Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் யாழில் கைது

Featured Replies

களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் யாழில் கைது
களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் யாழில் கைது

யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் கண்டி வீதியின் இரு மருங்கிலும் விளம்பர பதாகைகள் நடப்பட்டுள்ளன.அவற்றின் இரும்பு குழாய்களை அண்மை நாட்களாக இரவு வேளைகளில் வெட்டி களவாடப்பட்டு வந்தன. 

அது குறித்து விளம்பர பதாகைகளுக்கு உரிய நிறுவனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டுகளை பதிவு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துடன் நேற்றைய தினம் இரவு அப்பகுதியில் விசேட பொலிஸ் குழு ஒன்று பதுங்கி இருந்துள்ளது.

நள்ளிரவை அண்டிய வேளை அப்பகுதிக்கு வந்த 7 பேர் கொண்ட குழுவினர் விளம்பர பதாகைகளின் இரும்பு குழாய்களை அறுக்க தொடங்கினர்.

அதையடுத்து பதுங்கி இருந்த பொலிஸ் குழுவினர் அந்த குழுவை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது தாம் கோப்பாய் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோப்பாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரிக்கு அது குறித்து தெரியப்படுத்தினர்.

அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த கோப்பாய் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.அதற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது இராணுவ தலமையகத்தினால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலை பேசி ஊடாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

http://onlineuthayan.com/news/1389

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் தன்னுடைய கடமையை செய்துள்ளது,கள்ளன்(பகலில் இராணுவம் இரவில் கள்ளன் ) தன்னுடைய கடமையை செய்துள்ளான்.....இராணுவ தலைமையகம் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்தால் ஒரு பிரச்சனையும் இல்லை:)

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை அகற்றும் போராட்டத்தை விட்டுட்டு, கள்ளர்களை அகற்றும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். :grin:

  • தொடங்கியவர்
இராணுவ வீரர்கள் 8 பேரும் பிணையில் விடுதலை
இராணுவ வீரர்கள் 8 பேரும் பிணையில் விடுதலை

திருட்டு குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களும் 50 ஆயிரம் ரூபா ஆள்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பர பதாதை இரும்புகளை திருட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இராணுவ உயர் மட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் சாவகச்சேரி பதில் நீதவான் சீ.கணபதிபிள்ளையில் வதிவிடத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே இவர்கள் அனைவரும் தலா 50 ஆயிரம் ரூபா ஆள்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு மீதான விசாரணைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/1417

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.