Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் எக்னிலிகொட காணாமல் போன வழக்கு: இராணுவம் மீது மனைவி புகார்

Featured Replies

பிரகீத் எக்னிலிகொட காணாமல் போன வழக்கு: இராணுவம் மீது மனைவி புகார்

 
         பிரகீத் எக்னிலிகொடவின் மனைவியும் மகனும்
 பிரகீத் எக்னிலிகொடவின் மனைவியும் மகனும்

இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள், குறிப்பாக இலங்கை இராணுவம் செயற்படும் விதம் குறித்து தனக்கு திருப்தியானதாக இல்லை என்று எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றம் சாட்டியிருக்கிறார்.

இலங்கை இராணுவமும் இராணுவப் புலனாய்வு பிரிவும் மந்தகதியில் செயற்படுகின்றமை தனக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்தார் சந்தியா எக்னெலிகொட.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னிலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இரண்டு பேர் இன்று ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களது கைதுக்கு சில அமைப்புக்களினால் ஏற்கனவே எதிர்ப்பு இருந்துவந்த நிலையில், இன்றைய தினம் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால், ஹோமாகம நீதிமன்ற வளாகம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

அங்கு மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இவர்களது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நகரின் மத்தியில் நாட்டுக்காக இராணுவத்தினர், சிவ்பல சேனா என்கிற அமைப்புகள் உட்பட பல சிவில் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

“இராணுவத்தினர் மீது கை வைக்காதே”, “இராணுவத்தினரை காட்டிக்கொடுக்காதே” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.

இந்த பின்னணியில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி டிசம்பர் 17ஆம் தேதி வரை வழக்கை ஒத்தி வைத்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னிலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151207_ekneligoda

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.