Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்!

Featured Replies

விஜய், புலி படக்குழுவினர் வீடுகளில் ரெய்டு ஏன்?: பரபர தகவல்கள்!
 

சென்னை: புலி படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்களாம். விஜய் ஆசை, ஆசையாக நடித்து முடித்துள்ள படம் புலி. படத்தின் கதையை சிம்புதேவன் கூறியதுமே வாவ், இந்த படம் நிச்சயம் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், இதில் நான் நிச்சயம் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது முழு ஈடுபாட்டோடு நடித்து சிம்புதேவனை அசத்தினார் விஜய். படத்தின் இரண்டு டிரெய்லர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

30-1443588020-puli000.jpg

புலி புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. புலி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டார்கள்.
 
கருப்பு பணம் புலி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில் அந்த படம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.
 
ரெய்டு தகவல் கிடைத்த உடன் வருமான வரித்துறையினர் இன்று காலை சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள புலி படக்குழுவினரின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
அதிர்ச்சி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-do-it-officials-raid-vijay-puli-team-s-houses-236732.html

  • தொடங்கியவர்
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகள் உட்பட 32 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!
 

 சென்னை: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.

IT officials raid Vijay, Puli team, Nayanthara, Samantha's houses

இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள் என 25 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா தவிர்த்து நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜய், நயன்தாரா, சமந்தா, புலி படக்குழுவினரின் வீடுகள் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்... அம்மா சோதிக்கிறா...!

  • தொடங்கியவர்

'விஜய், நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் வீடுகளில் சிக்கியது 100 கோடி!' - பரபரப்பு தகவல்!

 

சென்னை:  நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100  கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து   பிரபலமான நடிகர், நடிகைகளில் வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் கோடிக்கணக்கான வருமான வரிபாக்கி இருந்தது தெரியவந்தது.

vijay%20nayan.jpg

அதைத் தொடர்ந்து, நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விஜய்யின் மேலாளர் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், பைனான்சியர்கள் அன்பு, ரமேஷ் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான நீலாங்கரை வீடு, அவரின்  உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மேலும் மதுரை, கன்னியாகுமரி, கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. நடிகைகள் நயன்தாராவுக்கு சொந்தமான திருவனந்தபுரம் வீடுகள், சொத்துக்கள், சமந்தாவுக்கு சொந்தமான பல்லாவரம் வீடு மற்றும் சொத்துக்கள், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் செல்வக்குமார், சிபு தமீன், மதுரை திரைப்பட பைனான்சியர் அன்பு மற்றும் ரமேஷ்  ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில், " வருமான வரி ஏய்ப்பு செயல்களில் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளது குறித்து எங்களுக்குத்  தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த சோதனையில் ரூ. 2 கோடி ரொக்கப்பணம், ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலி படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிப்பதில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளனர். எங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் தோராயமாக பார்த்தால் சுமார் ரூ. 100 கோடி வரை கணக்கில் காட்டப்படாத சொத்துகள் நடிகர், நடிகைகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியுள்ளன" என்று தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=53225

  • தொடங்கியவர்

வரி ஏய்ப்பு செய்தேனா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

 

vijay%281%29.jpgசென்னை: நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் உள்பட சில திரையுலகினர் வீடுகளில் அண்மையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தான் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றும், வருமான வரியை முறையாக செலுத்தி இருக்கிறேன் என்றும் நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.

நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53344

நம்பீட்டம்...!<_<

விஜய் வீட்டு ஐடி ரெய்டுக்கு பின்னணியில் ஆயிரம் அரசியல்கள்!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/political-motive-the-it-raids-on-vijay-237087.html
 
 
சென்னை: நடிகர் விஜய் மற்றும் புலிப்பட யூனிட் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை, சோதனையின் பின்னணியில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 1ம்தேதி, புலி திரைப்படம் ரிலீசாக வேண்டிய நிலையில் செப்டம்பர் 30ம் தேதி அதிகாலையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யின் நீலாங்கரை வீடு மட்டுமல்ல, சாலிகிராமம் அலுவலகம், அடையாறில் உள்ள வீடு என எல்லா இடங்களிலும் நுழைந்திருந்து சோதனை போட்டனர்.
பாகுபலி இல்லையே மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் "புலி' படக்குழுவையே ஓடவிட்டு விரட்டியது. 300 கோடி பட்ஜெட் என கூறப்பட்ட பாகுபலி டீமிடம் கூட இந்த ரெய்டு நடைபெறவில்லை. அங்கு சந்திரபாபு நாயுடு பக்கபலமாக இருந்து பாகுபலியை காப்பாற்றினார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் புலிக்கு நேர்ந்த நிலைக்கு, பின்னணியிலுள்ள காரணம் கசியத்தொடங்கியுள்ளது.
ரகசிய தகவல்கள் படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங்கெடுத்து, படத்தின் பட்ஜெட், பைனான்சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கியுள்ளனர். ஏன் இவ்வளவு அக்கறையோடு இந்த திட்டம் நடைபெற்றது என்பதன் பின்னணியில் அரசியல் உள்ளதாம்.
த்தியில் பிரஷர் பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர் ஒருவர் விஜயை சந்திக்க விரும்பியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு விஜய் வாய்ஸ் தர வேண்டும் என்று கேட்பது அவரது நோக்கம் என்பதை அறிந்த விஜய் நழுவிக்கொண்டுள்ளார். இதனால் ஒரு ரெய்டை நடத்தி சிறு டிரையலை காட்டியுள்ளனராம். இப்படியே ஜகா வாங்கினால், மெயின் பிச்சர்கள் களமிறங்கும் என்று விஜய்க்கு மேலிட தலைவர் விடுத்த மறைமுக எச்சரிக்கை இந்த ரெய்டு என்கிறது டெல்லி வட்டாரம்.
மாநிலத்திலும் கோபம் அதுமட்டுமின்றி, புலி படம் ரிலீசாகும் முன்பே, நாம் தெரிவித்தபடி, இது ஸ்ரீதேவி என்ற ராணியையும் அவரை ஆட்டுவிக்கும் சுதீப் என்ற வில்லனையும் விஜய் எதிர்க்கும் கதையாகும். "நீங்க நல்லவங்கதான், உங்களை சுற்றியுள்ளவர்கள் சரியில்லை" என்பது போன்று விஜய் பேசும் வசனங்களுடன் படம் அமைந்துள்ளது. இதுவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுப்பை கிளப்பியதாகவும், கூறப்படுகிறது. எனவே, மத்தி மற்றும் மாநிலம் ஆகிய இருபக்கமும் சிக்கிக்கொண்ட தவில் போல மாறியது விஜய் நிலை
 
  • தொடங்கியவர்

நடிகர் விஜய் வரி ஏய்ப்பு விவகாரம் : அதிகாரிகள் சொல்வது என்ன?

 

டந்த 5 வருடங்களான நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து நேற்று நடிகர் விஜய், அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் தான் 'சட்டத்தை பின்பற்றுபவன் ' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

vijay.jpg


இதனிடையே வருமான வரித்துறை தரப்பில் இருந்து இதனை மறுத்துள்ளனர். நடிகர் விஜய்  வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படக்குழுவினர் வீடுகளிலும், நடிகைகள் நயன்தாரா, சமந்தா  வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் கைப்பற்றப்பட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=53382

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.