Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழினம் சோர்ந்து போவதோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

attack019.JPG

ஒரு மனிதன் மூன்று வகையான சோர்வு நிலைக்கு உட்படலாம் என்பது பொது விதி. உடற்சோர்வு, உளச்சோர்வு, உயிர்ச்சோர்வு என்பனவே அந்த மூன்றும் ஆகும்.
குறித்த மூன்று சோர்வில் எது மனிதனைப் பாதித்தாலும் அது அவனின் வாழ்வியலுக்கு இடையூறாகவே இருக்கும்.

பாரதப் போர் நடைபெறப் போகிறது. கெளரவர் தரப்பில் தன் குருநாதர்களும், நண்பர்களும் நிற்பதை அருச்சுனன் பார்க்கிறான்.

இவர்களைக் கொல்வதா? என்று நினைத்து அருச்சுனன் மனம் சோர்கிறான்.

போர்க் களத்தில் உளச்சோர்வுக்கு உட்பட்ட அருச்சுனனை அதிலிருந்து மீட்டு யுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு கண்ண பரமாத்மா கீதோபதேசம் செய்தார்.

அருச்சுனனின் உளச்சோர்வுக்கு குருசேத்திரத்தில் நடந்த சிகிச்சை தான் கீதோபதேசமாகும்.

இன்றைய மருத்துவ மொழியில் இதனைக் கூறுவதாயின், போர்க்களத்தில் அருச்சுனனுக்கு சீர்மியம் செய்யப்பட்டது.

இங்கு ஆற்றுப்படுத்துபவராக கண்ணன் இருந்தான்.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கொல்லப்பட்டது கண்டு வீறுகொண்டெழுந்த கண்ணகி, பாண்டிய மன்னனின் அரண்மனைக்குச் சென்று நீதி கேட்கிறாள்.

அந்தோ! தான் வழங்கிய தண்டனை தவறு என்று பாண்டிய மன்னன் உணர்ந்ததும் அவனுக்கு உயிர்ச் சோர்வு ஏற்பட்டு விடுகிறது. உடனடியாகவே அவன் கீழே விழுந்து இறந்து போகிறான்.

உயிர்ச்சோர்வு ஏற்பட்டால் உயிர் பிரிந்து விடும். குருசேத்திரத்தில் அம்பு பட்டு வீழ்ந்து கிடக்கும் பீஷ்மர் உத்தராயண காலம் வரும் வரை தன் உயிரை பிரிய விடாது தடுத்து நின்றார். இது உயிர் வலிமையாகும்.

இராமாயணத்தில் தன் தலை முடியின் நரை கண்ட தசரதன் ஆட்சியிலிருந்து ஓய்வுபெற நினைத்தான் அல்லவா? இதுதான் உடற்சோர்வு.

ஆக, மேற்குறிப்பிட்ட உடல், உள, உயிர்ச்சோர்வு என்பது மிகவும் மோசமானவை.

இச்சோர்வில் இருந்து ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக ஈழத் தமிழினம் யுத்தம், பொருளாதார நெருக்கடி, நாளாந்த சீவனோபாயத்துக்கான ஏக்கம் என்பவற்றால் மூன்று நிலைச் சோர்வுக்கும் ஆளாக வேண்டியதாயிற்று.

எங்கள் வாழ்வுக்கு மற்றவர்களின் நிவாரணம் தேவை என்று நினைப்பது எங்கள் இனத்தின் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். எனினும் அதுவே நடைமுறையில் உள்ளது.

மிகப்பெரிய ஆயுதப் போராட்டத்தை நடத்தி உலகத்தையே தன்பால் திசை திருப்பிய தமிழினம் இன்று யுத்தம் என்றால் நடுங்கிப் போகிறது.

அந்தளவிற்கு யுத்தத்தின் இழப்பு மூன்று நிலைகளிலும் எங்கள் இனத்தை சோர்வுபடுத்தி விட்டது.

இதன் காரணமாகத்தான் ஐ.நா தீர்மானம் எமக்குப் பாதகமானது என்று கூறுவதற்குக் கூட தமிழ் மக்கள் தயங்குகின்றனர்.

எதென்றாலும் நடந்து முடியட்டும் என்ற வெறுப்பு நிலை எங்கள் இனத்தின் எழுச்சிக்கும் எதிர்கால ஆரோக்கியத்துக்கும் பேராபத்தானது.

ஆகையால் எங்கள் மக்களின் மனங்களில் உத்வேகத்தை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது.

