Jump to content

பூண்டு - மிளகுக் குழம்பு


Recommended Posts

Blowjob in the pan, pepper, dried chilli, urad dal, cornflour and fry with steamed barren stone in the mixer.

என்னென்ன தேவை?

உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், 
தனியா - 3 டேபிள்ஸ்பூன், 
மிளகு - 2 டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 4, 
உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, 
புளி - சிறிய உருண்டை, 
உப்பு - தேவையான அளவு, 
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், 
கடுகு - அரை டீஸ்பூன்.

எப்படி செய்வது?

கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.  மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=3550&Cat=502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை.... இடியப்பம், புட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
முன்பு வீட்டில்... அம்மா, உள்ளிக் குழம்பு.... செய்வார் நன்றாக இருக்கும். அதன் செய்முறை ஞாபகம் இல்லை.
இதனை ஒரு செய்து பார்க்கத்தான் இருக்கு. பகிர்விற்கு நன்றி ஆதவன். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மருத்துவ குணமுள்ள குழம்பு ....!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து மரக்கறி சாப்பிட்டு வரும் விரதநாட்களில் இடையிடையே பூண்டு மிளகு சேர்த்தால் வாய்வு கோளாறு இருக்காது அதுவும் குளிர் காலத்தில் மிளகு சாப்பிடுவது மிகவும் நல்லது .

நன்றி ஆதவன் CH.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரத காலத்துக்கு நல்லாயிருக்கும் எண்டு நினைக்கிறன்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.