Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஒற்றை கை... இன்னொரு கை நம்பிக்'கை' !(வீடியோ)

சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருபவர் ரவி. ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்துள்ளார். எனினும் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல், தன்னம்பிக்கையுடன்  ஒற்றைக் கையுடன் ரிக்‌ஷா இழுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Screenshot%2018_zpstvegrfqe.png

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் காந்தியின் கடைசி 10 வருடங்களில் எடுக்கப்பட்ட சில அபூர்வ புகைப்படங்கள்

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

** சொல்வனம் **

பறக்க இயலாத பறவை

எல்.கே.ஜி வகுப்பில் இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும்
தமிழ்ப் பாட நேரம் துவங்கும் என ஆசிரியை அறிவித்தவுடனே
ஆங்கிலப் புத்தகத்தில் இருந்த சித்திரங்கள்
தமிழ்ப் புத்தகத்துக்குத் தாவுகின்றன யாரும் அறியா வண்ணம்.

ஜீப்ரா வரிக்குதிரை என்றும் ஜிராஃபி ஒட்டகச்சிவிங்கி என்றும்
பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொண்டு இடம்பெயர
அவற்றைத் தொடருகிறது ஒரு பெருங்கூட்டம்.

லோட்டஸ் என்றழைக்கப்படும் தாமரை, ரோஸ் எனப்படும் ரோஜா
ராபிட்(எ) முயல், பேரட்(எ) கிளி, டக்(எ) வாத்து,
யானை, மீன், மயில், ஆடு, பந்து..... என நீள்கிறது வரிசை
எங்கே இருந்தாலும் ஒரே மாதிரி முழி இந்த ஆந்தைக்கு.

எப்போதும் குழந்தைகளுடன் இருப்பதற்கான யுக்தி தெரியாமல்
எம்பி எம்பிக் குதித்தபடி தவிக்கிற பெங்குவினுக்கு
தேவை ஒரு தமிழ்ப் பெயர்!

12524213_1053408104717979_26367711217945

vikatan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

 

கீழாடைக்கு விடைகொடுத்தது வியன்னா: உள்ளாடையில் ஒரு உல்லாச ஊர்வலம்
=======================
கீழாடை அணியாமல் உள்ளாடை ஊர்வலமாக சுரங்க ரயிலில் செல்லும் வருடாந்த நாளை வியன்னா வாசிகள் விமரிசையாகக் கொண்டாடினார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கில் தொடங்கிய வழக்கம் இது.

வெள்ளைக்காரன் வருசத்திலை ஒருநாளைக்கு கோவணத்தோடை போனால் நாகரீகம்....நாங்களும் எங்கடை முன்னோர்களும்  வாழ்க்கை முழுக்க கோவணத்தோடை திரிஞ்சால் நக்கலும்...பட்டிக்காட்டான் எண்ட பட்டமும் தருவினம்.:cool:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 12

 

64232.jpg1528 : சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினார்.

 

1539 : புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ள்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

 

1853 : தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.

 

1875 : சீனாவின் மன்னனாக குவாங்-சூ முடி சூடினார்.

 

1908 : முதல் தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

 

1915 : அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

 

1918 : பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.

 

1964 : ஸான்ஸிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து ஸான்சிசிபாரை குடியரசாக அறிவித்தனர்.

 

1967 : நடிகர் எம். ஆர். ராதா,  நடிகர் எம். ஜி. ராமச்சந்திரனை (எம்.ஜி.ஆர்.) துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.

 

1970 : நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

 

1976 : பலஸ்தீன விடுதலை இயக்கம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை 11:1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.

 

1992 : மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்காக, பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

 

2004 : உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான ஆர்.எம்.எஸ். குயீன் மேரி 2 தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.

 

 2006 : சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி  362 பேர் உயிரிழந்தனர்.

 

2006 : 25 ஆண்டுகளுக்கு முன்னர், பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

2010 : ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 316,000 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : கெமரூனில் அந்நாட்டு அரச படையினருடனான மோதலில் போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 140 பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=642#sthash.8xWLZcsY.dpuf
  • தொடங்கியவர்

12508905_969562939759067_912633215248768

இந்து சமய எழுச்சிக்கு இருபதாம் நூற்றாண்டில் வித்திட்ட ஆன்மீகத் துறவி, இளைஞரை சரியான இலக்கில் இட்டு நடத்திய பெருமைக்குரிய சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினம்.

