Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

14682088_1153855837996442_57827777162352

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் 'இரும்புச் சீமாட்டி' மார்கிரெட் தட்சரின் பிறந்தநாள்.
இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் இவரே...
Happy Birthday Margaret Thatcher

 
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Baum, Pflanze und im Freien
 

*கூறு போடுகிறான்*

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மில்லியன்களை அள்ளும் மைக்கேல் ஜாக்சன்

Micheal Jackson

ஃபோர்ப்சின் 2016 ஆம் ஆண்டுக்கான அதிக வருமானம் பெரும் மறைந்த பிரபலங்கள் பட்டியலில் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தில் உள்ளார். 2000 ஆம் ஆண்டு மறைந்த கடலைமிட்டாய் கண்டுப்பிடிப்பாளர் (Peanuts creator) சார்லஸ் ஷூல்ஸ்சு  48 மில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். 2009 ஆண்டு இறந்த பாப் பாடகர் ஜாக்சனின் இசை ஆல்பங்கள் 825 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம்  ஜாக்சன் எஸ்டேட்டின் 50% பங்குகளை சோனி மியூசிக் பப்ளிஷிங் நிறுவனத்தில் விற்றது தானாம். 

  • தொடங்கியவர்

14670634_1459089857440754_10456580349902

அமெரிக்காவிலே எப்படியெல்லாம் மிரட்டி பிச்சை எடுக்கறாங்க பாத்தியளா?

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 04: எரிமலைகளில் ஒரு சூப்பர் ஸ்டார்!

 
 
 
  • volc_2_3041688g.jpg
     
  • volc_3041686g.jpg
     

“எனக்குள்ள ஒரு எரிமலை உறங்கிக்கிட்டிருக்கு. அதை தட்டி எழுப்பிடாத…” இப்படி வசனம் கேட்டிருக்கிறீர்களா? உண்மையில் எரிமலை உறங்குமா? ஆமாம், சில எரிமலைகள் தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. புவியியல் எரிமலையை மூன்று வகையாக விஞ்ஞானிகள் பிரித்திருக்கிறார்கள். உயிரற்ற எரிமலை, செயல்படும் எரிமலை, உறங்கும் எரிமலை.

நெருப்புடா

உறங்கும் எரிமலைதான் ரொம்பவும் ஆபத்தானது. கோபக்காரரைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது மாதிரி கொந்தளித்துவிடும். அதுபோலவே அது எப்போது வெடிக்கும், எப்படி வெடிக்கும் என்றும் தெரியாது. வெடிக்கும்போது ஊரையே கலங்கடித்துவிடும். உறங்கும் எரிமலைகள் ஒரு காலத்தில் தொடர்ந்து நெருப்புடா என குழம்பைக் கக்கியவைதான். இப்போதுதான் களைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் தூக்கம் கலைந்து எழுந்துவிடலாம். இத்தாலி மற்றும் ஹவாய் தீவுகளுக்குச் சென்றால் இம்மலையின் குறட்டை சத்தம் கேட்கலாம்.

உலகில் சில எரிமலைகள் முன்பு தொடர்ந்து ‘லாவா’ என்னும் எரிமலைக் குழம்பைக் கக்கி வந்திருக்கின்றன. இப்போது அவை நெருப்புக்குழம்பைக் கக்குவதை நிறுத்திவிட்டன. இனிமேலும் அவை வெடிக்க வாய்ப்பில்லை. எனவே இவற்றுக்கு உயிரற்ற எரிமலைகள் என்று செல்லப்பெயர் சூட்டிவிட்டார்கள். ‘கிளிமஞ்சாரோ’எரிமலையும் உயிரற்ற எரிமலைதான்.

துடிப்பான வல்கனோ எனப்படும் செயல்படும் எரிமலைகள் ரொம்ப பிரச்சினைக்குரியவை. குறிப்பிட்ட இடைவெளிகளில் லாவா குழம்பைக் கக்கிக்கொண்டே இருக்கும். அந்தமான் தீவில் உள்ள பாரன் எரிமலைகள் இந்த ரகம்தான்.

மதிப்புமிக்க எரிமலை

எரிமலை வெடிப்பது மிகவும் சுவாரசியமான நிகழ்வு. பூமியைக் குறுக்கு வெட்டாகப் பிரித்தால் மூன்று பெரிய அடுக்குகளைப் பார்க்கலாம். வெளிப்புற அடுக்கு என்பது புவி ஓடு (Mantle). அலுமினியம், சிலிக்கன், மக்னீசியம் போன்றவை இந்த மேல் ஓட்டில் இருக்கும்.

இரண்டாவது அடுக்கு மென் இடை மண்டலம். இது ரொம்ப மதிப்புமிக்க அடுக்கு. இந்த அடுக்கில்தான் இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் பல தனிமங்கள் குவிந்து கிடக்கின்றன. சூப்பர் ஸ்டார்களுக்கு இருப்பது போல இந்த இந்த அடுக்குக்கு எடையும் ஜாஸ்தி; மதிப்பும் ஜாஸ்தி;

volc_3_3041687a.jpg

ஒஜோஸ் டேல் சலாடோ

கருவம்

மூன்றாவது, பூமியின் நடுவில் காணப்படும் ‘கருவம்’. சக்தி வாய்ந்த பகுதி இது. கருவத்தின் வெப்பநிலையைக் கேட்டால் மயக்கமே வந்துவிடும். 5000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகூட இங்கே நிலவும். நம் வீட்டு அடுப்பில் கொதிக்கிற சுடு நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்தான். அது நம் மீது கொட்டிவிட்டாலே நமது தோல் வெந்துபோய் விடுகிறது. 5000 டிகிரி செல்சியஸ் என்றால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது இல்லையா?

இந்தக் கருவத்தில் எந்தத் தனிமத்தையும் திட நிலையில் பார்க்க முடியாது. இங்கு இரும்பும், நிக்கலும் அதிக அளவில் மாட்டிக்கொண்டு திருதிருவென்று முழிக்கின்றன. வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த இரண்டு தனிமங்களும் உருகி, உருக்குலைந்து குழம்புபோலத் தவிக்கின்றன. நிக்கல் குறியீட்டையும் (NI ) இரும்புக் குறியீட்டையும் சேர்த்து (FE) நைஃப் என்று கருவத்துக்குப் பெயர்.

இந்த நெருப்புக் குழம்பின் தொடர்ச்சியாகவே எரிமலைகள் பூமியின் மேற்பரப்பில் நீண்டிருக்கின்றன. வெப்பத்தில் வெடித்து வெளியேறத் துடிக்கும் நெருப்புக் குழம்பு, பூமியன் பலவீன மான பகுதியைப் பிரித்துகொண்டு வெளியே வந்துவிடுகிறது.

பசிபிக் கடலோரப் பகுதியில் இந்த எரிமலைக் கூட்டம் ரவுண்டு கட்டி வெடிக்கிறது. வட்ட வடிவத்தில் பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் அதிகம் காணப்படுவதால் இந்தப் பகுதிக்கு ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ ( பசிபிக் நெருப்பு வளையம்) என்று பெயர்.

