Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

14237684_1122508467797846_68278182896940

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் தனஞ்செய டீ சில்வாவின் பிறந்தநாள்.

Happy Birthday Dhananjaya De Silva

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
1666 ஆம் ஆண்டின் லண்டன் தீ அனர்த்தத்தை விளக்குவதற்காக தீக்கிரையாக்கப்பட்ட 120 மீற்றர் நீளமான சிற்பம்
 

17 ஆம் நூற்­றாண்டு கால லண்டன் நகர கட்­டங்­களை சித்­தி­ரிக்கும் வகையில்  பல­கையால் உரு­வாக்­கப்­பட்ட 120 மீற்றர் நீள­மான சிற்பம் நேற்­று ­முன்­தினம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது.

 

19056f2.jpg

 

1666 ஆம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்­பட்ட பாரிய தீ குறித்து விளக்­கு­வ­தற்­காக இந்­நி­கழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

 

19056f1.jpg

 

1666 செப்­டெம்பர் 2  முதல் 5 ஆம் திகதி வரை லண்­டனில் ஏற்­பட்ட பாரிய தீயினால் 13,200 வீடுகள், 87 தேவா­ல­யங்கள் தீக்­கி­ரை­யா­கின. (எனினும் 6 பேர் மாத்­தி­ரமே உயி­ரி­ழந்­த­தாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது).

 

19056f3.jpg

 

இப் பாரிய தீ அனர்த்­தத்தின் 350 ஆண்டு நிறை­வை­யொட்டி, லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் மேடை­யொன்றில் மேற்­படி பாரிய பலகைச் சிற்பம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு நேற்று முன்தினம் தீக்கிரையாக்கப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆபத்தான சுழலை பெண்கள் எதிர்கொள்வது எப்படி?

16-1429181729-women-abuse567-600.jpg

 

நிர்பயா முதல் சுவாதிவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. முன்னிரவில் மட்டுமல்ல, பகலில் ஆளற்ற சாலைகளில் செல்ல நேரிடும் பொழுதுகளில்கூட, 'இந்தப் பட்டியலில் நான் சேர்ந்துவிடுவேனோ' எனப் பதற்றம் கொள்கிறார்கள் பெண்கள்.

பெண்கள் எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் திருநாவுக்கரசு.

''ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அவர் மூளை எவ்வாறு செயல்படும் என்பது, வேலையில் அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைப் பொருத்தோ அல்லது அவர் பெற்றுள்ள பட்டங்களின் அடிப்படையிலோ இல்லை. தாக்குதலின் வகை, தாக்குபவர் யார், தாக்குதல் நடக்கும்போது அந்தப் பெண்ணின் மனநிலை போன்ற விஷயங்களைப் பொருத்துதான் அவர் அந்த நேரத்தில் புரியும் எதிர்வினை அமையும்.

தாக்குதல், எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத என இரண்டு வகைப்படும். எதிர்பார்த்த தாக்குதல் நடக்கும்போது, மூளை நிதானமாக யோசித்து சிறப்பாகச் செயல்படும். இவை பொதுவாக வீட்டுக்குள், உறவுகளுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு இடையில் நிகழக்கூடியவை.

ஆனால், வீட்டுக்கு வெளியே திருட்டு, பாலியல் தொல்லை என எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தப் பெண்ணின் மூளையில் ஒரு தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கான யோசனையோ திட்டமிடலோ இருக்காது. ஆனால், பெண்கள் தங்கள் மூளையை தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ட்யூன்செய்ய வேண்டிய காலகட்டம் இது.

பெண்கள் எங்கு சென்றாலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. எந்த நேரத்திலும் தன்னை ஆபத்து நெருங்கலாம் என்ற தற்காப்புநிலையோடு அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நிலைகுலையாமல், அந்த நிமிடம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து அவர்கள் மூளை சட்டென ரியாக்ட் செய்ய வேண்டும்.

தாக்குதலுக்கு உள்ளாகும்போது பெண்கள் திரும்பத் தாக்க நினைக்கக் கூடாது. தற்காப்புக் கலை தெரிந்து இருந்தாலும், முதலில் அவர்கள் செய்யவேண்டியது, அந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல முயல்வதுதான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இதே அறிவுரைதான். அந்த நிமிடத்தில் பலத்தைக் காண்பிக்க நினைக்காமல், மூளையைப் பயன்படுத்தவேண்டும்.

p102.jpg

 

ஒருவேளை தப்பிக்க முடியாதபடி சிக்கிக்கொண்டால், இப்போது பலத்தை முழு நம்பிக்கையுடன் பிரயோகித்து எதிர் தாக்குதல் புரிய வேண்டும். எந்த நிலையிலும் 'நம்மால் முடியாது'  என்று தாக்குதலை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ரியாக்ட் செய்யாமல் இருப்பதும், தவறாக ரியாக்ட் செய்வதும் ஒன்றுதான். மூளையை இந்த வழிகளில் எல்லாம் யோசிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை கவனிக்கத் தவறுகிறார்கள். அல்லது, அந்த நபரால் தனக்கு பெரிய ஆபத்து எதுவும் நேர்ந்துவிடாது என்று நினைக்கிறார்கள்.  உதாரணமாக, தன்னைப் பல நாட்களாக தொடர்ந்து வரும் ஒரு வாலிபர், சமூக வலைதளங்களில் இரட்டை அர்த்தத்தில் பேசுபவர் இவர்களை எல்லாம் 'என்ன செஞ்சிடுவாங்க?' என்று அலட்சியமாகக் கடக்கக் கூடாது. அவர்களைத் தவிர்க்க வேண்டும், முழுவதுமாக அந்தத் தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். அல்லது, மனசுக்கு நெருடலாக இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆலோசனை பெற வேண்டும்" என்றார் திருநாவுக்கரசு.

''ஒருவேளை, இந்த முன்னெச்சரிக்கைகளை எல்லாம் மீறி ஒரு தாக்குதல் நடந்துவிட்டது என்றால், குடும்ப கௌரவம், சமூகம் போன்ற காரணங்கள் சொல்லி அதை மறைக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கும் நடக்கும் அநீதியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களை வார்த்தையால் ஒருவர் தாக்கினால்கூட, அதற்கு எதிர்வினை புரியுங்கள். சட்டம் உங்கள் பக்கம் உள்ளது" என்று நம்பிக்கை கொடுக்கும் சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் பிருந்தா கார்த்திகேயன், பெண்களுக்கு பக்கபலமாக இருக்கும் சட்டங்கள் பற்றிச் சொன்னார்.

