Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேஸ்வரன் கொலை தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் விஜயகலா முறைப்பாடு செய்ய முடியும் - டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் கொலை தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் விஜயகலா முறைப்பாடு செய்ய முடியும் - டக்ளஸ் தேவானந்தா
08 டிசம்பர் 2015

மகேஸ்வரன் கொலை தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் விஜயகலா முறைப்பாடு செய்ய முடியும் - டக்ளஸ் தேவானந்தா

முன்னாள் அமைச்சர் ரீ.மகேஸ்வரன் கொலை தொடர்பில், அவரது பாரியார் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உயர் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்து நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழு ஒன்றின் ஊடாகவோ அல்லது நீதிமன்றின் ஊடாகவோ விசாரணை நடத்தப்பட முடியும் எனவும், விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகேஸ்வரன் கொலை பற்றி பாராளுமன்றில் பேசப்பட்டதாகவும் அவரது கொலை பற்றி எல்லோருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மகேஸ்வரனி;ற்கு இறுதியாக தற்போது பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரே தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126655/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் கொலை சூத்திரதாரி தன்னைத் தானே அடையாளம் காட்டிவிட்டார்! – விஜயகலா

“எனது கணவனின் படுகொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரி இந்தச் சபையில் இருப்பதாகத் தான் நான் கூறினேன்.எனினும் எவரதும் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், எனது கணவனின் பெயரைக் குறிப்பிட்டு அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு முன்னதாக உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் தொடர்பில் சில கருத்துக்களைத் தெரிவித்ததுடன், அவரின் கொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் நம்பிக்கை இல்லை எனில், மேல் நீதிமன்றத்தை நாடமுடியும் எனக் கூறிய நிலையிலேயே, சூத்திரதாரி தன்னை இனங்காட்டிக் கொண்டதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நேற்று (நேற்றுமுன்தினம்) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் எனது கணவன் படுகொலை தொடர்பாக நான் குறிப்பிட்டிருந்தேன். எனது கணவரின் பெயரைக் கூறும் உரிமை எனக்குள்ளது. ஆனால், எனது கணவனைக் கொன்றவர் யார் என்று நான் குறிப்பிடவில்லை. சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கின்றார் என்றே குறிப்பிட்டிருந்தேன். இங்கு 225 பேர் இருக்கின்றனர். அவர்களில் யார் சூத்திரதாரி என்று நான் குறிப்பிடவில்லை. இந்நிலையில் அந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார்.

எனது கணவன் படுகொலை தொடர்பாக கடந்த காலத்தில் சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. அதனால் மீண்டும் விசாரணை இடம்பெறவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கோரினேன். நீதிதான் தீர்ப்பு வழங்க வேண்டும். நான் குற்றம் செய்யாவிட்டால் பயப்படத்தேவையில்லை. இந்தச் சூத்திரதாரி தன்னைத்தானே இனங்காட்டிக் கொண்டார். இவரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்” என்றார்.

http://www.e-jaffna.com/archives/54615

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.