Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை

Featured Replies

சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை
 
 

article_1444881935-download.jpg

இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.

இவர் ஜெர்மன் மொழியிலே (DEUTCH) ஆற்றல் மிக்கவர். இவர் போன்று மொழிப் புலமையுள்ளவர்கள் எங்கள் மத்தியிலே குறைவாகவே காணப்படுகின்றனர். இவரது மொழியாற்றல் காரணமாக ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் எங்களுடைய மக்களுக்குத் தேவையான உதவிகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றார். 

இலங்கையிலே வாழுகின்ற எங்களுடைய மக்களுக்காக மிகவும் கரிசனையுடன் சேவைசெய்து வருபவர். தேர்தலிலே இவருடைய வெற்றி இங்கு வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே ஒரு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. 

எனவே, அங்கு வாக்குரிமை உள்ள அனைத்து மக்களும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு ஆதரவளித்து இவரைத் தெரிவு செய்வதன் மூலம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு மாத்திரமல்ல இங்கே வாழக்கூடிய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தேவையானபோது சுவிஸ் நாட்டு அரசை எங்களுடைய பிரச்சினைகளில் அக்கறைகொள்ள வைக்கவும் அது உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

- See more at: http://www.tamilmirror.lk/156583/ச-வ-ஸ-த-ர-தல-ல-தம-ழ-ப-ண-ண-க-க-வ-க-கள-ப-பத-தம-ழர-கள-ன-கடம-#sthash.eddQ1ZSh.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆக்களுக்கு தமிழ் என்ற தகுதியை வைச்சே வாக்குக் கேட்கிறது பிழைப்பா போச்சு. நல்ல வருவீங்க அரசியலில. tw_angry:

தமிழ் என்பதனை அடையாளப்படுத்தி வாக்களிப்பது படு முட்டாள்தனம். ஆற அமர உட்காரந்து அந்த வேட்பாளரைப் பற்றியும், அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பற்றியும் ஆராயந்து ஒரு முடிவை எடுப்பதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாராளுமன்ற தேர்தலில் இதே மாநிலத்தில் மேலும் 3 தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர். அப்படியிருக்கையில் எங்களுடைய தமிழ் ஊடகங்களும் புத்திசீவிகளும் எதற்கான ஒருவரை மட்டுமே தூக்கிவைத்து கொண்டாடின? வாக்குகள் சிதறும் என்ற முட்டாள் தனமான கருத்துடன் வரவேண்டாம். இங்கே அந்த நடைமுறை இல்லை.அதனையும் மீறி இந்த வாதத்துடன் வருபவர்கள் அதனை கொஞ்சம் எப்படி என்று தெளிவு படுத்தவும். 

தர்சிகா கிட்டத்தட்ட 24'000 வாக்குகள்
சதித்தா கிட்டத்தட்ட 13'000 வாக்குகள்
விதுசா கிட்டத்தட்ட 2'200 வாக்குகள் 

பாராளுமன்றத்திற்கு தேர்வாகுவதற்கு கிட்டத்தட்ட 44'000 வாக்குகள் தேவபைட்ட்டன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.