பாதிப்பும் பலனும்

இந்தோனேசியாவில் 76 எரிமலைகள் கொதித்துத் ததும்பிக்கொண்டிருக்கின்றன. எரிமலையிலும் சிகரம் உண்டு. சிலி-அர்ஜெண்டினா எல்லைப் பகுதியில் மத்திய ஆண்டீஸ் மலைத் தொடரில் இருக்கும் ‘ஓஜோஸ் டேல் சலாடோ’(ojos del salado ) என்ற எரிமலைதான் உலகின் மிக உயர்ந்த செயல்படும் எரிமலை. இதன் உயரம் 22, 595 அடி. எரிமலை வெடிப்பதால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடு இந்தோனேசியா. எரிமலை வெடிக்கும்போது எழும் சாம்பல் எட்டுத் திக்கும் பரவி நிற்கும். சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பித்துவிடும்.

இப்படித்தான் சுமார் 200 ஆண்டுகளுக்கு (1815-ல்) முன்பு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தபோது சுமார் 150 மைல் தூரம் தூசு பரவிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

எப்போதும் பயமுறுத்தும் எரிமலைகளால் சில நன்மைகளும் உள்ளன. எரிமலை வெடிப்பதால் வெளிவரும் பல்வேறு பொருட்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன. எரிமலைப் படிவுகள் கட்டுமானப் பொருளாகப் உபயோகப்படுத்தப்படுகின்றன. பூமிக்கு அடியிலிருந்து எரிமலை நமக்கு எடுத்து வந்து கொடுத்த பரிசு. எல்லாவற்றையும்விட, எரிமலைகள் பூமிக்கு அடியிலிருந்து நல்ல வளத்தைப் புரட்டியெடுத்து வந்து பூமி மீது பரப்புவதால் பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன.

இது எரிமலையின் சின்ன உதவிதான்; ஆனால், மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான உதவி அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

14666192_1153853527996673_19788868578675

இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தை என்று பெருமைப்படுத்தப்படும் முன்னாள் கல்வியமைச்சர் C.W.W.கன்னங்கர அவர்களின் பிறந்தநாள்.

14671304_1153857034662989_51444896928495

தங்கப் பதக்கங்கள் பலவற்றைக் குவித்துள்ள அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் இயன் தோர்ப்பின் பிறந்த நாள்.
Happy Birthday Ian Thorpe

19 minutes ago, நவீனன் said:

இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தை என்று பெருமைப்படுத்தப்படும் முன்னாள் கல்வியமைச்சர் C.W.W.கன்னங்கர அவர்களின் பிறந்தநாள்.

உங்கள் திரியில் நான் பதிவதற்கு நவீனன் மன்னிக்கவும்

இன்று இதை வாசித்தபோது பதிய இருந்தேன். இதுதான் நல்ல இடம் என்பதால் இப்போது இங்கு பதிகின்றேன். தமிழர்கள் படித்தவர்கள் மற்றவர்கள் மோடர்கள் என்ற மமதையுடன் இருப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

இலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர

z_p05-academically-02.jpg

தென்கிழக்காசிய நாடுகளில் எழுத வாசிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை வீதம் கூடியதாக விளங்கும் நாடு இலங்கையென கடந்த நூற்றாண்டு முதல் பேசப்படுகின்றது. இந்த மகத்தான பெருமை நம் நாட்டுக்கு கிடைப்பதற்குக் காரணம் இங்கு நிலவும் இலவசக் கல்வியென்பதேயாகும். இச்சிறப்பு வாய்ந்த இலவசக் கல்வி தொன்றுதொட்டு வழங்கப்பட்டதன்று. வசதியுடையோர் மாத்திரமே கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற வறுமையில் உழன்ற மக்கள் கல்வியறிவற்றவர்களாகவே வாழ்ந்தனர்.
 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரச நிருவாக சேவைகளுக்கு ஆங்கில அறிவுடையோரின் தேவை கருதியும் பெருந்தோட்ட முகாமைத்துவம் கருதியும் பாடசாலைகள் இயங்கின. இங்கெல்லாம் கிராமிய மக்களோ பெருந்தோட்டத் தொழிலாளர்களோ பெரிய அளவில் பிள்ளைகளை கல்விக்காக அனுப்புவதற்கு வசதியற்றவர்களாயினர்.
 
எனினும் 1931 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா அவர்களினால் இலவசக் கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கல்விப் பொதுவுடைமை மலர்ந்தது. அதன் காரணமாகவே எழுத வாசிக்கத் தெரிந்த மக்கள் அதிகமாக வாழும் நாடென்ற பெருமை இலங்கைக்குக் கிட்டியது.
 
 
நலிவுற்ற பொருளாதார நிலையுடன், போக்குவரத்து வசதி குன்றிய சிரமங்களையும் அனுபவித்து விடாமுயற்சியுடன் கற்று தேர்ந்தவர்களுக்கு கல்வியின் பெறுமதி புலப்படும். கன்னங்கரா அவர்கள் காலி மாவட்டத்தில் பலப்பிட்டிய – ரந்தொம்ப கிராமத்தில் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்து பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து கல்வி கற்றமையினால் தாம் அனுபவித்த சிரமங்களை எதிர்கால சிறார்கள் அடையக்கூடாதெனக் கருதினார். வசதி படைத்தவர்களினால் ஏற்படும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து தமது கனவை நனவாக்கிட தாம் கற்று தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை திடசங்கற்பமாக மேற்கொண்டார்.
 
நாம் ஆபிரகாம் லிங்கனைப் பற்றியும், அம்பேத்கார் பற்றியும் பெருமையடைகிறோம். ஆனால் எமது நாட்டிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தமது சமூகத்தின் எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் வெற்றிகண்டவர்களும் உண்டென்பதை கன்னங்கரா போன்றோரின் வரலாறுகள் மூலம் காண முடிகிறது.
 
தமது சொந்த ஊரின் கிராமத்து பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவுக்கு தென் பிராந்தியத்தின் சிறப்புமிக்க கல்லூரியாகிய ரிச்மண்ட் கல்லூரியின் அதிபராகவிருந்த வண. பிதா ஸ்டோன் டெறல் விசேட அதிதியாக வருகை தந்திருந்தார். மாணவர்களில் அதிகமான பரிசில்களை வாரிச்சென்ற மாணவன் கன்னங்கராவைப் புகழ்ந்து தமது கல்லூரியில் இணைந்துகொள்ள புலமைப் பரிசில் பரீ்ட்சைக்கு இம் மாணவனை தோற்றுமாறு கூறினார். குறிப்பிட்ட புலமைப் பரிசில் பரீ்ட்சையில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்வானான் மாணவன் கன்னங்கரா.
 
பணக்காரர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் ரிச்மண்ட் கல்லூரியில் ஏழைச் சிறுவனாகிய கன்னங்கராவுக்கு எத்தனையோ அவமானங்கள், கேலி கிண்டல்களென வாரியிறைக்கப்பட்டன. அனைத்தையும் பொறுமையுடன் சமாளித்து படிப்பில் அக்கறை செலுத்திய கன்னங்கரா, முதலாம் தவணைப் பரீட்சையில் இலத்தீன் மொழி பாடத்தில் சோபிக்காத காரணத்தினால் கிண்டல்களுக்குள்ளானான். விடாமுயற்சியுடன் படித்து இரண்டாம் தவணைப் பரீ்ட்சையில் மூன்றாம் இடத்தையும் மூன்றாம் தவணைப் பரீட்சையில் முதலாம் இடத்தையும் பெற்றான்.
 
