Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்''

Featured Replies

''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்''

தியாகுவுடன் ஒரு சந்திப்பு

பேட்டி: சுதா அறிவழகன்

ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர்.

ஈழப் பிரச்சினையின் தற்போதைய நிலை, இந்தியாவின் அணுகுமுறை குறித்து நம்முடன் தியாகு பகிர்ந்து கொண்டவை:

ஈழம் இன்று?

ஈழத்தின் இப்போதையை நிலையை சொல்கிறபோது, அங்கு ஒரு போர் தவிர்க்க முடியாதது என்ற சூழல்தான் உள்ளது. இதற்கான பொறுப்பும், பழியும் சிங்கள அரசையே சாரும். அமைதி முயற்சிகளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் முறியடித்து விட்டார்கள்.

2001லிருந்து ஏறத்தாழ 4 ஆண்டு காலம் போரற்ற சூழல் இருந்து வந்தது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோதே, அமைதிச் சூழலை கெடுப்பதாக வாக்குறுதி கொடுத்து தான் ஜெயித்தார். அதை நேரடியாக அவர் சொல்லாவிட்டாலும் கூட, அமைதி ஒப்பந்தத்தை திருத்தி எழுதுவோம் என்று சொல்லி ஜெயித்தார்.

அதிகாரப் பரவல் என்ற கருத்தையே நிராகரித்து, தமிழர்களின் தனி அடையாளத்தை வெறுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகளின் ஆதரவோடும், கூட்டணியோடும் தான் அவர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து விடக் கூடாது.

சிங்கள மக்களுக்கும், பேரினவாதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மீண்டும் போர் தொடுப்பது, போரின் மூலம் தீர்வு காண்பது, விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பது, தமிழீழத்திற்கான வாய்ப்பே இல்லாமல் செய்வது ஆகியவைதான் ராஜபக்ஷேவின் இப்போதைய செயல்பாடுகள்.

அதேபோல போர் நிறுத்த உடன்படிக்கையின் மிக முக்கியக் கூறுகளிலிருந்து அதாவது, மீன் பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது, அதி உயர் பாதுகாப்பு வளையங்களை அகற்றுவது, துரோக தமிழ்க் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது போன்ற வாக்குறுதிகளிலிருந்து சிங்கள அரசு பின் வாங்கி விட்டது. ஜெனீவா பேச்சுவார்த்தையின்போதும் இந்தப் பிரச்சினைகள்தான் எழுப்பப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காத சிங்கள அரசு, இப்போது கூடுதலாக யாழ்ப்பாண மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு உணவு, மருந்து போவதை தடுத்திருக்கிறார்கள். ஏதோ அந்த மக்கள் எல்லாம் குற்றம் செய்தவர்கள் போல, பொருளாதாரத் தடையை விதித்துள்ளனர்.

சிங்கள அரசின் இந்த செயலை, ராஜபக்ஷேவை ஆதரிக்கும் பன்னாட்டு அமைப்புகளும், ஏடுகளும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம நெடுஞ்சாலையை திறக்கப் போவது போல பேச்சு எழுந்தது. ஆனால் ஆளும் வர்க்கத்தில் இருக்கக் கூடிய சில அதிகார மையங்களும், ராணுவத் தலைமையிடமிருந்து வந்து பிடிவாதப் போக்கும் இந்த முயற்சிகளை முறியடித்து விட்டன.

அதேபோல போரின் மூலம் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க முடியும், கடலில் கூட்டு ரோந்து செல்வதன் மூலம் புலிகளை வெல்ல முடியும், பணிய வைத்து விட முடியும் என்று நம்பிக் கொண்டு, தீவிரப் போர் தயாரிப்பிலும், முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டிய காரணிகள்: ஈழத்தில் உள்ள தமிழர்களைப் போல பன் மடங்கு தமிழர்கள் இந்தியாவில் உள்ளனர். 6 கோடித் தமிழர்களின் தாயகம் இந்தியாவில் குடியிருக்கிறது. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழீழ மக்கள் பால் கொண்டுள்ள ஒருமைப்பாட்டு உணர்வை, நேச உணர்வை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

இந்த மக்களைக் கருத்தில் கொண்டு இந்தியா, தமிழீழ மக்களுக்குச் சாதகமான, குறைந்தது, அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கக் கூடிய அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து அது வரவில்லை.

அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நேர்ந்து, ஒரு சிங்களனைக் கூட இந்தியப் படைகள் கொல்லவில்லை. மாறாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இந்திய வீரர்களால் சிதைக்கப்பட்டவர்களும் தமிழ்ப் பெண்கள்தான். தமிழர்களுக்குத்தான் இந்திய அமைதிப்படை அதிக சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேறு வழியின்றி திரும்பி வந்தது.

இந்திய, இலங்கை அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சமான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இன்றைக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கிறபோது, அதுகுறித்து இந்தியா கவலைப்படவில்லை. ஒரு சர்வதேச உடன்படிக்கையை, இரு நாட்டுத் தலைவர்கள் சேர்ந்து செய்த உடன்படிக்கை போகிறதே, நமது வாக்குறுதி என்னவானது என்று இந்தியா கவலைப்படவில்லை.

சென்னைக் கடற்கரையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி, அமெரிக்காவுக்குப் போகவிருந்தவரை, பயணத்தைத் தாமதப்படுத்தி, ராஜீவ் காந்தி அழைத்து வந்து, தூக்க முடியாத எம்.ஜி.ஆரின் கையைத் தூக்கிக் காட்டி, உலகத்தில் தமிழர்களுக்கு 2வது மாநிலம் உருவாகிறது என்று கூறினார்களே, அதைப் பற்றி இப்போது பேசக் கூட இல்லை.

இந்தப் பின்னணியில் இப்போது நேரடியாகவும், சுற்றடியாகவும், ராணுவ வகையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகளைச் செய்து வருகிறது. லீத்தல் வெப்பன், நான் லீத்தல் வெப்பன் என்றெல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். ரேடார் நான் லீத்தலா, லீத்தலா என்று ஆராய்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்க் கப்பல் கொடுக்கிறார்கள். பயிற்சியும் கொடுக்கிறார்கள். பயிற்சி லீத்தலா, நான் லீத்தலா? இந்தியா பதிலளிக்க வேண்டும்.

இலங்கைக்கு, அமெரிக்காவாலோ, பாகிஸ்தானாலோ, சீனாவாலோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, எனவே அந்தப் படைக்கு பயிற்சி கொடுக்கிறோம் என இந்தியாவாலேயே கூற முடியாது. அவர்களுடைய உள்நோட்டுப் பிரச்சினை எனக் கருதப்படக் கூடியது தமிழீழ பிரச்சினை மட்டுமே.

அல்லது, முன்பு ஜேவிபி கலகம் செய்தது போல சிங்களர்களுக்குள் புரட்சி நடக்கிறது, எனவே அதை ஒடுக்க ஆயுதம் தருகிறோம் என்றும் இந்தியாவால் கூற முடியாது.

இந்தியா, இலங்கைக்கு என்ன உதவிகள் செய்தாலும், அது தமிழர்களுக்கு எதிரானதுதான். இதை தெரிந்தே இந்தியா செய்து கொண்டிருக்கிறது. இரு தரப்புகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவர்கள்தான் தீர்வு காண முடியும். தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழர் சார்பான அமைப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு, இதை இரு நாட்டு அரசுகளின் பிரச்சினையாக கருதியதுதான் ராஜீவ் காந்தி செய்த தவறு.

1985ம் ஆண்டு நடந்த திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா, இலங்கை அமைதி ஒப்பந்தம் வரை, பொதுவாக இருந்து பேச வைக்கிற முயற்சியை, அனுசரணையாளர் என்ற பொறுப்பை தவிர்த்து விட்டு, தமிழர்களை ஒதுக்கி வைத்து விட்டு, புரோகிதரே, பொண்ணுக்குத் தாலி கட்டுவது போல, இந்தியாவே இறங்கி ஒப்பந்தம் போட்டார்களே அதுதான் அடிப்படைத் தவறு.

இந்த நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்றால், இரண்டு தரப்பிலும் பேச வேண்டும். ஆனால் ஒரு தரப்போடு டூ விட்டது போல உள்ளனர். புலிகளோடு பேசுவதற்கே வழியில்லை. இன்றைக்குக் கூட இவ்வளவு நடவடிக்கை எடுத்தபோதும், இலங்கையில், புலிகளுக்கு தடை விதிக்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்து கொண்டுள்ளது. தடை பண்ணி விட்டால் யாரிடம் பேசுவது, பிற்காலத்தில் பேச வாய்ப்பே இல்லாமல் போய் விடுமே?

