Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவிக்கு 425 கோடி ரூபா வழங்குமாறு இளவரசர் அப்துல் அஸீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவிக்கு 425 கோடி ரூபா வழங்குமாறு இளவரசர் அப்துல் அஸீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு
2015-11-05 11:24:49

1310950.jpgசவூதி அரே­பிய முன்னாள் மன்னர் பஹத்தின் இர­க­சிய மனைவி எனக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு 2 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­களை (சுமார் 425 கோடி ரூபா) வழங்­கு­மாறு பிரித்­தா­னிய நீதி­மன்­ற­மொன்று நேற்­று­ முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

 

1982 முதல் 2005 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை சவூதி அரே­பி­யாவை ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் இர­க­சிய மனைவி என ஜெனான் ஹார்ப் எனும் பெண் கூறினார். 

 

தற்­போது 68 வய­தான ஜெனான் ஹார்ப், பலஸ்­தீன கிறிஸ்­தவ குடும்­ப­மொன்றில் பிறந்­தவர். தற்­போது அவர் பிரித்­தா­னிய பிர­ஜை­யாக உள்ளார்.

 

தான் மன்னர் பஹத்தின் மனை­வி­களில் ஒரு­வ­ராக விளங்­கி­ய­தாக அவர் கூறி­யி­ருந்தார்.

 

எனினும் இது இர­க­சி­ய­மாக செய்­யப்­பட்ட திரு­மணம் என அவர் கூறினார்.

 

காலஞ்­சென்ற மன்னர் பஹத், 1968 ஆம் ஆண்டு இள­வ­ர­ச­ராக இருந்த­ போது தன்னை திரு­மணம் செய்தார் எனவும் ஜெனான் ஹார்ப் தெரி­வித்தார்.

 

என்னை ஆயுள் முழு­வதும் பரா­ம­ரிப்­ப­தற்கு உத­வுவ­தாக மன்னர் பஹத் பல தட­வைகள் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.  

 

1310951.jpg

 

2003 ஆம் ஆண்டில் மன்னர் பஹத்தின் மக­னான இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் (இவர் மன்னர் பஹத்தின் மற்­றொரு மனைவி மூலம் பிறந்­தவர்) தனக்கு 1.5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்­களை வழங்­கு­வதன் மூலம் மன்­னரின் வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்தார் எனவும் ஜெனான் ஹார்ப் நீதி­மன்­றத்தில் தெரிவித்தார். 

 

அத்­துடன் லண்­ட­னி­லுள்ள 50 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான இரு வீடுகளை தனக்கு வழங்குவதற்கும் இளவரசர் சம்மதித்தார் என ஹார்ப் தெரிவித்திருந்தார்.

 

சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் 1921 ஆம் ஆண்டு பிறந்தவர்.

 

1310946.jpg

 

1982 ஜுன் 13 ஆம் திகதி அவர் சவூதி அரேபிய மன்னரானார்.

 

2005 ஓகஸ்ட் முதலாம் திகதி தனது 84 ஆவது வயதில் இறக்கும்வரை அவர் மன்னராக பதவி வகித்தார்.

 

அவரின் முதல் மனைவி காலமாகிவிட்டார். மேலும் பலரை அவர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்துச் செய்திருந்தார்.

 

1310948.jpg

 

பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜெனான் ஹார்ப்பை மன்னர் பஹத் திருமணம் செய்ததாக பகிரங்கமாக அறியப்பட்டிருக்கவில்லை. 

 

ஆனால், 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் 19 வயது யுவதியாக இருந்தபோது அப்போது இளவரசராக இருந்த பஹத் தன்னை திருமணம் செய்ததாக ஜெனான் ஹார்ப் கூறுகிறார்.

 

இத்திருமணத்துக்காக தான் மதம் மாறியதாகவும் ஆனால், 3 வருடங்களின் பின்னர் இளவரசர் பஹத்தின் சகோதரர்களில் ஒருவரான இளவரசர் துக்ரி தன்னை சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்தித்ததாகவும் ஹார்க் குற்றஞ்சுமத்தினார். 

 

1310947.jpg

 

மன்னர் பஹத் இறந்த பின்னர், இளவரசர் அப்துல் அஸீஸினால் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய ஜெனான் ஹார்ப், லண்டனிலுள்ள மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

 

1310945.jpgவாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தனக்கு பணமோ, வீடோ கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். 

 

ஆனால், ஜெனான் ஹார்ப்புக்கு பணம், வீடுகளை வழங்குவதாக தான் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுவதை  இளவரசர் அப்துல் அஸீஸ் நீதிமன்றத்துக்கு அளித்த எழுத்துமூலமான வாக்குமூலத்தில் நிராகரித்தார்.

