Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு உருவாக்கத்துக்கும் புலிகளுக்கும் ஏதேனும் சம்பந்தமா? தமக்குத் தெரியவே தெரியாது என்கிறார் சம்பந்தன்

Featured Replies

கூட்டமைப்பு உருவாக்கத்துக்கும்  புலிகளுக்கும் ஏதேனும் சம்பந்தமா? தமக்குத் தெரியவே தெரியாது என்கிறார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருந்ததாக எனக்குத் தெரியாது. கூட்டமப்பின் தலைவராகப் புலிகள் என்னைத் தெரிவு செய்யவில்லை. - இப்படி அடித்துக் கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பு தெலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படி ஒரு புதிய தகவலை அடித்துக் கூறியிருக்கின்றார். அந்தப் பேட்டியில் அவர் கூறியவை வருமாறு:- 

கேள்வி:- 2001 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் ஜனநாயக ரீதியானது அல்ல என்ற காரணத்தினால் சர்வதேசம் முன்வைத்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிந்திருந்த பல கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குகின்றது. அப்போது புலிகளின் 'பினாமிகள்' என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்பட்டது. சர்வதேசமும் அப்படித்தான் அதனைக் கருதியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் தலையீட்டுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

சம்பந்தன்:- இது... உங்களுடைய கேள்வி... ஒரு விசித்திரமான கேள்வி. (யோசிக்கிறார்) தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது உண்மை. அவர்கள் அந்தக் காலங்களிலும் 90களிலும் 2000ஆம் ஆண்டுகளிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது உண்மை. ஆனால் அதேசமயம் பழைய கட்சிகளாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்றவை இருந்தன. அதேநேரத்தில் பல்வேறு இயக்கங்கள் ஆயுதம் ஏந்திப் போராடின - உதாரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் போன்ற இயக்கங்கள்...

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி உருவாக்கப்பட்ட பிறகு அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கின்ற கருமங்களை ஏற்று, ஜனநாயகப் பாதைக்கு அவர்கள் வந்தார்கள். ஆயுதங்களைத் துப்பரவாகக் கலைந்து. அவர்களும் அரசியலில் ஈடுபட்டார்கள். தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்டியிடுகின்றது; புளொட் போட்டியிடுகின்றது; ரெலோ போட்டியிடுகின்றது; தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடுகின்றது. என்னத்துக்காக...? தமிழ் மக்களின் உரிமைகளுக்காக... ஆனால் நாங்கள் வெவ்வேறு கட்சிகளாகப் போட்டியிடுகின்றோம். அதன் காரணமாக எங்கள் மத்தியில் - அந்தப் பிளவின் நிமித்தம் - எமது பிரதிநிதித்துவத்தை முறையாகப் பெறமுடியாமல் இருக்கின்றோம். அந்த அடிப்படையில்தான் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தோம்.

கேள்வி: இதற்கும் (கூட்டமைப்பு உருவாக்கத்துக்கும்) எல்.ரீ.ரீ.ஈக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

சம்பந்தன்:- என்னை... என்னைப் பொறுத்தவரையில் அவ்விதமான சம்பந்தம் இருந்ததாக எனக்குத் தெரியாது. என்னுடைய மாவட்டத்தில் அவ்விதமான... எவ்விதமான... சம்பந்தமும் இருக்கவில்லை. வெவ்வேறு மாவட்டங்களில் இருந்ததோ... இல்லையோ... நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் மூலமாகத்தான் இது ஏற்பட்டது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் எம்மை ஒரு பக்கத்தில் விட்டாலும் கூட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்ற இயக்கங்கள்தான் எல்.ரீ.ரீ.ஈயோடு தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ள இயக்கங்கள்.

கேள்வி: - அப்படியென்றால் கூட்டமைப்பு உருவாக்கத்தில் எல்.ரீ.ரீ.ஈக்கு நேரடிப் பங்களிப்பு எதுவும் இல்லை என்று கூறுகிறீர்கள்?

சம்பந்தன்:- நேரடிப் பங்களிப்பு இருந்ததாக எனக்குத் தெரியாது.

கேள்வி:- கூட்டமைப்பினுடைய தலைவர் நீங்கள்தானே ஐயா?

சம்பந்தன்:- ஓம்...