ஆனால் சிக்கலுக்கு நேரடித் தொடர்பில்லாத இந்தியா புலிகள் அமைப்பை தடை செய்துள்ளது. தடை செய்வதற்காக இந்தியா சொன்ன குற்றச்சாட்டுக்கள் எல்லாமே பொய்.

தமிழகத்தைப் பிரிக்கப் பார்த்தார்கள், ஈழத்தை இணைத்து அகண்ட தமிழகம் அமைக்கப் பார்த்தார்கள், இந்தியப் பிரிவினைக்கு உதவி செய்தார்கள் என்று அவர்கள் கூறிய எதுவுமே உண்மை இல்லை. இது இந்திய அரசுக்கும் தெரியும். இன்றும் அந்தப் பொய்யை வைத்துக் கொண்டுள்ளதால்தான் இரு தரப்பிலும் பேச முடியவில்லை.

இரு தரப்பையும் சமமாக கருத மறுக்கிறது இந்தியா. ஆயுதத் தலையீடு, ராணுவத் தலையீடு மற்றும் இப்போது ராஜதந்திர தலையீட்டிலும் இந்தியா இறங்கியுள்ளது. சமீபத்தில் இலங்கையில் 2 கட்சிகளுக்கடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் பின்னணியில் இந்தியா உள்ளது. இது பகிரங்க ரகசியம்.

ரணிலை இங்கே வரவழைத்து அரசுடன் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லியது, மேனன் போன்றவர்களை அங்கே அனுப்பி பேரத்தை பேசி முடித்து வைத்தது இந்தியாதான்.

இதன் நோக்கம் என்ன?

பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும். அது அந்த மக்களுக்கான தீர்வா என்ற கவலையெல்லாம் இல்லை. ஒரு தீர்வு, அவ்வளவுதான். ராஜபக்ஷே இந்தியா வந்தபோது கூட பஞ்சாயத்து ராஜ் பற்றிப் பேசுகிறார். எனவே இது இந்திய பாணியிலான தீர்வு, இதற்கென்று வரையறை கிடையாது.

இந்தத் தீர்வுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் தமிழர் பிரதிநிதிகள், உண்மையில் அவர்கள் தமிழர்களுக்கான பிரதிநிதிகளே கிடையாது. தமிழ் மக்களின் 1 சதவீத ஓட்டுக்களைப் பெறக் கூட முடியாதவர்கள் எல்லாம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் சிங்கள ராணுவக் கூடாரத்திற்குள்தான் குடும்பம் நடத்தக் கூடிய நிலையில் உள்ளவர்களும் அங்கு உள்ளனர். இவர்களை தமிழர்களின் அடையாளமாக இலங்கை அரசு காட்டிக் கொள்கிறது.

இலங்கையில் 21 பேர் தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ளனர். ஆனால் தமிழர்களின் துரோகியாக கருதப்படும் டக்ளஸ் தேவானந்தாவை மட்டும் அழைத்துப் பேசுகிறார்கள். பிரதிநிதித்துவமே இல்லாத ஆட்களை வலியுறுத்தி டெல்லிக்குக் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பேசிவிட்டு பொதுவான தீர்வை எட்டி விட்டோம் என்று சொல்வதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவது, அப்படிச் செய்வதன் மூலம் ராணுவ ரீதியான தீர்வை அடைய நினைக்கிறார்கள். இப்படிச் செய்து விட்டு, புலிகள்தான் பிடிவாதமாக சண்டை போடுகிறார்கள் என்று கூறி தனிமைப்படுத்தி சர்வதேச அளவில் புலிகளை தனிமைப்படுத்துவது. இதுதான் இந்திய அரசின் எண்ணம். இது ராஜதந்திர தலையீடு, கொள்கைத் தலையீடு.

இருப்பதிலேயே இந்த கொள்கைத் தலையீடுதான் மோசமானது. இந்தியாவிலிருந்து சென்ற அமைதிப் படையினர் அங்கு 50,000 தமிழர்களைத் திரட்டி ஆயுதங்கள் கொடுத்தனர். ஆனால் ஒரு நாள் கூட அது நிலைக்கவில்லை. இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் பத்திரமாக தங்களது வீடுகளுக்குப் போய் விட்டனர்.