1903ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்குத் தோற்றிய கன்னங்கரா, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளிலேயே அதிக புள்ளிகளைப் பெற்ற முதலாம் மாணவனாக தெரிவானான். இதனால் காலி ரிச்மண்ட் கல்லூரியின் பெருமை உலகளாவிய ரீதியில் பரவியது.
 
காலி ரிச்மண்ட் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக பூர்த்திசெய்த இளைஞனாகிய கன்னங்கரா வித்தியாலய அதிபராகிய பாதிரியாரின் வேண்டுகோளையேற்று அதே கல்லூரியில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டதோடு தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியையும், சட்டக் கல்வியையும் பயின்று சிறப்பாக தேர்வடைந்து 1910 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தொழில் புரிந்தார். இக்காலகட்டத்தில் 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அப்பாவிகளான சிங்கள தலைவர்களுக்காக இலவசமாக வாதாடினார்.
 
வறுமையில் வாடிய மக்களுக்காக பொது அமைப்புகள் மூலம் பணியாற்றியும் ஏழை மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பணிகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த கன்னங்கரா; 1923 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் மூலம் காலி தொகுதியின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு 1931 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் சட்டத்தின் பிரகாரமும் காலி தொகுதியின் உறுப்பினரானார்.
 
இக்காலத்தில் கல்வி அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் கல்வி அமைச்சராக நியமனம் பெற்றார். இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் என்னும் சிறப்பு இதன் மூலம் சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா அவர்களைச் சார்ந்தது. 1947 ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணியாற்றிய போது தமது நீண்ட நாளைய கனவான இலவசக் கல்வியை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமுல்படுத்தி சகல தரத்தினரும், சகல இனத்தினரும் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி இலங்கையின் இலவசக் கல்வியின் பிதாவென போற்றப்பட்டார்.
 
சகல பாடசாலைகளிலும் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட வலியுறுத்தியதோடு இலவச மதிய உணவு திட்டத்தையும் அமுல்படுத்தினார். புத்தகங்களைக் கொண்டு கற்பித்தலோடு பயிற்சி முறையிலான கல்வி முறைகளை பாடசாலைகளில் கடைப்பிடித்தல் அவசியமென நிபந்தனை விதித்தார். கற்றோராகவும் நற்பிரஜைகளாகவும் இலங்கையர் திகழவேண்டுமென அடிக்கடி வலியுறுத்திய அமைச்சர் கன்னங்கரா, மத்திய மகா வித்தியாலய கல்வித் திட்டத்தினைக் கொண்டு வந்ததன் மூலம் நகர்ப்புறங்களுக்கும், வசதியானவர்களுக்கும் மட்டுப்பட்டிருந்த கல்வி வாய்ப்புகளை கிராமப்புறங்களுக்கும் எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டார்.
 
1944 ஆம் ஆண்டு இலங்கை வந்த காலனித்துவ நாடுகளுக்கான செயலாளர் நாயகம் டப்ளிவ். எம். க்ளைட், கன்னங்கரா அவர்களின் பாடசாலை வீட்டுத் தோட்ட திட்டத்தினை வெகுவாக பாராட்டியதோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்ட அனைத்து நாடுகளிலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுத்தார்.
 
1947 ஆம் ஆண்டு தேர்தலில் மத்துகம தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற அவர், 1950 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அகலவத்தை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளூராட்சி அமைச்சரானார். இவரது நிருவாக காலத்திலேயே உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவு அரச நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
1956ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்ற சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா; முழுநேர மக்கள் பணியாளராகவே காலத்தைச் செலவிட்டமையினால் தமக்கென எவ்வித சொத்துக்களையும் தேடிக்கொண்டிருக்கவில்லை. இளமைக் காலத்தில் தாம் அனுபவித்த வறுமையை விட மிக மோசமான ஏழ்மை நிலைக்குள்ளானார். வறுமையின் கோரப்பிடியினால் செய்வதறியாது தவித்த இந்த முன்னாள் அமைச்சர் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். “என்னால் வறுமையைத் தாங்க முடியவில்லை. ஏதாவது உதவி புரியுங்கள்” என்றிருந்தது அந்த கடிதம்.
 
1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசு; கன்னங்கரா அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அவருக்கு ஓய்வுப் பணம் வழங்கியது. ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிச குடியரசின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்து வரும் ஓய்வூதிய நடைமுறை இதன் மூலமே ஆரம்பிக்கப்பட்டது.
 
தமக்கென வாழாது நாட்டு மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இலவசக் கல்வியின் பிதா சி. டப்ளிவ். டப்ளிவ் கன்னங்கரா 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி காலமானர்.
 
  • தொடங்கியவர்

உங்களுக்குப் பிடித்த கின்னஸ் சாதனைகள்!

 

 
balls_3041702f.jpg
 

கின்னஸ் சாதனை என்றாலே தனி மதிப்புதான். உலக அளவில் மெச்சப்படும் சாதனை இது. கின்னஸ் சாதனை படைக்க எந்தக் கட்டுபாடும் இல்லை. எந்த விஷயத்தை வைத்தும் கின்னஸ் சாதனை படைத்துவிடலாம். கின்னஸ் சாதனை புத்தகத்தில் வெளிவரும்போது ஒவ்வொரு சாதனையும் வியப்பாக இருக்கும். கின்னஸ் சாதனையில் பல வகைகள் உள்ளன. குழந்தைகள் விரும்பக்கூடிய சாதனைகள்கூடத் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் குழந்தைகள் பகுதியில் இடம் பிடித்துள்ள சாதனைகள் என்னென்ன? ஒரு ரவுண்டு பார்ப்போமா?

கை நிறைய பந்து

உங்களுடைய ஒரு கையில் எத்தனை டென்னிஸ் பந்துகளை அடைத்து வைத்துக்கொள்ள முடியும்? நான்கு பந்துகளை வைக்கவே திணறிவிடுவோம் இல்லையா? மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த மகாதியோ புஜ்பால் ஒரு கையில் 23 பந்துகளை ஈஸியாக வைத்துக்கொள்கிறார். இந்தச் சாதனையை 2013-ம் ஆண்டில் இவர் செய்தார். கையில் நிறைய பந்துகளை வைத்துக்கொண்டவர் என்ற கின்னஸ் சாதனை இவரது வசமாகியிருக்கிறார்.

 

மெகா ஸ்பூன்

spoon_3041698a.jpg

உலகிலேயே மிகப் பெரிய ஐஸ் கிரீம் ஸ்பூன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த திமிட்ரி பான்சிரா என்பவர் பிரம்மாண்ட ஸ்பூனைக் கொண்டு ஐஸ்கிரீமைப் பரிமாறுகிறார். இந்தச் சாதனை கடந்த ஆண்டு படைக்கப்பட்டது. ஸ்பூனின் நீளம் 1.95 மீட்டர். அகலம் 58 செ.மீ. ஸ்பூனின் ஆழல் 17 செ.மீ. எவ்ளொ பெரிய ஸ்பூன் பாருங்களேன்!

