Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு புதிய சிறைச்சாலை

Featured Replies

யாழ்ப்பாணத்திற்கு புதிய சிறைச்சாலை

 
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளது. ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வகையிலான இந்த சிறைச்சாலை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது.


சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறைச்சாலையை திறந்து வைக்க உள்ளார். அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் காணியில் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 272 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலை நிர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125435/language/ta-IN/article.aspx
 

  • தொடங்கியவர்
யாழில் புதிய சிறைச்சாலை திறந்து வைப்பு
யாழில் புதிய சிறைச்சாலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வகையிலான இந்த சிறைச்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறைச்சாலையை திறந்து வைத்துள்ளார்.

2.5 ஏக்கர் காணியில் இந்த புதிய சிறைச்சாலையானது அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் 272 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,சுமந்திரன், சரவணபவன் , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,மற்றும் நீதவான்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

http://onlineuthayan.com/news/2209

  • கருத்துக்கள உறவுகள்

செலவான 272 மில்லியன் ரூபாக்களையும் திரும்பப் பெறுவதற்குரிய குற்றவாளிகள் உருவாகுவார்களா? அல்லது உருவாக்கப்படுவார்களா?? 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்ற போர்வையில் அழித்த வீடுகள் இன்னும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
அதற்குள் இத்தனை மில்லியன்களுக்குப் புதிய சிறைச்சாலை.
அடிப்படையில் இருந்து ஆரம்பித்தால் சிறைச்சாலைகள் எதற்கு....

  • தொடங்கியவர்
புதிய சிறைச்சாலையில் பெரிதாக ஏதும் இல்லை
புதிய சிறைச்சாலையில் பெரிதாக ஏதும் இல்லை
யாழ்.சிறைச்சாலை நவீனமயப்படுத்தப்பட்ட சிறைச்சாலை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் வந்து பார்த்தபோதுதான் புரிந்தது இங்கு பெரிதாக எதுவும் இல்லை என்று என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். யாழ்.சிறைச்சாலைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலைக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு  கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் கட்டடத் தொகுதியைச் சுற்றிப் பார்வையிட்டார். அதன்பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கைச் சிறைச்சாலைகளில் தற்போது 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குரிய வசதிகள் அங்கு வழங்கப்படுகின்றதா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டி யுள்ளது. அத்துடன் ஒரு சிறைக்கைதிக்கு ஒரு நாளைக்கு 500 ரூபா செலவிடப்படுகிறது. பெரும் குற்றவாளிகளைப் பிணை யில் விடுவிப்பது பற்றிக் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதாவதுபெரும் குற்றவாளிகள் இலகுவில் தப்பிச் செல்லாதவாறு அவர்கள் பிணையில் விடுவிக்கப்படும்போதுஅவர்களது கடவுச்சீட்டு நீதிமன்றால் வாங்கப் பட்டுவிடும் என்றார். ஒரு சிறையில் 80 தொடக்கம் 90 கைதிகளை அடைத்து வைத்தி ருப்பது என்பது நல்ல செயலல்ல. ஏனெனில் அவர்களும் மனிதர் களே. எனவே வெளிநாடுகளில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்று எதிர்காலத்தில் ஒரு அறையில் 2 பேர் வீதம் தங்க வைக்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சித்துள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் 6000 கைதிகளை விடுதலை செய்யப் போகினமாம்....! இவர்களும் கொஞ்சம் லொட்டு லொசுக்கு கைதிகள்,குற்றம் செய்யாத அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்தால் என்ன...!

அறை வசதியும் கிடைக்கும், சாப்பாட்டுச் செலவும் மிச்சமாகும்...!!

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் 6000 கைதிகளை விடுதலை செய்யப் போகினமாம்....! இவர்களும் கொஞ்சம் லொட்டு லொசுக்கு கைதிகள்,குற்றம் செய்யாத அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுதலை செய்தால் என்ன...!

அறை வசதியும் கிடைக்கும், சாப்பாட்டுச் செலவும் மிச்சமாகும்...!!

சோறுபோட்டு மாளவில்லை.. சிறைகளிலுள்ள 407 இந்தியர்களை தாயகம் அனுப்புகிறது இங்கிலாந்து

 

 லண்டன்: இங்கிலாந்து சிறையில் உள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் இதற்கான ஒப்பந்தம்போடப்பட உள்ளது. இங்கிலாந்தில் உள்ள சிறைகளில் வெளிநாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 127 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் 2,233 பேர் உள்ளனர். அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் 509 பேர் அங்கு சிறையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 407 கைதிகள் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை பராமரிப்பதற்கும், சாப்பாடு கொடுப்பதற்கும் ஆகும் செலவு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளை சேர்ந்த கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஜமைக்கா நாட்டை சேர்ந்த 300 கைதிகளை அந்தநாட்டிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியா அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவை அடுத்து, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

கைதிகளை அனுப்புவது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள இந்திய கைதிகள் தாயகம் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். நான்கு வருடங்களுக்கும், அதற்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா , பாகிஸ்தானுக்கு  கைதிகள் அனுப்பும் போது மிகவும் கவணமாக இருக்க வேண்டும். கைதிகளை மாறி அணுப்பி விட்டால் பிரச்சினை முடிஞ்சிடும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ,சுமந்திரன், சரவணபவன் , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,மற்றும் நீதவான்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 விவஸ்தை கெட்ட அரசியல்வாதிகள். ஏதோ பெரிய சமூகசேவை செய்யப்போனவர்கள் மாதிரி திறப்புவிழாவுக்கு போயிருக்கின்றார்கள் tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்

 விவஸ்தை கெட்ட அரசியல்வாதிகள். ஏதோ பெரிய சமூகசேவை செய்யப்போனவர்கள் மாதிரி திறப்புவிழாவுக்கு போயிருக்கின்றார்கள் tw_rage:

இன்றைய பணநாயக உலகில் அரசியல்வாதிகள் அப்படித்தான் செயல்பட முடியும். மனிதநேயம், சமூகசேவை என்று செய்யப்போனால் இவர்களை அடுத்த தேர்தல் வீட்டுக்கு அனுப்பிவிடும்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.