எந்தத் தீர்வாக இருந்தாலும் அது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என இந்தியா கூறுகிறது. இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறுகிறது. அங்கு ஒருமைப்பாடுதான் பிரச்சினையே என்கிறபோது, அதை வைத்து எப்படி தீர்வு காண முடியும்? அரசியலமைப்பே சிக்கல் என்றால் அதற்கு உட்பட்டு எப்படித் தீர்வு காண முடியும்?

ஒரு நோயைத் தீர்க்க அந்த நோய்க்குக் காரணமான காரணிகளையே வைத்து எப்படி சரி செய்ய முடியும்? வங்கதேசத்தில் சிக்கல் வந்தபோது பாகிஸ்தான் அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காண இந்தியா சொல்லவில்லை. அதேபோல பாலஸ்தீனம், இஸ்ரேல் ஒருமைப்பாட்டுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்லவில்லை. கிழக்கு தைமூர் விஷயத்திலும் அப்படிச் சொல்லவில்லை.

நமீபியா தென்னாப்பிரிக்காவிடமிருந்த

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

India will NEVER help Tamils.

Here is an useful article

http://www.geocities.com/tamiltribune/04/0203.html

A comprehensive article on India's anti-Tamil policies and actions in the Sri Lankan ethnic conflict. First the article summarizes India's anti-Tamil policies and activities from 1983-2003. Then the article systematically demolishes the reasons given for India's Sri Lankan policy. Finally the author discusses the real reason for India's anti-Tamil policies in Sri Lanka.

  • 4 weeks later...

இந்தியா ஒருபோதும் இனிமேல் இலங்கை பிரச்சனையில் ஈடுபடாது குரிப்பாக ராணுவத்தை அனுப்பாது.

''இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்''

தியாகுவுடன் ஒரு சந்திப்பு

பேட்டி: சுதா அறிவழகன்

ஈழத் தமிழர்கள் பால் தமிழக மக்கள் கொண்டுள்ள பற்று, ஆதரவு என்ற பொறி, அணைந்து விடாமல் காத்து வரும் எண்ணற்ற ஆர்வலர்களில் தியாகுவும் முக்கியமானவர். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றுபவர். .....................

தியாகு சொல்வதை தியாகுவின் குடும்பமே கருத்தில் எடுப்பதில்லை. இந்நிலையில், அவரின் கருத்துகள் தமிழகத்திலோ இந்தியாவிலோ கொள்கைவகுப்பு மாற்றத்தில் மிகமிக குறைந்தபட்சம்கூட எந்தவித ஆளுமை செலுத்தமாட்டாது. உது எல்லாம் வெற்றுவேட்டுக்கு வேட்டிகட்டும் வேலை.

நீர் சொல்வதை இங்க யார் தான் கருத்தில் எடுக்கினம், உம்மைப் போல வெக்கம்கெட்டு சிறிலங்கா அரசுக்கு நக்கி எழுதுவதை விட சுயமரியாதையோடு எவர் என்ன சொன்னாலும் அது பெறுமதியானது தான்.

  • தொடங்கியவர்

நீர் சொல்லுவதையும் தான் உமது பெற்ற பிள்ளை கூட கேட்டு விட்டு உமது முகத்தில் காறி துப்பும் அதுக்காக நீ என்ன எல்லாத்தையும் உரிச்சு போட்டு கோவனதோட நிக்கிறீர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை புடிக்கிறதை கொஞ்சம் அமைதியாய் சண்டை புடியுங்கோப்பா!உங்கடை சத்தத்தை கேட்டு நெடுக்கர் பாவி வந்தாரோ அவ்வளவுதான்.அந்தமனுசன் காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி கதை கந்தல்... .பிறகு எங்கடை மட்டுறுத்தினர்மார் வந்து இங்கேயும் ஆப்புத்தான்.(CLOSED) :rolleyes:

நீர் சொல்வதை இங்க யார் தான் கருத்தில் எடுக்கினம், உம்மைப் போல வெக்கம்கெட்டு சிறிலங்கா அரசுக்கு நக்கி எழுதுவதை விட சுயமரியாதையோடு எவர் என்ன சொன்னாலும் அது பெறுமதியானது தான்.

யாரும் செத்தால் எனக்கென்ன என்ற உம்போன்ற பேர்வழிகளைவிட சமாதானத்தின் குரல் ஒன்றும் கேடுகெட்டது அல்ல.

