Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பு

Featured Replies

வடக்கின் தற்தைய நிலை ஒரே பார்வையில்- குளோபல் தமிழ் செய்தியாளர்:-

யாழில் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து  270 பேர் பாதிப்பு:

யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் திங்கள் கிழமை மதியம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த  14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர். இதில் 2ஆயிரத்து 57 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 486 பேர் இடம்பெயர்ந்து 42 நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு   சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

மழை காரணமாக 15 பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 54 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.ஆயிரத்து 195 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

பிரதேச செயலக ரீதியாக பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 320 குடும்பங்களை சேர்ந்த 1183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 168 குடும்பங்களை சேர்ந்த 657 பேர் இடம்பெயர்ந்து 4 நிலையங்களில் தங்கியுள்ளனர். 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 5 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 1196 குடும்பங்களை சேர்ந்த 4337 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 115 குடும்பங்களை சேர்ந்த 449 பேர் இடம்பெயர்ந்து 4 நிலையங்களில் தங்கியுள்ளனர். 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 25 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2252 குடும்பங்களை சேர்ந்த 8254 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 375 குடும்பங்களை சேர்ந்த 1203 பேர் இடம்பெயர்ந்து 6 நிலையங்களில் தங்கியுள்ளனர். 11 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 977 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 333 குடும்பங்களை சேர்ந்த 1169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயர வில்லை. இருந்தாலும் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ,100 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 891குடும்பங்களை சேர்ந்த 3275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 87 குடும்பங்களை சேர்ந்த 313 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர்.இப் பிரதேச செயலக பிரிவில் வீடுகள் சேதமடையவில்லை.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 320 703 குடும்பங்களை சேர்ந்த 2714 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 57குடும்பங்களை சேர்ந்த 204 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர். 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 9 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2141 குடும்பங்களை சேர்ந்த 8226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 97 குடும்பங்களை சேர்ந்த 381 பேர் இடம்பெயர்ந்து 1 நிலையத்தில்  தங்கியுள்ளனர். ஒரு வீடு மாத்திரமே பகுதிகளவில் சேதமடைந்து.

வேலணை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 689 குடும்பங்களை சேர்ந்த 2660 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 174 குடும்பங்களை சேர்ந்த 738 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் எவையும் சேதமடையவில்லை.

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 667 குடும்பங்களை சேர்ந்த 2425 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 426 குடும்பங்களை சேர்ந்த 1526 பேர் இடம்பெயர்ந்து  6நிலையங்களில் தங்கியுள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் வீடுகள் எவையும் சேதமடையவில்லை.

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2275 குடும்பங்களை சேர்ந்த 7705 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 551 குடும்பங்களை சேர்ந்த 1998 பேர் இடம்பெயர்ந்து 11 நிலையங்களில் தங்கியுள்ளனர். 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 231 குடும்பங்களை சேர்ந்த 830 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் இருந்து எவரும் இடம்பெயராத போதிலும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 419 குடும்பங்களை சேர்ந்த 1400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 07 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் இடம்பெயர்ந்து 1 நிலையத்தில் தங்கியுள்ளனர். 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 28 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 790 குடும்பங்களை சேர்ந்த 3371 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை. ஒரு வீடு முற்றாகவும் ஒரு வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

மருந்தங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 708குடும்பங்களை சேர்ந்த 2414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை வீடுகளும் பாதிப்படையவில்லை.

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 719 குடும்பங்களை சேர்ந்த 2307 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை வீடுகளும் பாதிப்படையவில்லை.
 

வடக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததத்தால் சுமார் 12ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு:

 
வடக்கில் கடந்த வெள்ளிக் கிழைமை முதல் மூன்று நாட்களாக பெய்த கடும் மழையினால் இதுவரையில் சுமார் 12 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என சகல மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை தீவு முழுவதும் சுமார் 81ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் 714 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதேவேளை வெள்ள அனர்த்த்ததால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன. 
 
இன்றைய தினம் வடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உடைகள் வழங்கப்படுகின்றன. இதில் அரச செயலகங்களுடன் பல்வேறு அமைப்புகளும் இணைந்துள்ளன. 
 
இதேவேளை இன்று காலை முதல் மழை பெய்யவில்லை. தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடி வற்றி வருகின்றது. எனினும் தற்போதும் போக்குவரத்துக்கள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் மேகம் மழை பெய்வதான வாய்ப்புடன் தென்படுகின்றது. 
 
இதேவேளை தொடர்ந்தும் சில தினங்களுக்கு சீரற்ற காலநிலை நீடிக்கும் என்று வளி மண்டவிலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வடகிழக்காக தாழமுக்கம் காணப்படுவதால் தொடர்ந்தும் மழை பெய்யும் வாய்ப்பிருக்கதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. 
 
