Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்?

Featured Replies

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்?

சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைசெய்வது பாரதூரமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சமே இவ்வீழ்ச்சிக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளைத் தடை செய்யும்

முடிவு எதுவும் இப்போது வேண்டாம்

மஹிந்தவிடம் நேற்று ரணில் வற்புறுத்து.

*விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் முடிவு எதனையும் இப்போது மேற்கொள்ள வேண்டாம்.

* சர்வகட்சி மாநாட்டின் மூலம் தீர்வு யோசனை ஒன்று இனங்காணப்பட வேண்டும்.

* அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் விரிவாகப் பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

* அந்த முடிவை தீர்வுப் பொதியை விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜனாதிபதி ராஜபக்ஷவை நேற்றுக் காலை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்கா மேற்கண்ட அம்சங்களை வலியுறுத்தினார் என்று மிக நம்பகமாக அறியவந்தது.

இந்த அம்சங்கள் குறித்து சாதகமாகப் பரிசீலிக்கும் சூழல் உருவாகியிருப்பதாகத் தெரியவந்தது.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான நால்வர் கொண்ட குழு ஒன்று மஹிந்தா தலைமையிலான ஸ்ரீல.சு.கட்சி குழுவைச் சந்தித்தது.

ஸ்ரீல.சு.கட்சி தரப்பில் அமைச்சர்கள் மைத்திரி பால சிறிசேன, நிமால் சிறிபால டி சில்வா, மங்கள சமரவீர ஆகியோர் மஹிந்தவுடன் கூட இருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் கரு ஜெயசூரிய, ருக்மன் சேனநாயக்கா, ஜோசப் மைக்கல் ஆகியோர் நேற்று சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடந்த ஒக்ரோபர் 23ஆம் திகதி இரண்டு கட்சிகளும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக நடந்த சந்திப்பில்

கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்தோடு, நாட்டில் நிரந்தர சமாதானத்தை கொண்டு வரும் பொருட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து மிக விசேடமாகவும் நீண்ட நேரமும் இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே இரு கட்சிகளும் புரிந்துணர்வு உடன் படிக்கை ஒன்றுக்கு வந்தோம்

அந்த உடன்படிக்கையை மதிக்கும் வகையில் இரு கட்சியினரும் இணக்கம் காணும் வகையில் செயற்பட வேண்டும் என்று ரணில் மஹிந்தவிடம் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் உள்ள மூவின மக்களும் ஏற்கக் கூடிய தீர்வு ஒன்றைக் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தார்.

நோர்வே அனுசரணையாளர்களின் பணிகள் தொடர அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக் குழு யோசனை தெரிவித்ததாக அக்குழுவின் சார்பில் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.

www.uthayan.com

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் வெளிவராது.

சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், நாளை சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எனினும் தடை வராது எண்று அரச முக்கியஸ்தர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைசெய்வது பாரதூரமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சமே இவ்வீழ்ச்சிக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

www.nitharsanam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடைசெய்தால் அது புலிகளிற்கு சாதகமான முடிவு!

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!!!

புலிகள் தடைசெய்யப்படவில்லை. பயங்கரவாதச்சட்டம் அமுல் படுத்தப்படுகின்றது. இதன் மூலம் அனுமதி பெற்றே புலிகளுடன் தொடர்பு கொள்ளலாம்! - அரசு

COLOMBO, Sri Lanka - (AP) The Sri Lankan government decided Wednesday not to ban the separatist Tamil Tiger rebels at a crucial Cabinet meeting, officials close to the Cabinet said.

A formal announcement is likely to be made later Wednesday.

Supporters of the Liberation Tigers of Tamil Eelam had warned that a ban would effectively scupper the peace process.

The rebels are banned in the United States, Britain, Canada, E.U and neighboring India

  • தொடங்கியவர்

இலங்கையில் புலிகளைத் தடை செய்வது குறித்து சர்வதேச சமூகம் கவலை.

தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தல் ஆகிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனைகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் மற்றும் இந்தியா நோர்வே ஆகியன ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது

இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விடுதலைப்புலிகளை தடை செய்வது குறித்தும் பயங்கரவாத தடைச்சட்டடை அமுல்படுத்தவது குறித்தும் முக்கிய தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன

நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பின் போதும் இது குறித்து ஆராயப்பட்டுள்ளது

விடுதலைப்புலிளை தடை செய்ய வேண்டாம் என்றும் அனைத்து கட்சி ஆலோசனை குழவால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டதை ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் கூடி ஆராய்ந்து இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பது என்றும் அதனi விடுதலைப்புலிகளிடம் சமர்ப்பிப்து என்றும் நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது

இதனை அடுத்து விடுதலைப்புலிகள் மீதான தடை கொண்டுவரப்படமாட்டாது என தெரியவந்துள்ளது

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யதால் பொருளாதாரம் மிக மோசாக பாதிக்கப்படும் என பொருளியல் வல்லுனர்கள் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர்