விவேகானந்தர் வாழ்க்கை கூறும் தன்னம்பிக்கை பாடம்!

 

பிறப்பு

viveka_VC1.jpgகோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். பெற்றோர் அவருக்கு நரேந்திரன் என பெயர் இட்டனர்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் தாயார் ராமாயண, மகாபாரத கதைகளைச் சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திரர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரைச் சுய நினைவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

விவேகானந்தர் பெயர் மாற்றம்

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களைக் கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

சிகாகோவில் சொற்பொழிவுக்கு வாய்ப்பு

அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்குச் சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மை விட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

மற்றவர்களெல்லாம் அங்கு வந்திருந்தவர்களை “லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் “டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்’ என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

பெண்களையெல்லாம் தாயாக கருதியவர்

செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதப்பற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

vivakanandan6.jpg



அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்குப் பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலைக் கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!

சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்ற வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வது வழக்கம் அப்படியாக ஒருமுறை அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன.

ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன.

இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை.

vivakanandan8.jpg



இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான்.

சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன.

விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள்.

அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார்.

கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை.  

கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. மற்றவை எல்லாம் வெறும் குப்பை,” என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள “கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி’ போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

vivakanandan10.jpg



குருவின் சமரசப் பார்வையும் காளியின் தரிசனமும்

குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.””நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,” என்றார் விவேகானந்தர்.””கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,’ ‘ என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.””அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?” என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,””இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!” என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,” என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.

அனைவரும் தெய்வத்தின் அம்சமே

ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது. அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.””இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,” என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர்.

வீர வெற்றி கனி

அலைகள் கொதித்தெழும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அதன் நினைவாகவே இன்று அவரது பெருமையை உலகம் பாரட்டுகிறது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும்.
vikatan.com

 

  • தொடங்கியவர்

ஜனவரி 12: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள்...

 

லேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.

‘ எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா.

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 49 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதாmgr-radha.jpg நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 1967-ம் ஆண்டு,  ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

" என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' என விளக்கினார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு,  நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்துவரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், ‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். ‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, ‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. இதுதவிர, காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும் ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. வழக்கு விசாரணையில், எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. எம்.ஆர்.ராதா லைசென்ஸ் mgr.jpgஇல்லாத துப்பாக்கியால் சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, ' யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார் என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?' எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,  ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. " ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், " ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, " அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், மை லார்டுன்னு சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.

துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 'பெரியாருடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். அப்போதுகூட,' உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

.vikatan.com

  • தொடங்கியவர்

12494887_969563169759044_448112200138209

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான ரிச்சி ரிச்சர்ட்சனின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

1916942_665528503549695_8135149371713999

12552670_665528496883029_723897552675702

12400898_665528500216362_794390171012749

6439_665528526883026_3514689750400391822

தண்ணீரில் மீன்களைத்தான் பிடிப்பார்கள். ஆனால், ஆம்ஸ்ரடாமில் சைக்கிள்களைப் பிடித்துகொண்டிருக்கிறார்கள். இங்கு சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். பயன்படுத்திய சைக்கிள்களை நகரவாசிகள் சத்தமில்லாமல் அங்கு ஓடும் கால்வாயில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். இந்தப் பழக்கம் ஏன் என்று புரியாத புதிராகவே உள்ளது.
கால்வாயைச் சுத்தம் செய்வதற்காகவே Waternet என்ற ஏஜென்சியை நியமித்துள்ளது, ஆம்ஸ்ரடாம் நகர நிர்வாகம்.

.vikatan

  • தொடங்கியவர்

 

பிச்சைக்காரன் படத்தில் ஒரு பாடல்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கட்டை விரல் ரேகையால் தேசியக்கொடிகளை வரைந்து கின்னஸ் சாதனை

12509211_1240316369318105_57554001918299

 

  • தொடங்கியவர்

 

பனிக்கட்டிச் சிற்பமாக மாறிய கார்
====================
காலையில் வெளியே கிளம்பும் அவசரத்தில் காரை சீக்கிரமாக ஸ்டார்ட் செய்யச் செல்லும் நீங்கள், காரை நிறுத்திய இடத்தில் ஒரு பனிக்கட்டிச் சிற்பத்தைக் கண்டால் என்ன செய்வீர்கள்?