 

மிரட்டும் கொம்பு

kombu_3041700a.jpg

ஆஸ்திரியாவில் லையின்ஸ் என்ற இடத்தில் உள்ள எட்டு வயது ஆடு ஒன்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. எப்படி? அகலமான கொம்பு இந்த ஆட்டுக்கு இருப்பதால் இந்தப் பெருமை. ஆட்டு கொம்பின் ஒரு முனையிலிருந்து இன்னொரு கொம்பின் முனைக்கு உள்ள இடையே உள்ள தூரம் 1.35 மீட்டர். அப்போ எவ்வளவு அகலமான கொம்பு என்று உணர முடிகிறதா?

 

பிரம்மாண்ட கிடார்

guitar_3041701a.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸ் ஸ்டம் என்பவர் மிகப் பெரிய கிடார் ஒன்றைச் செய்திருக்கிறார். அதுவும் வாசிக்கக்கூடிய கிடார் இது. கிடார் 3.99 மீட்டருக்கு நீளமாக உள்ளது. இந்த கிடார் செயல்படும் விதம் கடந்த ஆண்டு மிச்சிகனில் உறுதி செய்யப்பட்டது. வழக்கமான கிடார்களைவிட இது ஏழரை மடங்கு பெரியது.

 

பெண்ணுக்கு மீசை

meesai_3041699a.jpg

இங்கிலாந்தில் வசிக்கிறார் ஹர்னம் கவுர். முழுமையாகத் தாடியுள்ள இளம் பெண் என்ற சாதனைக்காக இவரது பெயர் கின்னஸில் இடம் பிடித்துள்ளது. உடலில் ஏற்பட்ட ஹார்மோன் குறைபாடு காரணமாக 11-வது வயதில் முகத்தில் தாடி, மீசை முளைக்க ஆரம்பித்தது. இப்போது முழுமையாகத் தாடி, மீசையுடன் காணப்படுகிறார் இவர். இந்தச் சோதனையான விஷயம் கின்னஸில் சாதனையாக இடம் பிடித்திருக்கிறது.

 

2017-ம் ஆண்டுக்கான கின்னஸ் புத்தகத்தில் இப்படி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சாதனைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில சாதனைகளைத்தான் இப்போது பார்த்திருக்கிறோம்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

மரத்தையும் இடம் பெயரச் செய்யலாம்.

எப்படி?

இப்படி!

 

Edited by நவீனன்

6 minutes ago, நவீனன் said:

மரத்தையும் இடம் பெயரச் செய்யலாம்.

எப்படி?

இப்படி!

உது பழைய டெக்னீக் 

இப்ப இப்படி. :grin:

 

  • தொடங்கியவர்

நம்மைச் சுற்றி: நோபல் பரிசு எப்படி வந்தது?

 

 
nobel_3041534f.jpg
 

நோபல் பரிசை உருவாக்கியவர் யார் தெரியுமா? அவர் பெயர் ஆல்ஃபிரெட் நோபல் (21.10.1833). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

அவருக்கு வேதியியலாளர், பொறியாளர், ஆயுத உற்பத்தி நிறுவன உரிமையாளர், கண்டுபிடிப்பாளர் எனப் பல முகங்கள். அவரது 355 கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை ராணுவம் தொடர்பானவை.

ஒரு நாள், பிரெஞ்ச் செய்தித் தாள் ஒன்றில் ‘மரண வியாபாரி மரணம்’ என்ற தலைப்பில் நோபல் இறந்துவிட்டதாகத் தவறான செய்தி வந்தது. அதைப் படித்த நோபல் அதிர்ந்தார். உண்மையில், அவரது சகோதரர்தான் இறந்திருந்தார். இந்தச் சம்பவம் அவரைத் தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. மரணத்துக்குப் பின்பு தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவுதான் நோபல் பரிசின் உதயம்.

இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்குப் பரிசு வழங்கத் தனது சொத்தைப் பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதிய நோபல் 63-வது வயதில் இறந்தார். அவரது இறப்புக்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 1901-ல் முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

1905-ல் சுவீடனில் இருந்து நார்வே தனி நாடாகப் பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்குகிறது. 1968-ல் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதாரத் துறைக்கான ஒரு பரிசை ஏற்படுத்தியது. அதன் பின்னர், இனி புதிய பரிசுகளை வழங்குவதில்லை என நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. நோபல் அறக்கட்டளையின் இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய். நோபல் பரிசினை இதுவரை இயற்பியலுக்காக சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வேதியியலுக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) எனும் தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தியாவின் அன்னை தெரசா, மியான்மரின் ஆங் சான் சூச்சி, வங்கதேசத்தின் முகமது யூனுஸ் ஆகியோரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். அதற்குப் பிறகு பாகிஸ்தானின் மலாலாவும் இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் (பொருளாதாரம்) (இருவரும் அமெரிக்கர்கள்). கொலம்பியா நாட்டு அதிபர் யுவான் மன்வேல் சந்தோஸ் (அமைதி), பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜே.தவ்லெஸ், டங்கன் ஹால்டேன் மற்றும் மைக்கேல் காஸ்டர்லிட்ஸ் (இயற்பியல்), ஜப்பானைச் சேர்ந்த யொஷினோரி ஒசுமி (மருத்துவம்), ஜான் பியர் சொவாஜ் (பிரான்ஸ்), ஃப்ரேஸர் ஸ்டாடர்ட் (அமெரிக்கா), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார் ஃபெரிங்கா (வேதியியல்) ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil.thehindu

9 minutes ago, நவீனன் said:

நோபல் பரிசினை இதுவரை இயற்பியலுக்காக சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வேதியியலுக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) எனும் தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தியாவின் அன்னை தெரசா, மியான்மரின் ஆங் சான் சூச்சி, வங்கதேசத்தின் முகமது யூனுஸ் ஆகியோரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். அதற்குப் பிறகு பாகிஸ்தானின் மலாலாவும் இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

இப்படிக்கு 
முதலாவதாக(1913) இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி + இரு நாட்டுக்கான தேசிய கீதத்தை எழுதிய ரபீந்திரநாத் தாகூர்.

  • தொடங்கியவர்
30 minutes ago, ஜீவன் சிவா said:

என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

இப்படிக்கு 
முதலாவதாக(1913) இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி + இரு நாட்டுக்கான தேசிய கீதத்தை எழுதிய ரபீந்திரநாத் தாகூர்.

தகவலுக்கு நன்றி ஜீவன். இந்து மாதிரியான நாளேடுகளே தவறு விடுவதை என்ன சொல்வது.