இல்லையேல், தனிநாடு கேட்ட தமிழினம் கட்டியிருந்த கோவணம் பறிபோனாலும் கவலை கொள்ளாது, பற்றற்ற நிலையில் எல்லாவற்றையும் இழந்து போகும்.

ஆகையால் யுத்தத்தின் இழப்பிலும் நாங்கள் வீறு கொண்டெழுந்து எங்கள் உழைப்பில், எங்கள் முயற்சியில் வாழ்வோம் என்ற மனத்தைரியத்தை ஊட்டுவது அவசியம்.

என்றைக்குத் தமிழினம் தனது சொந்தக்காலில் நிற்கிறதோ? அன்றுதான் இனத்தின் பெருமை, உரிமை அடையப்படும்.

 

http://www.tamilwin.com/show-RUmtzATYSVhq3E.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அவர்களே! இன்று தமிழ்மக்களின் நிலையை அப்படியே வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கும் இந்தத் திரிக்குப் பச்சைபோட இன்று முடியவில்லை, பச்சை முடிந்துவிட்டது.


மூன்றுவகைச் சோர்வுகளுக்கும் உட்படாது இருக்கவே எங்கள் தமிழ் இளைஞர்கள் சிலர், கட்டவுட்டுகளுக்குப் பாலும், பீர்ரும் ஊற்றுபவர்களாகவும், அதற்கு ஊக்கமளிக்கும் உறவுகளாகப் படித்த பெரியோர்களும் தங்கள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வெளிக்காட்டிக் கொள்கின்றனரோ!.   

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்று சோர்வுகளினின்றும் உடண்டியாகத் தமிழினம் மீண்டெழுந்து 5ஆம் கட்ட போரைத் தொடங்கவேண்டும். நாங்களும் எத்தனை காலம்தான் புலம்பெயர் தேசங்களில் விசிலடிக்காமல் இருக்கிறது. பிறகு எங்களுக்கும் "பணச் சோர்வு" வந்திடுமெல்லே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை இணைத்தது லங்கசிறி இணையத்தளத்தின் சகோதர இணையத்தளம், அதாவது கொஞ்சம் காசு பார்ப்பதற்கு உசுப்பேத்தினம், சதக் சதக் கத்திக்குத்து தலைப்புச் செய்தி புகழ் மித்திரன் பத்திரிகைக்கு இணையான மஞ்சள் பத்திரிகை லங்கசிறி அடுத்தமுறையும் சிறீதரனை எம்பியாக்க இப்பவே ஆயத்தப்படுத்துகிறது.

சமாதானம் கால்பங்கு, சுயநிர்ணய உரிமைக்கோசம் கால்பங்கு, தேசியம் அப்படியெண்டால் என்ன, எதுக்கு நாங்கள் ஆயுதமேந்திணோம் இப்படியான கேள்விகள் தேவையான அளவு இவைகளையும் தேசியத்தலைவர் பிரபாகரன், மாவீரர், ஈகை, இவைகளை மேடைக்கு மேடை தாதஸ்வரவாத்தியக் கச்சேரியில் தாளம் போடுமாப்போல் சொல்வதற்கு சிறீதரன் வகையறாக்கள் இவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சிறீலங்காவின் தேசியக்கொடியில்மூட்டையாகக்கட்டினால் அதுதான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு.

எங்களுக்கு எதுவித சோர்வும் இல்லை நாங்கள் நல்லாத்தான் இருக்கிறம், லங்கசிறிக்கு உதறல் எடுத்திட்டுது இப்படியேபோனால் இணையத்தள வியாபாரத்தையும் ஏறக்கட்டிவைக்கவேண்டியதுதான் என. தவிர அடுத்தமுறை ஜெனீவாப்பக்கம் மற்றும் புலம்பெயர்தேசங்களுக்குத் தாயகத்திலிருந்து அரசியல்வாதிகள் யாராவது வந்தால் இடியப்பம் தேங்காய்சம்பல், மற்றும் சைவ அசைவ வகையறாக்கள் உட்பட தங்குமிட வசதிகள் விமானச்சீட்டு அகியவற்றுக்கு யார் அழுகிறதாம்.

கொஞ்சநாள் பொறுங்கோ ஜெனீவா முன்றலில் தமிழர் கைகளில் சிங்கக்கொடி உங்களை வரவேற்கும்.

எல்லாத்தையும் விட்டெறிஞ்சுபோட்டு பாக்கிறவேலையைப்பருங்கோ. அவையவை பிரச்சனையை அவர்களே பாத்துக்கொள்ளுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.