ஆடு நனையுது என ஓஒநாய் அழுகுதாம் இது மேல் கருத்தெழுதிய ஒருவருக்கு பொருந்து இந்த தொப்பியை மாங்கு மாங்கு என கொடுக்க படும் பணத்துக்கு அலட்டும் அவ் நபர் போட்டு கொள்வாரா

இப்படி பட்ட லூசுகளுக்கு பதில் எழுதிஉங்கள் மரியாதையை நீங்களே கெடுகாதயுங்க நாரதர்

யாரும் செத்தால் எனக்கென்ன என்ற உம்போன்ற பேர்வழிகளைவிட சமாதானத்தின் குரல் ஒன்றும் கேடுகெட்டது அல்ல.

ஆம் சமாதானத்தின் குரல் கேடு கெட்டதல்லா சமாதானம் என்ற சொல்லை மூகமூடியாய் கொண்ட அரைவேக்காடு சொல்லுவது கேடு கெட்டதே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை புடிக்கிறதை கொஞ்சம் அமைதியாய் சண்டை புடியுங்கோப்பா!உங்கடை சத்தத்தை கேட்டு நெடுக்கர் பாவி வந்தாரோ அவ்வளவுதான்.அந்தமனுசன் காய்ஞ்ச மாடு கம்பிலை விழுந்தமாதிரி கதை கந்தல்... .பிறகு எங்கடை மட்டுறுத்தினர்மார் வந்து இங்கேயும் ஆப்புத்தான்.(CLOSED) :icon_idea:

சமாதானம் வந்து எது எழுதினாலும்..நீர் நக்கி.. வேண்டின காசுக்கு வாரிறீர்.. என்று எழுதுவதை பார்க்கிறதை விட பூட்டுறது ஆயிரம் மடங்கு மேல். சமாதானம் எழுதிறதுக்கு ஆரோக்கியமா சொல்ல பதில் இல்லை என்றால் இல்ல தெரியாதென்றால் பிறகேன் இதில் எழுதுகிறார்கள். எனி மோகன் வந்து சமாதானமாப் போங்கள் என்று சொல்ல வேணும் போல..! இங்க முதல் சமாதானம் மலர வேணும். அப்பதான் நாட்டில மலரும்..! :P :lol:

QUOTE(ஈழவன்85 @ Jan 30 2007, 04:27ஞ்க்)

ஆம் சமாதானத்தின் குரல் கேடு கெட்டதல்லா சமாதானம் என்ற சொல்லை மூகமூடியாய் கொண்ட அரைவேக்காடு சொல்லுவது கேடு கெட்டதே

சமாதான குரல்கள் எல்லாம் உம்போன்ற யுத்தத்தில் வயிறு கழுவும் தேசத்தின் ஆசாடபூபதிகளால் கொச்சைப்படுத்தப்படுவது ஒன்றும் தற்செயலல்ல என்பது நான் சொல்லித்தான் மற்றவர்கள் அறியவேண்டும் அல்ல.

Edited by SAMATHAANAM

ஈழவன் யுத்தால் எப்படி வயிறு கழுவுறார் என்று உதாரணத்துடன் விளக்கமுடியுமா? :lol::lol: ஆதாரமற்ற வீண்பேச்சுக்கள் கருத்தான கருத்தாடல் அல்ல. :icon_idea::lol::lol:

ஆமாம் நான் யுத்தாத்தால் வயிரு கழுவிரன் நீர் யுத்தத்தால் பின்பக்கம் கழுவும் துரோக நாய்களிடம் கழுவும் தண்ணியை எடுத்து குடிக்கின்றீர் சும்மா பொத்துமோய் இங்க வந்து பினாத்தாயும்

உம்மக்கு இப்படியான தலைபெண்டால் மூக்கு வேர்த்திரும் அதில பிழையில்லை ஏன் எண்டால் நீர் குடிக்கும் தண்ணீர் துரோகக கும்பல் குண்டி கழுவும் தண்ணீர்தானே.நீர் அப்படித்தான் எழுதுவீர்

ஈழவன் யுத்தால் எப்படி வயிறு கழுவுறார் என்று உதாரணத்துடன் விளக்கமுடியுமா? :lol::lol: ஆதாரமற்ற வீண்பேச்சுக்கள் கருத்தான கருத்தாடல் அல்ல. :icon_idea::lol::lol:

யுத்தத்தால வயிறு கழுவிறதுக்கு விளக்கம் கேட்கும் விளங்காத ஜென்மங்கள் சமாதானம் எப்படி கூலிக்கு ஆள்வைத்து கருத்தெழுதமுடியும் என்பதை முதலில் விளக்க வேண்டும்.

