Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார முடிவுகளின் பலன்களை அனுபவிக்கும் வடமாகாண மக்கள்

Featured Replies

.

Published on October 9, 2015-9:10 am   ·   No Comments

Wigneswaran-with-Sambanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்கள் சர்வாதிகாரப்போக்கில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றுதான் வடமாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் ஒன்றாக ஒரு முடிவை எடுத்து முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவித்த போது அதை முற்றாக நிராகரித்து முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சம்பந்தன் தன்னிச்சையாக முடிவை எடுத்திருந்தார். இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு கட்சிகளும் வேறு வழியின்றி சம்பந்தனின் முடிவுக்கு இணங்கி வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு மாகாண மக்களுக்கு முன்னர் அறிமுகமில்லாத விக்னேஸ்வரனை வெல்லவைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் விக்னேஸ்வரனுக்கு ஒரு வாக்கை போடுமாறு பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் விக்னேஸ்வரன் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஆனால் பொதுத்தேர்தலுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் சென்று வந்த பின்னர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூற ஆரம்பித்ததும், கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மறைமுக பிரசாரத்தில் ஈடுபட்டதும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மறைமுக பிரசாரத்தில் ஈடுபட்டதும் தெரிந்ததே.

வடமாகாணசபை தேர்தல் முடிவடைந்த உடன் அப்போது ஜனாதிபதியாக இருந்தவரும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களின் அழிவுக்கு காரணமாக இருந்தவரும் என குற்றம் சாட்டப்படும் மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யக் கூடாது என தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் கோரினார்கள்.

ஆனால் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அதனை நிராகரித்திருந்தார். அதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம்.

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் நெருங்கிய நண்பரும், சம்பந்தியுமான வாசுதேவ நாணயக்காரவின் அழுத்தம் காரணமாகவும் மகிந்த ராசபக்சவுக்கு தனது விசுவாதத்தை காட்ட வேண்டிய தேவை இருந்ததாலும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் விரும்பங்களையும் உதாசீனம் செய்த அவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அந்த சத்தியப்பிரமாண வைபவத்திற்கு விக்னேஸ்வரனின் சிங்கள சம்பந்திகளாக வாசுதேச நாணயக்கார உட்பட அவரின் சிங்கள உறவினர்களே சென்றிருந்தனர்.

மகிந்த ராசபக்ச அரசாங்கத்துடன் நெருக்கத்தையும் உறவையும் வளர்த்துக்கொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் ரணில் அரசாங்கத்துடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டார் என்பதற்கும் தன்னை ஒரு தமிழீழ தேசியவாதியாக எப்படி காட்டிக்கொண்டார் என்பதற்கும் சில காரணங்கள் உண்டு.

வாசுதேச நாணயக்காரவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எந்த காலத்திலும் உறவு இருந்ததில்லை. தனது சிங்கள சம்பந்திகளை பகைத்து கொள்ளாத போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் உறவை வைத்துக்கொள்ளவில்லை என விக்னேஸ்வரன் காட்டிக்கொண்டார்.

இந்நிலையிலேயே தமிழ் மக்களின் பக்கமே தான் இருப்பதாக சில தீர்மானங்கள் அறிக்கைகள் பேச்சுக்கள் மூலம் காட்டிக்கொண்ட முதலமைச்சர்; விக்னேஸ்வரன் மீது ஐக்கிய நாடுகள் அலுவலகம் மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அலுவலகம் சுமந்தியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐ.நா. எங்களை பணிய வைக்க பார்க்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
விக்னேஸ்வரன் தனது உறவினரை அல்லது தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை வடமாகாண இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஐ.நா அலுவலகத்தால் நிதி ஒதுக்கப்படும் திட்டத்திற்கு விசேட ஆலோசகராக நியமிக்குமாறு நிர்ப்பந்தித்ததாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் சுமத்தியிருக்கிறது.

கொழும்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும், தற்போது ஒஸ்ரேலிய குடியுரிமை பெற்று ஒஸ்ரேலியாவில் வாழும் நிர்மலன் கார்த்திகேயன் என்பவரையே விசேட ஆலோசகராக நியமிக்குமாறும் அவருக்கு ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிர்மலன் கார்த்திகேயனை விசேட ஆலோசகராக நியமிப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முதல் ஜனவரி 2ஆம் திகதி விக்னேஸ்வரன் நேரடியாக அலரிமாளிகைக்கு சென்று மகிந்த ராசபக்சவிடம் பெற்றிருந்தார் என்பதை தற்போது மாகாணசபையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வடமாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு விசேட ஆலோசகராக ஒருவரை நியமிப்பதாக இருந்தால் முதலில் மாகாணசபைக்கு அதனை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். 
இவ்வாறான ஒரு பதவியை நிரம்பும் போது தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக பொது அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை கோரி தகுதியானவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் மட்டுமே வேறு ஒருவரை தேடி இருக்க வேண்டும். நிர்வாக ஒழுங்கின் படி சட்டப்படி இவ்வாறான விடயங்கள் இருக்கும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்கு வேண்டிய ஒருவரை நியமிக்க முற்பட்டதேன்?.

