்தோம்.

சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முன்பு, பரவலாக இருக்கும் தமிழர் ஓட்டுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, தலித் தலைவர்களான திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தலித் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக 20 தலித் வேட்பாளர்களை பொதுத் தொகுதிகளில் நிறுத்தியுள்ளார். ‘தமிழனுக்கு நீ ஓட்டு போடவில்லை என்றால், என்னுடைய ஓட்டு உன் மொழி பேசுபவனுக்குக் கிடையாது’ என எச்சரிக்கிறார் சீமான்.

வட மாவட்டங்களில் பா.ம.க வாக்குகளைக் கவர்வதற்காக 36 வன்னியர்களைக் களமிறக்கி இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில், ‘வீரப்பனுக்கு மணிமண்டபம்’ என்ற சீமானின் கோரிக்கைக்கு வரவேற்பு உள்ளது. வீரப்பனைப் பற்றி ஜெயலலிதா சில வார்த்தைகளைக் கூறியபோது, ராமதாஸ் எதிர்ப்புக் காட்டவில்லை என்பதை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இருக்கிறார் சீமான். அவர்களிடம், பா.ம.க குரு பாணியில், ‘மானத்தமிழன் கார் டயரைத் தொட்டு கும்பிடுறான். எங்கே போனது இனத்தின் வீரம்?’ என்றெல்லாம் உசுப்பேற்றுகிறார். நகர்ப்புற பா.ம.க ஓட்டுக்களை அன்புமணி அறுவடை செய்யக் காத்திருக்கும்போது, கிராமப்புற வன்னியர்கள் மத்தியில், ‘தமிழன்’ என்ற முழக்கத்தைக் கொண்டு சேர்க்கிறார். இதன்மூலம், வட புலத்தில் வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் அறுவடை செய்யும் என உறுதியாக நம்புகிறார்.

அதிலும், நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த்தோடு ராமதாஸ் கூட்டுச் சேர்ந்து விட்டதால், தே.மு.தி.க-வை விமர்சிக்கும் தகுதியை பா.ம.க இழந்துவிட்டது என்ற அடிப்படையில் பிரசாரம் செய்கிறார். இதில், விஜயகாந்த்தை ரஜினி விமர்சித்ததையும் கடுமையாக எதிர்க்கிறார் சீமான். ‘நான் மராட்டி’ என வெளிப்படையாகச் சொல்பவர் ரஜினி. அவரை எதிர்க்க விஜயகாந்த்துக்கு என்ன தகுதி இருக்கிறது?’ எனப் பேசுவதன் மூலம் ரஜினி ரசிகர்களின் வாக்குகளையும் தன்பக்கம் திருப்ப முயற்சிக்கிறார் சீமான்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை, ‘இன அழிப்பின் பங்காளிகள்’ என்கிறார். ‘என் இனம் போரில் அழிந்தபோது தூங்கினார் கருணாநிதி. என் இனம் நீரில் அழிந்தபோது தூங்கினார் ஜெயலலிதா’ என அவர் தாக்கிப் பேசும்போது விசில் பறக்கிறது. ‘ஈழத்தின் கொடூரக் கொலைகளுக்கு சாட்சி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இவர்களை வேரோடு வீழ்த்த வேண்டும்’ எனக் கொந்தளிக்கிறார். அதேபோல், ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி மட்டும்தான்” என்கிறார். “திருமா, வைகோவின் ஈழவிடுதலைக் கொள்கையை கம்யூனிஸ்ட்கள் ஏற்பார்களா?” என மக்கள் நலக் கூட்டணியையும் விமர்சிக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள். தேர்தலில் செலவழிக்க பணமில்லாவிட்டாலும், வீடுகள்தோறும் நடந்து சென்றே வாக்கு சேகரிக்கிறார்கள். கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசாரப் படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி ஓட்டு சேகரிக்கிறார்கள். ‘நாமே மாற்று... நாம் தமிழரே மாற்று’ என்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் முழக்கம், மெழுகுவர்த்தி வெளிச்சமாக பளீரிடுமா என்பது எல்லாம் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கிறது.

- ஜூனியர் விகடன் - 15-மே-2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.