* ''ஒரு பெண் குழந்தை பிறக்கும் நிமிடம் முதல் இறுதிவரை அனைத்துச் சட்டங்களும் அவளுக்கு ஆதரவாகவே உள்ளன.

* பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2005-ன் படி, ஏழு வருடங்கள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை குற்றவாளிக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.

* இந்திய தண்டனைச் சட்டத்தில் 'பிரைவேட் டிஃபன்ஸ் ஆர்டிகிள் 96 - 106'ன் படி தன்னைத் தாக்க வரும் ஒரு நபரை பெண்கள் தற்காப்புக்காகத் தாக்கி அந்த நபருக்கு சேதம் ஏற்பட்டால்கூட, அது குற்றமாகக் கருதப்படாது. அதற்கான விவரத்தை பெண்கள் காவல்துறையிடம் அளித்தால்  போதுமானது.

* இந்திய அரசியல் சாசனத்தின் 'ஆர்டிகிலள் 21'ன் படி, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் வெளியே வராமல் விசாரணை செய்வது நீதிமன்றத்தின் கடமை. மேலும் பெண்களின் தனியுரிமை காப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

kloilldd.jpgkkkkal.jpg

எனவே, பெண்கள் அச்சமின்றி தங்களுக்கு நேர்ந்த அநீதிகளைப் பற்றிப் பேச வேண்டும். அது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதோடு, அவர்களால் மேலும் பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதையும் தடுக்கும்'' என்றார் பிருந்தா கார்த்திகேயன்.

அச்சம் இருக்கும்வரையே பயணம் தடைப்படும். அச்சத்தைக் கலைத்து துணிந்து நடைபோடுங்கள் பெண்களே...

vikatan

  • தொடங்கியவர்
மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா 2016 அழகுராணி
 

மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா 2016 அழ­கு­ரா­ணி­யாக இஸபெல் டேலி தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

 

19059_1.jpg

 

190592.jpg

 

செயின்ட் அன்ட்ரூ நகரில் அண்­மையில் நடை­பெற்ற இப்­ போட்­டியில் கிறிஸ்டல் பிட் இரண்­டா­மி­டத்­தையும் ரெனி ரோய் மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றனர்.  

 

190593.jpg

 

190594.jpg

 

மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா அழ­கு­ரா­ணி­யாக தெரி­வா­கி­யுள்ள 18 வய­தான இஸபெல் டேலி, எதிர்­கா­லத்தில் தான் சமுத்­திர உயி­ரி­ய­லா­ள­ராக வேண்டும் என்­பது தனது இலட்சியம் எனத் தெரி­வித்­துள்ளார்.

 

1905914102214_1102139823215754_714424176

 

1905914141895_1102136213216115_751722984

 

எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் (பிர­பஞ்ச அழ­கு­ராணி) போட்­டியில் ஜெமெய்க்­கா வின் சார்பில் அவர் பங்குபற்றவுள்ளார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p108a.jpg

twitter.com/palanikannan04: கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடி, செல்போன் நம்பரை மாத்துறவன் புத்திசாலி; செல்போனையே மாத்துறவன் அதிபுத்திசாலி!

twitter.com/BoopatyMurugesh: கச்சத் தீவை வாங்கி, பக்கத்து நாட்டுக்குத் தர முடிந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால், காவிரி நீரை வாங்கி பக்கத்து ஸ்டேட்டுக்குத் தர முடியலை!

twitter.com/Aruns212: நாம கஷ்டத்தில் `புதிய பறவை' சரோஜா தேவி போல `கோபால்... கோபால்...'னு சாமிகிட்ட கதறினாலும், அவருக்கு வடிவேலுவோட `கோவாலு... கோவாலு...' மாதிரிதான் கேட்கும்போல.

twitter.com/kunnathurarumug: ஸ்கூட்டி இருக்கிற விட்டுல பொண்ணு இருக்கும்னு நினைக்கிறது தப்பு ப்ரோ. இப்ப எல்லாம் தாத்தாவும் ஸ்கூட்டிதான் ஓட்டுறாங்க!

twitter.com/SettuOfficial: புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர். கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!

twitter.com/BoopatyMurugesh: ஜல்லிக்கட்டை தடை பண்ணிட்டு கிரிக்கெட் டீமுக்கு `காரைக்குடி காளை'னு பெயர் வெச்சா, உட்கார்ந்து பார்க்கிற அளவுக்கா தமிழர்கள் சொரணை இழந்துட்டோம்? :-)

twitter.com/Kannan_Twitz: பத்து நிமிஷம் தனியா போய் நின்னுட்டு போன் பேசிட்டு வந்தா, `யார்கிட்ட கடலை போட்டே?'னு கேட்கிறதை எப்போ விடுறாங்களோ, அப்போதான் இந்தியா வல்லரசு ஆகும்.

twitter.com/arattaigirl: பொட்டேட்டோ ரைஸ். மிச்சமான உருளைக்கிழங்கு பொரியல்ல சோத்தைப் பிரட்டி சாப்பிட்டாச்சு!

p108b.jpg

twitter.com/therkr80: எந்தெந்த விஷயத்துலயோ டெக்னாலஜி முன்னேறிருச்சாம்... ஆனா, மழை பெஞ்ச உடனே கரன்ட் கட் ஆகாம இருக்க இன்னும் வழியைக் காணோம்!

twitter.com/BoopatyMurugesh: ஆபீஸ்ல புதுசா வந்த பையனுக்கு `நீ பார்க்கிற வேலையை, ட்ரெய்னிங் குடு'னு சொன்னாய்ங்க. ஒரு ட்விட்டர் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் குடுத்திருக்கேன்!

twitter.com/altaappu: எஸ்கலேட்டர்ல நடந்து செல்பவர்கள்தான் இந்தியா வல்லரசாக காரணமாக இருக்கப் போகிறார்கள். அப்படி அவசரமா எங்கதான்டா போவீங்க?

twitter.com/arattaigirl: வீக் எண்ட் என்ன ப்ளான்?

