Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன்

ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன்

தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அவரைச் சந்தித்து விளக்கம் கோரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இன்று  வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள வளலாய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்திலும், அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்பெறும் காலத்திலும், வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் நாம் வேறுபட்ட கருத்துக்களை கூறுவது, அல்லது எங்களுக்குள் குழப்பம் இருப்பதாக தென்படுவது பொருத்தமான விடயமாக இருந்திருக்காது.அந்த காரணங்களின் நிமித்தமே நாம் மௌனமாக இருந்தோம். தற்போது ஐ.நா அமர்வுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், அது குறித்து சி.வியிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும்,அதன் கடமைப்பாடு எங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாம் அறிய வேண்டிய விடயங்களை அறிந்து அதன்பின்னர் அனைவரும்  ஒற்றுமையாக மக்களின் நலன்கருதி செயற்படவேண்டும்.

மக்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள்.நீண்டகாலமாக பலதுன்பங்களுக்கு ஆளானமக்கள்,பல அழிவுகளை எதிர்கொண்ட மக்கள் தங்களுடைய வாழ்க்கையை இன்னமும் ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறார்கள்.மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் தீர்வு ஏற்பட்டு அதன்மூலமாக ஓர் வித்தியாசமான எதிர்காலத்தை பெறுவதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது அதனை யாரும் குழப்பகூடாது என்றார்.

http://onlineuthayan.com/news/810

  • கருத்துக்கள உறவுகள்

சி.வி. இடம் நிச்சயமாக விளக்கம் கேட்கப்படவேண்டும். முன்னாள் நீதியரசரின் பேச்சுக்கள் அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை அடிக்கடி காட்டிநிற்பன. தேர்தல் சமயத்தில் தன்னை நடுநிலைவாதியாக காட்டமுனைந்து தோற்றுப்போனார். அய்நா அமர்வுவரை பொறுத்திருந்தது சம்பந்தரின் அரசியல் முதிர்ச்சிக்கு சிறந்த உதாரணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கி ஐயா என்ன தப்பாக கூறிவிட்டார் அல்லது என்ன நடந்துவிட்டார் அவரிடம் நீங்கள்(சம்பந்தன் ஐயா) விளக்கம் கேட்பதற்கு!. நீங்கள் மக்களிடம் விளக்கம் கொடுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (சர்வதேச விசாரணை பற்றி) மக்களுக்கு கொடுக்கபட்ட வாக்குறுதிக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளமுடியாமல் தமிழ் மக்களை திரு சுமந்திரனோடு சேர்ந்து ஏமாற்றுவதற்கு!

Edited by kpkannan

  • கருத்துக்கள உறவுகள்

உம்மையைக் கூறி அரசியல் செய்ய முற்படும் அரசியல் வாதிகள்தான்.... இன்று மக்களை ஏமாற்றி அரசியல்செய்யும் அரசியல் வாதிகளின் படிக்கட்டு. ஏறி மிதிக்காவல் மேலே செல்ல முடியாது. :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.