கேள்வி:- அப்படியென்றால் உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் எப்படி...? (இடையில் சம்பந்தன் குறுக்கிடுகிறார்)

சம்பந்தன்:- இந்தக் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து நாங்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பிறகு என்னைத் தம்முடைய தலைவராகத் தெரிவு செய்தார்கள். நான் நிச்சயமாக... எல்.ரீ.ரீ.ஈயினால்... கூட்டமைப்பின் தலைவராக... நான் நியமிக்கப்படவில்லை. அதை நான் நிச்சயமாக சொல்வேன். என்னைக் கூட்டமைப்பின் தலைவராக நியமித்தது... எமது கட்சியின் சார்பில்... அதாவது இந்த இயக்கங்களைச் சார்ந்த - தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்த - உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர்களுடைய கூட்டு முடிவின் மூலமாகத்தான். நான் அவர்களுடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக ஆரம்பத்தில் வந்து பிறகு கூட்டமைப்பின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். புலிகளால் அல்ல.

 

 

 http://www.malarum.com/article/tam/2015/10/23/12284/கூட்டமைப்பு-உருவாக்கத்துக்கும்-புலிகளுக்கும்-ஏதேனும்-சம்பந்தமா-தமக்குத்-தெரியவே-தெரியாது-என்கிறார்-சம்பந்தன்.html#sthash.vBBGZbtu.dpuf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

praba-sambanthan.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சொத்து ஆகும். புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனே இக்கூட்டமைப்பை உருவாக்கினார். 

http://www.ntamil.com/14258

 

கூட்டமைப்பின் உருவாக்கம்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஒக்ரோபர் மாதம், 20ஆம் திகதி, 2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. தமிழ் தேசிய அரசியலை ‘சிக்கலில்லாமல்’ தம்முடன் தொடர்ந்தும் கொண்டு செல்லக்கூடிய சில கட்சிகளை இணைத்து தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி ஆகிய அரசியல் கொள்கைகளைப் பிரதானப்படுத்தி, அவற்றை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டமைப்பாகவே புலிகள் அதனை உருவாக்கினார்கள்.
http://maatram.org/

 

சிங்கள அரசு தனக்கு ஏற்ற ஒருவரையே இனம்கண்டு, தனது எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயாவிற்கு இது பற்றிய எண்ணமே அந்தக் காலத்தில் இருக்கவில்லை. எப்படியாவது தமிழர்களின் பலத்தைப் பிரித்துத் தானும் ஒரு தலைவராக வரவேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

ஆனால் காகம்  இருக்கப் பனம் பழம் வீழ்ந்த மாதிரி வடக்கா கிழக்கா என்ற எண்ணத்தில் தலைமை கிழக்கிற்கு முன்னுரிமை கொடுத்து  சம்பந்தரிடம் கையளிக்கப்பட்டது.
தமிழர்கள்  விட்ட சில தவறுகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அறளே பேந்து விட்டது . எனறு நான் சொன்னால் உலகம் என்னை நம்புதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவரது செயல்கள் / பேச்சுக்கள் குழப்பகரமானவையாகத்தான்  இருக்கின்றன. இது சிங்கக்கொடியை ஆட்டும்போதே தொடங்கிவிட்டது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவரது செயல்கள் / பேச்சுக்கள் குழப்பகரமானவையாகத்தான்  இருக்கின்றன. இது சிங்கக்கொடியை ஆட்டும்போதே தொடங்கிவிட்டது. tw_blush:

உண்மை, செத்த பாம்பை ஆட்டும் போதே புரிந்துவிட்டது.

hqdefault.jpg

 

... தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கி வகித்தவர் "மாமனிதர்" சிவராம்"!!! ... 

... சிவராம் கொழும்பில் வைத்து புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதும், ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டதுடன் .. இன்று அவ்வழக்கு காணாமல் போயுள்ளதும் தெரிந்ததே!

... இன்று, சிவராமை சுட்டுக்கொன்ற ஒட்டுக்குழு ஆயுததாரிகளான புளொட்டை, கூட்டமைப்புக்குள் அரவணைத்து, அஞ்சலி செலுத்தியுள்ளது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை!

கிழட்டு சம்பந்தனின் நாய் தந்திரம் இப்ப புரிகிறதா .... சாகின்ற வயதில் இந்த குள்ள நரியின் அலுப்பு தாங்க முடியல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.