துணி துவைக்கணும், பாத்திரம் தேய்க்கணும், ஒட்டடை அடிக்கணும், பாத்ரூம் கழுவணும். bye!

twitter.com/ThalayMagan: காதல்ல பிரிஞ்சுபோற வருத்தத்தைவிட பேச்சுலர் லைஃப்ல சமைக்கும்போது தோசை பிஞ்சுபோற வருத்தம்தான் ரொம்ப கவலையா இருக்கு.:

twitter.com/BKC_Offl: ராதாகிருஷ்ணனை, `ராக்கி'னு கூப்பிடா, பாலகிருஷ்ணனை `பாக்கி'னுதானே கூப்பிடணும் #டவுட்டு!

p108c.jpg

twitter.com/ikrthik: குழந்தைகளிடம் பிடித்ததே அவர்கள் கவனம் ஈர்க்க, காரியம் சாதிக்க, அழுகையை மட்டுமே பயன்படுத்தி சிரிப்பைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

twitter.com/arattaigirl: கொழுக் மொழுக் பாப்பாவை எல்லாம் பார்த்தா, ஆசையா தூக்கிவெச்சுட்டு அஞ்சு நிமிஷத்துல கை வலிக்க தொடங்கி இறக்கிவிடவும் முடியாம திருதிருனு முழிக்கிறது #வலி!

twitter.com/iam_v_jey:    இயேசு வருகிறார்னு சொல்றவங்களைக்கூட நம்பலாம். ஆனா, போன்ல `கிளம்பிட்டேன்...வந்துகிட்டே இருக்கேன்'னு சொல்ற வங்களை மட்டும் நம்பவே கூடாது!

facebook.com/vinoth.g.raj.1: தோசை சுடுவது... பால் காய்ச்சி டம்ளரில் ஆற்றிக் குடிப்பது... இவை எல்லாம் கலைகளில் சேராதா?

facebook.com/vinayaga.moorthy.5070: எங்க அப்பத்தா, 64 வருடங்கள் இடியாப்பம், முறுக்கு, அதிரசம் (24 டு 88 வயது வரை) சுத்துப்பட்டு கிராமங்கள்ல வியாபாரம் பண்ணவங்க.
இன்று வரை பேருந்து வசதி இல்லாத மிகவும் பின்தங்கிய கிராமங்கள் அவை. வீடு, வாசல், சொத்துக்களை விற்று நகர் பெயர்ந்தாலும், எங்க அப்பத்தா மட்டும் அங்கேயே புதுசா ஒரு குடிசை போட்டுத் தங்கிக்கிட்டு, இடியாப்பம் சுட்டு வித்தாங்க. 88 வயசு வரைக்குமே நடந்துபோய்தான் வித்தாங்க.காலையில இடியாப்பம். மாலை முறுக்கு, அதிரசம்.அதனால, அவங்களுக்கு எல்லா ஊர்லயும் அப்படி ஒரு பேர் இருக்கும்போல.

அப்பத்தா இறந்த பிறகு, அந்த ஊருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. போன வாரம், நம்ம சொந்த ஊர், வீடு எல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கப் போனேன்.

ஒரு ஸ்டாப்ல இறங்கி உள்ளே நடந்து போகணும்.சொந்த ஊர்ல நம்மளை யாருக்கும் அடையாளம் தெரியாம, சுத்தி வர்றது கொடுப்பினை... கொடுமையும்கூட.

எளிதில் உணர்ச்சிவசப்படுற ஆளுங்கிற தால, பார்த்த இடத்தில் எல்லாம் பழைய ஞாபகம் கிளற, அங்கங்க நின்னு கொஞ்ச நேரம் கண்ணீர் வடிச்சுட்டு இருந்தேன்.

p108d.jpg

ஊர் சனம் எல்லாம் ஒரு மாதிரியா பார்த்துட்டு போக, ஒருத்தர் நின்னு `யார் நீங்க?'னு கேட்டார். `இடியாப்பக்கார ஆச்சி பேரன்'னு சொன்னேன்.

நேரா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாரு. கொஞ்ச நேரத்துல நெறையப் பேர் கூடிட்டாங்க. பெண்கள் எல்லாம் `ஆச்சி சாவுக்குகூட சொல்லலையேப்பு'னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் நெறையப் பேர் `ஊருக்கே அன்னம் தந்த மகராசியாச்சே'னு ஆளாளுக்கு என்னென்னமோ கொண்டு வந்தாங்க. ரொம்ப நேரம் விடவே இல்லை. சகல உணர்வுகளும் ஒரே இடத்துல நிரம்பி சினிமா பார்க்கிற ஃபீலிங்.

ஒட்டுமொத்த ஜனமும் அப்பத்தாவா மாறினதைக் கண்கூடா பார்த்த அந்தத் தருணங்கள் அம்புட்டு அழகு.

அதே ஊர்ல வீடு கட்டி வாழணும் பின்னாடி.

vikatan

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: சென்னை மாணவர்களுடன் கிறிஸ் கெயில்!

 

c_3000017f.jpg
 

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், வேலம்மாள் பள்ளியில் நடைபெறும் சர்வதேச செஸ் சாம்பியன்கள் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.

2_3000011a.jpg

குதிரை சாரட்டில் வரும்கெய்லுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.

3_3000010a.jpg

கைதட்டிச் சிரிக்கும் மாணவிகள்.

4_3000009a.jpg

கெய்லுக்கு ஆரத்தி எடுக்கும் மாணவிகள்.

5_3000008a.jpg

மலர்க்கிரீடம் அணிந்தபடி...