14 hours ago, ஜீவன் சிவா said:

தப்பு நவீனன்:grin:

100 298

வாழ்த்துக்கள் 
 

 

11 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் நவீனன் ....! அளவில்லாத அளப்பரிய செய்திகள் துணுக்குகள் போன்ற அனைத்தையும் சேகரித்து  சோர்வின்றி தந்தத்துக்கு ....! tw_blush:

ஜீவன், சுவி அண்ணா நன்றிகள்...:)

இந்த திரியை போன வருடம் அக்டோபர் 21 ம் திகதி ஆரம்பித்த போதே எழுதிய ஞாபகம் இது ஒரு பல்சுவை திரி என்று.  ஆதலால் சகல விதமான தகவல்களையும் பகிர்கிறேன்.  எதிர் வரும் காலத்திலும் என்னால் இயன்றதை பகிர்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:grin: நான் இண்டைக்குத்தான்  இந்தப்பக்கம் வந்தேன் .:(

  • தொடங்கியவர்
இவர்கள் மனதில் நல்ல எண்ணம் இல்லை!

 

article_1475729098-kuliuhl.jpgதெருவில் இருவர் ஆக்ரோஷமாகக் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அதனை சுவாரஸ்யமாக ரசித்த வண்ணமிருந்தனர். கூட்டத்தில் இருந்த ஒருசிலர், சண்டையில் பலமாக அடிவாங்கியவரை வெகுவாக மனதில் இரசித்தபடி இருந்தனர். ஏனெனில், அடி வாங்கியவர் இவர்களின் எதிரியாக இருக்கலாம். 

சற்று நேரத்தில் யாரோ ஒருவர் வந்து, சண்டையை விலக்கிவிட எத்தனிக்க, தாக்கிக்கொண்டு இருந்தவர் விலக்குப்பிடிக்க வந்தவரையும் தாக்க, முடிவில் பொலிஸார் வந்து அந்த மூவரையும் அழைத்துச் சென்றனர்.

இந்த அரிய போர்க் காட்சியை, இந்தப் பொலிஸார் கெடுத்து விட்டார்களே என மனதில் நொந்தபடி பார்வையாளர்கள் கூட்டம் கலைந்தது.  

சிலருக்கு சண்டை என்றால் சந்தோசம். தாக்கப்படுவது அவர்கள் அல்லவே! சமூகச் சீர்கேடு, அமைதியின்மை பற்றி ஆராய இவர்களுக்கு மனதில் நல்ல எண்ணம் இல்லை! மன த்தூய்மை தீயோருக்கு கிடையாது!  

  • தொடங்கியவர்

14707012_1155019397880086_68014116050741

அவுஸ்திரேலிய அணியின் புதிய கலக்கல் நாயகன், அதிரடி All Rounder, அசத்தல் களத்தடுப்பு வீரர் - அண்மைக்கால வெற்றி வீரன் க்லென் மக்ஸ்வெல்லின் பிறந்தநாள்.
Happy Birthday Glenn Maxwell

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் - 14

 

1066 : இங்­கி­லாந்தில் “ஹாஸ்டிங்ஸ்" என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் முதலாம் வில்­லி­யமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்­னனைக் கொன்­றன.

 

1322 : ஸ்கொட்­லாந்தின் முதலாம் ரொபேர்ட் புரூஸ், பைலாண்ட் என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் இங்­கி­லாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்­னனைத் தோற்­க­டித்தார். ஸ்கொட்­லாந்தின் சுதந்­தி­ரத்தை எட்வேர்ட் ஏற்றுக் கொண்டார்.

 

828_46524599_arafat_getty_766.jpg1586 : ஸ்கொட்­லாந்தின் அர­சி­யான முதலாம் மேரி, இங்­கி­லாந்தின் முதலாம் எலி­ஸ­பெத்­துக்கு எதி­ராக சதி மேற்­கொண்­ட­தாக குற்றஞ் சாட்­டப்­பட்டார்.

 

1773 : பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னியின் தேயிலைக் கப்பல் அமெ­ரிக்­காவின் மேரி­லாந்தில் எரிக்­கப்­பட்­டது.

 

1884 : புகைப்­பட பிலி­முக்­கான காப்­பு­ரி­மையை அமெ­ரிக்­காவின் ஜோர்ஜ் ஈஸ்ட்மன் பெற்றார். 

 

1888 : Roundhay Garden Scene  என்ற முத­லா­வது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயா­ரித்தார்.

 

1903 : யாழ்ப்­பா­ணத்தின்  எஸ்.எஸ். ஜவ்னா  என்ற பய­ணிகள் கப்பல் நெடுந்­தீ­வுக்கு பய­ணித்­தது.

 

1912 : முன்னாள் அமெ­ரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் விஸ்­கொன்சின் மாநி­லத்தின் மில்­வாக்கி நகரில் வைத்து சுடப்­பட்டார்.

 

1913 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் இடம்­பெற்ற நிலக்­கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1925 : சிரி­யாவின் டமாஸ்கஸ் நகரில் பிரெஞ்­சுக்­கா­ரர்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம் ஆரம்­ப­மா­கியது.

 


1939 : இரண்டாம் உலகப் போர் ஜேர்­ம­னியின் நீர்­மூழ்கிக் கப்பல் பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யி­னரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்­கப்­பலைத் தாக்கி மூழ்­க­டித்­தது. 800 மாலு­மிகள் கொல்­லப்­பட்­டனர்.

 

1943 : போலந்தில் நாசி­களின் "சோபிபோர்" வதை­மு­காமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்­சியை மேற்­கொண்­டதில் 11 நாசிகள் கொல்­லப்­பட்­டனர். முன்­னூ­றுக்கும் அதி­க­மான கைதிகள் சிறையை உடைத்துத் தப்­பினர்.

 

1948 : இலங்­கையின் முத­லா­வது நாடா­ளு­மன்றம் கூடி­யது.

 

1956 : இந்­தியத் தலித் தலைவர் அம்­பேத்கர் தனது 385,000 ஆத­ர­வா­ளர்­க­ளுடன் பௌத்­தத்­திற்கு மதம் மாறினார்.

 

1962 : கியூ­பா­வுக்கு மேல் பறந்த அமெ­ரிக்க விமா­ன­மொன்று சோவியத் யூனியனின் அணு­வா­யுத ஏவு­க­ணை­களைப் படம் பிடித்­தது.

 

1964 : லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்­றி­யத்தின் அதி­ப­ரா­கவும் சோவியத் கம்­யூனிஸ்ட் கட்­சியின் செய­லாளர் நாய­க ­மு­மா­கவும் பத­வி­யேற்றார். நிக்­கிட்டா குருசேவ் பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

 

1964 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசைப் பெற்றார்.

 

1968 : விண்­ணி­லி­ருந்­தான முத­லா­வது நேரடி தொலைக்­காட்சி அஞ்சல் அப்­போலோ 7 விண்­க­லத்தில் இருந்து மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

1968 :  மெக்­ஸி­கோவில் நடந்த ஒலிம்பிக் விழாவின் 100 மீற்றர் போட்­டியில் அமெரிக்­காவின் ஹிம் ஸைன்ஸ் 9.95 விநா­டி­களில் ஓடி சாதனை படைத்தார். 10 விநா­டி­க­ளுக்குள் இத்­தூ­ரத்தை ஓடி முடித்த முதல் நபர் இவ­ராவார். 