அப்படியான அனுபவம்தான் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபலோ (Baffalo) நகரவாசிகளுக்கு நிஜமாகவே ஏற்பட்டது.

ஆமாம் அவர்களது கார்களை பல அங்குலங்கள் அடர்த்தியான பனி போர்த்திவிட்டது.

நியூயார்க் மாகாணத்தில் மிகக் கடுமையான குளிர் நிலவிவருகிறது.

BBC

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு இருப்பது இந்த பிரச்னையாக இருக்கலாம்!

 

ரு நபர் அதிக நேரம் ஷாப்பிங் செய்தால் அவரை ''ஷாப்போஹாலிக்'' என்கின்றனர். அதேபோல் ஒருவர் அதிக நேரத்தை பணி செய்யும் இடத்தில் செலவழித்தால் அவர்களை ''வொர்க்கஹாலிக்'' என்று கூறுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இவர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து பார்ப்போம்...

Workaholic.jpg 


யார் 'வொர்க்கஹாலிக்'?
 
அதிக நேரம் பணிபுரிபவர் என்ற அடிப்படையில் இவர்களை கருதும்போது, தன் வேலையை முடிக்க இயலாமல், அதிக நேரம் வேலைபார்ப்பவர்களை வொர்க்கஹாலிக் என்று கூற முடியாது. வேலை முடிந்த பிறகும், அதிக நேரம் வேறு வேலைகளையோ அல்லது மற்றவர் வேலைகளையோ தானாக முன்வந்து வாங்கி செய்பவர்கள்தான் வொர்க்கஹாலிக் மனிதர்கள்.
 
வொர்க்கஹாலிக் நபரை அடையாளம் காண உதவும் 10 பண்புகள்:
 
1. காலையில் முதல் ஆளாக வேலைக்கு வந்துவிட்டு கடைசி ஆளாக வேலையை விட்டு செல்லும் பழக்கம்கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இவர்களை பார்க்க முடியும்.
 
2. இவர்கள்  வேலை இல்லாத நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். வேலையின் காரணமாக ஏற்பட்ட அழுத்தம் அவர்களிடம் தொடர்ந்து காணப்படும்.
 
3. விடுமுறை நாட்களில் அலுவலகத்துக்கு வந்து பணிகளை முடிப்பதிலோ அல்லது அவசரமாக முடிக்க வேண்டிய அலுவலக பணிகளிலோ இவர்களை பார்க்க முடியும்.

 

workaholic%20%281%29.jpg


 4. இவர்களை குறுகிய இலக்குகளை அடைய செய்து திருப்தி படுத்த முடியாது. எப்போதும் இலக்குகளை மட்டுமே யோசிப்பவராக இருப்பார். இது சில சமயங்களில் சொதப்பலாகவும் முடியும், நான்கு வேலைகளை ஒரே நேரத்தில் எடுத்து, அதனை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவார்.
 
5. பர்சனல் வேலைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கும் இவர்களில் பெரும்பாலானோர் குடும்ப நிகழ்ச்சிகளை பெரிதும் மிஸ் செய்பவர்களாகவே  காணப்படுவார்கள்.
 
6. முடியாது என்ற பதிலை இவர்களிடம் எதிர்பார்ப்பது முடியாத காரியம். இதனால் சில முடியாத விஷயங்களை செய்ய இவர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.

48164256.png


7.உடல்நலக்குறைவாக இருந்தாலும் வேலைக்கு வருவதில் இருந்து தவறமாட்டார்கள். இவர்களிடமிருந்து வாங்க கூடிய வேலைகள் என்பது சராசரி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.
 
8. குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் இவர்கள் பெயரில் இடம்பெறுவது வழக்கமான விஷயமாக இருக்கும்.

.vikatan.com
 
9. இவர்கள் எளிமையாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களிடமிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் நபராக இருப்பதுதான் அந்த தன்மைக்கு காரணம்.

10. இவர்கள் இன்ஸோம்னியா போன்ற பிரச்னைகளை சந்திப்பவராக காணப்படுவர்.
 
ஏன் இப்படி செய்கிறார்கள்?

