Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு எல்லையில் சிங்களவர்கள் துப்பாக்கி பிரயோகம்: இராணுவம் ஆதரவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பு எல்லையில் சிங்களவர்கள் துப்பாக்கி பிரயோகம்: இராணுவம் ஆதரவு?
[ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 05:04.40 PM GMT ]
mayilathamadu_001.jpg
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மயிலத்த மடு (மயில் தங்கிய மடு) மா தவணை (மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் கால்நடைகளை வளர்த்துவரும் தமிழர்கள் மீதும் அவர்களது கால்நடைகள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாடுகளை மேய்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் தரை பிரதேசமான மயிலத்த மடு(மயில் தங்கிய மடு) மா தவணை(மாடுகள் தவணை முறையில் தங்கும் இடம்) பகுதிகளில் மேய்கின்ற மாடுகள் மீது கடந்த சில நாட்களாக ஆயுதம் தாங்கிய சிங்கள ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும்,

இதனால் பத்திற்கு மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் 15 ற்கு மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் குறித்த மாடுகளை பார்வையிடச் சென்ற தமிழர்கள் மீது சிங்கள ஆயுததாரிகள் சிலர் கட்டிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,

இது குறித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு எந்தப் பயனுமில்லை என பாதிக்கப்பட்ட கால்நடைவளர்ப்பார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யுத்தத்திற்கு பின்னர் மேய்ச்சல் தரை பிரதேச எல்லைகளுக்குள் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்கள் மாடுகள் மேயும் பிரதேசத்திற்குள் இராணுவத்தின் பாதுகாப்பில் இரவு நேரங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும்,

அந்தப்பகுதிகளுக்குச் செல்லுகின்ற தங்களது மாடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுவதாகவும் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தவுடன்,

பொலிசார் துப்பாக்கி தாரிகளுக்கு தகவலை வழங்கிவிட்டு அந்த பிரதேசத்திற்கு செல்வதால் அவர்கள் தப்பி ஓடிவிடுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நடைபெறும் நில அபகரிப்பு மற்றும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் அதற்காக தமிழர்களின் மாடுகள் மற்றும் கால்நடைவளர்ப்பார்கள் மீது மேற்கொள்ளப்படும் துப்பாக்கி பிரயோகம் மற்றும் தாக்குதல்களுக்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதரவு இருப்பதனால்,

தமிழர்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கடந்த ஆறு வருடங்களாக இந்த நிலை தொடர்வதாகவும்

தமிழர்கள் என்ற ஒரே நோக்கத்திற்காகவே தங்கள் மீதும் தங்களது கால்நடைகள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 45000 மாடுகளும் 600ற்கு மேற்பட்ட கால்நடைவளர்ப்பாளர்களும் தங்கியுள்ளதாகவும் இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக்களோ, உயிருக்கான உத்தரவாதங்களோ இல்லாத நிலையில்,

தினம் தினம் மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே தங்களது கால்நடைகளை வளர்த்து வருவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஒரு யுத்த கால சூழ்நிலைக்கு தாங்கள் தள்ளப்பட வாய்ப்புள்ளதனால், இது குறித்து நல்லாட்சி அரசுக்கு அறிவித்துள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

maadu_01.jpg

maadu_02.jpg

maadu_03.jpg

maadu_04.jpg

maadu_05.jpg

http://www.tamilwin.com/show-RUmtzCTWSWmt3C.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாடுகள் மூளை இல்லாமல் சிங்களவ்ர்கள் பகுதிக்கு  சென்றால் அவர்கள் சுடுவார்கள் தானே.....இந்த மாடுகள் அங்க போய் சாணம் போட்டிருக்கும் அவங்கள் வெடி வைச்சிருப்பார்கள்:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.