 

இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் பீட்டர் ஸ்மித், ஹெனான் ஹார்ப் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் எனவும் காலஞ்சென்ற மன்னருடனான உறவு தொடர்பில் மௌனமாக இருப்பதற்காக அவருக்கு பணம் கிடைத்துள்ளமை தெளிவாகிறது எனவும் கூறினார். 

 

இளவரசர் அப்துல் அஸீஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மன்னர் பஹத்துக்கு இராஜதந்திர பாதுகாப்பு உள்ளது எனவும் அவர் தொடர்பில் விசாரிப்பதற்கு மேற்படி நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் வாதிட்டனர்.

 

ஆனால், மன்னர் பஹத் 2005 ஆம் ஆண்டு இறந்தபின் அவர் நாட்டின் தலைவராக இல்லை என்ற அடிப்படையில் அவருக்கு இராஜதந்திர பாதுகாப்பு கிடையாது” என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=13111#sthash.Kx8dawdO.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி தான்.

மன்னரே இறந்த பின்னர், அவரது வாரிசுகள் மறுக்கும் நிலையில், இந்த பணம் எங்கிருந்து வரப் போகிறது? பிரிட்டிஷ் நீதிமன்ற தீர்ப்பு சவூதி அரச குடும்பத்தினைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்வி எழுகிறதே.

விடை இது தான்.

பணம் அந்த அம்மணிக்கு கிடைக்கும். எவ்வாறெனில் பிரித்தானியாவில் முதலீடு செய்திருக்கும், வீடுகள், ஹோட்டல்கள், மாளிகைகள், பங்கு சந்தை, எண்ணெய் வியாபார அமைப்புகள் போன்ற  கோடிக்கணக்கான சவூதி அரச குடும்பத்தின் சொத்துகளில் கை வைக்க, நீதிமன்றம் உத்தரவிடும் என்பதால்  அவர்களாகவே  பணத்தினை கொடுப்பார்கள்.

இவ்வாறு தான், லிபிய கடாபிக்கு, 100 - 110 மில்லயன் டாலர் இடையேயான தொகைக்கு விமானத்தினை வித்தால் 2 மில்லியனும் அதுக்கு மேல் ஆயின் அது முழுவதும்  என்று ஜோர்தானிய பெண் ஒருவருடன் பேசி இருக்கிறார் இன்னுமொரு சவூதி இளவரசர்.

கடாபி, அந்த பெண் தன்னுடன் 3 மாதம் தங்கினால் 120மில்லியனுக்கு வாங்குகிறேன் என்று சொல்லி விட்டார். பெண்ணும் தங்கி உடலையும் வித்து, விமானத்தினையும் வித்து விட்டார்.

ஆனால் சவூதி இளவரசர் 0.5 மில்லியன் மேல் கொடுக்க வில்லை. அப்படி ஒன்றும் உடன்படிக்கை இல்லை என்று சொல்லி விட்டார். அந்த வழக்கிலும், தான் கொடுத்த 1/2 மில்லியன் போதுமானது என்றும் வேறு உடன்படிக்கைகள் கிடையாது என்றும் வாதிட்டார். அவர் தமது திறமையால் 120மில்லியன் இக்கு விற்பனை செய்து இருக்கிறார். ஆகவே மேலாக வந்த 10 மில்லியன் அவருக்கே என்று  பிரிட்டிஷ் நீதி மன்று உத்தரவு இட்டது.

கொஞ்ச மில்லியன் இக்கு சுத்தப் போய், 11.5 மில்லியன் இழந்த கதை அது. 

இதில வேடிக்கை என்னெவெனில், 11.5 ம் போகப் போகுது என்றவுடன், 50% கொடுக்கிறேன் என்று அடிச்சார் பாருங்க ஒரு கர்ணம்...., 30 பில்லியன் சொத்துக்கள் கொண்ட உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.

ஜட்ஜ் ஐயா மடங்கவில்லை.

article-1364669-0D8BD8E4000005DC-234_634

The fancy plane is the property of a jet company owned by the Libyan government

This United Aviation Bombardier Challenge 8,500 jet may be used by Gaddafi to flee Libya

The extravagant bathroom of the private plane. Gaddafi wants immunity from criminal prosecution and a pile of cash before he considers jetting off

The fully-fitted kitchen of the Bombardier 8,500. Earlier today, there were reports that three private jets owned by Gaddafi had left Libya for Vienna, Athens and Egypt

Libya's leader Muammar Gaddafi arrives to give television interviews at a hotel in Tripoli last night

Prince Alwaleed

சவுதி இளவரசர்

http://www.theguardian.com/uk-news/2013/jul/31/saudi-prince-court-gaddafi-jet

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைச்சு வந்த காசே இல்லைத்தானே....குடுக்கட்டன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.