Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல்:ஆங்கிலம் அறிவோமே

Featured Replies

Angilam_arivom_2564217d.jpg

ஆங்கிலத்துடனான ஆரம்ப அறிமுகம் உள்ளவர்களிலிருந்து, ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தும் நூல் இது. பல்வேறு இதழ்களில் பல்வேறு துறைகள் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் ஜி.எஸ். சுப்பிரமணியனின் நகைச்சுவை ததும்பும் நடை ஆங்கிலம் படிப்பதை இனிமையான அனுபவமாக்குகிறது. சுவாரஸ்யமான உதாரணங்கள், எளிய உதாரணங்கள், அழகான சித்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஆங்கிலத்தை இலகுவாகப் புரியவைக்கும் நூல் இது.

 

 

Price: Rs.190.00
eb_buynow_inl.png
Price: Rs.320.00
eb_buynow_over.png
 

http://tamil.thehindu.com/publications/befriending-the-english-language/article7698664.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் எப்படியோ தெரியவில்லை. ஆனால், லிப்கோ ஆங்கில ஆசான் போன்ற பிரயோசனமே இல்லா புத்தகமாயின், வாங்குவதில் பயன் இல்லை.

ஆங்கிலம் கற்க்க விரும்புவோர், இங்கிலீஷ் டு தமிழ் அகராதியே பயன் படுத்தக் கூடாது. மாறாக இங்கிலிஸ் டு இங்கிலீஷ் அகராதியே பயன்படுத்த வேண்டும்.

ஆன்லைன் அகராதிகள்: 

http://www.oxforddictionaries.com/
http://dictionary.cambridge.org/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நாதமுனி,

ஆங்கிலத்தில் சில சிறு சிறு விடயங்களை எப்படி கற்றுக்கொள்வது?
தமிழிலேயே படித்த எங்களைப் போன்றவர்கள் சில பிழைகளை விட்டு சங்கடப்படுகின்றோம். சமீபத்தில் ஒரு ஈமெயிலில், "your have mentioned the wrong invoice number", என எழுதிப்போட்டேன், பின்பு தான் தெரிந்தது, wrong என்பதை விட incorrect என்பது மிக பொருத்தமானது polite என‌  

இத்தகைய wording தவறுகளை எப்படி தவிர்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நாதமுனி,

ஆங்கிலத்தில் சில சிறு சிறு விடயங்களை எப்படி கற்றுக்கொள்வது?
தமிழிலேயே படித்த எங்களைப் போன்றவர்கள் சில பிழைகளை விட்டு சங்கடப்படுகின்றோம். சமீபத்தில் ஒரு ஈமெயிலில், "your have mentioned the wrong invoice number", என எழுதிப்போட்டேன், பின்பு தான் தெரிந்தது, wrong என்பதை விட incorrect என்பது மிக பொருத்தமானது polite என‌  

இத்தகைய wording தவறுகளை எப்படி தவிர்ப்பது?

வாசித்தல்..... வாசித்தல்.... வாசித்தல் தான் ஒரு மனிதனை ஒரு மொழியில் பூரணமாக்குகின்றது.

முடிந்த வரை ஒரு தரமான பத்திரிகை வாசிக்க வேண்டும். முடியாவிடில் வார இறுதி பத்திரிகைகள் ஆவது.

தமிழில், ஹௌ ஆர் யு என்று எழுதி அதை வாசித்து, மனப் பாடம் பண்ணி, இலக்கணம் புரியாமல் ஆங்கிலம் வளர்ப்பது தவறு... 

ஏனெனில் அதை எப்போது பாவிப்பது என்ற சந்தர்ப்பம் புரியாமல், சொல்லி, அவமானப் பட நேரிடும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல ஆங்கில வார இதழை கிழமைக்கு ஒருமுறை வாங்கி தொடர்ந்தும் வாசியுங்கள்.
தெரியாத புதிய சொற்களை கோடிட்டு ஆன் லைன் அகராதி, மற்றும் தெசாரஸ்/ சின்னோனியம்  - thesaurus/ synonym (அதன் ஓத்த கருத்துள்ள மாற்று சொற்களையும் தெரிந்து கொள்ளுங்கள்).
தொலைகாட்சியில் ஆங்கில செய்திகளை பாருங்கள். 
முடிந்தவரை பிறரோடு ஆங்கிலத்தில் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சங்கோஜப்படாமல் கதையுங்கள். (தவறென்றாலும் பரவாயில்லை). கனடாவில் இருக்கும் பல்வேறு இனத்து மக்கள் கதைக்கும் ஆங்கிலத்தை நீங்கள் கேட்டால் புரியும்.

ஆர்வத்தோடு தவறுகளை திருத்திக்கொண்டால் நாளடைவில் எல்லாம் தானாக படியும்.
வெள்ளையர்களே சரியான சொற்  பிரயோகத்திற்கு ஆங்கில அகராதியை தான் 90% நம்பி இருக்கிறார்கள்.
எங்கள் அப்பா செய்த ஒரு நல்ல காரியம் வீட்டில் சிந்தாமணி, வீரகேசரி மற்றும் சண்டே டைம்ஸ் நாள் / வாரம் தவறாது வரும்.

