Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மக்கள் துயரத்தில் இலவச விளம்பரம் தேடும் அமெரிக்க துதரக அதிகாரிகள்

Featured Replies

(வியாழக்கிழமை, 7 டிசெம்பர் 2006) ஜனனி

இலங்கைக்கான வத்திக்கானின் பிரதிநிதி அருட்தந்தை மாரியோ சானாரி நேற்று புதன்கிழமை யாழ். சென்று, அங்கு தற்போதுள்ள நிலைமையையும் ஏ-9 வீதி மூடப்பட்ட பின்னர் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் அவர் நேரில் கண்டறிந்தார். அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் நிலைமையை ஆய்வு செய்ய யாழ்ப்பாணம் சென்றனர். போப் ஆண்டவரின் சிறப்புத் தூதுவருமான அருட்தந்தை மாரியோ சானாரி, யு.என்.எச்.சி.ஆர் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்து பேசினார். சிறிலங்கா கடற்படையினரின் விசாரணைக்குப் பின்னர் காணாமல் போன அருட்திரு ஜிம் பிறவுன் மற்றும் அவரது உதவியாளர் குறித்து அவர் விசாரித்தார் என்றும் இது குறித்து விசாரணைகள் முறையாகச் செய்யப்படவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ-9 வீதி மூடப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு அவர் மேற்கொண்ட முதலாவது பயணம் இது. இதேவேளையில் யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க தூதரகக் குழு, பல சமூக குழுக்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது.

சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்களின் யாழ்ப்பாணப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதுவர்களின் பயணம் அமைந்துள்ளது.

நன்றி : நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

இது நிதர்சனத்தின் செய்தியல்லவே. செய்திகளை கொப்பியடித்துப் போடுகிறன்றவர்கள் உண்மையானவர்களின் செய்திகளை கொப்பியடித்துப் போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உதயன், தமிழ் நெற்றில் வந்த செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16426

  • தொடங்கியவர்

நான் கொப்பியடித்தது நிதர்சனத்திலிருந்துதான். நேற்றைய நிதர்சனத்தைப்பாருங்கள். கந்தப்பு அவர்களே, உதயன் செய்திக்கும இதற்கும் வித்தியாசமில்லையா? கொப்பியடித்தாவது ஒரு எமது உறவுகளுக்கு எம் மண்ணின் நிலையை காட்டவே முயல்கின்றேன்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைகளில் இணங்கியதை செயற்படுத்த

இணைத் தலைமை நாடுகள் அழுத்தம் தர வேண்டும்

யாழ்.வந்த அமெரிக்கத் தூதரிடம் ஆயர்

இலங்கை விவகாரத்தில் நோர்வே இது வரை மேற்கொண்ட முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

ஆகையால் பேச்சுவார்த்தைகளின் போது காணப்பட்ட இணக்கப்பாடுகளையும் இனிமேல் எட்டப்படக் கூடிய உடன்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நிரந்தர சமாதானத்தையும் அதன் மூலம் நிரந்தர அமைதியையும் காண முடியும்.

நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் ஓ பிளேக்கிடம் யாழ்.ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகம் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்துக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்டுவந்த அவர், யாழ். அரச அதி பர் கே.கணேஸ், யாழ்.ஆயர் அதிவண தோமஸ் சௌந்தர நாயகம், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஐ.நா.சார்பு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடி யாழ்.நிலை மைகள் குறித்து ஆராய்ந்தார்.

யாழ்.ஆயர் இல்லத்தில் நடந்த சந்திப்பில் ஆயர் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் வருமாறு

* குடாநாட்டில் ஏற்பட்டுள்ள ஏ9 பாதை மூடப்பட்ட பின் ஏற்பட்டுள்ள பேரவலம் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடி நிலையில் வாழ்கின்றனர். உணவு, உறைவிடம் இன்றி மக்கள் அல்லற் படுகிறார்கள்.

* தொடரும் கொலைகள் , காணாமற்போதல், கைதுகள் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை நிலவுகின்றது. மனித உரிமைகள் அதிகளவில் மீறப்படுகின்றன.

*தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமான சூழல் காணப் படுகிறது. அங்குள்ள பேரினவாத சக்திகள் மேற்கொள்ளும் தீவிர பிரசாரங்களால் தமிழர்கள் சிங்கள மக்களை சிறுபான்மையினராக்கிவிடுவார

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் மூலம் "புதினம்" இணையத்தளம். அதனைக் குறிப்பிட மறந்துவிட்டேன் மன்னிக்கவும்.

எந்த இணையவலையில் வந்தால் என்ன செய்திகள் அனைவரிடமும் சென்று சேர்ந்தால் சரி. அதற்குள் ஏன் அது சரி இது சரி என்று வாக்குவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசன் நீங்கள் கூறுவது சரிதான். செய்திகளை கொப்பியடித்துப் போட்டுத் தளம் நடத்துவதனை விட சுயமாக செய்திகளைப் போட்டால் அந்த அந்த தளங்களுக்கு தனிமரியாதை ஏற்படும்.

இவ்வாறு "நிதர்சனம்" மட்டும் தான் செய்வதாக இங்கே நான் கூற வரவில்லை. பல இணையத்தளங்கள் இதனைத்தான் இன்று செய்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக சில இணையத்தளங்கள் தாமாக முயற்சி எடுத்து செய்திகள் போட பெருமளவு இணையத்தளங்கள் தமது தளங்களில் கூகிள் அட் முறையை போட்டு பெருமளவு பணம் சம்பாதிக்கிறார்கள்.

உண்மையில் செய்தி போட்டவன் யாரோ. ஆனால் அதனால் லாபம் அடைபவன் வேறு யாரோ. இதன் தாற்பரியங்கள் தெரியாது, எம்மவர்கள் செய்திகளை வாசித்துவிட்டு அந்த இணையத்தளத்தில் இவ்வாறு செய்தி வந்தது என்று தமக்குத் தெரிந்தவர்களுக்கு கூறிக்கொண்டிருப்பார்கள்.

யதார்த்தத்தை புரிந்து எழுதுங்கள் நேசன். உங்களைப் போன்றவர்கள் செய்திகளை திருடிப் போடுகின்றவர்களுக்கு வக்காளத்து வாங்காது, அதனை தட்டிக் கேட்டு ஆரோக்கியமான ஒரு சூழலை உருவாக்க முனையுங்கள்.

Jaffna Bishop urges firm action from Co-chairs

[TamilNet, Friday, 08 December 2006, 12:55 GMT]

Robert O. Blake, US Ambassador to Sri Lanka paid a sudden visit to Jaffna Thursday and met with Jaffna Bishop Rev. Thomas Soundaranayagam at the Bishop's House, and discussed the current situation in the Jaffna peninsula, source in Jaffna said. The Rev. Bishop stressed on the urgent need for the Co-chair countries to exert due pressure on the Sri Lanka government (GoSL) to restore peace in Sri Lanka, Bishop's House sources said.

The US envoy was very keen to learn first hand the situation in Jaffna, and met the officials of the Sri Lanka Human Rights Commission (SLHRC) Jaffna, K. Ganesh, Jaffna Government Agent (GA), Srinithi Nanthasegaran, Additional District Majistrate and other key figures in the peninsula, Jaffna sources said.

A solution to the ethnic issue can be found only by implementing the agreements reached in the talks between the GoSL and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and by full adherence to the Cease Fire Agreement (CFA) by both parties, Rev. Bishop told the US Ambassador, the sources said.

Rev. Bishop wanted the US envoy to prevail on the LTTE to enter talks with the GoSL and thereby bring relief to the Tamils, sources added. :icon_idea:

நன்றாக கேட்டீர்கள் ஆயர் அவர்களே....!

எப்பவுமே ஒரு பக்கச்சார்பான அறிக்கைகளை விட்டு அன்னியப்பட்டு நிற்கும் அமெரிக்கனுக்கு இப்போது புரிந்திருக்கும் இலங்கை பிரச்சனையில் தங்கள் உண்மையான நிலை.

இப்போது உள்ள நிலையில் புலிகளுக்கு அழுத்தத்தை பிரயோகிப்பது எப்படி? முதலில் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

தனக்குத் தானே தடையை போட்டுவிட்டு ஒரு ஓரத்தில் நின்று கொண்டு சடவால் அறிக்கைகள் விடுவது காரியத்திற்குதவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.