Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

212 பேருடன் பயணித்த விமானம் மாயம்

Featured Replies

212 பேருடன் பயணித்த விமானம் மாயம்

212 பேருடன் பயணித்த விமானம் மாயம்

 

எகிப்தின் ஷரீம் இல் ஷேக் நகரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

குறித்த விமானத்தில் 212 பேர் பயணித்தாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

http://tamil.adaderana.lk/news.php?nid=73979

Confusion over Russian airliner 'missing in Sinai'

http://www.bbc.com/news/world-middle-east-34687139

  • தொடங்கியவர்
ரஷ்ய விமானம் எகிப்தில் விழுந்து நொருங்கியது
 
31-10-2015 02:06 PM
Comments - 0       Views - 4

செங்கடல் பகுதியிலுள்ள ஷார்ம் எல் ஷெய்க்கிலிருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பேர்க்குக்கு சென்ற ரஷ்ய விமானமான ஏ 321, எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

217 பயணிகள் மற்றும் 7 விமனப்பணியாளர்களுடன் சென்ற விமானம், சைப்பிரஸ் பகுதியில் காணமற்போனதாக அறிவிக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே மேற்கண்ட தகவலை எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்தவர்களில் அதிகமானோர் ரஷ்யர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

- See more at: http://www.tamilmirror.lk/157938/ரஷ-ய-வ-ம-னம-எக-ப-த-ல-வ-ழ-ந-த-ந-ர-ங-க-யத-#sthash.mm30vQ87.dpuf
 

 

 

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

 

ஷாம் எல் ஷேக்: 224 பேருடன் எகிப்தில் இருந்து  ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

 

இன்று காலை ரஷ்ய விமானம் ஒன்று எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டஸ்பெர்க்கிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 224 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் காணாமல் போனதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அந்த விமானம்  சினாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விட்டதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். மேலும், விமான விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் தேடுதல் குழுவினர் விரைந்துள்ளனர்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=54481

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எகிப்தில் 224 பேருடன் ரஷ்ய விமானம் நொறுங்கி விபத்து

 
 

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில், சினாயில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ-321 (A-321) விமானம் கோகலிமாவியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த விமானத்தின் பதிவு எண் கேஜிஎல்-9268 (KGL-9268).

ரஷ்ய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

ரஷ்ய விமானம் சினாயின் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வரும் நிலையில் அதன் பாகங்களை ராணுவ விமானங்கள் கண்டு பிடித்துள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவராத நிலையில் விபத்துப் பகுதிக்கு 45 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

விரைவில் மீட்பு பணி நடைபெறும் என்று எகிப்து அரசு கூறியுள்ளது.

எகிப்து பிரதமர் உறுதி:

விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை அந்நாட்டு பிரதமர் ஷரீப் இஸ்மாயில் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில், "ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து விமான போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி கூறும்போது, "விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் 217 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் என மொத்தம் 224 பேர் இருந்துள்ளனர். விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை" என்றார்.

எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும்போது விபத்து நடந்துள்ளது.

ரஷ்யா உறுதி:

இதற்கிடையில் தங்கள் நாட்டு விமானம் எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து புறப்பட்ட அடுத்த 25-வது நிமிடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாக ரஷ்ய விமான போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்டதா?

விமானம் நொறுங்கி விழுந்த சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. இருப்பினும், விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினரா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய முடியாது என எகிப்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/எகிப்தில்-224-பேருடன்-ரஷ்ய-விமானம்-நொறுங்கி-விபத்து/article7826643.ece?homepage=true

  • தொடங்கியவர்

எகிப்தில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தில் 224 பேர் பலி

 

 
  • படம்: ஏபி
    படம்: ஏபி
  • சினாய் தீபகற்பத்தின் கூகுள் வரைபடம்
    சினாய் தீபகற்பத்தின் கூகுள் வரைபடம்

எகிப்தின் சினாய் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியானதாக, எகிப்திய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 214 ரஷ்ய பயணிகளும், 3 உக்ரைன் பயணிகளும், 7 விமான ஊழியர்களும் பயணித்தனர். தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்வதற்காக புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட 23-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. மேலும் ராடாரிலிருந்தும் மறைந்தது.