1__3000012a.jpg

மாணவர்களுடன் நடனமாடும் கிறிஸ்கெயில்

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

மறைந்து 10 ஆண்டுகள் ஆனது; முதலை வீரனை மறக்க முடியுமா? #SteveIrwin

steave.jpg

யானையின் லத்தியில் இருந்து தண்ணீர் குடிக்கும் பியர் கிரில்சுக்கெல்லாம் முன்னோடி ஸ்டீவ் இர்வின். 'மேன் VS வைல்டு'  அலற வைக்கும் ரகம் என்றால் 'குரோக்கடைல் ஹன்டர் 'நாடி நரம்புகளை முறுக்கேற்றி புல்லரிக்க வைத்துவிடும். கையறு நிலையில், வனத்தை எதிர்கொள்வது எப்படி என பியர் கிரில்ஸ் பாடம் எடுக்கிறார் என்றால், கையில் எதுவும் இல்லாமல் வன விலங்குகளை எதிர்கொண்டவர் ஸ்டீவ். சுற்றுச் சூழலுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் மதிப்பேயில்லாமல் போன காலக்கட்டத்தில்,  அவற்றுக்காகத் தங்கள் உயிரை பணயம் வைத்தவர்கள் இவர்கள். ஒருவருக்கு உயிர் அதிலேயே போய் விட்டது. ''நான் காட்டுக்குள் செல்லும் போது திரும்பி வருவது நிச்சயம் இல்லை '' என பியர் கிரில்ஸ் எப்போதும் சொல்வது உண்டு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினின் பெற்றோரும் முதலை வேட்டைக்காரர்கள்தான்.  இர்வினின் பெற்றோர் குயின்ஸ்லாந்தில் பெரீவா என்ற இடத்தில் வனவிலங்குகள் சரணாலயம் நடத்தி வந்தனர். பெற்றோரிடம் இருந்துதான் அத்தனை விஷயங்களையும் இர்வின் கற்றார். 6 வயதில் மலைப்பாம்புகளை கையாண்ட இர்வின்,  9வது வயது முதல், முதலைகளை படித்தார். பனிரெண்டாவது  வயதிலேயே தந்தை பாப் மேற்பார்வையில், முதலையை பிடிக்க ஆரம்பித்தார் இர்வின்.

bind.jpg

இர்வினின் மனைவி டெர்ரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். கடந்த 1991ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற டெர்ரி, இர்வினின் வனவிலங்குகள் சரணாலயம் பற்றி கேள்விப்பட்டிருந்தார். இர்வினை கண்டதும் டெர்ரிக்கு காதல் பற்றிக் கொண்டது. 'இர்வினை பார்த்ததுமே எனக்கு டார்ஜான்தான் நினைவுக்கு வந்தார்' என டெர்ரி கூறுவார். காதல் மலர்ந்த  நான்கே மாதங்களில் திருமணத்தில் முடிந்தது. ஹனிமூனுக்கு போன இடத்திலும் இந்த தம்பதி முதலைகளைத் தேடுவார்கள். காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இரு குழந்தைகள். மூத்தவள் பிந்தி.  1998 ம் ஆண்டு பிறந்தாள். இப்போது 18 வயதான பிந்தியும் தந்தையைப் போலவே முதலை சாகசக்காரிதான். கடந்த 2003 ம் ஆண்டு இளையவன் பாப் ராபர்ட் பிறந்தான்.

இர்வினின் சாகச நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு,  'இப்படியெல்லாம் ஒரு மனிதன் விலங்குகளுடன் பயமற்று உலவ முடியுமா'  என்ற கேள்வி நிச்சயம் எழும் . 1990ம் ஆண்டு முதல் டிஸ்கவரி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இர்வினின் டாக்குமெண்டரிகள் மிரள வைத்தன. அனகோண்டா, மலைப்பாம்பு எல்லாம் குழந்தை போலத்தான் இர்வினின் கையில் இருக்கும். கடந்த 1996ம் ஆண்டு,  இர்வினின் 'தி குரோக்கடைல் ஹன்டர்' நிகழ்ச்சி முதன் முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பார்த்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இர்வினுக்கு உருவானார்கள். சுமார் 50 கோடி மக்களை 'குரோக்கடைல் ஹன்டர் ' நிகழ்ச்சி சென்று சேர்ந்தது.

irs%20.jpg

ராபர்ட் ஒரு மாத குழந்தையாக இருந்த போது, அவனை கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் முர்ரே என்ற 6 அடி நீள முதலைக்கு ஸ்டீவ் இர்வின் உணவு வழங்கிய நிகழ்ச்சி,  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட, மக்கள் பதைப் பதைத்துப் போனார்கள். இர்வினுக்கு கண்டனங்கள் குவிந்தன. இர்வின் மன்னிப்பு  கேட்ட பின்னரே பிரச்னையின் தீவிரம் அடங்கியது. இப்போது,ராபர்ட்டும் தந்தை போலவே முதலை வீரானாகி விட்டான். ரத்தத்தில் ஊறிய விஷயம் அல்லவா... மாற்றி விட முடியுமா?

வாழ்நாள் முழுவதும்  சுற்றுச் சூழலுக்காகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றவும் இர்வின் உழைத்தார்.  'நான் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே இறந்து விட வேண்டும்.. 'என ஒரு ஆசிரியர் நினைப்பார். 'நடித்துக் கொண்டிருக்கும் போதே எனது உயிர் போய் விட வேண்டும் ' என ஒரு நடிகர் சொல்வார். ஆனால், தான் நேசித்த துறையில் விரும்பிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மரணித்து விட்டார் ஸ்டீவ்.

கடந்த 2006 ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் 'ஆபத்தான கடல் விலங்கினங்கள்' பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் (stingray)  மார்பில் கொட்டியதில், மரணத்தை தழுவினார் இர்வின். ஸ்டீவ் மறைந்து கடந்த செப்டம்பர் 4ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தந்தையின் நினைவு தினத்தில், ஆஸ்திரேலியாவில் முதலை ஒன்றை மீட்ட பிந்தி,'' நாங்கள் நிகழ்த்தும் அனைத்து சாகசங்களுக்கும் நீங்கள்தான் ஹீரோ அப்பா. எனது அன்பை விளக்க வார்த்தைகள் இல்லை'' என இன்ஸ்டாவில் பதிவிட்ட போதுதான், அந்த சாகச வீரனை நாம் மறந்து போனது நினைவுக்கு வந்தது!

vikatan

On 05/09/2016 at 5:29 PM, நவீனன் said:

பிள்ளையாருக்கு எத்தனை தேவியர்?

ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

அப்ப பிள்ளையார் பிரமச்சாரி என்பது வெறும் கப்ஸாவா?

14199251_1391497324196940_883073616563677083_n.jpg?oh=ebf58e74ace2d6e9d7a907dfbdc05545&oe=58487065

இது சுவர்ணமுகி பிள்ளையார். ஒரு அரக்கனை தேடி பிள்ளையார் போனபோது அவன் சுவர்ணமுகி எனும் பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் புகுந்து மறைந்து கொண்டானாம். பிள்ளையார் விடுவாரா, சுவர்ணமுகியை தனது மடியில் இருத்தி, அவளின் பெண்ணுறுப்பை தனது தும்பிக்கையினால் மூடி, அரக்கனை வெளிவராதபடி தடுத்து இந்த உலகை காப்பாற்றினாராம். இந்த சிலை இலங்கையில் காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோவிலில் மட்டுமே உள்ளது.