அதுவும் வடமாகாணசபைக்கு தெரியாமல் நேரடியாக ஜனாதிபதி மகிந்த ராசபக்சவை சந்தித்து இந்நியமனத்திற்கான ஒப்புதலை பெற்றது எந்த வகையில் நியாயமாகும்?

வடமாகாணத்தில் இப்பதவிக்கு தகுதியானவர்கள் இருந்தால் சொல்லுங்கள், அவரை நியமிக்கலாம் என கூறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி ஒன்றை நிரப்பும் போது அதற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்விக்கு அவர் இதுவரை பதிலளிக்கவில்லை.

வடமாகாணத்திலும் சரி இலங்கையிலும் சரி இலங்கை நிர்வாக சேவையில் உயர்தகமை கொண்ட பலர் உள்ளனர். அவர்களில் பலர் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு திட்டங்களில் அனுபவமும் ஆற்றலும் கொண்ட பலர் உள்ளனர்.

இலங்கை நிர்வாக சேவையின் உயர் தரத்தை சேர்ந்த அதிகாரிகள் தற்போதும் வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் வாழவில்லை, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமே வாழ்கின்றனர். திறமையும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பலர் உள்ளுரில் இருக்கும் போது எதற்காக ஒஸ்ரேலியாவில் உள்ள ஒருவரை இலங்கை பிரஜா உரிமை அல்லாத ஒருவரை விசேட ஆலோசகராக நியமிக்க வேண்டும். அதுவும் மாதாந்தம் 7 இலட்சம் ரூபா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் 10 இலட்சம் கொடுத்து எதற்காக நியமிக்க வேண்டும். அவருக்கு மாதாந்தம் கொடுக்கும் ஊதியத்தில் எத்தனை குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க முடியும்.

நிர்மலன் கார்த்திகேயன் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி அல்ல, அவர் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தற்போது வாழும் அனுபவமும் திறமையும் கொண்ட இலங்கை நிர்வாக சேவையின் உயர்தரத்தில் உள்ள சிலரின் பெயர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

சுந்தரம்பிள்ளை ( முன்னாள் உலக வங்கியின் வடகிழக்கு மாகாண பிரதிப்பணிப்பாளர்) லங்காநேசன் ( முன்னாள் நிக்கொட் பணி;ப்பாளர், வவுனியா அரசாங்க அதிபர்) செல்லையா பத்மநாதன் ( முன்னாள் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ) இ.தியாகலிங்கம் ( முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் செயலாளர.; வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்) பரமலிங்கம் ( முன்னாள் வடகிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளரும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரும்) இ.தர்மகுலசிங்கம் ( முன்னாள் தேச கட்டுமான அமைச்சின் மேலதிக செயலாளரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் ) இராசநாயகம் ( முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், திட்டமிடல் துறையின் மூத்த அதிகாரியும்) ரங்கராசா ( முன்னாள் வடகிழக்கு மாகாண பிரதம செயலாளர்)

இவ்வாறு பலர் வடமாகாணத்தை சேர்ந்த அம்மாகாணத்தை நன்கு அறிந்த பலர் இலங்கையில் இருக்கும் போது ஒஸ்ரேலியாவில் உள்ள ஒருவரை மாதாந்தம் 10 இலட்சம் கொடுத்து விசேட ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் முற்பட்டார் என்பதற்கான தெளிவான பதிலை  வழங்கவில்லை.

நிதிவழங்கும் நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்விற்காக வழங்கப்படும் பணங்களில் பெரும்பகுதி நிர்வாக செலவு என்ற பெயரில் மாதாந்த சம்பளமாக 7 இலட்சம் 10 இலட்சம் என செலவழிக்கும் போக்கே காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது வடக்கில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தான் என்பதை விக்னேஸ்வரன் போன்றவர்கள் உணரத்தவறியதேன்?

விக்னேஸ்வரன் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை என்ற தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு மறுபுறத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கான நியமனங்களில் அதிதீவிரம் காட்டி வருவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தேசிய வாதிகள் என தம்மை கூறிக்கொள்பவர்களுக்கு புரிவதில்லை.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவி ஏற்றதும் தனது செயலாளர் உட்பட தனது ஆலோசகராக சிலரை நியமித்தார். இவர்கள் யாரும் வடக்கை சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் கொழும்பை சேர்ந்தவர்களாகும்.
முக்கியமாக முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கொழும்பை சேர்ந்த முன்னாள் இரத்மலானை இந்து கல்லூரி அதிபராக இருந்த மன்மதராசா. இவரின் நடத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பாடசாலை மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதும் இவர் பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதும் மலையக அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரயோகித்து இவர் மேற்கொண்ட காரியங்களும் பலரும் அறிந்த விடயம்.

பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை வடமாகாணம் பற்றியும் அம்மக்கள் பற்றியும் தெரியாத ஒருவரை வடமாகாண முதலமைச்சரின் செயலாளராக நியமித்தது ஏன் என்ற கேள்விக்கும் அவர் இதுவரை பதிலளித்தது கிடையாது.