இதனையடுத்து சினாய் மலைப்பகுதியில் விமானம் மோதி சிதறியது தெரியவந்தது. விமானத்தின் பாகங்களும், மனித உடல்களும் 5 சதுர கிமீ பரப்பளவுக்கு சிதறிக் கிடந்தது என்று எகிப்திய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெய்ரோவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவிக்கும் போது, “விமானத்தில் பயணம் செய்த அனைவரும் துரதிர்ஷ்டவசமாக பலியாகினர். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளது.

இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாக எகிப்திய அரசு தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. எகிப்திய பிரதமர் இஸ்மாயில் ஷரீப் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் உடனடியாக மீட்புப் படையினரை எகிப்துக்கு அனுப்ப அதிபர் புடின் உத்தரவிட்டதாக கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான 217 பயணிகளில் 138 பெண்கள், 62 ஆண்கள், 17 குழந்தைகள் அடங்குவர் என்று எகிப்திய அமைச்சரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்த போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக எகிப்திய மூத்த விமான போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் புல்கோவோ விமான நிலையத்தில் தங்கள் உறவினர்களுக்காகக் காத்திருந்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

எல்லா ஸ்மிர்னோவா என்ற 25 வயது ரஷ்ய பெண் கூறும்போது, “நான் என் பெற்றொரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். விமானத்தில் ஏறிய பிறகு அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். அதன் பிறகுதான் இந்தத் துயரச் செய்தி” என்றார்.

எகிப்திய மூத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறும்போது, “விமானி தனது கடைசி செய்தியில் தனது தொடர்பு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்” என்று கூறினார்.

குவியும் இரங்கல்கள்:

ஏற்கெனவே எகிப்திய அரசு மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்த விமான விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டு, பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள நிலையில்.

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி "எங்களுக்கு விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், தொடக்க செய்திகளை வைத்துப் பார்க்கும் போது பயங்கர துயரமும், அதனால் இழப்பும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

முந்தைய செய்திப் பதிவுகள்:

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ-321 (A-321) விமானம் கோகலிமாவியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த விமானத்தின் பதிவு எண் கேஜிஎல்-9268 (KGL-9268).

விசாரணைக்கு உத்தரவு

ரஷ்ய விமானமான மெட்ரோஜெட் ஏர்பஸ் ஏ-321 என்ற விமானம் 224 பேர்களுடன் எகிப்தின் சினாய் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது குறித்த விசாரணையை தொடங்கியது ரஷ்ய விசாரணைக் கமிட்டி.

விமானம் ராடாரிலிருந்து மறைவதற்கு முன்னதாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரத் தரையிறக்கத்துக்கு விமானி கோரியதாகவும், ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் எகிப்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்ததாகவும் தெரிகிறது.

அதாவது அருகில் உள்ள விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கும் வேண்டியுள்ளார் விமானி. ஆனால் முடிவெடுப்பதற்குள் கட்டுப்பாட்டு அறை தொடர்பிழக்கப்பட்டது.

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதத்தை எதிர்த்து எகிப்திய படைகள் போரிடும் சினாய் பகுதியில் இந்த விமானத்தின் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தெற்கு சினாயின் கடற்கரை நகரமான அல்-அரிஷ் என்ற நகருக்கு 35 கிமீ தொலைவில் ஹஸ்சானா என்ற இடத்தில் விமானம் நொறுங்கியது தெரியவந்துள்ள்து.

சம்பவ இடத்திற்குச் சென்ற எகிப்திய மீட்புப் படையினரின் பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, "இப்போது நான் துயரமான காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தரையில் நிறைய உடல்கள் கிடக்கின்றன. மேலும் பலர் இருக்கைகளிலேயே இறந்தபடி கிடக்கின்றனர்.

விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தின் பின்பகுதியில் ஒரு சிறு பகுதி எரிந்து போக, விமானத்தின் பெரும்பகுதி பாறை ஒன்றில் மோதியது. இது வரை குறைந்தது 100 சடலங்களை மீட்டுள்ளோம் மீதமுள்ள சடலங்கள் விமானத்தில் உள்ளன” என்றார்.

http://tamil.thehindu.com/world/எகிப்தில்-விழுந்து-நொறுங்கிய-ரஷ்ய-விமானத்தில்-224-பேர்-பலி/article7826643.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!