இந்த படத்தை எடுத்ததும் அடியேன்தான்

இது பிள்ளையாரை பிரமச்சாரி என்று இன்றும் நம்புபவர்களுக்கு சமர்ப்பணம்.

  • தொடங்கியவர்

கண்ணாடி மீன்கள்!

 

ண்ணாடி போல ஊடுருவும் வகையிலான மீன் ஒன்றைக் கையில் பிடித்தபடி நியூசிலாந்தைச் சேர்ந்த அமோஸ் கிறிஸ்டோபர்ஸ் என்பவர் கடந்த வாரம் ஒரு போட்டோவை ஷேர் செய்திருந்தார். மீனின் உடலுக்குள் இருக்கும் எலும்பு, குடல், குந்தாணி வரை எல்லாமே அப்பட்டமாக வெளியில் தெரிந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்து, ``இது உண்மையாகத் தெரியவில்லை. வழக்கமான வெறும் போட்டோஷாப் கொரளி வித்தை'' என நம்ப மறுத்தனர்.

p94.jpg

ஏனெனில், போட்டோஷாப் மூலம் புலியைப் போல உருவமைப்புடைய முயல், அச்சு அசலாகக் கழுதையைப் போலவே இருக்கும் பூனை... என எதையும் எளிதாக உருவாக்கி அதற்குப் பெயரும் வைத்துவிட முடியும். ஆனால், இது வெறும் போட்டோஷாப் வித்தைகள் மட்டுமல்ல... இப்படியும் சில உயிரினங்கள் இந்தப் பூமியில் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வைரலாகப் பரவிய `டிரான்ஸ்பரன்ட் ஃபிஷ்'கள் கடலிலும், சில நன்னீர் ஏரிகளிலும் வாழ்வதாக ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள். மீன் மட்டுமல்ல... உள் உடலமைப்பு வெளியே தெரியும்படியான அமைப்பைப் பெற்ற டிரான்ஸ்பரன்ட் தவளை, டிரான்ஸ்பரன்ட் பட்டாம்பூச்சி போன்ற இன்னும் சில உயிரினங்களும் இங்கே இருக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

டிரான்ஸ்பரன்ட் மனிதர்கள் எங்கேயாச்சும் இருக்காங்களானு பார்த்துச் சொல்லிருங்க மக்கா!

vikatan

  • தொடங்கியவர்

14188150_1105277426216694_75525705844886

இது கொடுமை..:grin:

  • தொடங்கியவர்
 

புகுந்து விளையாடலாமா?

 

p118a.jpg

ம்மாத்தூண்டு கம்ப்யூட்டருக்குள் ஆயிரத்தெட்டு தகவல்களைத் தட்டி வைக்கிறோம். கம்ப்யூட்டரும் நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறது. எனில், அந்தக் கம்யூட்டருக்குள் புகுந்து `எப்படிச் செயல்படுகிறது?' என எட்டிப்பார்த்துவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் எடக்கு மடக்கான கற்பனையா தோணுதா? இதைத்தான் வெற்றிகரமாக சாதித்துக் காட்டியிருக்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர் ஜேம்ஸ் நியூமன்!

விஷயம் இதுதான். கணினிக்கான ஒரு புரோகிராமில் நடக்கும் முழு ப்ராசஸிங்க்கையும் டிவி-யில்p118b.jpg ஸ்லோமோஷனில் ஓடவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஜேம்ஸ் நியூமன் உருவாக்கியிருக்கும் பிரம்மாண்டமான `சூப்பர் கம்ப்யூட்டர்' இதைத்தான் செய்கிறது. இதனால் யாருக்கு என்ன பயன் எனக் கேட்பவர்களுக்கு, ஜேம்ஸ் சொல்லும் பதில், ``எல்லோரும் விதவிதமான கம்ப்யூட்டர் வெச்சிருக்காங்க. ஆனா, அதெல்லாம் எப்படி இயங்குதுனு பலருக்கும் தெரியாது. அதோட அருமை, பெருமைகளைச் சொல்லத்தான் இந்த முயற்சி! இந்த `சூப்பர் கம்ப்யூட்டர்' வழக்கமாக நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களைவிட மில்லியன் மடங்கு மெதுவாக இயங்கும்!'' என்பதுதான்!. அதாவது, இந்தக் கம்ப்யூட்டரில் நீங்கள் எண்டர் தட்டிவிட்டு எழுந்துபோனால், பல்விளக்கி, சூடாக ஒரு கப் காஃபி சாப்பிட்டுவரும் வரைகூட மெதுவாக `எண்டர்' ஆகிக்கொண்டிருக்கலாம்!

40,000 டிரான்ஸிஸ்டர்கள், 10000 எல்.இ.டி பல்புகள் என ஜொலிக்கும் இந்தக் கம்ப்யூட்டர் 500 கிலோ எடை கொண்டது. 10 மீட்டர் நீளமும், இரண்டு மீட்டர் உயரமும் கொண்ட இதை உருவாக்க ஐந்தாண்டு காலமும், 53,000 டாலர்கள் பணமும் செலவு செய்திருக்கிறார் ஜேம்ஸ். இதை உருவாக்கிய நோக்கம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதால், சூப்பர் கம்ப்யூட்டரை கல்வி நிறுவனங்களுக்கோ, மியூஸியத்திற்கோ கொடுக்க இருக்கிறாராம் ஜேம்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்
1978: இரத்மலானை விமான நிலையத்தில் “எயார் சிலோன்” விமானம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று..... 

செப்டெம்பர்- 07

 

70 : ரோமப் பேர­ரசின் இரா­ணுவத் தள­பதி டைட்டஸ் தலை­மையில் ஜெரு­ச­லேமைக் கைப்­பற்­றி­யது.

 

1812 : பிரெஞ்சு மன்னன் நெப்­போ­லி­யனின் படைகள் ரஷ்­யாவின் முதலாம் அலெக்­சாண்­டரின் படை­களை பர­டீனோ என்ற கிரா­மத்தில் தோற்­க­டித்­தன.

 

1821 : வெனி­சூலா, கொலம்­பியா, பனாமா மற்றும் ஈக்­கு­வாடோர் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய கிரானட்; கொலம்­பி­யாக்ஹ குடி­ய­ரசு உரு­வா­னது. சிமோன் பொலீவர் இதன் தலைவர் ஆனார்.

