Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

21 செப்டம்பர் 2015
தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

தமிழ் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, இந்திய ஊடகமொன்றுக்கத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினர் தமிழ்ப் பொதுமக்களை பாதுகாத்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கொன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்களுக்கு பிரவேசிக்க முயற்சித்த பொது மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் தமிழ் மக்களை வரவேற்று அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் படையினர் சிரத்தைக் காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
புலிகளின் பிடியிலிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக கோரப்பட்டு வந்ததாகத்  தெரிவித்துள்ளார்.


2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி 150,000 பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் மே மாதம் 14ம் திகதி 85000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரசாங்கப்படையினர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தறிற்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர் என அவர்
தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு இறுதி;ப் பகுதியிலும் 2009ம் ஆண்டு ஆரம்பத்திலும் பொதுமக்களை புலிகளிடமிருந்து மீட்க முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னரங்கப் பகுதிகளிலிருந்து 4-5 கிலோ மீற்றர் தூரத்தில் பொதுமக்களை புலிகள்
நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி படையினரை தாக்குதல்களை தவிர்க்க புலிகள்  முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரங்கப் பகுதிகளுக்கு 4-5 கிலோ மீற்றர் பின்னால் பொதுமக்கள்.
நிலைநிறுத்தப்பட்டால் அவர்களை மீட்பது இயலாத காரியமாகும் என அவர்
தெரிவித்துள்ளார்.
மக்களை மீட்பதற்கு படையினர் எடுத்த முயற்சிகளை பல்வேறு வழிகளில் புலிகள் தடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் முட்டாள்கள் அல்ல முடிந்தளவு அவர்கள் யுத்த வலயத்திலிருந்து

வெளியேறிச் செல்லவே முயற்சித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களை குவித்து அவர்களை மனித கேடயமாக
பயன்படுத்திக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளே முயற்சித்தனர் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124160/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கடா ஓட்டு பொன்சேகாவைப் பார்த்து-ததேகூட்டமைப்பு

 

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மிருகத்திலிருந்து வந்தவர்களிடம் மனிதகுணத்தை எதிர்பார்க்க முடியாது. இதற்கு சரத் பொன்சேகா என்பவரும் உதாரணமாகிறார்.

 

சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்,

தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது மொத்த வரலாற்றின் போக்கும் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.  

ஒவ்வொரு ஆட்சியாளர்கள் தங்களுடைய வம்சத்தை உயர்ந்ததாக காட்டிக்கொள்ள பல் வேறு புனைக்கதைகளை உருவாக்கி பரப்பத் தொடங்கினர்.    

இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் "சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் " என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது.

சிங்களர்களின் புனித நூல் என்ற சொல்லப்படும் மகாவம்சத்தில் சொல்லப்படும் அந்த புனைவு கதையின்படி விஜயன் என்ற இளவரசன் தற்போதை மேற்கு வங்க மாநிலம் பகுதியிலிருந்து இலங்கைக்கு உள்ளே சென்றதில் இருந்து தொடங்குகிறது.  அப்போது இந்தியாவில் இதில் குறிப்பிடப்படும் வங்க மாநில பகுதியில் ஆண்டு கொண்டுருந்த மன்னரின் மகள் பெயர் சுபதேவி. இவளை வனராஜா சிங்கம் கடத்திக்கொண்டுச் சென்று குகையில் அடைத்து வைத்துருந்தது. சிங்கம் சுபதேவியுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன.  பிறந்த ஆண் குழந்தை கால்களும் கைகளும் சிங்கத்தை போன்று தோற்றத்தை பெற்று சின்ஹபாஹ என்ற பெயராலும், பெண் குழந்தை சின்ஹவலி என்றும் அழைக்கப்பட்டனர்.

குகைக்குள் அடைக்கப்பட்ட தனது தாயையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு தப்பித்து வெளியேறிய சின்ஹபாஹ, தன்னுடைய சகோதரியான சின்ஹவலியையே திருமணம் செய்து கொண்டு சின்ஹபுரம் என்ற நகரை உருவாக்கிக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான்.

சின்ஹவலிக்கு பிறந்த இரட்டையரான ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையின் பெயர் விஜயன். இரண்டாவது சுமித்தா. வளர்ந்து கொண்டுருந்த விஜயனின் தீய குணங்களை அடக்க முடியாமல் மன்னர் சின்ஹபாஹ, விஜயனையும் துணையாக இருந்தவர்களையும் நாடு கடத்தினார். இவர்கள் மரக்கலத்தின் வாயிலாக இலங்கையில் வந்து இறங்கினர்.  

eviyar-illam.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொலை செய்தது என்று யார் சொன்னது? நீங்கள்  பாலகன் பாலச்சந்திரனை கொல்லலை, எங்கள் குலக்கொளுந்துகளை களங்கப்படுத்திக் கொல்லலை, வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை கொல்லலை, பள்ளிக்கூடம், கோவிலில அடைக்கலம் கொடுக்கிறோம் என்று கூப்பிட்டு குண்டு போடல. அதுக்குமேல போரே நடக்கல. பிறகேன் உள்நாட்டு விசாரணை என்று உளறுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுமக்களை புலிகளே கொலை செய்தனர் – சரத் பொன்சேகா

சரி

விசாரணையை ஆரம்பிக்கலாமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.