 

ஷாம் எல் ஷேக்: 224 பேருடன் எகிப்தில் இருந்து  ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

 

இன்று காலை ரஷ்ய விமானம் ஒன்று எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டஸ்பெர்க்கிற்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 224 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் காணாமல் போனதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அந்த விமானம்  சினாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விட்டதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் தெரிவித்தார். மேலும், விமான விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் தேடுதல் குழுவினர் விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இதனிடையே விபத்து நடந்த சினாய் பகுதி இஸ்லாமிய தீவிரவாதிகள் தீவிரமாக இயங்கும் பகுதி என்பதால், தீவிரவாதிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என  எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் முன்னதாக எழுந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, மேற்கூறிய ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

100 உடல்கள் கண்டெடுப்பு

இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளதாகவும், இதில் 5 குழந்தைகளின் உடல்களும் அடக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்துக்குள்ளான விமானம் இரண்டு துண்டாக உடைந்து விழுந்துள்ளது. இதில் வால் பகுதி சிறிய பகுதியாக எரிந்து காணப்படுவதாகவும், விமானத்தின் மற்றொரு பெரிய துண்டு பாறையில் மோதி கிடப்பதாகவும், அந்த உடைந்த துண்டு பாகத்தின் உள்ளே இருந்து வலி மற்றும் வேதனையால் முணங்கும் சப்தம் கேட்பதாகவும், இதனால் பலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்  எகிப்து மீட்புக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

http://www.vikatan.com/news/article.php?aid=54481

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா குடுத்த ஆயுதமா இருக்கும்..!  tw_dizzy:

  • தொடங்கியவர்

 

ரஷ்ய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது!

 

 
 

எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவற்றில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடலை ஆய்வு செய்த பின்னர், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியதா? என்ற விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.adaderana.lk/news.php?nid=73991

  • தொடங்கியவர்
'விமானத்தை பயங்கரவாதிகள் வீழ்த்தவில்லை'
 
Tamil_News_large_1377650.jpg
 

கெய்ரோ: 'ரஷ்ய விமானத்தை, ஐ.எஸ்., என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு, சுட்டு வீழ்த்தியதாக கூறுவதில் உண்மையில்லை' என, ரஷ்யாவும், எகிப்தும் தெரிவித்துள்ளன.

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள எகிப்தில், ஷார்ம்-எல்-ஷேக் நகரில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று, சினாய் தீபகற்பம் அருகே, விபத்துக்குள்ளானதில், 224 பேர் பலியாயினர். இந்த விபத்திற்கு, தொழில் நுட்பக் கோளாறுதான் காரணம் என, முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.ஐ.எஸ்.,சின் துணை அமைப்பு ஒன்று, சினாய் பகுதியில், பல ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதனால், ஐ.எஸ்., கூறுவது உண்மையாக இருக்கலாம் என, முதலில் கருதப்பட்டது.

ஆனால், இதை, எகிப்து மற்றும் ரஷ்ய அரசுகள் மறுத்துள்ளன. ''30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை, துல்லியமாக சுட்டு வீழ்த்தக் கூடிய நவீன பீரங்கிகள், சினாய் பகுதி பயங்கரவாதிகளிடம் இல்லை,'' என, எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும், 'விமானத்தை பயங்கரவாதிகள் தான் வீழ்த்தினர் என்பதற்கு ஆதாரம் இல்லை' என, தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட கறுப்பு பெட்டிகளை ஆய்வு செய்த பிறகே, விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும் என, ரஷ்யா கூறியுள்ளது. விமான விபத்து குறித்த ஆய்வில், எகிப்து, ரஷ்யாவுடன், பிரான்ஸ் உளவு துறையும் பங்கேற்றுள்ளது.

விபத்துக்குள்ளான, 'கே.ஜி.எல்., 9268' விமானம், இறுதியாக, ரஷ்யாவின் சமரா நகரில், பெட்ரோல் நிரப்பியுள்ளது. அதனால், பெட்ரோலில் ஏதாவது வெடிமருந்து கலக்கப்பட்டதா என்ற கோணத்திலும், ஆய்வு நடைபெறுகிறது. விமானி, வலேரி நெமோ, 3,682 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர். அதனால், இந்த விபத்துக்கு, மனித தவறு காரணமாக இருக்க முடியாது என, கருதப்படுகிறது.