 

1822 : போர்த்­துக்­கல்­லிடம் இருந்து பிரேஸில் சுதந்­தி­ர­ம­டைந்­தது.

 

1860 : “லேடி எல்ஜின்” நீரா­விக்­கப்பல் அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் வாவியில் மூழ்­கி­யதில் 400 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

804varalru.jpg1929 : பின்­லாந்தில் “குரு” என்ற பய­ணிகள் கப்பல் மூழ்­கி­யதில் 136 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1940 : இரண்டாம் உலகப் போர்: பிரித்­தா­னிய மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் ஜேர்­ம­னி­யினர் லண்டன் நகரில் 300 தொன் கன­வெ­டி­குண்­டு­க­ளையும், 13,000 எரி­குண்­டு­க­ளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்­டு­வீச்சு இடம்­பெற்­றது.

 

1942 : யுக்­ரைனில் 8,700 யூதர்கள் நாஸி ஜேர்­ம­னி­ய­ரினால் கொலைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டனர்.

 

1943 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் உண­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் சிக்­கிய 55 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 : ஸ்கொட்­லாந்தில் நிலக்­கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்­ததில் 13 பேர் கொல்­லப்­பட்­டனர். 116 பேர் காப்­பாற்­றப்­பட்­டனர்.

 

1965 : இந்­திய எல்­லை­களில் சீனா தனது படை­களைக் குவிக்கப் போவ­தாக அறி­வித்­தது.

 

1977 : பனாமா கால்வாய் தொடர்­பாக பனா­மா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. 20 ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் பனாமா கால்­வாயின் கட்­டுப்­பாட்டை பனா­மா­வுக்குக் கைய­ளிப்­ப­தாக அமெ­ரிக்கா உறு­தி­ய­ளித்­தது.

 

1978 : இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் எயார்­சிலோன் நிறு­வ­னத்தின் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்­கப்­பட்­டது. இச்­சம்­ப­வத்தில் உயி­ரி­ழப்பு எதுவும் ஏற்­ப­ட­வில்லை.

 

1978 : பல்­கே­ரிய அதி­ருப்­தி­யாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்­டர்லூ பாலத்தைக் கடக்­கையில் பல்­கே­ரிய இர­க­சிய காவற்­ப­டை­யினன் ஒரு­வனால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1986 : தென் ஆபி­ரிக்­காவின் ஆங்­கி­லிக்கன் திருச்­ச­பையின் முத­லா­வது கறுப்­பினத் தலை­வ­ராக டெஸ்மண்ட் டூட்டு நிய­மிக்­கப்­பட்டார்.

 

1986 : சிலியின் ஜனாதிபதி ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து தப்­பினார்.

 

1988 :  ஆப்­கா­னிஸ்­தானின் முத­லா­வது விண்­வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவி­யத்தின் சோயூஸ் விண்­க­லத்தில் பூமி திரும்­பினார்.

 

1998 : கூகிள் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1999 : ஏதென்ஸில் இடம்­பெற்ற 5.9 ரிச்டர் அளவு நில­ந­டுக்­கத்­தினால் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1999 : இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் யாழ்ப்­பாணம் செம்­ம­ணியில் கொல்­லப்­பட்ட 600 இற்கும் மேற்­பட்ட தமி­ழர்­களின் புதை­குழி விபரம் தெரி­ய­வந்­தது.

 

2004 : சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.

 

2005 : எகிப்தில் முதலாவது பல்கட்சி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

 

2011 : ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மாணவிகளுடன் கும்மாளம் போட்ட பிராவோ.! (வீடியோ இணைப்பு)

 

 

 

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் ஆவார். இவர் நேற்று சென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடன் நடனமாடியுள்ளார். 

தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். போட்டிகளை பிரபலப்படுத்த ஆஸ்திரேலியாவின் பிரட் லீ, ஹைடன், வெஸ்ட் இண்டீசின் பிராவோ, கெயில் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் பிரட் லீ மற்றும் ஹைடன் ஆகியோர் வேஷ்டி சட்டையில் வந்து இரசிகர்களை உற்சாக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்
மனசை அலட்டிக் கொள்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல
 
 

article_1473222372-kp%5B.jpg'போன வாரம் நீ பெண் பார்க்கப் போனாயே அவரைப் பிடித்திருந்ததா?' என எனது நண்பர் ஒருவரைக் கேட்டேன். மனத்தாங்கலுடன் 'பெண் அழகாக இல்லை; வேண்டாம் என்று விட்டேன்' என்றார்.

'அதுசரி போன மாதம் நீ பார்க்கப் போன பெண் பிரமாதமான அழகி என்று சொன்னார்களே, அது எப்படியாயிற்று'  என்று திருப்பிக் கேட்டேன்.

அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஊட்டியது. 'இப்படியான அழகிகளை நம்பமுடியாது; அதுதான் வேண்டாம் என்றேன்' என்றார்.

இப்படியாகத் திருப்திப்படாத மனநிலையுடன் வாழ்ந்து, முதுமையைத் தொட்ட பலர் இன்னமும் பெண் தேடும் படலத்தை விடுவதாக இல்லை.

தீர்மானம் எடுக்காமல் குழம்பியபடியே, கண்டபடி மனசை அலட்டிக் கொள்ளுபவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களே அல்லர். கண்டபடி காரணம் சொல்பவர்கள், குட்டிக் கரணக்காரர்களே‚

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14191961_1123355101046516_65332377237610

 
 
இலங்கை அணியின் சகலதுறை நட்சத்திரம் ஃபர்வீஸ் மஹ்ரூப்பின் பிறந்தநாள்
Happy Birthday Farveez Maharoof
  • தொடங்கியவர்
அபூர்வ வெள்ளைத் திமிங்கிலம்
 

அபூர்­வ­மான வெள்ளை திமிங்­கிலக் குட்­டி­யொன்று அவுஸ்­தி­ரே­லிய கரை­யோ­ரத்தில் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஆளில்லா விமா­ன­மொன்றின் (ட்ரோன்) மூலம் பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவில் மேற்­படி வெள்ளை திமிங்­கிலம் காணப்­பட்­டது.

 

19093int.jpg

 

கறுப்பு நிற­மான தனது தாய் மற்றும் கறுப்பு நிற­மான மற்­றொரு குட்­டி­யுடன் இந்த வெள்ளைத் திமிங்­கிலக் குட்டி நீந்­திக்­கொண்­டி­ருந்­தது.