இவர்கள் பார்க்கும் வேலையை இவர்கள் வேலையாக பார்க்காததே முதல் காரணம். இவர்களை பொறுத்த வரையில் வேலை என்பது இவர்களுக்கு விரும்பி செய்யும் பழக்கவழக்கமாக இருப்பதுதான் காரணம். பிடித்த துறையில் வேலை கிடைத்திருப்பவர்கள் மட்டுமே வொர்க்கஹாலிக்காக இருக்க முடியும். அப்படி வேலை கிடைத்தால் வொர்க்கஹாலிக் நபர்களின் வேலை சராசரியை காட்டிலும் அதிகமாக இருக்கும்.

are-you-a-workaholic-quiz.jpg 


ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்துக்கு உதவும் வொர்க்கஹாலிக் முறை:

ஸ்டார்ட் - அப் கலாச்சாரம் வளர்ந்து வரும் வேளையில், இந்த கலாச்சாரத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் குடும்ப சூழலில் உள்ளவர்களுக்கு இது சரியானதாக இருக்காது. ஸ்டார்ட்-அப், யூத்களுக்கு  பொருத்தமானது என்ற தகவலையும் ஆய்வு அளிக்கிறது.

இது சரியா?
 
சில சமயங்களில் ஒரு மனிதனின் சுய முன்னேற்றத்திற்கு வொர்க்கஹாலிக் தேவையான விஷயமாக இருக்கிறது. ஒருவர் தன் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும், போட்டி உலகில் தன்னை போட்டிகளில் இருந்து விலக்கி தனி இடத்தை அமைத்துக் கொள்ளவும் உதவும் விதமாக இருக்கும். அதேசமயம் இது அதிகமாகும் போது குடும்ப சூழலில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் வொர்க்கஹாலிக் பழக்கத்தை மேற்கொண்டால்,  அவர்களது அனாவசிய நேரங்களை வீணடிக்காமல் இருக்க பயன்படும் கருவியாக இது இருக்கும். அதேசமயம் குடும்ப சூழலில் இருப்பவர்கள் இதனை ஓரளவுக்கு பேலன்ஸ்டாக கவனித்து வந்தால் நல்லது.

Workaholic-Treatment.jpg

 
இப்போது ஒரு ஸ்மால் டெஸ்ட்:  உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எத்தனை மணி நேரம் பணி புரிகிறீர்கள் என்று பாருங்கள். 6 நாட்களை கொண்ட வாரத்தில் 60 மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் நீங்கள் செலவழித்தால் கட்டாயம் நீங்களும் வொர்க்கஹாலிக் நபரே!

11 minutes ago, நவீனன் said:

இப்போது ஒரு ஸ்மால் டெஸ்ட்:  உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எத்தனை மணி நேரம் பணி புரிகிறீர்கள் என்று பாருங்கள். 6 நாட்களை கொண்ட வாரத்தில் 60 மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் நீங்கள் செலவழித்தால் கட்டாயம் நீங்களும் வொர்க்கஹாலிக் நபரே!

5 நாட்களைக் கொண்ட வாரத்தில் 50 மணித்தியாலங்கள். 
அடடா நல்லா இருக்கே.

கிழமைக்கு 15.50 மணித்தியாலங்கள் ஓவர்ரைம். மாதச்சம்பளம்+(15.50*4*1.5*மணித்தியால சம்பளம்). இப்படி யாராவது வேலை தந்தால் நான் வேர்க்ககோலிக்காகவே இருப்பன். :D:

  • தொடங்கியவர்

 

இஸ்ரேலிய வானில் ஸ்டார்லிங் பறவைகளின் குழுநடனம்
====================================================
இஸ்ரேலிய வானில் ஒருசேர குழுநடனமாடிய பல்லாயிரக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள், பார்ப்போரின் கண்ணுக்கு விருந்து படைத்தன.

ரஷ்யாவில் இருந்தும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் குளிர்காலத்தில் வெப்பத்துக்காக தெற்கு நோக்கி வருகின்ற பறவைகள் இவை.

இந்த நடனம், இக்குருவிகள் இரைதேடவும், வேட்டையாடும் வேறு பறவைகளுக்கு இரையாகாமல் இருக்கவும் உதவுகிறது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

இயற்கையின் இன்னல்களால் வஞ்சிக்கப்பட மக்களுக்காக இசைப்புயலின் - நெஞ்சே எழு.

5 minutes ago, நவீனன் said:

 

இயற்கையின் இன்னல்களால் வஞ்சிக்கப்பட மக்களுக்காக இசைப்புயலின் - நெஞ்சே எழு.

இசைப்புயலுக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்

தூக்கத்தை தொலைக்கலாமா?

 

 

ள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை  நிறுத்தியபாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். 'இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்’ எனச் சென்னையைச் சேர்ந்த தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர்     என். ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.

'சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்குச் சரியானp51.jpg நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் 'மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாகச் சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் சேரும். சிலர், வேலை காரணமாக 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.

உடல் உழைப்பு உள்ளவர்கள் பகலில் அரை மணி நேரம் தூங்குவது நல்லது என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதையே சாக்காக வைத்து இரவுத் தூக்கத்தின் அளவைக் குறைப்பது மிகவும் தவறு. குறைவான மற்றும் முறையற்ற தூக்கம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாகச் சர்க்கரை வியாதி, இதயம் தொடர்பான நோய்கள், உடல் பருமன், மன நலம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

p51a.jpg

ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமென்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்னைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தப் பிரச்னையைச் சில வகை தெரப்பி, மெலட்டோனினைச் சுரக்கவைக்கும் மாத்திரைகளைக் கொடுத்துக் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு செல்போனைத் தூர வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.'

நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு...

dot%286%29.jpg இரவு 7 மணிக்கு வேலைக்குச் செல்பவர்கள், கிளம்பும் முன் காலையில் 'பிரேக்ஃபாஸ்ட்’ சாப்பிடுவது போல் சாப்பிட்டு வேலைக்கு செல்ல வேண்டும். பகல் உணவை, நள்ளிரவு 1 மணியளவில் சாப்பிட வேண்டும்.

dot%286%29.jpg வேலை முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும்போது, முடிந்தவரை இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து வெளிச்சம் படாதவாறு வேன் போன்றவற்றில் பயணிக்க வேண்டும்.

dot%286%29.jpg வீட்டில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் இரவு உணவை உண்ண வேண்டும். பிறகு கட்டாயம் செல்போனைத் தள்ளிவைத்துவிட்டு, ஜன்னல்களை அடைத்து, வெளிச்சம் புகாத அறையில் உறங்கி மாலை எழுந்திருக்க வேண்டும்.

dot%286%29.jpg  வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துச் செயல்பட்டால், இரவு நேர ஷிஃப்ட் காரணமாக உடலில் ஏற்படும் வியாதிகளின் பிடியில் இருந்து விடுபடலாம்.

'குட்’நைட்!

.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 13

 

64308.jpg1658 : இங்­கி­லாந்தின் இரா­ணுவ மற்றும் அர­சியல் தலை­வ­ரு­மான ஒலிவர் குரொம்­வெல்­லுக்கு எதி­ராக சதித்­திட்டம் தீட்­டிய எட்வார்ட் செக்ஸ்பி என்­பவர் லண்டன் கோபுர சிறையில் இறந்தார்

 

1830 : அமெ­ரிக்­காவின் லூசி­யா­னாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பர­வி­யது.

 

1840 : லோங் தீவில் லெக்­சிங்டன் என்ற நீரா­விக்­கப்பல் மூழ்­கி­யதில் 139 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1847 : கலி­போர்­னி­யாவில் மெக்­ஸி­கோ-­அ­மெ­ரிக்கப் போரா­னது காகு­வெங்கா என்ற இடத்தில் எட்­டப்­பட்ட உடன்­பாட்டின் மூலம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

1908 : அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாநி­லத்தில் ரோட்ஸ் ஒபேரா மாளி­கையில் தீப்­பி­டித்­ததில் 171 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1915 : இத்­தா­லியின் அவ­சானோ பிர­தே­சத்தில் ஏற்பட்ட பூகம்­பத்தில் 29,800 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1930 : மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்­கு­க­ளாக முதன் முத­லாக வெளி­வ­ரத்­தொ­டங்­கி­யது.

 

1939 : அவுஸ்­தி­ரே­லி­யாவில் விக்­டோ­ரியா மாநி­லத்தில் 20,000 சதுர கிலோ­மீற்றர் நிலம் காட்­டுத்­தீ­யினால் அழிந்­தது. 71 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1942 : ஹென்றி போர்ட் பிளாஸ்­டிக்­கினால் தயா­ரிக்­கப்­படும் வாக­னத்­துக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்றார்.

 

1953 : யூகோஸ்­லா­வி­யாவின் தலை­வ­ராக மார்ஷல் ஜோஸப் டிட்டோ தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1964 : கல்­கத்­தாவில் இடம்­பெற்ற கல­வ­ரங்­களில் நூற்­றுக்கு மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1972 : கானாவில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.