இதற்கிடையே, சினாய் தீபகற்ப பகுதியில், பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தால், அப்பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ், லுப்தான்சா ஆகிய நிறுவனங்கள், விமான சேவையை நிறுத்தியுள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1377650

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் ஒரு விமானம் தடக்குப்பட்டு விழுந்துது எண்டால் தொடர்ச்சியாய் இண்டு மூண்டு விழுறதுதான் உலக வழக்கம்.....இந்தமுறை என்னமாதிரியெண்டு தெரியேல்லை???? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதா ரஷ்ய விமானம்: புதிய தகவல்
திங்கள், 2 நவம்பர் 2015 (10:02 IST)
Share on facebookShare on twitterShare on google_plusone_shareShare on print More Sharing Services
எகிப்தில் 224 பேரின் உயிரைப் பறித்த ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 


எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது மாயமானதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
 
பின்னர் அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி விட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதை எகிப்து பிரதமர் ஷரிப் இஸ்மாயிலும் உறுதிபடுத்தினார். அந்த விமானத்தில்  பயணம் செய்த 224  பயணிகளும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதற்கிடையே ரஷ்ய விமானத்தை ‘நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.  இதனிடையே விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்களா, அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதா? என்பதை அறிய  சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அந்த விமானம் புறப்படுவதற்கு முன்பு தீவிரவாதிகள் அதில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என்றும் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/plane-crash-the-new-source-said-the-plane-crash-due-bomb-explosion-115110200017_1.html

  • தொடங்கியவர்

ரஷ்ய விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஐ.எஸ்.

 
 
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

ரஷ்ய பயணிகள் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அந்த அமைப்பு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக் குப் புறப்பட்ட ரஷ்ய ஏர்லைன்ஸ் விமானம் சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் 224 பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து எகிப்து விமான போக்குவரத்து துறை உயரதிகாரி கள் கூறியபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட் டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார், அல்-ஆரிஷ் விமான நிலையத் தில் அவர் விமானத்தை தரையிறக்க முயற்சித்தபோது விபத்துக் குள்ளாகி இருக்கிறது என்று தெரிவித்தனர்.

ஆனால் நாங்கள்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரு வதற்கு பழிக்குப் பழியாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதாரமாக விமானம் தீப்பிடித்து கீழே விழுவது போன்ற வீடியோவை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டது. அந்த வீடியோவின் உண்மை தன்மை உறுதி செய்யப்பட வில்லை.

ரஷ்யா மறுப்பு

இதனிடையே ஐ.எஸ். தீவிர வாதிகளின் கூற்றை ரஷ்ய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் மேக்ஸிம் சோகோலாவ் கூறிய போது, 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது ரேடாரில் இருந்து மாயமாகி உள்ளது. அவ் வளவு உயரத்துக்கு ஏவுகணையை செலுத்தும் திறன் ஐ.எஸ். அமைப் பிடம் இல்லை என்று தெரிவித்தார்.

விமானத்தில் வெடிகுண்டு?

பிரிட்டனைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை நிபுணர் மைக்கேல் கிளார்க் கூறியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளால் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானங்களை மட்டுமே சுட்டு வீழ்த்தும் திறன் உள்ளது. ரஷ்ய விமானம் இரண்டாக உடைந்துள் ளது. எனவே விமானத்தில் வெடி குண்டு வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

கருப்பு பெட்டிகள் ஆய்வு

இதனிடையே விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெட்டிகள் எகிப்து தலைநகர் கெய் ரோவுக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளன. அங்கு ரஷ்யா, பிரான்ஸ், எகிப்து நிபுணர்கள் கருப்பு பெட்டி களை ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டுள்ளார். அதன்படி விபத்து நேரிட்ட பகுதியில் ரஷ்ய விமானப் படையைச் சேர்ந்த நிபுணர்கள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர்.