 

19093whale.jpg

 

அவுஸ்­தி­ரே­லி­யாவில் திமிங்­கி­லங்­களை ஆய்வு செய்யும் விஞ்­ஞா­னிகள் குழு­வொன்­றினால் பறக்­க­வி­டப்­பட்ட ட்ரோன் மூலமே இந்த அபூர்வ வெள்ளைத் திமிங்­கிலம் படம் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14212814_1123352367713456_24577175438359

பரபரப்பு, சர்ச்சைகள் தாண்டி, கபாலி கதாநாயகி என்ற பெருமையுடன் வலம் வரும் ராதிகா ஆப்தேயின் பிறந்தநாள்.
Happy Birthday Radhika Apte

  • தொடங்கியவர்

 

 
அமெரிக்காவில் ஒரு சாப்பாட்டு ராமன்
===============================
அமெரிக்காவின் கெலிபோரினியாவில் நடைபெற்ற ஒரு சாப்பாட்டுப்போட்டியில் ஜோயி செஸ்ட்நட் என்பவர் 12 நிமிடங்களில் 188 கோழி இறக்கைகளை சாப்பிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.
  • தொடங்கியவர்
மிஸ்டர் பிலிப்பினாஸ் 2016 போட்டிகள்
 

மிஸ்டர் பிலிப்பினாஸ் 2016 (Misters of Filipinas 2016) ஆணழகர் போட்டிகள் பிலிப்பைன்ஸில் நடைபெறுகின்றன.

 

இப் போட்டிகளில் பங்குபற்றும் போட்டியாளர்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

1909714222257_1468629599830494_731713551

 

1909714199298_1468629673163820_642838631

 

1909714192016_1468688859824568_188800771

 

1909714192677_1468629256497195_502321633

 

190972.jpg

 

190971.jpg

 

1909714212199_1468245239868930_701004409

 

1909714102479_1467362026623918_282047744

 
.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்படியும் ஒரு பெண்..! பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்

 

ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொரு திறமை உள்ளது. ஆனால் அவை வெளிப்படும் சந்தர்ப்பங்கள் மாறுப்பட்டவையாக அமைகின்றன.

அந்தவகையில் உடல் உறுப்பு மற்றும் மூட்டு நன்கொடையை வலியுறுத்தி நிர்வாணமான பெண் ஒருவரின் உடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெயிண்டிங் முறையானது பார்ப்பவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.double-hand-transplant.jpg

மனித உடலில் உள்ள உடல் உறுப்பு மற்றும் திசுக்களை நேரடியாக யாராலும் காண முடியாது. ஆனால் இந்த பெயிண்டிங் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் இயற்கையாக இருப்பது போல் நிறம் தீட்டப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவைச் சேர்ந்த முன்னாள் தொழிலதிபர் கோரின்னே ஹடன் என்ற பெண்ணே இவ்வாறு நிர்வாண முறையில் சாயம் பூசப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.37FCB44900000578-3776915-image-a-7_14732

அதாவது குறித்த பெண் நிமோனியா மற்றும் செப்டிகேமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது கை கால்களை இழந்துள்ளார்.

தனக்கு யாராவது உடலுறுப்புகளை தானம் செய்வார்களா என்ற ஏக்கத்துடன் கடந்து மூன்று ஆண்டுகளாக காத்திருந்த கோரின்னே, உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே, தனது நிர்வாண உடலின் மீது இவ்வாறான பெயிண்டிங் முறையை மேற்கொண்டுள்ளார்.

1FB1993700000578-3776915-image-a-20_14731F20325600000578-3776915-image-m-19_1473

குறித்த காட்சியை புகைப்படமாக்கி தற்போது தேசிய புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறித்த பெண்ணுக்கு பொறுத்தமான உடலுறுப்புகளை தேடும் முயற்சியில் நிபுணர்கள் கமிமிறங்கியுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு திருமணமாகிய ஒரு பிள்ளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.2039416200000578-3776915-image-a-13_1473

http://www.virakesari.lk/article/11071

  • தொடங்கியவர்

14224764_1123353341046692_61315849048873

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கலக்கல் துடுப்பாட்ட வீரர், முன்னாள் தலைவர் ஜோர்ஜ் பெய்லியின் பிறந்தநாள்.
Happy Birthday George Bailey

 
  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் ஆபைற் லொஸ்ட் இல் இருக்கிறீர்களோ? மணிக்கொரு படம் தேடிப் போட்டபடி இருக்கிறீர்கள் ??அருமை தொடருங்கள்

  • தொடங்கியவர்
வேகக் கட்டுப்பாட்டை சாரதிகள் பின்பற்றச் செய்வதற்காக டொப்லெஸ் கோலத்தில் பெண்கள் விழிப்புணர்வு பிரசாரம்
2016-09-07 12:23:03

ரஷ்ய வீதிகளில் அதிவேகமாக வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு சாரதிகளை வலியுறுத்துவதற்காக பெண்கள் சிலர் டொப்லெஸ் கோலத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

19095top1.jpg

 

ரஷ்யாவின் நோவாயா ஸெமில்யா தீவிலுள்ள நகரமொன்றில் அண்மையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாரதிகள் கண்மூடித்தனமாக வேகமாக வாகனங்களை செலுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு பாதசாரிகள் உட்பட பலர் உயிரிழந்த நிலையில் சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர் பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த விநோத பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.

 

அந் நகரிலுள்ள வயோதிப் பெண் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “நாம் வீதியைக் கடப்பதற்கும் சாரதிகள் சிலர் அனுமதிப்பதில்லை. ஒரு சிலர் எம்மை அனுமதித்தாலும் பெரும்பாலானோர் வீதிகளில் பறக்கின்றனர்.

 

19095top3.jpg

 

அவர்களில் சிலர் “ஏன் இங்கு நடக்கிறீர்கள்” என எம்மை திட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். மேற்படி டொப்லெஸ் பிரசார நடவடிக்கையில் பங்குபற்றிய யுவதி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “எமது சாரதிகள் பொதுவாக கிராமங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கூடாக செல்லும் போது வேகத்தை குறைப்பதில்லை.

 

வேகக் கட்டுப்பாட்டுச் சமிக்ஞைகள் காணப்பட்டாலும் அவர்கள் அதை புறக் கணிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். சாரதி ஒருவர் இந்த பிரசார நடவ டிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இப்படியான செயற்பாடுகளை நான் இன்னும் அதிகமாக பார்க்க விரும்புகிறேன்.