 

1982 : அமெ­ரிக்­காவின் வோஷிங்டன் டிசி நகரில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்­கி­யதில் 78 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1985 : எத்­தி­யோப்­பி­யாவில் பய­ணிகள் ரயி­லொன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 428 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1992 : இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்­களை பாலியல் அடி­மை­க­ளாக கட்­டா­ய­மாக சிறைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­த­மைக்­காக ஜப்பான் மன்­னிப்புக் கோரி­யது.

 

2001 : எல் சல்­வ­டோரில் இடம்­பெற்ற பூகம்­பத்தில்  800 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2006 : சீனாவின் தென் கிழக்குப் பகு­தியில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மட்­ட­மா­கின.

 

2012 : பய­ணிகள் கப்­ப­லான கொஸ்டா கொன்­கோர்­டினா, 4232 பேருடன் சென்­று­கொண்­டி­ருந்த வேளையில் இத்­தா­லியின் கரை­யோ­ரத்தில் விபத்­துக்­குள்­ளாகி மூழ்­கி­யது. இதனால் 31 பேர் உயிரிழந்தனர். 

 

2014 : ஜப்­பானின் ஹிரோ­ஷிமா பிராந்­தி­யத்தில் மண்­ச­ரி­வினால் 72 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2015 : பரி­சுத்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ்  இலங்­கைக்கு வருகை தந்தனர்.

 
 New  0  0  0
- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=643#sthash.8CD13Idh.dpuf
  • தொடங்கியவர்

36,000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட குகை ஓவியங்கள்: மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!

 

எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 

France%20picture%202.jpg

தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால குகைகளை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1994ம் ஆண்டு கண்டுபிடித்தனர். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எரிமலைகள் வெடித்திருக்க வேண்டும்.
 

France%20picture.jpg

இதனை இந்த சுற்றுப்பகுதியில் வசித்த பழங்கால மக்கள் கண்டுருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், பல ஆயிரக்கணக்கான வருடங்களாக பழங்கால மனிதர்கள் இதுபோன்ற குகைகளில் தங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகளை அங்குள்ள சுவற்களில் வரைந்து வருவது அவர்களின் பொழுது போக்காகும். இவ்வாறு நீளமான தந்தங்கள் உடைய யானைகள், புலிகள், சிங்கம், குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களை ஓவியமாக வரைந்துள்ளனர்.

அதே சமயம், இந்த குகைப்பகுதியில் எரிமலை வெடித்தற்கான அடையாளங்களும் அப்படியே உள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கண்டுபிடிப்புகளை பாதுகாக்க பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் குகைகளுக்கு அருகிலேயே ஒரு மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வு மையம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர்.
 

France%20picture%201.jpg

சுமார் 50 மில்லியன் யூரோ செலவில் முடிக்கப்பட்டுள்ள இந்த மையம் வரும் ஏப்ரல் 10ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என்றும், உலகம் முழுவதிலிருந்து சுமார் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் இந்த குகை ஓவியங்களை கண்டு களிப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vikatan.com

  • தொடங்கியவர்

'மிக அழகான பூமி நமது இந்தியா!'

 

rakeshsharma_1.jpgராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் பயணம் போன முதல் இந்தியர். பாட்டியாலாவில் பிறந்த இவர் தன்னுடைய பதினேழு வயதில் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார் ;இந்திய விமானப்படையில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார் .

குறிப்பாக, 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் மிக் ரக விமானங்களை மிகத்திறமையாக போர்க்களத்தில் இயக்கினார். 1982 இல் இந்தியா ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலத்தில் இரண்டு ரஷ்யர்களுடன் இந்தியர் ஒருவரை அனுப்பவது என முடிவெடுக்கப்பட்டதும் ராகேஷ் ஷர்மா அதற்கு தேர்வானார் .

பதினெட்டு மாதம் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன .ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் செயல்பட வேண்டும் என்பதால் காலைத் தொட்டவாறு தலை பலமணிநேரம் இருக்குமாறு எல்லாம் பெண்டு வாங்கினார்கள். 

ஃபிட்டாக  இருக்கப் பல உடற்பயிற்சிகள் சொல்லித்தரப்பட,  இவரோ யோகா மட்டும் செய்தார். 