இதேவேளை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125970/language/ta-IN/article.aspx

 

வெள்ளக் காடான யாழ். குடாநாடு! 

வெள்ளக் காடான யாழ். குடாநாடு! (படங்கள் இணைப்பு)

யாழ். குடாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

 

havy%20train%20572d.jpg

 

havy%20train%20562d.jpg

havy%20train%20563d.jpg

havy%20train%20558d.jpg

havy%20train%20559d.jpg

havy%20train%20560d.jpg

 

havy%20train%20561d.jpg

 

havy%20train%20564d.jpg

havy%20train%20565d.jpg

 

havy%20train%20567d.jpg

 

havy%20train%20569d.jpg

 

havy%20train%20570d.jpg

http://malarum.com/article/tam/2015/11/16/12516/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-.html#sthash.y6D405gs.dpuf

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பழக்கப்பட்ட செய்திதான். 
இருந்தாலும் வெள்ள அவஸ்தைகள் சொல்லி மாளாது.

நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணிதான் என்பது போல் ......இவ்வளவு வெள்ளத்திலும் குடிக்க ஒரு குவளை நன்னீர் கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் மக்களின் அடிப்படைப் பிரச்னை இல்லை
இயற்கை அனர்த்தம் என்று சொல்ல வருவார்கள் சிலர்.
இருந்தாலும் என்னுடைய கேள்வி ...... இப்படியான அடிப்படைப் பிரச்சனைக்கு எங்கள் அரசியல் வித்துவான்கள் என்ன பதில் சொல்லுவார்கள்....... என்று கேட்க ஆசையாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இதெல்லாம் மக்களின் அடிப்படைப் பிரச்னை இல்லை
இயற்கை அனர்த்தம் என்று சொல்ல வருவார்கள் சிலர்.
இருந்தாலும் என்னுடைய கேள்வி ...... இப்படியான அடிப்படைப் பிரச்சனைக்கு எங்கள் அரசியல் வித்துவான்கள் என்ன பதில் சொல்லுவார்கள்....... என்று கேட்க ஆசையாக உள்ளது

எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடலிலும் குளங்களிலும் நீர்மட்டம் உயர்வதால் இதுபோன்ற வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதை தடுப்பது எளிதான விடயமல்ல. ஆனால் சீரற்ற தொழில் நுட்ப வேலைகள், தெருக்களில் கட்டுமான மராமத்து புனரமைப்பு பணிகளில் மெத்தனப்போக்கு என்பவற்றால் வாழ்விடங்களில் ஏற்படும் ஒழுங்கற்ற வடிகால்கள் மழை நீரை கடலில் சென்று சேர்க்க தடையாகி இருக்கின்றன. மாறாக இவை அடை மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

படங்களில் நாம் காணும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட  மண் மேடுகளும் இதில்  முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. காணிகளில் வேலிகளை பிடுங்கி மதில் சுவர் கட்டுவதாலும் மழை நீர் வடிவது தடைப்படும். மழைக்காலத்தில் வடிகாலில் நீர் நிறைந்து தேங்கி நிற்கும் வேளையில் ஆட்சியாளர்கள் வடிகால் தொழிநுட்ப சேவையாளர்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி குறைபாடுகளை கண்டுபிடித்து உடனடியாக சீரமைக்க வேண்டிய பிரதேசங்களை இனங்கண்டு பணிகளை தொடங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடா நாட்டைப் பொறுத்தவரையில், இப்படியான மழை நீர் தேங்கி நின்று... நிலத்தடி நீருடன் கலப்பது அவசியம் என்றே, கருதுகின்றேன்.

தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்த வரையில்.... பெரிய குளங்களோ, ஆறுகளோ இல்லாத வானம் பார்த்த பூமி.

இதே வெள்ளம் நிலத்தினூடாக மெல்ல ஊறி, நிலத்தடி நீருடன் கலக்கும் போது.... கிணற்று நீரின்,  நீர் மட்டம் உயரும்.

அந்த நீர்.... வரும் கோடை காலத்துக்கு, குடி நீர்ப் பாவனைக்கும், விவசாயத்துக்கும் பயன் தரும்.

இயற்கை தரும் இந்தக் கொடையை, மக்கள்.... ஒரு இரண்டு கிழமையாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த வெள்ளமும்... இல்லாவிட்டால், கோடை காலத்தில், குடத்தை தூக்கிக்  கொண்டு.... பல கிலோ மீற்றர் தூரத்துக்கு, குடிநீருக்கு அலைய வேண்டி இருக்கும். அல்லது.... போத்தில் தண்ணீரை 20 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டி வரும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.