எகிப்தின் சினாய் பகுதி அல்-ஆரிஷ் நகர் அருகே ரஷ்ய பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை நேற்று ஆய்வு செய்த ரஷ்ய விமானப்படை நிபுணர்கள்.

http://tamil.thehindu.com/world/ரஷ்ய-விமானத்தை-நாங்கள்தான்-சுட்டு-வீழ்த்தினோம்-வீடியோ-ஆதாரத்தை-வெளியிட்டது-ஐஎஸ்/article7832316.ece

  • தொடங்கியவர்

''ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஐ.எஸ்.

 

ஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியீட்டுள்ளது.

 

எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் சென்ற 224 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். அமைப்பு தெரிவித்தது.ஆனால் ரஷ்யாவோ, ஐ.எஸ். அமைப்பிடம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் கிடையாது என்று கூறியது.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியீட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=54544

  • தொடங்கியவர்

ரஷ்ய விமானம் நடுவானிலேயே வெடித்து பல துண்டுகளாக உடைந்துள்ளது

ரஷ்ய விமானம் நடுவானிலேயே வெடித்து பல துண்டுகளாக உடைந்துள்ளது

 
 
 
எகிப்தில் கெய்ரோ அருகேயுள்ள ஷராம் எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் சிருவாய் தீபகற்ப பகுதியில் ஹசானா மலை பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனால் அதில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து எகிப்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. ரஷியாவும், பிரான்சும் அதற்கு உதவி புரிகின்றனர். மீட்பு குழுவினரால் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளையும் கைப்பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். அதை எகிப்து மற்றும் ரஷியா மறுத்தன. ஆனால் தற்போது விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கவில்லை. நடுவானிலேயே வெடித்து பல துண்டுகளாக உடைந்துள்ளது என ரஷிய புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் உடைந்த சிதறல் பாகங்கள் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவி கிடக்கின்றன. இதன் மூலம் விமானம் நடுவானில் உடைந்து சிதறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட உடைந்த பாகங்களில் உலோக மூலக்கூறுகள் எரிந்த வாசனை உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது விமானத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து வெடிக்க செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான இந்த விமானம் கடந்த 2001–ம் ஆண்டு கெய்ரோ விமான நிலையத்தில் தரை இறங்கும் போது சுவற்றில் மோதி வால் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதை சீரமைத்து தொடர்ந்து பயணத்துக்கு அந்த விமானம் பயன்படுத்தப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய விமான தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அணு குண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு

ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் பகிரங்கமாக தெரிவித்ததோடு அதற்கான வீடியோவையும் வெளியிட்டனர்.

சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியை தொடர்ந்து, ரஷ்ய புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டனர்.

அதில், உலகம் முழுவதும் உள்ள ரஷ்ய நாட்டு குடிமக்களை காப்பது ரஷ்யா நாட்டின் தலையாய கடமை என்பதால், அதனை சீர்குழைக்கம் முயலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவின் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் படைப்பிரிவினர் ரஷ்ய எல்லைகள் மற்றும் பல முக்கிய இடங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

மேலும், இந்த எல்லைகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிரியா, ஈராக் மற்றும் அரபு நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ரஷ்ய ராணுவம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய ராணுவம் நேட்டோ (NATO) அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளது. அப்போது, ஜியார்ஜியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு நடத்தினால் நேட்டோவிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்றும் உறுதி அளித்துள்ளது.

மேலும், அணுகுண்டு தாக்குதல் தொடர்பாக சிரியா அரசாங்கம் மற்றும் அதன் கூட்டணி பிரிவினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள்தாகவும், அவர்கள் மூலம் அங்குள்ள குர்து மற்றும் பிற பிரிவினரை பொதுமக்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்யாவின் அணுகுண்டு தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://world.lankasri.com/view.php?24AMec02dOKde2ZnBab2q0Med3Q8i0c3BBT244Al1223gAI3

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா பயிற்சி கொடுத்த மிதவாதப் பயங்கரவாதிகளின் தலையிலும் சேர்த்து அணுகுண்டு விழப்போகுது..! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவுக்கு உடனடியாய் ஆட்சிமாற்றம் தேவையெண்டு இஞ்சை கனபேர் கதைக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ரஸ்யாவோட விளையாடுகினம். கெதியில விலை குடுப்பினம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரியா இன்னுமொரு ஆப்கானிஸ்தானாக மாறுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.