 

1973 : தாய்­லாந்தில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஜன­நா­யக ரீதி­யான போராட்­டத்தில் ஈடு­பட்­டதில் 77 பேர் கொல்­லப்­பட்டு 857 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1981: எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத் படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, உப ஜனா­தி­ப­தி­யான ஹொஸ்னி முபாரக், ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார்.

 

1982 : போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரீகன் போர்ப்­பி­ர­க­டனம் செய்தார். 

 

1987 : அமெ­ரிக்­காவின் டெக்ஸாஸ் மாநி­லத்தில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்­தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயி­ருடன் மீட்­கப்­பட்­டது.

 

இந்த மீட்புப் போராட்டம் தொலைக்­காட்­சியில் நேர­டி­யாகக் காண்­பிக்­கப்­பட்­டது.

 

1994 : பலஸ்­தீன தலைவர் யஸீர் அரபாத், இஸ்ரேலியப் பிரதமர் யிட்சாக் ரொபின், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிமோன் பெரஸ் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. 

 

2012 : ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் போம்கார்ட்னர் 39, 068 மீற்றர் உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் முறையில் குதித்து உலக சாதனை படைத்தார்.

metronews.lk/

  • தொடங்கியவர்

அப்துல் கலாமின் நிறைவேறாத அந்த விருப்பம்...!

kalam%20with%20family_10336.jpg

"சிறு வயதில் கிணற்றுக்குள் கல்லைத் தூக்கிப் போட்டார் அந்த சிறுவன். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த அறிவியல் கேள்வியை கேட்ட அந்த சிறுவன் தான், அறிவியல், விஞ்ஞான தொழில்நுட்பத்துக்கான பல தேசிய விருதுகளை பெற்ற அப்துல் கலாம்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் என அப்துல் கலாமுக்கு ஏகப்பட்ட பெருமைகள். நாளைய இந்தியா குறித்து கனவு கண்ட விஞ்ஞான நாயகனின் 85வது பிறந்த நாள் இன்று.

_10426.jpgஅவர் நம்முடன் இல்லாமல் கொண்டாடப்படும் அவரது 2வது பிறந்த நாள் இது. கலாமின் நினைவுகளை அவரது சகோதரர் முத்து முகமது மீரா மரைக்காயரின் மகள் டாக்டர் நசீமா மரைக்காயர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘பால்ய வயதில் இருந்தே குடும்பத்தாரிடம் பாசமும் பரிவும் நிரம்பக் கொண்டிருந்தவர் கலாம் சித்தப்பா. பணியின் காரணமாக அவர் எங்களை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் அத்தகைய சிந்தனையே எங்களுக்கு எழாதவாறு பார்த்து கொண்டவர். அவருக்கு இருந்த உச்சபட்ச பணிகளுக்கு மத்தியிலும் தினம் தோறும் தொலைபேசி மூலம் எங்களை அழைத்து குடும்ப அப்பாவின் நலன் குறித்தும், குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகளையும் தவறாது கேட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தொலைபேசியில் பேசும் போது எனது குரலில் சோர்வு தெரிந்தால், அதற்கான காரணத்தை அறிந்து உரிய ஆலோசனை செய்வார். உலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்று தந்தவர். அத்தகைய பாசமும், நேசமும் கொண்ட சித்தப்பா இன்று எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும் அவர் சொல்லி சென்ற அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் இன்றளவும் எங்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. 'வாழ்வில் இனிப்பை எப்படி சந்தோஷமாக ஏற்று கொள்கிறோமோ அதே போல் கசப்பையும் ஏற்று கொள்ள பழகி கொள்ள வேண்டும்' என அடிக்கடி சொல்வார். அதன் வெளிப்பாடாக அவரது உணவில் பாகற்காய் எப்போதும் இடம் பெற்றிருக்கும்.

டெல்லியில் சித்தப்பா தங்கியிருக்கும் போது அவரது வீட்டு தோட்டத்தில் அமைந்துள்ள ‘அர்ச்சுனா’ என்ற மரத்தின் நிழலில் தனது சகோதரருடன் அமர்ந்து கொண்டு தங்கள் இளமை காலத்தை பகிர்ந்து கொள்வது சித்தப்பாவிற்கு அளவிலா ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்தப்பாவின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி உற்சாகத்துடன் துவங்கும்.kalaam%20brother_10278.jpg

தனது பிறந்த நாளில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் காலை எட்டு மணிக்குள் தனது சகோதரர் மரைக்காயரை போனில் தொடர்பு கொண்டு ஆசி பெறுவதுடன், தனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ளவும் சொல்வார். அதன்படி அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்திய பின் சித்தப்பா கலாம் விரும்பி உண்ணும் பாசி பருப்பு லட்டு செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வோம். அவரது நண்பர்கள் டாக்டர் விஜயராகவன், சம்பத் குமார் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் ராமேஸ்வரத்திற்கு வந்து சித்தப்பா கலாம் படித்த பள்ளி குழந்தைகள் மத்தியில் இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.

உலகமெல்லாம் அவரது பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருக்க அவரோ தனது சகோதரரின் 100வது பிறந்த நாளை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்பது குறித்தே எங்களிடத்தில் விவாதித்து கொண்டிருந்தார். வரும் நவம்பர் 5ம் தேதி எங்கள் தந்தை முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100வது பிறந்த நாள். அன்றைய தினம் அவருக்கு பிறந்த தின பரிசாக விலை உயர்ந்த அக்தர் பாட்டிகள் அடங்கிய பேழையை கொடுக்க சித்தப்பா நினைத்திருந்தார்.

gift%20with_10565.jpg

gift%20with%20kalam_10274.jpgசுற்றுப்பயணங்களின் போது சித்தப்பாவிற்கு வழங்கப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களை விட ராஜஸ்தான் சென்றிருந்த போது வாங்கி வந்திருந்த இந்த அக்தர் பேழையைதான் சிறந்ததாக கருதினார். அதனால்தான் விலை மதிப்பில்லா அந்த பொருட்களை எல்லாம் அரசிடமே கொடுத்து விட்டு இந்த அக்தர் பேழையை மட்டுமே சொந்தமாக வைத்திருந்தார். சகோதருக்கு பரிசளிப்பதற்காக தனது வீட்டில் பாதுகாத்து வைத்திருந்த அந்த பேழையினை தினந்தோறும் எடுத்து பார்த்து மகிழ்ந்தவர் தனது சகோதரரின் நூறாவது பிறந்த நாளுக்காக காத்திருந்தார்.

ஆனால் சித்தப்பாவின் அந்த பெரும் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. உலகையே கனவு காண சொன்னவரின் நிறைவேறாத கனவை நிறைவேற்ற எங்கள் தந்தையின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதுடன், சித்தப்பா வாங்கி வைத்திருந்த அந்த அக்தர் பேழையை எங்கள் தந்தையின் கைகளில் பரிசளித்து மகிழ்விக்க சித்தப்பாவின் பிறந்த தினமான இன்று முடிவு எடுத்து உள்ளோம்’’ என்றார். எளிமை என்றால் என்ன என்பதை எத்தனையோ விதங்களில் அறிஞர்கள் பலர் விளக்க முயன்றிருக்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் சிலர் தான். அதில் மிக முக்கியமானவராக இருக்கிறார் அப்துல் கலாம். கலாமை போற்றுவோம்.

vikatan

  • தொடங்கியவர்

முட்டை எடு... கொண்டாடு! ஏன்?