இலங்கையின் பங்குச் சந்தைமிக மோசமான தளம்பல் நிலையை அடைந்துள்ளதாகவும் இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிடவுள்ள அறிவித்தலை பொறுத்தே பங்கு சந்ததையின் எதிhக்hல நடவடிக்கைகள் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறான பல காரணங்களால் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முடிவினை மீள் பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் புறக்காரணிகள் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தமது நிலைப்பாட்டை நடைமுறைப்புடுத்த மகிந்த ராஜபக்ச முற்படலாம் என்றும் அவ்வாறான முடிவினை எடுக்குமாறு அவரை ஊக்கப்டுத்தும் சக்திகளே அவருக்கு மிக நெருக்கமாக உள்ளதாகவும் அலரிமாளிகை வட்hரங்கள் தெரிவித்துள்ளன

எனவே அரசாங்கத்தின் தீர்மானம் எவ்வாறாகவும் அமையலாம் என்றுஅ; அதனை ஊகிக்க முடியாது என்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசியல் நோக்கர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

Sri Lanka to crack down on terror but no rebel ban

COLOMBO (Reuters) - Sri Lanka will introduce tough emergency regulations to curb terrorist activities but will not impose a ban on Tamil Tiger rebels, the island's government said on Wednesday.

The cabinet's decision comes after months of escalating violence between the army and the rebels, including bomb blasts in the capital, and amid fears a ban could sink hopes of avoiding a return to all-out civil war.

Last week, a suicide attack in Colombo targeted President Mahinda Rajapakse's brother Gothabaya Rajapakse, who is also the island's Defense Secretary and escaped unscathed.

"The government has decided to bring ammendments to emergency regulations," Chief Government Whip Nimal Siripala de Silva told parliament. "These regulations will be updated to face the threat we face from terrorism."

He gave no details, but said the government would also re-enforce the Prevention of Terrorism Act, which gives police and the security forces wide powers to arrest, search and interrogate. The act has been dormant since a 2002 truce now in tatters.

Colombo's stock exchange closed slightly firmer on Wednesday as investors took heart from news there would be no ban, which many analysts had feared would drive another nail into the coffin of Sri Lanka's failing peace process.

"You can't expect to go on with this campaign of violence and hope that the government will continue with business as usual. This message needs to be sent across," said Dr. Palitha Kohona, head of the government's peace secretariat.

"At the same time, if the LTTE were to come back to the negotiating table seriously, with a will to ending this conflict, then the government will respond appropriately."

Rebel leader Velupillai Prabhakaran last week declared the Tigers were resuming their independence struggle. Analysts said this meant the island's long-running civil war would likely escalate.

President Rajapakse has already ruled out a separate state for minority Tamils in the island's north and east, where the Tigers already run a de facto state with its own courts, banks and even speed-gun toting traffic police.

Sri Lanka's conflict has killed more than 67,000 civilians, troops and rebel fighters since 1983. About 3,000 have died this year in a spate of clashes, air raids, artillery duels and suicide bombings.

-Reuters-

Edited by YARLVINO

"ஆகா பயங்கரவாத தடைச்சட்டம் போட்டாகி விட்டது. இனி கொழும்பில் தாக்குதல்கள் ஒன்றும் இடம் பெறாது. புலிகளுக்கு பெரிய பதிலடி வழங்கப்பட்டுவிட்டது." என்று நாளைய அரசசார்பு ஊடகங்கள் செய்தி வெளியிடும்.

அது சரி பயங்கரவாதச் தடைச்சட்டம் இல்லாமலேயே தமிழ் இளைஞர்களை நடுத்தெருவில் சுட்டுக் கொலை செய்த அரசு, இனி என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

;ச்சேய் என்னப்பா இது claimax ஆ இப்பிடி முடிச்சிட்டாங்களே... :icon_idea::D:D:D

அங்கலாய்க்கிற மோட்டுத் தமிழன் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கு. சிங்களவன நிதானமாக அளவாக காரியத்தை நடத்திறான்.

என்னடா அப்பா சிங்களவனுக்கும் கொஞ்சம் புத்தி இருக்குப்போலதான் இருக்கு!!!!

இல்லையென்டா ராஸபக்சா இன்று இந்த முடிவு எடுத்து இருப்பானே???

பார்ப்போம் தமிழன் நிலை என்ன என்று காலம் பதில் சொல்லும்

அங்களாய்கிறது மோட்டுத்தமிழினம் என்று சொல்லும் நீர் யார்??? நீராவது எமது தலைமைப்பொறுப்பை ஏற்று எமது தலைமைக்கு புத்தி சொன்னால் நாங்கள் எல்லாரும் புத்தி உள்ள தமிழினமாக மாற்றப்படுவோம் என்று நினைக்கின்றேன்???????????????????????????????????????

அங்கலாய்க்கிற மோட்டுத் தமிழன் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கு. சிங்களவன நிதானமாக அளவாக காரியத்தை நடத்திறான்.

மோட்டுச் சிங்களவன் என்பதை அவன் இன்னும் தெளிவாக விட்டுவிட வில்லை காரணம் இன்றும் அவன் பயங்கர வாதச்சட்டத்தை கொண்டு தான் வந்து இருக்கின்றான் அதன் படி பார்த்தாள் சமாதான ஓப்பந்தம் இன்னும் புதைகுழியில் தள்ளப்படுவது தெரிகின்றது அல்லவா அப்படியானால் அதன் அர்த்தம் என்ன என்று சொல்லும் "குறுக்காள போவான்" நல்லது நடக்க பிராத்திக்கின்றேன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.