உனது கேள்வியிலேயே உனக்கான விடையையும் உள்ளது.

ஆமாம் நான் யுத்தாத்தால் வயிரு கழுவிரன் நீர் யுத்தத்தால் பின்பக்கம் கழுவும் துரோக நாய்களிடம் கழுவும் தண்ணியை எடுத்து குடிக்கின்றீர் சும்மா பொத்துமோய் இங்க வந்து பினாத்தாயும்

உம்மக்கு இப்படியான தலைபெண்டால் மூக்கு வேர்த்திரும் அதில பிழையில்லை ஏன் எண்டால் நீர் குடிக்கும் தண்ணீர் துரோகக கும்பல் குண்டி கழுவும் தண்ணீர்தானே.நீர் அப்படித்தான் எழுதுவீர்

மக்களின் மரணங்களில் மகிழ்ச்சி கொள்ளும் மனநிலையில் இருக்கும் உம்போன்ற மனநோயாளிகள் களத்தில் இன்னும் சிலர் கருத்தெழுதுகின்றனர். அவர்களின் வெற்றுவேட்டுகள்தான் துரோகம், கூலி, என்பன அதைவிட்டால் உம்மிடமும் கருத்தெழுத ஒன்றும் இல்லை. அவர்களிடமும் கவசம் ஒன்றும் இல்லை.

யுத்தத்தால வயிறு கழுவிறதுக்கு விளக்கம் கேட்கும் விளங்காத ஜென்மங்கள் சமாதானம் எப்படி கூலிக்கு ஆள்வைத்து கருத்தெழுதமுடியும் என்பதை முதலில் விளக்க வேண்டும்.

உனது கேள்வியிலேயே உனக்கான விடையையும் உள்ளது.

உமது சமாதனத்தின் கருத்தே சிங்களவனிடம் பணிந்துபோ என்பதுதானே, காசுக்காகஅன்றி வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? பலம்பொருந்திய படையணிகள் எம்மிடம் இருக்கும் போது. :icon_idea::lol::lol:

Edited by Birundan

உமது சமாதனத்தின் கருத்தே சிங்களவனிடம் பணிந்துபோ என்பதுதானே, காசுக்காகஅன்றி வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? பலம்பொருந்திய படையணிகள் எம்மிடம் இருக்கும் போது. :icon_idea::lol::lol:

நீர் குறிப்பிடும் பலமான படையணிகளால் யுத்தத்தை தொடர முடியும் ஆனால் வெற்றி கொள்ள முடியாது. அதனால்தான், வெற்றி இல்லாது தொடரும் யுத்தத்தைவிட தோல்வி இல்லாத சமாதானம் ஆயிரம் மடங்கு சிறந்ததென நான் முன்போ களத்தில் எழுதியிருந்தேன்.

Edited by SAMATHAANAM

மக்களின் மரணங்களில் மகிழ்ச்சி கொள்ளும் மனநிலையில் இருக்கும் உம்போன்ற மனநோயாளிகள் களத்தில் இன்னும் சிலர் கருத்தெழுதுகின்றனர். அவர்களின் வெற்றுவேட்டுகள்தான் துரோகம், கூலி, என்பன அதைவிட்டால் உம்மிடமும் கருத்தெழுத ஒன்றும் இல்லை. அவர்களிடமும் கவசம் ஒன்றும் இல்லை.

மரணத்தின் வேதனை தெரியாதவன் அல்ல நான் ஆனால் மரணம் என் அசொல்லி சொல்லி மரணத்தை ஏற்படுத்தி எமது இனத்தை விற்கும் சாக்கடைகள்தான் உமது முதலாளிமார்.

சும்மா பினாத்தாதயும் ஜசே நீர் .சரி உமக்கு வேண்டியது சிங்களவனுடன் சமரசம் சமரசமாய்தானே இருந்தார்கள் யார் குழப்பியது பதில் சொல்லும்?