மற்றும்படி இந்த தனில் மூலம் ஆங்கில உரையாடல், ரேப்பிடேக்ஸ்ட் இங்கிலீஸ் ஸ்பீகிங் ...போன்ற புத்தகங்கள் பெரிதாக பலன் தருபவை அல்ல.

 என்னுடைய இன்னும் ஒரு அவதானிப்பு : தமிழில் இலக்கணம் படிப்பித்ததை போன்று ஆங்கிலத்தில் மிக ஆழமாக படிப்பதும் கூட பயன் அற்றது தான். தொடர்ச்சியாக வாசிக்க, அல்லது கொஞ்சமாக ஆங்கிலம் பேச வரும் பொழுது தானாகவே திருந்தும் என்பது என்னுடைய கருத்து .

இங்கு யார்க் பல்கலை கழகத்தில் (Writing Center) இல் writing assistant ஆக பகுதி நேரம் வேலையாற்றிய அனுபவத்தில் இதை பகிர்கின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யார்க் பல்கலை கழகத்தில் (Writing Center) இல் writing assistant ஆக பகுதி நேரம் வேலையாற்றிய அனுபவத்தில் இதை பகிர்கின்றேன்.  

அட நீங்கள் தானோ அவரு? 

நீங்க ரொம்ப...ப நல்லவரு ... :grin: 

(வடிவேலு ஸ்டைல் காமெடி, வேற ஒண்ணுமில்ல..)

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் தானோ அவரு? 

நீங்க ரொம்ப...ப நல்லவரு ... :grin: 

(வடிவேலு ஸ்டைல் காமெடி, வேற ஒண்ணுமில்ல..)

முனி ஸார்...இது எதோ நம்மள காமெடி பீசாக்கின மாதிரி தெரியிதே.   just kidding.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதை விட கேட்பது தான் ஒரு மொழியைத் தெளிவாகப் பேசுவதற்கு உதவும் என சொல்கிறார்களே! இது பற்றி நாதமுனி,சசிவர்ணம் ஆகியோரின் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ரதி அக்கா நீங்கள் கூறியது போல  , ஒரு மொழியை பேசுவதற்கு; சொற்களின் உச்சரிப்பு, அவற்றின் தகுந்த பிரயோகிப்பு போன்றன அந்த மொழியை பேசும் இன்னும் ஒருவரை கூர்ந்து கேட்டு வந்தாலே கூட சாத்தியமாகும்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒருவித தாள நயம் இருப்பதை போல நான் உணர்வேன். வெறும் வாசிப்பின் மூலம் இந்த சூட்சுமங்கள் அறிந்து கொள்வது முடியாத காரியம். வாசிப்பு புதிய புதிய சொற்களை தெரிந்து கொண்டு உரிய சந்தர்ப்பங்களில் பேசுவதற்கு ஏதுவாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம், சுகம்.

இரண்டுமே முக்கியம். ஆனால் முதலில் வாசிப்பு, பின்னர் பேச்சுக்களைக் கேட்டல், முழு மொழி ஆளுமை தரும். கேட்பது, மனதில் நிற்பது கண நேரம், ஆனால் வாசிப்பது, மீண்டும் மீண்டும் அசை போடுவதால் மனதில் நிற்கும். அத்துடன் பேச்சு, எழுத்தினைப் போலன்றி, எமக்காக காத்திருக்காது. வாசிக்கும் பொது சொற்களை அல்ல, வசனங்களை, அவை எவ்வாறு கோவை ஆக்ககப் படுகின்றன என்பதனை, கவனிகின்றோம்.

இலக்கண விளக்கம் இன்றி பேச்சுக்களை கேட்டால், பிரயோசனம் இல்லை என்பது என் கருத்து. முன்னர் O/L சரிவரவில்லை என்றவுடன் ரயில் ஏத்தி, காலி, கம்பளை மாமா, மச்சான் கடைக்கு அனுப்பி விடுவார்கள். 6 மாசம், ஒரு வருசத்தில், சிங்களம் கதைத்துக் கொண்டு, ஊருக்கு தைபொங்கல், வருசத்துக்கு வருவார்கள். 

இவர்கள் தான் இந்த 'மொழிகளைப், அடுத்தவர்கள் பேச்சுக்களை கேட்டு, மீண்டும் பேசும் ரகம்'. அவர்களது மொழி அறிவு பூரணம் இல்லாதது. 'broken english' போன்றது. பேச்சு மொழியில் தவறுகள் உள்ளன என்பது தெரியும் அல்லவா. உதாரணமாக, தண்ணீர், தண்ணி ஆவது. ஆகவே அடிப்படை இலக்கண அறிவு கொஞ்சம் இருந்தால் , பேச்சுக்களை கேட்பது கை கொடுக்கும்.

அன்று தமிழர் கடையில் வரிசையில் டீ, வடை வாங்க நின்றிருந்தேன். பக்கத்து சலூன் துருக்கியர் திரும்பி வந்து கப்பை வைத்து, ஆங்கிலத்தில், I asked you coffee, you gave me tea என்கிறார்.