 

shutterstock_156179930.jpg

`முட்டை சைவமா, அசைவமா?’ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிச் சொல்லி, இன்னும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது போகட்டும்! உண்மையில், முட்டை சகல வல்லமை படைத்த ஓர் உணவு என்பது மட்டும் மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கும் உண்மை. முட்டை மட்டும் இல்லை என்றால், உலகில் எத்தனையோ லட்சம் அடித்தட்டு மக்களுக்கு உணவில் ஊட்டச்சத்து என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். மிகக் குறைந்த விலையில் அதிகப் புரதச் சத்து கொண்ட உணவு, முட்டை! பல நூற்றாண்டுகளாக, உலகம் முழுக்க இருக்கும் மக்கள் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். உலக அளவில் ‘சூப்பர் உணவு’ என வகைப்படுத்தப்பட்ட உணவுகளில் முட்டையும் ஒன்று. மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கு, ஞாபகசக்தி மேம்பட, நோய் எதிர்ப்புச் சக்திக்கு, பார்வைத்திறனுக்கு... என பலவிதங்களில் முட்டை உதவுகிறது எனப் பட்டியலிடுகிறார்கள் மருத்துவர்கள்.  

 

முட்டையின் நன்மைகளைப் பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும், மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உலகில் உள்ள பல நாடுகளில் விதவிதமான முட்டை உணவு வகைகளை ரசித்துச் செய்து, ருசித்துக் கொண்டாடுகிறார்கள். 

 

மனிதர்கள் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் இருந்து, இன்றைய நவீன காலம் வரை, பறவைகளின் முட்டையை உணவாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிடப்பட வேண்டியது கோழி. காட்டில் வாழ்ந்த கோழியைக் கண்டெடுத்த மனிதன், வீட்டுக்குக் கொண்டுவந்தான்; வளர்த்தான். கி.மு.8-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் முட்டைப் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததாகச் சொல்கிறது வரலாறு. பண்டைய எகிப்திய நகரங்களில் ஒன்று தேப்ஸ் (Thebes). அங்கிருக்கும் கல்லறை ஒன்று கி.மு.1420-ல் கட்டப்பட்டதாகும். அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில், மனிதன் ஒருவன் ஒரு கிண்ணம் நிறைய நெருப்புக்கோழி முட்டைகளைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது போன்ற காட்சி இருக்கிறது. பண்டைய ரோமில், முட்டைகளைப் பாதுகாப்பதற்காகவே விதவிதமான வழிமுறைகளைக் கையாண்டார்கள். பண்டைய ரோமானியர்கள் பில்லி, சூனியம், பேய் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். பேய் எதுவும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய தட்டில், முட்டை ஓடுகளை நொறுக்கி வைப்பார்களாம். இடைக்காலத்தில் முட்டையை ஐரோப்பாவில் தடை செய்ததாகச் சொல்கிறது வரலாறு. இப்படித் தோண்டத் தோண்ட முட்டை குறித்த சுவாரஸ்யங்கள் உருண்டு உருண்டு வருகின்றன. 

 

உலக அளவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது கோழி மற்றும் வாத்து முட்டைகளே! ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் சிறிய அளவில் இருக்கும் கௌதாரி முட்டைகளைப் (Quail Eggs) பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. ஜப்பான் சமையல் முறையில், கௌதாரி முட்டையைப் பச்சையாகவே பயன்படுத்துவதும் உண்டாம். பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, ஜப்பான், சீனா, இந்தியா... என எந்தச் சமையல் முறையாக இருந்தாலும் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு.  

 

261340.jpg

முட்டை... சில தகவல்கள்! 

 

*  புரதச்சத்து நிறைந்த, எல்லோராலும் வாங்கி உண்ணக்கூடிய ஒரு பொருள்.

 

*  இயற்கையாகவே நமக்கு வைட்டமின் டி-யைத் தரும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று. 

 

*  கோழி எந்தவிதமான டயட்டில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் மஞ்சள் கருவின்  அடர்த்தியும் நிறமும் அமையும். 

 

*  ஒரு பெரிய முட்டையில் 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளன. 

 

*  கோழி ஒன்று வருடத்துக்கு 300-ல் இருந்து 325 முட்டைகளை இடும்.  

 

*  உடலில் உள்ள  திசுக்களின் கட்டமைப்புக்குத்  தேவையான அமினோ அமிலங்கள் முட்டையின் புரதத்தில் சரியான கலவையில் அமைந்திருக்கின்றன. 

 

*  மனிதர்களின் ஊட்டச்சத்து தேவைக்கு தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை மட்டுமே!

 

*  முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்... கோலின், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச்சத்து, லூட்டின் மற்றும் ஜீக்ஸாந்தின் (Zeaxanthin), புரதம், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் 12, வைட்டமின் பி 2 (ரிபோஃப்ளோவின்), வைட்டமின் பி 5, வைட்டமின் டி, வைட்டமின் இ. அம்மாடி இவ்வலவு சத்துக்களா!

 

*  முட்டையைப் பச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில், சில கிருமித் தொற்றுகள் இருக்கலாம். எனவே, வெந்நீரில் சில நிமிடங்கள் முட்டையை வேக வைத்து  கொடுக்கலாம். அதனுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொடுப்பது மிகவும் நல்லது.

 

*   சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைப் பகுதியை மட்டும் ஒரு நாளுக்கு ஒன்று என எடுத்துக்கொள்ளலாம். 

 

*சிறுநீரகப் பிரச்னை உடையவர்கள் முட்டைப் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. அவர்களுக்குப் புரதத்தின் அளவு அதிகமாகி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாகிவிடும்!

 

உலகிலேயே மிக வேகமாக ஆம்லெட் சுட்டு, ‘ஆம்லெட் கிங்’ எனப் பட்டம் பெற்றவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்டு ஹெல்மர். இவர் ஒரே அடுப்பில் 30 நிமிடங்களில் சுட்டெடுத்த டபுள் ஆம்லெட் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 427. இதுவரை மூன்று கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார் ஹெல்மர். அப்படிப் போடு ஆம்லெட்டை! 

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை ‘உலக முட்டை தின’மாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஹேப்பி ஆம்லெட் டே 

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முடடைகள் தினத்தைக் கொண்டாட எனக்கும் தார்மீகக் கடமை உள்ளது....! நிறைய முட்டைகள் வாங்கி மட்டைகளால் அடியும் வாங்கியிருக்கின்றேன் ....!  tw_blush:

  • தொடங்கியவர்

14753906_1155015734547119_57642391447717

அண்மையில் ஓய்வுபெற்ற, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் , சகலதுறை வீரர்களில் ஒருவருமான 'DILSCOOP' புகழ் திலகரட்ன டில்ஷானின் பிறந்தநாள்.
Happy Birthday TM Dilshan

இலங்கை கிரிக்கெட்டின் நிரப்பப்பட முடியாத வெற்றிடங்களில் ஒருவராக டில்ஷான் இருக்கப்போகிறார்.