விண்வெளிக்குப் போனதும் ,"இந்தியா அங்கிருந்து பார்க்க எப்படி இருக்கிறது ?" என இந்திரா காந்தி அவர்கள் கேட்க ,"சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா !" (உலகில் உள்ளவற்றிலேயே மிக அழகான பூமி நமது இந்தியா!) என்றார். அதைத் தொலைக்காட்சியில் பார்த்து இந்தியர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள் .அவரும் நாயகன் ஆனார் . பயணம் முடிந்து தரையிறங்கும் பொழுது தீப்பிடித்துக் கொள்ள, பாராசூட்டில் குதித்துத் தப்பித்தார் .

கல்பனா சாவ்லா கொலம்பியா ஓடத்தில் இறந்த பொழுது ,”நீங்கள் இன்னுமா விண்வெளிக்குப் போக விரும்புகிறீர்கள்” எனக் கேட்ட பொழுது ,"பரந்த அந்த விண்வெளியின் மீதான என் காதல் அப்படியே உள்ளது ;சாகசத்துக்காகக் காத்திருக்கிறேன் இன்னமும். நான் கண்டிப்பாகப் போவேன் !"என்றார்.

அதுதான் ராகேஷ் ஷர்மா!

vikatan.com

39 minutes ago, நவீனன் said:

கல்பனா சாவ்லா கொலம்பியா ஓடத்தில் இறந்த பொழுது ,”நீங்கள் இன்னுமா விண்வெளிக்குப் போக விரும்புகிறீர்கள்” எனக் கேட்ட பொழுது ,"பரந்த அந்த விண்வெளியின் மீதான என் காதல் அப்படியே உள்ளது ;சாகசத்துக்காகக் காத்திருக்கிறேன் இன்னமும். நான் கண்டிப்பாகப் போவேன் !"என்றார்.

இது கொஞ்சம் ஓவர் பில்டப்தான். கல்பனா இறந்தபோது இவருக்கு வயது 54, இப்ப 67.

 

  • தொடங்கியவர்

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!

 

1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

vi_35_1.jpg



4. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

5. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

6. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

7. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

8. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

9. பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.


10. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

vi_35_3.jpg



11. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

13. நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


14. சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

15. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

vi_35_6.jpg




16. வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

17. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

18. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


19. வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

20.இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு

21. நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

22 உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

23. பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

24. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

25. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

சுவாமி விவேகானந்தர் - 25 பொன்மொழிகள்!

vikatan.com

 

  • தொடங்கியவர்

ஒபாமா அரங்கேற்றிய சிறந்த காமெடிகள்! (வீடியோ)

 

உலக அரசியல் தலைவர்களின் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவின் அரசியல் பயணம், இந்த ஆண்டுடன் நிறைவுக்கு வருகிறது.

obama%20dance.jpg

அமெரிக்க அரசியலில் மாற்றம் கொண்டு வந்த இவர், அவ்வப்போது அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்குகள், விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதோடு மட்டுமல்லாமல், சில காமெடிகளையும் அரங்கேற்றுவார்.

அந்த வகையில், ஒபாமாவின் சிறந்த திரை காமெடி நிகழ்வுகள் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. அதில், மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, அங்கு அழும் குழந்தையை அதன் தாயிடம் இருந்து வாங்கி சமாதானப்படுத்துகிறார். அவரிடம் சென்றவுடன் அக்குழந்தை அமைதியாகி விடுகிறது. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது, தான் பேசுவதை நிறுத்திவிட்டு கையில் அமர்ந்திருந்த கொசுவினை அடிக்கிறார். இதனைப்பார்த்த பேட்டி எடுப்பவரும், 'நல்ல காரியம்' என்கிறார்.


மற்றுமொரு சுவாரஸ்ய நிகழ்வாக, பெண்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, இவர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார், அப்போது அவரின் பின்னால் நின்றுகொண்டிருந்த பெண்களில் ஒருவர், 'ம்ம்ம்' என்று ஹம்மிங் போடுகிறார். அதனை கேட்ட ஒபாமா, தான் பேசுவதை நிறுத்திவிட்டு அவரும் அந்த ஹம்மிங்கை போடுகிறார், உடனே அருகில் இருந்த பெண்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, மற்றவர்களை வாழ்த்தும்போது உடல்ரீதியாக அவரது அணுகுமுறை, கருத்தரங்கின்போது பாடல்கள் பாடி அசத்துவது, நடனம் ஆடுவது என பல்வேறு காமெடிகளை செய்து மக்களை கவர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan.com

  • தொடங்கியவர்

 

பிரியாணி ஒரு கட்டுக்கட்டலாம், ... - பிரியாணி ஒரு சுவையான வரலாறு !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.