19095top2.jpg

 

இம் முறை நான் வேகக்கட்டுப்பாட்டு சமிக்ஞைகளைக் கண்டேன். ஏனைய சாரதிகளுக்கும் இது தொடர்பாக நான் அறிவுறுத்துவேன்” என்றார். இப் பிரசார நடவடிக்கை இடம்பெற்ற நிஸினி நோவ்கோரெட் பிராந்திய பொலிஸ் தலை வர் இகோர் மிகெய்லுஷ்கின் கருத்துத் தெரிவிக்கையில், “வேகக் கட்டுப்பாடு களை சாரதிகள் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக இது போன்ற நடவடிக்கைகளை கடந்த வருடம் நாம் ஏற்பாடு செய்திருந்தோம்.

 

19095top4.jpg

 

ஆனால், இதில் பங்குபற்றுபவர்கள் இந்தப் பெண்களைவிட அதிகமாக ஆடை அணிந்திருக்க வேண்டும்” என்றார். ரஷ்யாவில் வீதி விபத்துகளால் வருடா ந்தம் சுமார் 30,000 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பாதி இந்தியரான பிரியங்கா யொஷிகவா மிஸ் ஜப்பான் அழகுராணியாக தெரிவு
 

19099076708-01-02.jpgமிஸ் வேர்ல்ட் ஜப்பான்  அழகுராணியாக பிரியங்கா யொஷிகவா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

மிஸ் வேர்ல்ட் ஜப்பான் – 2016 அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று நேற்று முன் தினம் திங்கட்கிழமை டோக் கியோ நகரில் நடைபெற்றது.

 

இதில் பிரியங்கா யொஷிகவா முதலிடம் பெற்று மிஸ் வேர்ல்ட் ஜப்பான் – 2016 அழகுராணியாக முடி சூட்டப்பட்டார்.

 

எதிர்வரும் மிஸ் வேர்ல்ட் (உலக அழகு ராணி) போட்டியில் ஜப்பானின் சார்பில் பிரியங்கா யொஷிகவா பங்குபற்றவுள்ளார்.

 

22 வயதான பிரியங்கா யொஷிகவா பாதி இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை ஓர் இந்தியர். தாய் ஜப்பானியர். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பிறந்த பிரியங்கா கிக் பொக்ஸிங் வீராங்கனையுமாவார்.

 

ஜப்பானில் கலப்பினத்தவர்களின் விகிதாசாரம் குறைவு. வருடாந்தம் 2 சதவீதமான குழந்தைகளே கலப்பினக் குழந்தைகளாக பிறக்கின்றன.

 

190991.jpg

பிரியங்கா யொஷிகவா, அரியானா மியாமோட்டா (இடமிருந்து வலமாக)


 

இந்நிலையில் கலப்பினத்தவரான பிரியங்கா யொஷிகவா ஜப்பானிய தேசிய அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டதை அந்நாட்டவர்கள் பலர் விரும்ப வில்லை.

 

பிரியங்காவின் தெரிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித் துள்ளனர். கலப்பினத்தவர்களை ஜப்பானிய மொழியில் 'ஹாஃபூ' (பாதி) எனக் குறிப்பிடுகின்றனர். ஓர் ஹாஃபூவான பிரியங்காவுக்குப் பதிலாக 'தூய்மையான' ஜப்பானிய யுவதி ஒருவர் மிஸ் ஜப்பான் அழகுராணியாக தெரிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் என சிலர் கூறியுள்ளனர்.

 

1909913310355_888278387961099_7983632254

பிரியங்கா யொஷிகவா


 

ஜப்பானிய தேசிய அழகுராணி போட்டியொன்றில் முதலிடம் பெற்ற இரண்டா வது கலப்பினத்தவர் பிரியங்கா யொஷிகவா ஆவார்.

 

கடந்த வருடம் மற்றொரு முக்கிய தேசிய ரீதியான அழகுராணி போட்டியான மிஸ் ஜப்பான் யூனிவர்ஸ் 2015 போட்டியில் ஆபிரிக்க அமெரிக்கரான தந்தை க்கும் ஜப்பானிய தாயாருக்கும் மகளாகப் பிறந்த அரியானா மியாமோட்டா முதலிடம் பெற்றிருந்தார்.

 

1909910516696_535065973282344_3543664061

பிரியங்கா யொஷிகவா


 

அரியானாவின் வெற்றி குறித்தும் ஜப்பானியர்கள் பலர் விமர்சித் திருந்தனர். தனது இளமைக்காலத்தில் தனது நிறம் காரணமாக வகுப்புத் தோழிகளால் வெருட்டலுக்குட்பட்டதாக அரியானா தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தனக்கும் அரியானா மியாமோட்டோ உந்து சக்தியாக இருந்தார் என பிரியங்கா யொஷிகவா தெரிவித்துள்ளார். அரியானா போலவே தானும் நிறம் காரணமாக பாடசாலையில் வெருட்டல் களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

 

190992016_sp1.jpg

 

'அரியானாவுக்கு முன்னர் ஹாஃபூ யுவதிகள் எவரும் சர்வதேச அழகுராணி போட்டிகளில் ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. கலப்பின யுவதிகள் அனைவருக்கும்  அரியானா உந்து சக்தியாக விளங்குகிறார்' என பிரியங்கா யொஷிகவா கூறினார்.

 

'நாங்கள் ஜப்பானியர்கள். ஆம் நான் பாதி இந்தியர். எனது தந்தை ஓர் இந்தியர். என்னில் ஓர் இந்தியர் இருப்பது குறித்து நான் பெருமை யடைகிறேன். ஆனால், இதற்காக நான் ஜப்பானியர் அல்லர் என அர்த்தமாகாது.

 

ஹாஃபூக்கள் (கலப்பினத்தவர்கள்) பலர் துன்பப்படுகிறார்கள் என நான் அறிவேன். எமக்குப் பிரச்சினைகள் உள்ளன. நான் ஜப்பானுக்குத் திரும்பி வந்தபோது என்னை ஒரு கிருமி போல் சிலர் கருதினர்.

 

என்னைத் தொட்டால் தமக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது போல் அவர்கள் செயற் பட்டனர். ஆனால், அதுவே என்னை வலிமை யானவளாக மாற்றியது' எனவும்  பிரியங்கா யொஷிகவா தெரிவித் துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.