தனக்கு வேண்டிய ஒருவருக்கு விசேட ஆலோசகர் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக ஐ.நா. போன்ற சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் விக்னேஸ்வரன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்வது அவருக்கு பாதிப்பு இல்லை என்றாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் ஐ.நா.வின் இவ்வாறான உதவிகள் தடைப்பட்டு போவது வடமாகாண மக்களை மிகவும் பாதிக்கும் விடயமாகும்.

இவை அனைத்திற்கும் மூல காரணமாக அமைந்த விடயம் சம்பந்தன் போன்றவர்களின் சர்வாதிகாரப்போக்குதான்.

70 வயதிற்கு மேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என விக்னேஸ்வரன் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இந்த நிபந்தனை சம்பந்தனுக்கு மட்டுமல்ல விக்னேஸ்வரனுக்கும் பொருந்தும்.

 

மூலம்: http://www.thinakkathir.com/?p=62937

Edited by நியானி
மூலம் கொடுக்க

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க கரி ஸார், இப்ப இவர்தான் எங்கட நம்பிக்கை நட்சத்திரம்! நீங்கள் இப்படி எல்லாம் உண்மைகளைக் கேட்கக்கூடாது. இப்ப    வாசுதேவ நாணயக்கார என்னும் மகிந்தவின் அடிவருடியின் சம்பந்தியும், பாலியல் சாமியாரான பிரேமானந்தாவின் முக்கிய சீடருமான விக்கி சொல்லுறதும் செய்யிறதும் தான் எங்களுக்கு மக்களின் முதுகில் மீண்டுமொரு முறை சவாரிசெய்யும் பேராசைக்கான நம்பிக்கை!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவரினதும் இவர் சார்ந்த கும்பல்களினதும் சுயநல அரசியல் சம்பூர் காணி விடுவிப்பில் இருந்தே பார்க்கின்றோம். இதுவும் கடந்து போகும்....!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கையை காட்டியவர்களுக்கெல்லாம் நாங்கள் போட்டோம் பாருங்கோ வோட்டு. தலைவர் எங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில். இப்ப என்னடா என்றால் விக்கி ஐயா கொஞ்சம் மக்களின் கண்ணை திறக்கப் பாக்கிறார் பாருங்கோ. பரம்பரைத் தொழிலுக்கு பாதிப்பு வரப்போகுது எண்டு அங்கலாக்கினம். தங்கட வரட்டுக் கௌரவத்தை காப்பாற்ற அவரை இழுத்துக் கொண்டு வரேக்கை அவரின் வயது தெரியேல, அவரின் வாழ்க்கை பற்றி தெரியேல. இப்பதான் எல்லாம் தெரியுது. தேர்தலுக்கு முன் ஒரு கதை, பின் ஒரு கதை, இந்தியாவில ஒரு கதை, கொழும்பில ஒரு   கதை. மாறி, மாறி கதை எழுதி நாறிப்போன மரியாதையை, இவரை நாறடிப்பதன் மூலம் காப்பாற்றலாம் என்ற நப்பாசை. 

"வேண்டாப் பெண்டாட்டி கை பட்டா குற்றம், கால் பட்டா குற்றம்."

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய மற்றும் சுமந்திரனுடைய நேரடி செயல்பாடுகள்மூலமே விக்கியருக்கு உலைவைக்க அலுவல் நடக்குது. ஐநா ஆணையாளரால் அனுப்பட்ட கடிதப் பிரதி சம்பந்தருக்கும் அனுப்பப்பட்டது அக்கடிதம் கனடா மிரருக்கு அண்மைக்காலங்களில் கனடா சென்றவேளையில் சுமந்திரன்மூலமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இதுபற்றி எல்லோரும் சுத்திநின்று விக்யருக்குக் கல்லெறிந்துகொண்டிருக்கையில், நான் உடனடியாகத் தொடர்புகொண்டு விடையத்தைத் தெரிவித்திருந்தேன் அவ்வேளையில் அவர் கிளிநொச்சியில் மைத்திரியோடு நிகழ்சியில் கலந்துகொண்டிருந்தார் அவரது செயலாளருக்கு முன்னஞ்சல்மூலம் கனடாமிரர் இணைப்பயும் அது யாழ் இனையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்படதையும் இணைத்திருந்தேன். அவரது செயலாளர் மின்னஞ்சல் கிடைத்ததாகவும் இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கூடிய விரைவில் கொண்டுசெல்வதாகவும் பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

Thanks Iya for highlighting the message, and this news has been shared with Hon CM short while ago. 

 
Thanks
Priyan.
 
ஆனால் இந்தவிடையம் கிணத்தில் போட்ட கல்லாகத்தான் சிலநாட்கள் இருந்தது ஆனால் மாகாணசபை உறுப்பினர் தவராசா அவர்கள் மாகாணசபக்கூட்டத்தொடரில் கேள்விகேட்டதால்தான் விக்கியருடமிருந்து பதில்கிடைத்தது.
 
இதில் கேவலம் என்னவென்றால் சம்பந்தர் இக்கடிதத்தை கனடா மிரருக்குக் கொடுத்த கீழ்த்தரமான அரசியல்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.