இவர்களிடம் சமாதானம் சரிவராது அடிக்கு அடி உதைக்கு உதைதான் சரி

நீர் குறிப்பிடும் பலமான படையணிகளால் யுத்தத்தை தொடர முடியும் ஆனால் வெற்றி கொள்ள முடியாது. அதனால்தான், வெற்றி இல்லாது தொடரும் யுத்தத்தைவிட தோல்வி இல்லாத சமாதானம் ஆயிரம் மடங்கு சிறந்ததென நான் முன்போ களத்தில் எழுதியிருந்தேன்.

எது தோல்வி இல்லாத சமாதானம் உலகில் பலமானவனுகே மரியாதை சமாதானம் என கூறினால் குனிய குனிய குட்டுவார்கள்.சிங்களவனுடன் எத்தனை ஒப்பந்தங்கள் போடப்பட்டது எல்லாம் கிழிக்கப்பட்டது சுனாமி கட்டமைப்பு கூட கிழிக்கப்பட்டுவிட்டது அப்ப என்னப்பா சிங்களவனுடன் சமாதானம் இந்த 5 வருட ம் அதாவ்து சமாதானகாலம் எனப்படும் காலத்தால் என்ன எமக்கு நடந்தது?அழிவுதானே?

நீர் குறிப்பிடும் பலமான படையணிகளால் யுத்தத்தை தொடர முடியும் ஆனால் வெற்றி கொள்ள முடியாது. அதனால்தான், வெற்றி இல்லாது தொடரும் யுத்தத்தைவிட தோல்வி இல்லாத சமாதானம் ஆயிரம் மடங்கு சிறந்ததென நான் முன்போ களத்தில் எழுதியிருந்தேன்.

யுத்த காலத்தில் இறந்த போராளிகளையும், மக்களையும் விட சமாதான காலத்தில் இறந்த போராளிகளும், மக்களும் அதிகம். ஜந்து வருடம் ஆகியும் வெல்லமுடியாத சமாதானம், தொடரும் சமாதானமா? வெல்லமுடிந்த சாமாதானமா?

எவனோ தரும் காசில் உருவாகப்பட்ட சுனாமிகட்டமைப்புக்கே தடை விதித்த சிறீலங்கா அரசு யந்திரம், தனது அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் என நீர் பகல் கனவு காண்பது வேடிக்கையாக இருக்கிறது, சுதந்திரம் என்பது கேட்டு வாங்குவதில்லை போராடிப்பெறுவது.

"அக்கா அக்கா என்று கேட்க, அக்கா கொண்டு வந்து தர சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா?" :icon_idea::lol::lol:

மரணத்தின் வேதனை தெரியாதவன் அல்ல நான் ஆனால் மரணம் என் அசொல்லி சொல்லி மரணத்தை ஏற்படுத்தி எமது இனத்தை விற்கும் சாக்கடைகள்தான் உமது முதலாளிமார்.

சும்மா பினாத்தாதயும் ஜசே நீர் .சரி உமக்கு வேண்டியது சிங்களவனுடன் சமரசம் சமரசமாய்தானே இருந்தார்கள் யார் குழப்பியது பதில் சொல்லும்?

இவர்களிடம் சமாதானம் சரிவராது அடிக்கு அடி உதைக்கு உதைதான் சரி

சமாதானத்தை எமது தாயகத்துக்கு கொண்டுவருவதென்றால் சிங்களவர் என்ன பிசாசுடனும் பேச தயாராக வேண்டும். யுத்தவெறியில் உமது பினாத்தல் உமக்கு தெரியவில்லை.

உம்போன்ற போர் வியாபாரிகளின் ( அல்லது எடுபிடிகளின்) இனத்தை இல்லாமல் அழிக்கும் இனமானத்தைவிட சமாதானத்தால் குறைந்தது மீதியிரருக்கும் இனத்தையாவது காப்பாற்றும் முதலாளிகள் மேல்.

சிங்கள்வன் தருவதை வாங்கி திண்டுவிட்டு விழுந்து கிடக்கத்தான் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதா? உதுக்குத்தானோ இவ்வளவு இழப்பும், இவ்வளவு காலபோராட்டமும்? :angry: :angry: :angry:

யுத்த காலத்தில் இறந்த போராளிகளையும், மக்களையும் விட சமாதான காலத்தில் இறந்த போராளிகளும், மக்களும் அதிகம். ஜந்து வருடம் ஆகியும் வெல்லமுடியாத சமாதானம், தொடரும் சமாதானமா? வெல்லமுடிந்த சாமாதானமா?