அங்கிருந்த பெண், you tell me tea, now what telling என்றார். அந்த பெண் போதே மொழி ஆளுமை இருக்கவில்லை. கடைசியில் துருக்கியர் காப்பியுடன் சென்றார்.

இவ்வளவுக்கும் அவர் கேட்டது டீ என்று அவருக்கு பின்னால், எனக்கு முன்னால் இருந்த கஸ்டமர் சொன்னார்.

அவருடன் பேசும் போது, அவர் இந்த லிப்கோ ஆங்கில ஆசான் பேர்வழி என புரிந்தது.

மொழியை பேசுவதற்க்கு, வர்ணத்தார் சொன்னது போல் முழு இலக்கனமும் தலை கீழாய் தெரிய வேண்டும் என்றில்லை. சாதாரணமாக, முக்கியமான ஓர் 50 சொற்களின், காலங்கள் (இறந்த, நிகழ், எதிர்) தெரிந்திருந்தால் அதை கோத்து விடுவது பின்னர் இலகு ஆகும்.  

மேலே, tell எனும் நிகழ் கால சொல்லுக்கு பதில் told என்ற இறந்த கால சொல்லுடன், telling என்ற சொல்லை தவிர்த்து you told me tea, now what
என்றாலே சரியான வசனமாகி விடும் அல்லவா!

இதைத்தான் வர்ணத்தார் மேலே, (சொற்களின் உச்சரிப்பு) அவற்றின் தகுந்த பிரயோகிப்பு என்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இருந்த ஒரு ஆங்கில வாத்தியார் ஸ்பென்சர் மாஸ்டர் ஒரு முறை கரும்பலகையில் இந்த வசனத்தை எழுதினார்.

peons ring pilfer money by post!

அதன் தமிழ் மொழி பெயர்ப்பை கேட்டார் ... ஒருவருக்கும் புரியவில்லை. நாங்கள் இதைக் கொண்டு வந்து வேறு பல வாத்திகளிடம் கேட்டோம் யாருக்குமே சரியான மொழி பெயர்ப்பு தெரியவில்லை.
ஒரு 3 நாள் கழித்து அவரே எங்களுக்கு அந்த வசனத்தின் முழு அர்த்தத்தை தெளிவுபடுத்தினார்.

அப்போதெல்லாம் கூகிள் ஆண்டவர் இல்லாத காலம் 

சரி இப்போது நீங்கள் கூறுங்கள் அந்த வசனத்தின் அர்த்தம் தான் என்ன.

 

  • கருத்துக்கள உறவுகள்

பியோன்ஸ் கோஸ்டி ஒன்று, தபாலில் (நிறுவணத்திற்கு) வந்த பணத்தில் ஆட்டையைப் போட்டுட்டுதோ? :(

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்திற்கு நன்றி சசிவர்ணம்,நாதமுனி

பாடசாலையில் மணியடிக்கும் ஊழியர் தபாலில் வந்த கொஞ்சப் பணத்தை களவெடுத்திடார் என்று நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் .... பியோன்ஸ் கோஸ்டி ஒன்று தபாலில் வரும் பணத்தை ஆட்டையைப் போடுகின்றது !!!
இது தான் விடயம்.
அதாவது தபால்காரர் கூட்டம் ஒன்று (ring ~ வளையம் ~ ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து ) தபாலில் வரும் பணத்தை களவாடுகின்றனர்.

ring leader ~ கூட்டத்தின் தலைவன்
ரதி அக்காவின் ~ 'பாடசாலையில் மணியடிக்கும் ஊழியர்' நீங்கள் சுவாரசிமாக எழுதியதை நான் அறிவேன்..

உங்களுக்கு தெரிந்தவை, மற்றும் வினோதமான சொற் பிரயோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்  நாதமுனி , ரதி அக்கா
 

  • கருத்துக்கள உறவுகள்

The rat the cat the dog chased killed ate the malt.

the rat ate the malt. After that it was killed by a cat. That cat had been chased by a dog.

இலக்கண ரீதியில் இந்த வசனம் முழுமையானது. ஆனால் வாசிக்கும் நமக்கு மண்டை காஞ்சு போகும்.

இதையும் ஒரு முறை பாருங்களேன்

Buffalo buffalo Buffalo buffalo buffalo buffalo Buffalo buffalo 

Believe it or not, this sentence is grammatically correct and has meaning:

http://mentalfloss.com/article/18209/buffalo-buffalo-buffalo-buffalo-buffalo-buffalo-buffalo-buffalo

  • கருத்துக்கள உறவுகள்

சில வார்த்தை விளையாட்டுகள் வாழைப்பழத்தில் ஊசி அடிக்கும் ரகம்.

உதாரணமாக ஒருவரை 'நீ ஒரு பொய்யர்' என்பதனை நாசூக்காக, நண்பர் உண்மைகளுடன் வெகு சிக்கனமானவர் என குறிப்பிடுவர்.

பிரித்தானிய அரசியலில் இதனை,  honorable member is very econmical with truth என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.