 
  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Text
 

உலகத் தர நிர்ணய நாள்! #World standard day

1969 -ம் ஆண்டு அக்டோபர் 14 அன்று உலகத் தர நிர்ணய நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாள் ஏன்?எதற்கு? என்று பார்ப்போம்.
தர நிர்ணய நாள் எதற்கு?

உலகத் தர நிர்ணய. நாள் என்பது சீர்திருத்தத்துக்கான அனைத்துலக நிறுவனம்(ISO), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C) , அனைத்துலக தொலைத் தொடர்பு ஒன்றியம்(I.D.U) ஆகிய நிறுவணங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்கள உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்திருத்தத்தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வழியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.இ.சி.,ஐ.எஸ்.ஓ. மற்றும் ஐ.டி.யூ. எனும் மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து 1969-ம் ஆண்டு முதல் அக்டோபர் 14-ம் தேதியை 'உலக தர நிர்ணய நாள்’-ஆக அணுசரித்து சந்தைகளை உருவாக்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும் சான்றளிப்பதிலும் இந்திய தர நிர்ணய அமைப்பு(Bureau of Indian standards) ஈடுபட்டுள்ளது. ISO-வில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்பு இது ஆகும்.

vikatan

  • தொடங்கியவர்
10 hours ago, நந்தன் said:

:grin: நான் இண்டைக்குத்தான்  இந்தப்பக்கம் வந்தேன் .:(

ஆஆஆ என்ன? சும்மா சொல்ல கூடாது ஜி..:grin:

நீங்கள் இந்த திரியில் ஒரே நாளில் 3 பச்சை போட்டீர்களே..tw_blush: இந்த திரியில் 16ம் பக்கத்தில் இருக்கு...:rolleyes:

 

  • தொடங்கியவர்

தினுசு தினுசா விளையாட்டு: கொல கொலயா முந்திரிக்கா..!

 

 
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

போன வாரம் சொன்ன ‘கிச்சு கிச்சு தாம்பூலம்…’ விளையாட்டை விளையாடிப் பார்த்தீர்களா? இந்த வாரம் நாம் விளையாடப் போகும் விளையாட்டின் பெயரென்ன தெரியுமா? “கொல கொலயா முந்திரிக்கா..!”

எத்தனை பேர்?

இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாக் குழந்தைகளும் ஜாலியாக விளையாடலாம்.

விளையாடுவது எப்படி?

இந்த விளையாட்டிலே இடையிடையே பாடல் வரும். இந்தப் பாடல் ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பாடுவார்கள். உங்கள் ஊரில் வேறுவிதமாகப் பாடியிருந்தால், அதன்படி பாடி விளையாடுங்கள், சரியா?

# முதலில் ஒருவரைக் குழுத் தலைவராக முடிவு செய்துகொள்ள வேண்டும்.

# மீதமுள்ள எல்லாரும் வட்டமாக உட்கார்ந்துக்கொள்ள வேண்டும்.

# குழுத் தலைவர் கையிலே துண்டு துணி ஒன்றை எடுத்துக்கொண்டு, இந்த வட்டத்தைச் சுத்தி கொஞ்சம் வேகமா நடந்துக்கிட்டே முதலடியைப் பாட வேண்டும்.

“கொல கொலயா முந்திரிக்கா..!” என்று பாட, வட்டத்திலே உள்ள மற்ற குழந்தைகள், “கொலஞ்சுப் போச்சு கத்திரிக்கா..!” என்று பாடுவார்கள்.

திரும்பக் குழுத் தலைவர், “கொல கொலயா முந்திரிக்கா..!”ன்னு பாட, எல்லாரும் சேர்ந்து, “நரிய நரிய சுத்திவா..!” என்று பாட வேண்டும்.

உடனே, திரும்பவும், “வீட்டு மேலே ஏறுவேன்..!” என்று குழுத் தலைவர் சொல்ல, “ஈட்டியால குத்துவேன்..!” என்று மற்றக் குழந்தைகள் பாட வேண்டும். அடுத்து, “பச்சரிய தின்பேன்..!” என்று சொல்ல, “பல்லை உடைப்பேன்..!” என்று பாட வேண்டும்.

இப்படிச் சொன்னவுடனே குழுத் தலைவர் மீண்டும், “கொல கொலயா முந்திரிக்கா..!” என்று முதல் அடியைப் பாடுவார். உடனே, “நரிய நரிய சுத்தி வா..!” என்று மற்றக் குழந்தைகள் பாட வேண்டும்.

அடுத்து, “கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்..?” என்று குழுத் தலைவர் கேட்க, எல்லாரும், “கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!”ன்னு ஒரே குரலில் சொல்வார்கள்.

பாட்டுப் பாடிக்கொண்டே குழுத் தலைவர் வட்டத்தைச் சுற்றி ஓடிக்கொண்டே, கையில வைத்திருந்த துண்டுத் துணியைக் கீழே உட்கார்ந்திருக்கும் யார் பின்னாடியாவது தெரியாமல் போட்டுவிட்டு, திரும்பவும் சுற்றி வருவார்.

குழுத் தலைவர் கையிலே துணி இல்லாததைப் பார்த்துவிட்டு, யார் பின்னால் துணி இருக்கிறதோ, அவர் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு குழுத் தலைவரைத் துரத்திக்கொண்டு போக வேண்டும். துணியால் முதுகில் அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் அவர் ‘அவுட்’. குழுத் தலைவர் வேகமாக ஓடிவந்து, யார் பின்னால் துண்டைப் போட்டாரோ, அவரோட இடத்திலே வந்து உட்கார்ந்துவிட்டால், துண்டைக் கையில் வைத்திருப்பவர் ‘அவுட்.’

ஒருவேளை, துண்டு பின்னால் இருப்பதை உட்கார்ந்திருப்பவர் கவனிக்கவில்லையென்றால், பக்கத்திலே உட்கார்ந்திருப்பவர் சைகையாலேயே சொல்வார்கள். அப்படியும் சொல்வதைக் கவனிக்காமல் இருந்தால், குழுத் தலைவர் வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, பின்னால போட்ட துண்டை எடுப்பார். கவனிக்காமல் உட்கார்ந்திருப்பவர் முதுகில் ஒரு போடு போடுவார். உட்கார்ந்திருப்பவர் இப்போது எழுந்து, குழுத் தலைவரை விரட்டிப் பிடிக்க வேண்டும். இதுல ‘அவுட்’ ஆனவர் யாரோ, அவர் பாட்டுப் பாடிக்கொண்டே விளையாட்டைத் திரும்பவும் விளையாட வேண்டும்.

விளையாட்டைத் தொடங்கலாமா? எங்கே சொல்லுங்க… “கொல கொலயா முந்திரிக்கா..!”

(இன்னும் விளையாடலாம்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

14712561_1155042677877758_18184830585703

பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலின் பிறந்தநாள்.

அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக விளங்கிய அஜ்மலின் பந்துவீச்சுப்பாணி சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று மாற்றப்பட்ட பின்னர் இப்போது வலிமையிழந்து, அணியில் இடம்பெற முடியாமல் இருக்கிறார்.
Happy Birthday Saeed Ajmal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.