எவனோ தரும் காசில் உருவாகப்பட்ட சுனாமிகட்டமைப்புக்கே தடை விதித்த சிறீலங்கா அரசு யந்திரம், தனது அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் என நீர் பகல் கனவு காண்பது வேடிக்கையாக இருக்கிறது, சுதந்திரம் என்பது கேட்டு வாங்குவதில்லை போராடிப்பெறுவது.

"அக்கா அக்கா என்று கேட்க, அக்கா கொண்டு வந்து தர சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா?" :icon_idea::lol::lol:

சமாதானம் என்பது நாம் விரும்பியதை முழுமையாக அடையும் முடிவை தராதென்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். யுத்தம் பெற்றுத்தராத வெற்றியை இலகுகாத்த கிளிபோல் எத்தனை நாட்கள் காத்திருப்படது. ஆகவே கைமுன்னே உள்ள சமாதானம் தமிழர் தரப்பின் தோல்வியை தவிர்க்கும் அல்லது ஒத்திப்போடும் சிறந்த அரசியல் நடைமுறையாகும்.

சிங்கள்வன் தருவதை வாங்கி திண்டுவிட்டு விழுந்து கிடக்கத்தான் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதா? உதுக்குத்தானோ இவ்வளவு இழப்பும், இவ்வளவு காலபோராட்டமும்? :angry: :angry: :angry:

ஐரோப்பாவில் கைகட்டி அகதி அந்தஸ்து கேட்பதில் தங்கள் கெளவரம் ஒன்றும் குறைந்து போனதாக சிந்திக்காத வறட்டு கெளரவ கோஸ்டிகளின் கதை அளப்பு உம்முடையது.

சமாதானம் என்பது நாம் விரும்பியதை முழுமையாக அடையும் முடிவை தராதென்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். யுத்தம் பெற்றுத்தராத வெற்றியை இலகுகாத்த கிளிபோல் எத்தனை நாட்கள் காத்திருப்படது. ஆகவே கைமுன்னே உள்ள சமாதானம் தமிழர் தரப்பின் தோல்வியை தவிர்க்கும் அல்லது ஒத்திப்போடும் சிறந்த அரசியல் நடைமுறையாகும்.

ஐரோப்பாவில் கைகட்டி அகதி அந்தஸ்து கேட்பதில் தங்கள் கெளவரம் ஒன்றும் குறைந்து போனதாக சிந்திக்காத வறட்டு கெளரவ கோஸ்டிகளின் கதை அளப்பு உம்முடையது.

ஜந்து வருடமாக பேசி ஒரு சிறு அதிகாரத்தைகூட தராத சிறீலங்கா அரசுடன் இன்னமும் எவ்வளவு காலம் பேசவேண்டும் முழு அதிகாரத்தையும் பெற? :icon_idea::lol::lol:

ஏன் ஜரோப்பவில் மேல்படிப்புக்கு வேறு வேறான வெட்டுப்புள்ளிகளா? அல்லது உமது வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கொழுத்தப்படுகிறதா? அல்லது எம்மின பெண்கள் மார்பில் அகதி அந்தஸ்து கோரப்படும் நாடுகளின் "சிம்பொல்" பழுக்ககாச்சிய கம்பியினால் பதிக்கப்படுகிறதா? அல்லது பச்சை குழந்தைகள் கொதிக்கும் தாறுக்குள் போடப்படுகிற்தா? :angry: :angry:

ஜந்து வருடமாக பேசி ஒரு சிறு அதிகாரத்தைகூட தராத சிறீலங்கா அரசுடன் இன்னமும் எவ்வளவு காலம் பேசவேண்டும் முழு அதிகாரத்தையும் பெற? :icon_idea::lol::lol:

முப்பது வருட ஆயுதப்போராட்டத்தின் அறுவடையை அரசியல் வெற்றியாக்க ஐந்து வருடங்கள் என்ன ஐம்பது வருடங்கள் கூடச்செல்லலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் சமாதானத்துக்கு எதிரான குரல்கள் ஆதரவான குரல்களை அமுக்கிவிட்டதால்தான் சர்வதேசம் எமக்கு எதிரான அரசின் யுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காது மவுனமாய் வழிமொழிந்து நிற்கிறது. இதைக்குறித்துதான் தமிழ் செல்லவன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.